Friday, March 17, 2017

பாதுகாப்பு இல்லை என்று கூறி சென்னை அரசு ஆஸ்பத்திரி முன்பு பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மார்ச் 17, 04:45 AM

சென்னை,

தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சென்னை அரசு ஆஸ்பத்திரி முன்பு பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர் விஜய்

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4–ம் ஆண்டு கெமிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவரான விஜய் என்பவர் கல்லூரி நிர்வாகத்தை பற்றி ‘பேஸ்–புக்’கில் கருத்து பதிவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டதாகவும் கடந்த 14–ந் தேதி அன்று கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பயிற்சி டாக்டர்கள்
வாக்குவாதம்

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் விஜயை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் நேற்று மதியம் வந்தனர். அப்போது அவர்களை கூட்டமாக உள்ளே விட அங்குள்ள டாக்டர்களும், பாதுகாவலர்களும் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அங்குள்ள பயிற்சி டாக்டர்களுக்கும், விஜயின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பெண்கள் சிலரை பயிற்சி டாக்டர்கள் தள்ளிவிட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த வார்டு முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் சம்பந்தப்பட்ட வார்டுக்கு விரைந்தனர்.

அப்போது அந்த உறவினர்களையும், பத்திரிகையாளர்களையும் பயிற்சி டாக்டர்கள் அங்கிருக்கும் பாதுகாவலர்களுடன் விரட்ட முயற்சித்தனர். இதில் தனியார் தொலைக்காட்சி நிருபர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். வீடியோ கேமராக்களும் சேதம் அடைந்தன.

சாலைமறியல் –
போக்குவரத்து பாதிப்பு

பரபரப்பான சூழ்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும், தாங்கள் தாக்கப்பட்டதாகவும் கூறி மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் 200–க்கும் மேற்பட்டோர் மாலை 5.20 மணி அளவில் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர்.

அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து ஆஸ்பத்திரி மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பிராட்வேயில் இருந்து வரும் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சாலையில் நின்றன.

இதையடுத்து ஆஸ்பத்திரி மெயின் ரோட்டில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. பிராட்வே மற்றும் வடக்கு கடற்கரை சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் முத்துசாமி சாலை வழியாக அண்ணாசாலைக்கு சென்று, அங்கிருந்து பல்லவன் சாலை வழியாக சென்டிரல் வந்தடையும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.

4 நோயாளிகள் உயிரிழப்பு

பயிற்சி டாக்டர்கள் சாலை மறியல் நடத்திய அதே வேளையில் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஆஸ்பத்திரிக்கு வரும் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் யாரை சமாதானப்படுத்துவது? என்று போலீசார் தவித்தனர். இருபுறமும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபடியே இருந்தனர்.

பயிற்சி டாக்டர்கள் சாலை மறியல் நடத்திய சமயத்தில் ஆஸ்பத்திரியில் விபத்து, 

நெஞ்சுவலி, தலைக்காயம் உள்ளிட்ட காரணங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75), மாதவரத்தை சேர்ந்த ஜெனி (67), திருமுல்லைவாயலை சேர்ந்த ஜோசப், ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த சுதாகரன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். டாக்டர்களின் சிகிச்சை கிடைக்காத காரணத்தினால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் பரவியது.

பத்திரிகையாளர்கள்
போராட்டம்

இந்த நிலையில் பொதுமக்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்ற அடிப்படையிலும், உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாம் என்று முடிவெடுத்து பயிற்சி டாக்டர்கள் இரவு 7.50 மணிக்கு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைய தொடங்கினர். அப்போது பயிற்சி டாக்டர்களில் சிலர் பத்திரிகையாளர்களை நோக்கி ஆத்திரத்தில் சில வார்த்தைகள் பேசினர்.

இதில் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்திய அதே ஆஸ்பத்திரி மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். ‘பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தைரியம் இல்லை’ என்று கோ‌ஷத்துடன் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர். இதையடுத்து போலீசார் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கலைத்தனர்.

அடுத்தடுத்து புகார்கள்

தொடர் சாலை மறியல் காரணமாக முத்துசாமி சாலை சந்திப்பில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரையிலான சாலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாங்கள் தாக்கப்பட்டதாக பத்திரிகையாளர்கள் தரப்பிலும், நாங்கள் தான் தாக்கப்பட்டோம் என்று பயிற்சி டாக்டர்கள் தரப்பிலும் போலீசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டன.

அதே வேளையில் பயிற்சி டாக்டர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தங்கள் போராட்டத்தை தொடர தொடங்கினர்.
ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என தொலை தொடர்பு தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு அளித்தது.

மார்ச் 17, 04:00 AM

புதுடெல்லி,

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ‘4ஜி’ என்னும் நான்காம் தலைமுறை தொலைதொடர்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது. சிம் கார்டு, அழைப்புகள், இணையதள சேவை என எல்லாவற்றையும் அது இலவசமாக வழங்கி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை வழங்கப்பட்ட இலவச சேவை, பின்னர் இந்த மாதம் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அளித்த அனுமதிக்கு எதிராக பிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தின.

ஜியோவின் இலவச சேவையை 90 நாட்களுக்கு மேல் நீட்டிப்பதற்கு டிராய் அளித்த அனுமதிக்கு எதிராக பார்தி ஏர்டெல் நிறுவனமும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் ‘டிடிசாட்’ என்றழைக்கப்படுகிற தொலைதொடர்பு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தன. அதில், ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிப்பதுடன், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு டிராய்க்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

இதுதொடர்பாக பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், ஜியோ மற்றும் டிராய் தரப்பு கருத்துகளை கேட்டு விட்டு, தீர்ப்பை தொலைதொடர்பு தீர்ப்பாயம் கடந்த வாரம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என தொலை தொடர்பு தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு அளித்தது. இருப்பினும், இது தொடர்பான பிரச்சினைகளை மறுஆய்வு செய்து, அதன் முடிவை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என்று டிராய்க்கு அது உத்தரவிட்டது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், அரசின் பொதுபட்ஜெட்டை மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.

மார்ச் 17, 02:00 AM

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், அரசின் பொதுபட்ஜெட்டை மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். ஏனெனில், பட்ஜெட்டில்தான் அரசின் வரவு–செலவு திட்டங்கள் தெளிவாக தெரியும். அரசின் வருவாய் எவ்வளவு?, செலவு எவ்வளவு?, பற்றாக்குறை எவ்வளவு?, கடன் எவ்வளவு? என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், அரசு என்னென்ன புதிய திட்டங்களை நிறைவேற்றப்போகிறது?, என்னென்ன வரிமாற்றங்கள் செய்யப் போகிறது? என்பதையெல்லாம் காட்டும் காலக்கண்ணாடிதான் பொதுபட்ஜெட். தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்ற வகையில், நிதி அமைச்சர் ஜெயக்குமார் 100 பக்க பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். ஜெயக்குமாருக்கும் இதுதான் முதல் பட்ஜெட். பட்ஜெட்டில் ஜெயக்குமார் நிறைய சலுகைகள், புதிய திட்டங்களை அறிவிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், 2 மணி 35 நிமிடம் பட்ஜெட் உரையை வாசிக்க நேரம் எடுத்துக் கொண்ட ஜெயக்குமார், ஒரு கட்டத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் உரையை வாசித்தார்.

புதிய வரிகள் இல்லையென்று பட்ஜெட்டிலேயே நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால், அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர இருக்கும் சரக்கு சேவை வரியால் பல பொருட்களுக்கு வரி உயருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சரக்கு சேவைவரியில் அதிக வரிச்சுமை இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு தமிழக அரசு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்றபடி, 3½ லட்சம் ஏழைக்குடும்பங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படும் என்று பெருமையோடு சொல்லியிருக்கிறார். கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள், நீர்வள நிலதிட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ச்சி, மீன்வள வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி, ஒரு லட்சம் பெண்களுக்கு மானியவிலையில் ஸ்கூட்டர் வாங்க நிதி ஒதுக்கீடு, ஒரு கோடி டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு போன்றவை அனைவராலும் பாராட்டப்படும். மற்றபடி எல்லா திட்டங்களும் ஏற்கனவே நிறைவேற்றப்படும் திட்டங்கள்தான். அதற்கு நிதி ஒதுக்கீடுதான் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, புதிதாக எதுவும் இல்லை. இந்த ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் எவ்வளவு புதிய தொழில்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன?, எவ்வளவு பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன? என்பதையெல்லாம் தெரிவித்தால் தான், இத்தகைய சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். வேலைவாய்ப்புகளை பெருக்க பெரிய அளவில் புதிதாக எந்தவித திட்டங்களும் இல்லாதது பெரிய குறைபாடாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அலகுகள் செயலிழந்ததன் காரணங்களை தொழில் வாரியாக கண்டறிவதற்கும், அத்தகைய தொழில்கள் மீண்டும் செயல்பட புத்துயிரூட்டுவதற்கு உரிய உதவி செய்ய அரசு ஒரு சிறப்பு ஆய்வை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி தொழில்கள் வீழ்ச்சி அடையும் நிலையில், மொத்த உற்பத்தி மதிப்பு எப்படி உயரும்?, வேலைவாய்ப்பு எப்படி பெருகும்?.

இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, மொத்த கடன் சுமை எல்லாமே உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு தமிழக அரசின்மீது உள்ள கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம், உதய் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டதால், மின்சார வாரிய கடனான ரூ.22 ஆயிரத்து 815 கோடியை அரசே ஏற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறினாலும், இவ்வளவு கடன் தொகை ஒரு அரசுக்கு இருப்பது நிச்சயமாக அதன் பொருளாதார நிலையை பெரிதும் பாதிக்கும். ஆக, மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு வளர்ச்சித்திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியாது. நிதிமேலாண்மையில் கவனம் செலுத்தவேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கிறது.

Thursday, March 16, 2017


இந்தக் கிழமைகளில் பிறந்திருந்தால், உங்கள் குணம் இதுதான்! #Astrology
sakthivikatan

வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு குணத்துடன் திகழ்கின்றது. திங்கள்கிழமையென்றால், திக்திக்... புதன்கிழமையென்றால் பரவாயில்லை... வெள்ளிக்கிழமையென்றால் பக்தி மணம்தான்... சனிக்கிழமையென்றால் அய்! ஜாலிதான்.. என்று ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு எண்ணம். ஆனால், ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணம் இருக்கும் என்கிறார் ஜோதிட திலகம் கே.பி.வித்யாதரன். அவர் கூறியவற்றிலிருந்து...




ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அதில் வென்று முடிக்கும்வரை ஓயமாட்டார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாக இருப்பார்கள். ''இங்கே என்ன தோணுதோ அத பேசறேன், இங்க என்ன தோணுதோ அதைச் செய்றேன்'' என்கிற டைப். இவர்கள்,சொல்வதைத்தான் செய்வார்கள் செய்வதைதான் சொல்வார்கள். மற்றவர்கள் கடினமாகச் செய்யும் செயல்களைக்கூட இவர்கள் போகிறபோக்கில் செய்துவிடுவார்கள். ஆளுமைத் திறன் மிக்கவர்கள்.

திங்கள்கிழமை

திங்கள்கிழமை பிறந்தவர்கள், வசீகரமான தோற்றத்தாலும், நகைச்சுவைமிக்க பேச்சாலும் மற்றவர் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட நண்பர்களுடன் பொழுதுபோக்குவதில்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். எங்கு இருந்தாலும், இவர்கள் அந்தச் சூழ்நிலையைத் தனதாக்கிக்கொள்வார்கள். உதவி என்று யார் வந்து கேட்டாலும், உடனே செய்துவிடுவார்கள். பிறகு தங்களின் கைச் செலவுக்கு இல்லாமல் அவதிப்படுவதும் உண்டு.



செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள், வம்புசண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இவர்களுடன் பேசும்போது மற்றவர்கள் கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது இவரும் கவனமாக இருக்க வேண்டும். சூடம் காண்பித்துக் கொண்டே மணி அடிப்பது போல் விவாதம் செய்யும்போது மிகச் சரியாக எதிராளியை உரிய ஆதாரங்களுடன் வீழ்த்திவிடுவார்கள். முணுக் முணுக்கென இவர்களுக்குக் கோபம் வருவது வாடிக்கை. ஆனால் கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது போல் இவர்களாகவே வலிய வந்து ஸ்நேகமாகி விடுவார்கள்.

புதன்கிழமை

புதன்கிழமை பிறந்தவர்கள், எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்கள். தங்களுக்குத் தேவை இல்லையென்றாலும்கூட, அதை அறிந்து வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள். இயல்பிலேயே கொஞ்சம் ரிசர்வ் டைப்பான இவர்கள், கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத்தான் பழகுவார்கள். பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள். திடுக்கெனப் பறந்து சென்று மீனைக் கவ்விடும் மீன்கொத்திப் பறவையைப்போல் தங்களுக்கான இடத்தை எந்தச் சபையிலும் பெற்று விடுவார்கள்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமையில் பிறந்தவர்கள், நன்நெறிகளுக்கு இருப்பிடமாகத் திகழ்வார்கள். அதனால், இவர்கள் பெரும்பாலும் தேவையில்லாத பிரச்னைகளில் அத்தனை எளிதாகச் சிக்கமாட்டார்கள். தன்னடக்கம் மிக்கவர்களாக இருப்பார்கள். இருந்த இடத்திலிருந்துகொண்டே எல்லா விஷயமும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் இவரைக் கர்வம் பிடித்தவர் என்றுகூட எண்ணுவார்கள். தெய்வ வழிபாட்டிலும், ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் அதிகம் ஆர்வம் இருக்கும். வாழ்க்கை குறித்த தெளிவான திட்டமிடலும் முறையான அணுகுமுறையும் இவரை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். சுற்றுலா பிரியர்களான இவர்கள், காலில் சக்கரம் கட்டாத குறையாக அலைந்துகொண்டிருப்பார்கள். ஆனால், இவரது உழைப்பு முழுவதும் மற்றவர்களுக்கே சென்று சேரும். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள் எதையும் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள். எல்லா மதநம்பிக்கையாளர்களும் புனிதமான நாளாக நினைப்பது வெள்ளிக்கிழமையைத்தான்.



சனிக்கிழமை

சனிக்கிழமை பிறந்தவர்கள், தூங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித் போன்றவர்கள். சோம்பலும், தள்ளிப்போடுவதும் இவர்களது பிறவிக்குணம். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள். எதிலும் ஒரு அலட்சியப் போக்கு எதைப் பற்றியும் கவலைப்படாத கடைசி பெஞ்ச் மனோபாவம். 'எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் 'என்கிற டைப். எதிலும் ஷார்ட் கட் ரூட்டை ஃபாலோ பண்ணுவார்கள். மேற்கிலிருந்து கிழக்கைப் பார்ப்பார்கள். மற்றவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பார்கள். ஆனால், எல்லோரிடமும் ஒரு 'பர்சனல் டச்' வைத்திருப்பார்கள். அதனாலேயே இவரைப் பலரும் விரும்புவார்கள்.
- எஸ்.கதிரேசன்

குடும்பத்தையும் குலத்தையும் காக்கும் குல தெய்வ வழிபாடு! #Astrology

நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்' என்பார்கள். குலதெய்வ வழிபாட்டை அத்தனை எளிதாக எல்லோராலும் செய்யமுடிவதில்லை.



படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாது. காரணம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறிவிட்ட இன்றைய சூழலில், குலதெய்வம் பற்றிய விவரங்களைக் குடும்பப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாத நிலை.

குலதெய்வமே என்னவென்று தெரியாதவர்கள் எப்படி தங்களுடைய குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு வழிபடுவது என்பது பற்றி, ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறிய கருத்துகளின் தொகுப்பு இதோ...

''மனிதன் தீராத பிரச்னைகளால் மனக்கவலை வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறான். அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்பப் பெரியவர்களைக் கேட்கிறான்.

சிலர் தங்களது குடும்ப வழக்கப்படி கோடங்கி பார்ப்பவரை அழைத்து உடுக்கடித்து தெய்வத்திடம் குறி கேட்பார்கள். சிலர் ஜாதகத்தை, குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள். அதற்கு அவர், 'உங்கள் பூர்வீக குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள், எல்லாம் சரியாகும்' என்பார்.

சில குடும்பத்தில் குடும்பப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குலதெய்வம் பற்றித் தெரிந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபடலாம்.

சில குடும்பத்துப் பெரியவர்களுக்குக்கூட அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியாது. அவர்கள் என்ன செய்வது? இங்கேதான் அவர்களுடைய ஜாதகம் உதவுகிறது. ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டுபிடிக்க முடியுமா? நிச்சயமாக முடியும்.
ஒருவரது ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம் என்பது 5-ம் இடமும் 9-ம் இடமும் ஆகும். 5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். தந்தை வழி பாட்டனார்களைச் சொல்லுமிடம். அதன் 5-ம் இடம் ஜாதகத்தின் 9-ம் பாவமாகும். அவர்களின் இஷ்ட தேவதையைச் சொல்லுமிடம். 9-ம் இடத்துக்கு 9-ம் இடம் 5-ம் பாவமாகும். அதாவது தந்தை வழிபட்ட தெய்வத்தைச் சொல்லுமிடமாகும். ஆகவே இந்த இரு இடங்களைக் கொண்டு குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம்.

இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம்.

நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் இருந்து கண்டுபிடிக்கலாம்.



ஒரு குடும்பத்துக்கு குல தெய்வம் ஒன்றும், அதன் பரிவார தெய்வங்கள் இரண்டும் சம்பந்தம் கொள்ளும். அதாவது ஒருவரின் பூர்வீகத்தில் அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறைப் பங்காளிகள் மூன்று தலைமுறையாக ஒன்றுசேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும். இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சிலர் கேட்கலாம்... எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று கேட்டால், அதைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம்.

நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி, “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.



இன்னொரு முறையும் இருக்கிறது. உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.

மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அது பெருமாளாக இருக்கலாம், சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம். அடுத்து குலதெய்வம். பிறகு காவல் தெய்வமாக ஒரு தெய்வம் - அது ஆண் தெய்வமாக இருக்கலாம் அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம். மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஐய்யனார், மதுரை வீரன், காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி, எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் உள்ளனர். இந்தக் காவல் தெய்வங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.

குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம், ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே பொதும். அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று, எந்தக் கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள்.

தினசரி 3 மணிநேரம் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரும்’


தினந்தோறும் 3 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக டிவி பார்த்துக் கொண்டேயிருக்கும் குழந்தைகளுக்கு, சர்க்கரை நோய் பாதிப்பு எளிதில் வரும் என, தெரியவந்துள்ளது.

இன்றைய யுகத்தில், டிவி இன்றி, நமது அன்றாட வாழ்வு முற்றுப் பெறுவதில்லை. சிறியவர்கள் தொடங்கி, முதியவர்கள் வரை அனைவருமே, டிவி பெட்டியை தங்களது குடும்ப உறுப்பினராகவே கருதும் அளவுக்கு, அதனுடனான நாம் பின்னிப் பிணைந்துவிட்டோம்.

குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பாக, இருந்ததைவிட, இன்றைக்கு 1 வயது குழந்தைகள் தொடங்கி, அனைவருமே டிவி முன்பாகவே தவம் கிடப்பது மிக சகஜமான காட்சியாக உள்ளது. ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், குழந்தைகள் வீட்டுக்குள் அடைந்தபடி, டிவி.,யில் வரும் கார்ட்டூன் படங்களை பார்ப்பதுதான் இன்றைக்கு பெரும்பாலான நகரங்களில் அரங்கேறுகிறது.

ஆனால், இப்படி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி, டிவி பார்ப்பதால், ஏற்படும் விளைவுகள் பற்றி, லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருமே, 3 மணிநேரத்திற்கும் மேலாக, தொடர்ச்சியாக, டிவி பார்ப்பதால், பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என, உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறியவர்கள் எனும்போது, 3 மணிநேரத்திற்கு மேல் தினசரி டிவி பார்க்கும் பழக்கம் இருந்தால், அவர்களின் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இன்சுலின் சுரப்பே அதிகளவு பாதிக்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு, உடற்பருமன், எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவிலேயே வந்துவிடுவதாக, அந்த ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், சோம்பேறித்தனம் அடைவதால், நமது உடல் உறுப்புகளின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. இதுவே, அத்தகைய இடர்பாடுகளை குழந்தைகளிடம் அதிகளவில் கொண்டுவருவதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டயாபடீஸ் சிக்னல்: நீங்க எங்க இருக்கீங்க?

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...