Saturday, April 1, 2017


எப்பொழுதும் மக்கள் எதிர்ப்பார்ப்பில் ஜியோ ஜியோ தான் ...! காரணம் உள்ளே .

.


ஜியோ பெயரிலும் சரி, செயலிலும் சரி மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறது .

ஜியோவின் சலுகைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றதற்கான காரணம் முதலில் முந்திக் கொண்டதே. அதாவது ஜியோ என்ற ஒன்று வருவதற்கு முன்பாக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு ஜி பி ரூ. 250 வரைக்கும் விலை நிர்ணயம் செய்திருந்தது.

ஆனால் ஜியோ வந்த பிறகு , அதாவது இலவச டேட்டா வழங்கிய பிறகு மற்ற நிருவனங்களும் போட்டியை சமாளிக்க வெகுவாக ஆபரை வழங்கியது. இருந்தாலும் ஜியோ வழங்கிய அளவிற்கு முற்றிலும் இலவச சேவையை இதுவரை எந்த நிறுவனமும் வழங்க வில்லை .

மேலும் , தற்போது ஜியோவின் இலவச சேவை பெறுவதற்கான கால அவகாசம் முடியும் தருவாயில் மீண்டும் 1 5 நாட்களுக்கு சலுகையை நீடித்தது.இதற்கு ஏற்றார் போல், பி எஸ் என் எல் நிறுவனம் , ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் சலுகையை அறிவித்தாலும் ஜியோ விற்கு உண்டான வரவேற்பு , மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இல்லை என்றே கூறலாம் .
Dailyhunt
"இப்படி எல்லாம் பஸ் ஓடினா எதுக்கு டீசல், பெட்ரோல்." : 17 கிமீக்கு வெறும் ஒரு ரூபாய்தான் செலவாம்.

டீசல் விலை ஏறிப்போச்சு, பெட்ரோல் விலை கூடிப்போச்சு என்றெல்லாம் இனிமேல் புலம்பத் தேவையில்லை. மேற்குவங்காள மாநிலத்தில் வித்தியாசமான முறையில் ஒரு நிறுவனம் பஸ்ஸை இயக்கியுள்ளது. 
ஒரு ரூபாய் செலவு
மாட்டு சானத்தின் மூலம் எடுக்கப்பட்ட ‘பயோகியாஸ்’சைப் பயன்படுத்தி  தனியார் நிறுவனம் ஒன்று கொல்கத்தாவில் பஸ்ஸை இயக்கி சாதனை படைத்துள்ளது. இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை  17 கி.மீ.க்கு இயக்க வெறும்  ஒரு ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. 
பிரத்யேக பஸ்
கொல்கத்தாவைச் சேர்ந்த ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு’ நிறுவனம் சார்பில் இந்த பஸ் இயக்கப்பட்டது. இதற்காக இந்த நிறுவனம் ‘அசோக் லேலாண்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சாண எரிவாயுவில் ஓடுவதற்காக பிரத்யேக பஸ்ஸை தயாரித்தது.
இந்நிலையில், கொல்கத்தாவின் உல்டாடங்கா பகுதியில் இருந்து காரியா பகுதி வரை நேற்று முன் தினம் முதல்முறையாக சான எரிவாயுவினால் பஸ் இயக்கப்பட்டது. 

சமையல், மின்சாரம்
இந்த பஸ் இயக்கியது குறித்து ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு’ நிறுவனத்தின் தலைவர் ஜோதி பிரகாஷ் தாஸ் கூறுகையில், “ மேற்குவங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் இருந்து சான எரிவாயுவை தயாரிக்கிறோம். மாட்டுசானத்தில் மட்டுமல்லாது, காய்கறிக்கழிவு ஆகியவற்றில் இருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிக்கலாம். இந்த வாயு மாசு இல்லாதது, இந்த வாயுவைப் பயன்படுத்தி, வாகனங்களை இயக்கலாம், சமையல் செய்யலாம், மின்சாரமும் உற்பத்தி செய்யமுடியும். 
ரூ.20 உற்பத்தி செலவு
இந்த வாயு ஒரு கிலோ தயாரிக்க எங்களுக்கு ரூ. 20 செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயு மூல் 5 கி.மீ. வரை பஸ்ஸை இயக்கலாம். கொல்கத்தாவில் டீசலில் 17 கி.மீ.க்கு பஸ்ஸை இயக்க ரூ.12 செலவாகிறது. நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை 17 கி.மீக்கு இயக்க வெறும்  ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும்.
நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயுவை வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய 100 விற்பனை நிலையங்கள் அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்கும் 15-க்கும் மேல்பஸ்களை சான எரிவாயு மூலம் இயக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 
டீசலைத் தவிர்க்கலாம்
15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை சாலையில் ஓட்டத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வாகனங்களை வைத்து இருக்கும் உரிமையாளர்கள் டீசல் எஞ்சினை மாற்றிவிட்டு பயோ-கியாஸ் மூலம் இயங்கும் எஞ்சினை பொருத்தலாம்’’ என்று தெரிவித்தார். 
பசுக்களை எதற்காக காக்கிறோம்?
பசுக்களைக் காக்கவும், பசு கடத்தலை தடுக்கவும், மாட்டிறைச்சியை தடை செய்தும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாரதிய ஜனதா அரசுகள் சட்டம் இயற்றி வருகின்றன. அந்த மாடுகளின் சானத்தை பயன்படுத்தி, இது போல் பயோ-கியாஸ் உற்பத்தி செய்தால், மாடுகளை பாதுகாப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும்.
Dailyhunt
70 மாணவிகளை நிர்வாணமாக்கி மாதவிடாய் சோதனை... கொடூர குணம் கொண்ட 'வார்டன்' மீது வழக்குப் பதிவு!

கழிவறையில் ரத்தக்கறை இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த அரசு மகளிர் விடுதி காப்பாளர் 70 மாணவிகளின் உடைகளை களைந்து, நிர்வாணமாக்கி, மாதவிடாய் சோதனை நடத்திய கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசம், முசாபர் நகரில் அரங்கேறியுள்ளது.
மனிதநேயமற்ற முறையில் இந்த சோதனை நடத்திய பெண் வார்டனை இடைநீக்கம் செய்த உத்தரப்பிரதேச அரசு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அரசு விடுதி
முசாபர்நகர் மாவட்டம், கதாவுளி நகரில் கஸ்தூரிபாய் காந்தி உண்டு உறைவிட அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செயல்பட்டுவரும் அரசு விடுதியில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஏறக்குறைய 90-க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி விடுதியில், சுரேகா தோமர் என்ற பெண் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

ரத்தக்கறை
இந்நிலையில், கடந்த மாதம் 26-ந்தேதி விடுதியின் கழிப்பறையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதைப் பார்த்த வார்டன் சுரேகா தோமர் விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளிடம் யாருக்கு மாதவிடாய் வந்தது என்று நாகரீகமற்ற கேள்வி கேட்டுள்ளார்.
70 பேரிடம் சோதனை
ஆனால், மாணவிகள் சொல்வதற்கு நாணப்பட்டு மறுத்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த சுரேகா தோமர், வயதுவந்த மாணவிகள் 70 பேரை தனியாகப் பிரித்து, தனித்தனியாக ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்தியுள்ளார்.
அழுகை, எதிர்ப்பு
இந்த சோதனை நடக்கும் போது பல மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், சில மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தை உடனடியாக யாரும் பெற்றோர்களிடம் கூறவில்லை, வெள்ளிக்கிழமைதான் வெளியே கசிந்தது.
சஸ்பெண்டு
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள்  பள்ளிக்கு படையெடுத்து வந்து பள்ளிநிர்வாகம், தலைமை ஆசிரியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த சம்பவம் மாவட்ட கல்வி அதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சுரேகா தோமரை ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.
நடவடிக்கை
அதுமட்டுமல்லாமல், இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்து மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், “ஊடகங்கள் மூலம் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சோதனை குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த வார்டன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
எப்.ஐ.ஆர்.
இதற்கிடையே மாணவிகளுக்கு இதுபோன்ற கொடூர சோதனை நடத்திய வார்டன் சுரேகா தோமர் மீது முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பாக்ஸ் மேட்டர்......
நான் செய்தது சரிதான்...
வார்டன் சுரேகா தோமர் தனது செயலை நியாயப்படுத்தி கூறுகையில், “ நான் செய்தது இப்போது வரை சரிதான். ஏனென்றால், எனக்கு சுத்தம், ஒழுக்கம் ஆகியவற்றில் அதிக நம்பிக்கை உண்டு. இந்த மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் எனக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் போல் கண்டிப்பான விடுதி காப்பாளர் தேவையில்லை’’ எனத் தெரிவித்தார்.
பாக்ஸ் மேட்டர்...
விசாரணை நடத்தப்படும்...
தொடக்க கல்வி அதிகாரி சந்திர கேஷ் யாதவ் கூறுகையில், “வார்டன் சுரேகா தோமர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 3 துறைகள் அடங்கிய குழு அவரிடம் விசாரணை நடத்தும், புதிய வார்டனும் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இப்போது,மாணவிகளின் பெற்றோரை சமாதானப்படுத்தி, மீண்டும் மாணவிகளை திரும்ப அழைக்கப்போகிறோம்’’ எனத் தெரிவித்தார்.
Dailyhunt

தமிழக அரசு ஊழியர்களுக்கான மார்ச் மாத சம்பளம் | ஏப்ரல் 4-ந்தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.


தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4-ந்தேதி தான் கிடைக்கும் | தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும். ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும் சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள் என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது. 3-ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பள பணம் வங்கிகளில் செலுத்தப்படும். அந்தவகையில் 4-ந்தேதி தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள பணம் கிடைக்க உள்ளது.
பசுவதை செய்தால் ஆயுள் தண்டனை : குஜராத் அரசு!

குஜராத்தில் இனி பசுவதை செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என, அம்மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 1954ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்ட
மசோதாவில் திருத்தம் செய்து, பசுக்களை கடத்துதல் மற்றும் வதைசெய்தல் முழுமையாக தடை செய்யப்பட்டது. அதிலிருந்து பசுவதை செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டம் குஜராத்தில் நடைமுறையில் இருந்து வந்தது.

தற்போது அதில் சில மாற்றங்களைச் செய்து புதிய சட்ட மசோதாவாக இன்று மார்ச் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை குஜராத் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவில் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும்படியும், பசு கடத்தலுக்கு பயன்படும் வாகனத்தை நிரந்தரமாக பறிமுதல் செய்யும்படியும் சட்டம் திருத்தப்பட்டு பின்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்றபெயரில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் உத்திர பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுவதும் பசுவை கொள்வதற்கும், மாட்டிறைச்சிக்கும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துவங்கியது புதிய நிதியாண்டு: சாமானியன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன??
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.

அதன் விவரம் வருமாறு:

*கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இன்று முதல் வருமான வரி 77.2 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.


* ஆண்டு வருமானம் ரூ. 2..5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் இருந்தால் வருமான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.


*இன்று முதல் வாகன காப்பீட்டு பிரீமியம் தொகை 41 சதவீதம் உயர்கிறது.


* பி.பி.எப். உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* பெருநகர எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை ரூ.5000 வைத்திருக்க வேண்டும்.

* நகரவாழ் எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை, ரூ.3000 வைத்திருக்க வேண்டும்.

* சிறுநகர எஸ்.பி.ஐ., வாடிக்கை வாடிக்கையாளர்கள் ரூ.2000 வைத்திருக்க வேண்டும்.

* கிராமப்பகுதி எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் வைப்பத்தொகை ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட வைப்பு தொகை குறைவாக இருந்தால் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

* காற்று மாசை குறைக்க பி.எஸ்., 4 வகை வாகனங்கள் விற்கும் உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்படுள்ளது..

* தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம்! சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்



ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, சென்னையில் இன்று, முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாமல், பழைய குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அதற்குப் பதில், 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், குடும்ப அட்டையில் உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு வந்தது.

இதனிடையே, குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தற்போது நடந்துவருகிறது. பல இடங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் தயாரானது.



இந்த நிலையில், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, சென்னை கொரட்டூரில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

NEWS TODAY 14.02.2026