Tuesday, April 25, 2017

டாக்டர்கள் போராட்டம் நீடிப்பு: அரசுக்கு நெருக்கடி

பதிவு செய்த நாள்24ஏப்
2017
23:20



சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, டாக்டர்களின் போராட்டம் வலுத்துள்ளதால், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. 'இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த டாக்டர்கள், ஆறாவது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டத்தில், நேற்று ஈடுபட்டனர்.
அதேபோல, ஆரம்ப சுகாதார நிலையடாக்டர்களும், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம் நிலவுகிறது.

இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கூறியதாவது: இதுவரை, நோயாளி களை பாதிக்காமல், போராட்டம் நடத்தி வருகிறோம். இன்று, மருத்துவ கல்வி இயக்குனரகம் அலுவலகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்களின் கோரிக்கையை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாத பட்சத்தில், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், நாராயண பாபு கூறுகையில், ''மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்களால், புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு டாக்டர்களின் போராட்டத்தால், நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை. போராட்டத்தை கைவிடக் கோரி, தொடர்ந்து டாக்டர்களிடம் பேசி வருகிறோம்,'' என்றார்.

சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''இட ஒதுக்கீடு விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.அதில், சாதகமான  உத்தரவு வரும் என்றநம்பிக்கை உள்ளது.''டாக்டர்கள் கோரிக்கைகள் குறித்து, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; மத்திய அரசிடமும், கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

Patta transfer: officials asked to digitally process applications

Patta transfer: officials asked to digitally process applications Dennis S. Jesudasan CHENNAI. 27.01.2026 The Director of Survey and Settlem...