Sunday, April 9, 2017

ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்.

ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ("பான்')ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.
எனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும். நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம். இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

கோடை வெயிலின் தாக்கம்: பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

சென்னை மாநகரில் தற்போது அதிகரித்துவரும் கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினசரி அதிகஅளவில் தண்ணீர் அருந்தவும். இளநீர், மோர் மற்றும் பழரசங்கள் அருந்துவதால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்.கோடைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலாமற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், நேரடியாகஉச்சி வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும், தவிர்க்கஇயலாத சமயங்களில் குடை அல்லது தலையை மறைக்கும்துணியினை பயன்படுத்தலாம்.

சர்க்கரை கரைசல்

அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்கவும், கடுமையானவெயிலில் செல்லும்போது வியர்வை அதிகம் வெளியேறுவதால்உப்பு சர்க்கரை கரைசல் கலந்த நீரை பருகவும், வெயிலில் செல்லும்போது தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக நிழலில்ஓய்வெடுக்கவும். போதுமான தண்ணீர் அருந்தவும்.அதன்பின்னரும் உடல்நலக்குறைவு ஏற்படின் அருகாமையில் உள்ளஅரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும். அடிக்கடிநல்ல தண்ணீரால் முகத்தினை கழுவ வேண்டும். மேலும், ஒருநாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் வியர்வை துவாரங்கள் திறக்கப்படுவதோடு தோலில் படியும்அழுக்குகளும்குறையும்.கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை அணிதல், இறுக்கமாகஆடை அணிவதை தவிர்த்தல், குழந்தைகள் வெயில் நேரத்தில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்த்தல், தெருக்களில்விற்பனைக்குவரும் ஐஸ் போன்ற உணவு பொருட்களை உண்பதை தவிர்த்தல்வேண்டும்.

அவசர உதவி

சின்னம்மை, தட்டம்மை நோய்களுக்கான அறிகுறி தென்பட்டால்,அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவும். நோய் பாதிக்கப்பட்டவரை, நோயிலிருந்து விடுபடும்வரையில் தனிமையில் இருக்க வைக்கவும். அனைவரும், வெளியில் செல்லும்போது காலணிகள் அணிந்து செல்லவும்.கூடுதல் தகவல் மற்றும் புகார்களுக்கு ‘1913’ மற்றும் ‘104’ என்றஎண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

அவசர உதவி மற்றும் சிகிச்சைக்கு தண்டையார்பேட்டைதொற்றுநோய் மருத்துவமனை தொலைபேசி எண்கள். 044–25912686, 87மற்றும் ‘108’ ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

IT Raid


மனம் விட்டுப் பேசுவதே மன அழுத்தத்துக்கு நிரந்தரத் தீர்வு: தா சேஷய்யன்

By DIN  |   Published on : 09th April 2017 05:48 AM  | 

பிரச்னைகள் குறித்து சக மனிதர்களிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் மன அழுத்தத்துக்கு நிரந்தரமாகத் தீர்வு காண முடியும் என டாக்டர் சுதா சேஷய்யன் வலியுறுத்தினார்.

உலக சுகாதார தினத்தையொட்டி மன அழுத்தம் குறித்த விவாத நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி நிறுவனம் (ஸ்கார்ஃப்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் டாக்டர் சுதா சேஷய்யன் பேசியது:

உலக அளவில் புகழின் உச்சியில் இருந்த ஆல்ட்ரின், சர்ச்சில், லேடி காகா, சிக்மண்ட் பிராய்ட் உள்பட ஏராளமான பிரபலங்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். இதிகாசங்களில் ராமன், சீதை, திருதராஷ்டிரர், அர்ஜூனன் உள்பட பல கதாபாத்திரங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தது.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த பிரச்னையை அந்தந்தக் கால கட்டத்தில் நண்பர்கள், குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசியதாலும், என்ன காரணத்தால் மன அழுத்தம் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொண்டதாலும் பிரச்னையிலிருந்து முழுமையாக விடுபட்டனர். பிரச்னை எதுவாக இருந்தாலும் அது குறித்து சக மனிதர்களிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் மன அழுத்தத்துக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

நடிகை அக்ஷரா கௌட: நான் ஒன்றரை ஆண்டு காலம் மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். என்னவென்று தெரியாத நிலையில் இருந்தபோது இது பற்றி எனது தாயிடம் பேசினேன். இதைத் தொடர்ந்து மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்றேன். மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க நமக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை மனதில் தேக்கி வைக்காமல் அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

ஸ்கார்ப் நிறுவனர் டாக்டர் தாரா: உலகம் முழுவதும் சுமார் 300 கோடி மக்கள் மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், குழந்தை பெற்ற சில மாதங்களில் பெண்களுக்கு என பல தரப்பினருக்கும் இந்தப் பிரச்னை உள்ளது. பல்வேறு கட்ட மருத்துவ ஆலோசனைகள், பழக்கவழக்கங்கள், உணவு முறை மூலம் தீர்வு காண முடியும் என்றார்.

இருதய மருத்துவ நிபுணர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் பரமத்தியில் அதிகரிக்கும் வெப்பம்: காரணம் என்ன?

By DIN  |   Published on : 09th April 2017 02:43 AM  |

தமிழகத்தில் பிற இடங்களைக் காட்டிலும் கரூர் பரமத்தியில் அதிக வெப்பத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கும். இருப்பினும் மார்ச் மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. பிற்பகலில் கடற்காற்று நிலப்பரப்புக்குள் நுழைவதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் உள்மாவட்டங்களைக் காட்டிலும் சற்று குறைவாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் கோடைக்காலம் தொடங்கியது முதலே கரூர் பரமத்தியில் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உள்மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கிறது.
உள்மாவட்டங்களில் கரூர் பரமத்தியில் வெப்பம் அதிகரிப்பதற்கு நிலப்பரப்பின் தன்மையே காரணம். அந்தப் பகுதியில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுவதே அதிக வெப்பத்துக்குக் காரணம் என்றனர்.

8 இடங்களில் சதம்: சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 105 டிகிரி பதிவானது. ஞாயிற்றுக்கிழமையைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 105
வேலூர், சேலம், தருமபுரி 104
திருச்சி, மதுரை 103
பாளையங்கோட்டை 102
கோவை 102
சென்னை 98

09.04.1967: உலகின் முதல் போயிங் 737 விமானம் பறந்த தினம் இன்று!

By DIN  |   Published on : 09th April 2017 12:00 AM 
boeing_737

போயிங் 737 (Boeing 737) உலகின் மிகப் பிரபலமான பயணிகள் விமானமாகும். போயிங் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகத் தயாரிக்கப்படும் இவ்வகை விமானங்கள் இதுவரை 5,000 க்கும் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.


இவ்வகை விமானங்களில் ஏறத்தாழ 1,250 வகைகள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது நிமிடத்திலும் ஒரு போயிங் 737 விமானம் பறக்கத் தொடங்குகிறது அல்லது தரையிறங்குகிறது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

மனதை உருக்கும் சம்பவம்.. விபத்தில் கணவர் இறந்த செய்தியை டிவி பிரேக்கிங் நியூஸில் வாசித்த செய்தியாளர்

நியூஸ் ஆங்கர் ஒருவர் தனது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைப் பிரேக்கிங் செய்தியாக வாசித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.



ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தனியார் டிவியில் பணிபுரிந்து வரும் நியூஸ் ஆங்கர் ஒருவர் தனது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைப் பிரேக்கிங் செய்தியாக வாசித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரபலமான ஐபிசி-24 என்ற தனியார் டிவியில் 9 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் சுப்ரீத் கவுர்(28). இவருக்கு கடந்த ஒரு வடத்திற்கு முன்பு பிலாவைச் சேர்ந்த ஹர்ஷாத் கவடே என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் ராய்ப்பூரில் வசித்து வருகின்றனர்.








இந்நிலையில் சனிக்கிழமை காலை, வழக்கம்போல் கவுர் லைவ் செய்தி வாசிப்பில் இருந்தார். அப்போது நிருபர் ஒருவர் தொலைபேசியில் மகாசமுந்த் மாவட்டத்தில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், அதில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனை செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது சுப்ரீத் கவுர் அந்த செய்தியையும் வாசித்தார். ஆனால் அந்த வாகனத்தில் சுப்ரீத் கவுரின் கணவர் ஹர்ஷாத் கவடேயும் பயணித்தார் என்ற செய்தியையும் அவர் அறிந்திருந்தார். எனினும் அதனை செய்தி வாசிக்கும்போது காட்டிக் கொள்ளாமல் செய்திநேரம் முடிந்ததும் ஸ்டுடியோவை விட்டு வெளியில் வந்து கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "விபத்துக்குள்ளானது அவர் கணவரின் வாகனம்தான் என்று அவர் உணர்ந்து கொண்டார். அந்த செய்தியை வாசித்துவிட்டு வெளியே வந்த உடனே அவரது உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது. கவுர் அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அவரது கணவர் இறந்துவிட்டார் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எங்களுக்கு அந்தளவிற்கு தைரியமில்லை" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

NEWS TODAY 14.02.2026