Thursday, April 27, 2017

மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அடைக்கலம் : டாக்டர்களுக்கு ரூ.1.4 கோடி அபராதம்
பதிவு செய்த நாள்27ஏப்
2017
00:59

புதுடில்லி : ஜாமினில் வரமுடியாத, 'வாரன்ட்' உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, ஹரியானா மாநில முன்னாள், எம்.எல்.ஏ.,வை, தங்கள் மருத்துவமனையில், சிகிச்சை என்ற பெயரில், 527 நாட்கள் தங்க வைத்த இரண்டு டாக்டர்களுக்கு, சுப்ரீம் கோர்ட், தலா, 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஹரியானாவில், ஐ.என்.எல்.டி., கட்சியை சேர்ந்த முன்னாள், எம்.எல்.ஏ., பல்பீர் சிங்கிற்கு எதிராக, ஒரு கொலை வழக்கில், ஜாமினில் வர முடியாத, 'வாரன்ட்' உத்தரவை நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்தன. ஆனால், குருகிராம் நகரை சேர்ந்த தனியார் மருத்துவமனையின் இயக்குனர்கள் முனிஷ் பிரபாகர், கே.எஸ்.சச்தேவ் ஆகியோர், பல்பீர் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பதாக பொய் காரணம் கூறி, தங்கள் மருத்துவமனையில், 527 நாட்கள் தங்க வைத்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு, மருத்துவமனை இயக்குனர்கள் இருவருக்கும், தலா, 70 லட்சம் ரூபாய் வீதம், 1.4 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025