Monday, April 24, 2017

மதுரையில் இடி, மின்னலோடு ஏமாற்றிய மழை

By DIN  |   Published on : 23rd April 2017 08:12 PM  
மதுரை: மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கருமேகம் திரண்ட நிலையில் இடிமின்னலுடன் தூரலே காணப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
 மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக 106 டிகிரி அளவுக்கு வெப்பத்தாக்கம் உள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
 இன்று பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் திடீரென வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. பின்னர் காற்றுடன், இடி மின்னலுடன் மழை பெய்தது.
 சிறிது நேரம் பெய்த மழையும் தூரலாகவே காணப்பட்டது. இதனால் வெப்பத்தாக்கம் குறையவில்லை. காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
 மதுரை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி பங்களா பகுதியில் 9.2 மில்லிமீட்டரும், மேட்டுப்பட்டியில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவானதாக பொதுப்பணித்துறையினர் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025