Friday, March 17, 2017

ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என தொலை தொடர்பு தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு அளித்தது.

மார்ச் 17, 04:00 AM

புதுடெல்லி,

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ‘4ஜி’ என்னும் நான்காம் தலைமுறை தொலைதொடர்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது. சிம் கார்டு, அழைப்புகள், இணையதள சேவை என எல்லாவற்றையும் அது இலவசமாக வழங்கி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை வழங்கப்பட்ட இலவச சேவை, பின்னர் இந்த மாதம் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அளித்த அனுமதிக்கு எதிராக பிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தின.

ஜியோவின் இலவச சேவையை 90 நாட்களுக்கு மேல் நீட்டிப்பதற்கு டிராய் அளித்த அனுமதிக்கு எதிராக பார்தி ஏர்டெல் நிறுவனமும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் ‘டிடிசாட்’ என்றழைக்கப்படுகிற தொலைதொடர்பு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தன. அதில், ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிப்பதுடன், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு டிராய்க்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

இதுதொடர்பாக பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், ஜியோ மற்றும் டிராய் தரப்பு கருத்துகளை கேட்டு விட்டு, தீர்ப்பை தொலைதொடர்பு தீர்ப்பாயம் கடந்த வாரம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என தொலை தொடர்பு தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு அளித்தது. இருப்பினும், இது தொடர்பான பிரச்சினைகளை மறுஆய்வு செய்து, அதன் முடிவை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என்று டிராய்க்கு அது உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...