Sunday, April 9, 2017

கரூர் பரமத்தியில் அதிகரிக்கும் வெப்பம்: காரணம் என்ன?

By DIN  |   Published on : 09th April 2017 02:43 AM  |

தமிழகத்தில் பிற இடங்களைக் காட்டிலும் கரூர் பரமத்தியில் அதிக வெப்பத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கும். இருப்பினும் மார்ச் மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. பிற்பகலில் கடற்காற்று நிலப்பரப்புக்குள் நுழைவதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் உள்மாவட்டங்களைக் காட்டிலும் சற்று குறைவாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் கோடைக்காலம் தொடங்கியது முதலே கரூர் பரமத்தியில் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உள்மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கிறது.
உள்மாவட்டங்களில் கரூர் பரமத்தியில் வெப்பம் அதிகரிப்பதற்கு நிலப்பரப்பின் தன்மையே காரணம். அந்தப் பகுதியில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுவதே அதிக வெப்பத்துக்குக் காரணம் என்றனர்.

8 இடங்களில் சதம்: சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 105 டிகிரி பதிவானது. ஞாயிற்றுக்கிழமையைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 105
வேலூர், சேலம், தருமபுரி 104
திருச்சி, மதுரை 103
பாளையங்கோட்டை 102
கோவை 102
சென்னை 98

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...