Tuesday, April 25, 2017

ஜியோவை முந்தியது பிஎஸ்என்எல்-ன் அசத்தலான மூன்று முத்தான அதிரடி சலுகை!

By DIN  |   Published on : 24th April 2017 08:54 AM  | 
bsnl
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொலை தொடர்பு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி ஆதிக்கம் செலுத்திவந்த ஜியோவின் ஆட்டத்தை அடக்கும் விதமாக, பொதுத் துறையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான மூன்று முத்தான அதிரடி சலுகை திட்டங்களை அறிவித்து அடங்கியுள்ளது.
ஜியோவோடு போட்டி போடும் முனைப்பில் பி.எஸ்.என்.எல் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஜியோவின் இலவச சலுகை மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற இருந்தது. ஆனால் ஏப்ரல் 22 வரை நீடித்தது. தற்போது ஜியோ வாடிக்கையாளர்களை தன்னுடன் வைத்திருக்கும் பொருட்டு "தன் தனா தன்' என்ற சலுகையை அறிமுகம் செய்தது.
"தன் தனா தன்' என்ற புதிய சலுகை திட்டத்துக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
முதலாவதாக "டிரிப்பிள் ஏஸ்' (Triple Ace) என்ற புதிய திட்டத்தின்படி ரூ.333-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி வேகத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வரை வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 90 நாட்களாகும். அதாவது வாடிக்கையாளர்கள் ரூ.1.23காசுக்கு ஒரு ஜிபி என்ற அடிப்படையில் 270 ஜிபி கிடைக்கும்.
"தில் கோல் கே போல்'  (Dil Khol Ke Bol) திட்டத்தின் கீழ் ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வரம்பற்ற உள்ளூர்-வெளியூர் அழைப்புகளுடன் தினமும் 2ஜிபி டேட்டா 3ஜி வேகத்தில் வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்களாகும்.
மூன்றாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள "நெஹ்ளே பே தெஹ்லா' (Nehle pe Dehla) திட்டத்தில் ரூ.395-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் 3,000 நிமிட அழைப்புகளும், இதர நிறுவன நெட்வொர்க்கிற்கு 1,800 நிமிட அழைப்புகளும் வழங்கப்படும். அத்துடன் தினமும் 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இத்திட்டத்தின் வேலிடிட்டி காலம் 71 நாட்களாகும்.
போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக, ரூ.339- திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி 2ஜிபி டேட்டா என்ற அளவிலிருந்து 3ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பி.எஸ்.என்.எல். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    No comments:

    Post a Comment

    Regulatory grey area ?

    Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...