Tuesday, April 25, 2017

தமிழகத்தில்  இன்று 11 இடங்களில் வெயில் சதம்

By DIN  |   Published on : 24th April 2017 07:56 PM 
தமிழகத்தில் திங்கள்கிழமை 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. வடமேற்கு தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நெருங்குவதால், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரி வெப்பம் 106 டிகிரி முதல் 111 டிகிரி வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அனல் காற்று எச்சரிக்கை: தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களான வேலூல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மழை பதிவு: அதிக வெப்பத்தின் காரணமாக இடிமேகங்கள் உருவாகி ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 30 மி.மீ., பெரம்பலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 20 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.

11 இடங்களில் சதம்: திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. 
 
 வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
 வேலூர், திருத்தணி - 110
 திருச்சி - 108
 மதுரை, கரூர் பரமத்தி - 106
 பாளையங்கோட்டை - 105
 திருப்பத்தூர், சேலம் - 104
 சென்னை - 103
 தருமபுரி - 102
 பரங்கிப்பேட்டை -101.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...