Sunday, April 9, 2017

மனதை உருக்கும் சம்பவம்.. விபத்தில் கணவர் இறந்த செய்தியை டிவி பிரேக்கிங் நியூஸில் வாசித்த செய்தியாளர்

நியூஸ் ஆங்கர் ஒருவர் தனது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைப் பிரேக்கிங் செய்தியாக வாசித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.



ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தனியார் டிவியில் பணிபுரிந்து வரும் நியூஸ் ஆங்கர் ஒருவர் தனது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைப் பிரேக்கிங் செய்தியாக வாசித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரபலமான ஐபிசி-24 என்ற தனியார் டிவியில் 9 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் சுப்ரீத் கவுர்(28). இவருக்கு கடந்த ஒரு வடத்திற்கு முன்பு பிலாவைச் சேர்ந்த ஹர்ஷாத் கவடே என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் ராய்ப்பூரில் வசித்து வருகின்றனர்.








இந்நிலையில் சனிக்கிழமை காலை, வழக்கம்போல் கவுர் லைவ் செய்தி வாசிப்பில் இருந்தார். அப்போது நிருபர் ஒருவர் தொலைபேசியில் மகாசமுந்த் மாவட்டத்தில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், அதில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனை செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது சுப்ரீத் கவுர் அந்த செய்தியையும் வாசித்தார். ஆனால் அந்த வாகனத்தில் சுப்ரீத் கவுரின் கணவர் ஹர்ஷாத் கவடேயும் பயணித்தார் என்ற செய்தியையும் அவர் அறிந்திருந்தார். எனினும் அதனை செய்தி வாசிக்கும்போது காட்டிக் கொள்ளாமல் செய்திநேரம் முடிந்ததும் ஸ்டுடியோவை விட்டு வெளியில் வந்து கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "விபத்துக்குள்ளானது அவர் கணவரின் வாகனம்தான் என்று அவர் உணர்ந்து கொண்டார். அந்த செய்தியை வாசித்துவிட்டு வெளியே வந்த உடனே அவரது உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது. கவுர் அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அவரது கணவர் இறந்துவிட்டார் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எங்களுக்கு அந்தளவிற்கு தைரியமில்லை" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...