Sunday, April 16, 2017

வீட்டுக்கொரு ஆலமரம் அந்தக்காலம்... ஊருக்கு ஒன்றாவது இன்று இருக்கிறதா!?

துரை.நாகராஜன்





மரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தன்மை உடைய மரம் ஆலமரம். அகலமான உருவ அமைப்பு கொண்ட அகல்மரம், பின்னர் பெயர் மருவி ஆலமரம் என பெயர் பெற்றது. 1980-1990-களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில், பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லும் நாட்டாமையும், சொம்பும் கூடவே ஆலமரமும் மிஸ் ஆகாத விஷயங்கள். பஞ்சாயத்து என்றாலே ஆலமரங்கள் நிழலில் நடைபெறுவதாகத்தான் அப்போதைய சினிமாவில் காட்டப்படும். இதற்கும் நம்முன்னோர் காரணம் வைத்திருந்தனர். ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்பதை அறிந்துதான் ஆலமரத்து நிழலில் பஞ்சாயத்துகளை நடத்தினர். அரசமரத்தை போன்றே ஆலமரத்திற்கும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு. இந்த ஆலமரம் நூறு ஆண்டுகளுக்கும் மேல் வளரும் தன்மையுடையது. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற வாசகம் பிரபலம். கருவேல மரத்தின் குச்சிகளாலும், ஆலமரத்தின் குச்சிகளாலும் பல்லை துலக்கும்போது பல்லின் ஈறுகள் அனைத்தும் வலிமை பெறுகின்றன. ஆலங்குச்சியில் இருந்து வரும் பாலில் ஒருவித துவர்ப்புத்தன்மை இருக்கும். இந்த பால்தான் பல்லுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. இதுதவிர, ஆலமரத்தில் வேர் முதல் மரத்தின் நுனி வரை வரை மருத்துவ குணங்கள் நிறைந்தது.



பழங்காலத்தில் நாட்டை ஆண்ட அரசர்கள் ஆலமரம், அரச மரம், புங்கை மரம் ஆகியவற்றை சாலை ஓரங்களிலும், ஊர் எல்லைகளிலும் நட்டு வளர்த்தனர். அதன் பயனைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம். பல தலைமுறைகளைக் கடந்து காட்சி தரும் மரங்களில் ஆலமரத்துக்கு தனி கம்பீரம் உண்டு. அகன்ற ஒரு ஆலமரத்தை கிளைகளிலிருந்து விழுதுகள் தரையில் ஊன்றி மரத்திற்கு தாங்கும். விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எவ்வளவு பெரிய புயல்கள் தாக்கினாலும் சாயாத உறுதியை கொண்டது. அதனால்தான் என்னவோ அனைத்து பறவைகளும் அதில் தஞ்சமடைகின்றன. இந்தியாவின் தேசிய மரமும் இந்த ஆலமரம்தான். இந்த ஆலமரம் ஒரு கூட்டுக்குடும்பம் என்றும் சொல்லலாம். காகம், கிளிகள், குருவிகள், மைனா என பல இனங்களைச் சேர்ந்த பறவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தஞ்சம் அடையும் மரமும் ஆலமரம்தான். வேறு எந்த மர வகைகளிலும் அனைத்து பறவைகளும் குடியிருக்காது. இதற்கு ஆலமரங்களில் இருக்கும் பழங்களும் காரணம். ஆலமரத்துபழம் அனைத்து பறவைகளும் விரும்பி உண்ன ஏற்றது.

இதுதவிர, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பத்து ஏக்கர் விவசாய நிலம் வைத்திருந்தால் வயலுக்கு நடுவில் ஆலமரம் நிச்சயம் இருக்கும். அந்த வயலில் வேலை செய்வோர் மதிய உணவை முடித்துவிட்டு மரத்தடி நிழலில் ஓய்வெடுப்பர். பணியாட்கள் இதன் நிழலில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தாலே களைப்பு தீர்ந்து மறுபடியும் வேலையில் தீவிரம் காட்டத் தொடங்கி விடுவர். வழிப்போக்கர்களும் ஆலமர நிழலை தஞ்சம் அடைந்து களைப்பு தீர்ந்த பின்னர் தங்கள் பயணத்தை மேற்கொள்வர். இன்று வயல்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன, வயலின் ஊடாக இருந்த ஆலமரமும் தூக்கி எறியப்பட்டு விட்டது. முன் காலத்தில் வீட்டுக்கு ஒரு ஆலமரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதன்பிறகு தெருவுக்கு ஒன்று, ஊருக்கு ஒன்று என்று எண்ணிக்கை குறைந்து விட்டன. இன்றைய நிலையில் 6 முதல் 8 கிராமங்களுக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் ஆலமரங்கள் காணப்படுகின்றன. சிறுவர்கள் விழுதுகளில் ஊஞ்சல் விளையாடி மகிழ்வதும் இந்த ஆலமரத்தில்தான்.



ஆலமரத்திற்கு கன்று தனியாக நட்டு வளர்க்க வேண்டிய அவசியமில்லை. பறவைகள் உண்ணும் பழத்தின் விதைகள் எச்சத்தின் மூலமாக வெளிப்பட்டு தானாக ஆலமரம் முளைக்கும். அப்படி முளைக்கும் இந்த மரக்கன்றுகள் சற்று உயரமாக வளரும் வரை அவற்றுக்கு ஈரப்பதம் தேவை.அதன் பின்னர் இது வறட்சியை தாக்கி வளரும் தன்மை கொண்டது. இன்று பல்வேறு இடங்களில் ஆலமரங்கள் பாதுகாக்கப்படுகிறது. இதில் சற்று முக்கியமானது 'அடையாறு' ஆலமரம். கடந்த 450 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் பழங்காலம் தொட்டு பாரம்பர்யமாக கருதி வரும் ஆலமரங்கள் நாம் காக்க வேண்டிய பொக்கிஷங்கள்தான். காட்டை அழிக்கும் சாமியார்கள் இங்கு மரம் நட்டு வளர்ப்பார்கள் என நினைப்பதை தவிர்த்து, நன்மை தரும் அனைத்து மரங்களையும் பாதுகாப்பதும் நமது கடமைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கணவன் - மனைவி இடையே சச்சரவு தீர்க்கும் 10 வழிகள்!

ஆர். ஜெயலெட்சுமி









கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்னை விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய சண்டையைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார், மதுரையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.

* கணவன், மனைவி இருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பு வெறுப்பு, பழக்கவழக்கங்கள் இருக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். `நிறை குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வோம்' என்ற மனநிலைக்கு வரவேண்டும்.

* கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, துணைவரின் குடும்பத்தினரைக் குறை சொல்வது... கணவன் - மனைவி உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுத்தும். இவற்றை அடியோடு தவிர்க்க வேண்டும்.

* கணவன் - மனைவி சண்டையில் மூன்றாவது நபர் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நுழைந்தால் பிரச்னை வேறு வடிவம் எடுத்து பெரிதாகும். அந்த மூன்றாவது நபர் கணவர் அல்லது மனைவின் தாய், தந்தை, அண்ணன், அக்கா, நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் தங்களுக்குள் பேசித் தீர்வு காண முயல வேண்டும்.

* ஒருவர் கோபமாக சத்தம் போடும் நேரத்தில் மற்றவர் அமைதியாக இருந்துவிட்டாலே பாதி பிரச்னை குறைந்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கக் கூடாது.



* ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும்போதுதான் அது பல்கிப் பெருகும். அது சிறு சீண்டல்களாகவோ, பாராட்டாகவோ இருக்கலாம். `இந்த டிரெஸ் உனக்கு நல்லா இருக்கு', `இப்ப கொடுத்த காபி சூப்பர்!' என பாசிட்டிவ் கமென்ட் பகிர்ந்துகொள்வது நல்லது.

* தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது நேரில் மனம் திறந்து பேசிக்கொள்ள வேண்டும். அச்சமயத்தில் ஒருவர் சொல்வதை மற்றொருவர் நன்கு கவனித்துக் கேட்க வேண்டும்.

* பணம் சம்பந்தமான விஷயங்களில் இருவரும் பேசிவைத்துக்கொண்டு வரவு - செலவை பராமரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்.

* தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. அதே நேரம் சுயமரியாதையை முழுமையாக இழக்கக்கூடாது. விட்டுக் கொடுத்தல் என்பது இருவருக்கிடையே சமமாக இருக்க வேண்டும்.

* இருவரும் தங்களுக்கென ஹாபி, நட்பு வட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டும். திருமணத்துக்குப் பிறகு அவற்றைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

* தம்பதியர் அவ்வப்போது ஒன்றாக ட்ரெக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இருவரும் சேர்ந்து யோகா, பாட்டு என ஏதாவது கலையைக் கற்கலாம். இது அவர்களுக்கு இடையேயான அந்நியோன்யத்தை அதிகரிக்கும்.


ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மரணம்! #alert



கோழிக்கோடு அருகே கொயிலாண்டியைச் சேர்ந்த பஷீர் என்பவரது 4 வயது மகன் யூசப் அலி. கடந்த வெள்ளிக்கிழமை யூசப் அலி, தாயார் சுகரபி பேக்கரி ஒன்றில் ஜெல்லி மிட்டாய் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சில மணி நேரங்களில், இருவரும் வாந்தி எடுத்து மயங்கியிருக்கின்றனர். கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பஷீர்பரிதாபமாக இறந்து போனான். சுகரபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையைச் சேர்ந்த National Confectionary -தயாரிப்பான Tiger Hycount Jelly மிட்டாயை சிறுவனும் தாயும் சாப்பிட்டுள்ளனர். போலீசார் அந்த பேக்கரியில் இருந்து ஜெல்லி மிட்டாய்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவ–மாணவிகள் 8 பேர் மராட்டியத்தில் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏப்ரல் 16, 04:15 AM
மும்பை,

கர்நாடக மாநிலம் பெளகாவி பகுதியில் மராத்தா மண்டல் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 47 மாணவ–மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொழில் பயிற்சிக்காக மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றனர்.

அங்கு பயிற்சியை முடித்த மாணவர்கள் நேற்று காலை சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வன் வாய்ரி கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். பகல் 11.30 மணி அளவில் 30 மாணவ–மாணவிகள் கடலின் உள்ளே இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.

கடலில் மூழ்கி 8 பேர் பலி

இந்த நிலையில் திடீரென வந்த ஒரு ராட்சத அலை மாணவ–மாணவிகளை வாரி சுருட்டிக்கொண்டு உள்ளே இழுத்து சென்றது. இதில் சிலர் கடலில் மூழ்கினர். மேலும் சிலர் கடல் நீரில் தத்தளித்தபடி அபய குரல் எழுப்பினர்.

அங்கு நின்ற மீனவர்கள் மற்றும் உயிர்காக்கும் வீரர்கள் ஓடி வந்தனர். அவர்கள் மாணவ–மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அந்த பகுதி எம்.எல்.ஏ.வும், மாநில நிதித்துறை இணை மந்திரியுமான தீபக் கேசர்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தி 19 மாணவ– மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.

தவிர, 11 மாணவ–மாணவிகள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 8 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள் மற்றும் 3 பேர் மாணவிகள் ஆவர்.

எச்சரிக்கையையும் மீறி...

உயிர் பிழைத்த 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் அந்த பகுதியில் உள்ளே இறங்கி குளிக்க வேண்டாம் என்று அப்பகுதி மீனவர்கள், மாணவர்களை எச்சரித்து உள்ளனர். ஆனால் மீனவர்களின் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் கடலில் இறங்கி குளித்ததால் இந்த துயரம் நேர்ந்ததாக தெரிகிறது.

இப்பொழுதும்கூட மாணவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம், எந்தத் தடையுமில்லை!

அச்சுத் கிருஷ்ணன் ஸ்ரீதேவி | தமிழில்: பால்நிலவன்

அமெரிக்காவில் கல்வி பயில முனையும் இந்தியர்கள் கவலைப்பட எந்த அவசியமும் இல்லை. ட்ரம்ப்பின் அதிகாரத்தில் வாய்ப்புகள் சிறப்பாகவே உள்ளன. தவறாக உருவாக்கப்பட்ட கருத்துக்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

மன்ஹாட்டன் பாலத்திற்கும் வீட்டிற்கும் இடையில் நடந்துசெல்லும்போது, நியூயார்க் வானவெளியின் காட்சியால் ஒரு கணம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. சுதந்திரதேவிச் சிலை, விண்ணை முட்டும் கிரைஸ்லெர் கட்டிடம், தி எம்பையர் ஸ்டேட் கட்டிடம், தி நியூயார்க் டைம்ஸ் கட்டிடம் இன்னும் பல நகரின் உயர்ந்த கட்டிடங்கள் வானத்து நட்சத்திரங்களைத் தொட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

நான் இத்தகைய காட்சிகளைக் கொண்டு எந்தவிதமான சிந்தனையை என் கற்பனையில் கொண்டுவர முயல்கிறேன் என்றால் இந்தக் கல்வியாண்டில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இளைய மனங்கள் தயாராகிவருவதில் திடுமென்று ஏற்படுட்டுள்ள சில சிக்கல்களைத்தான்.

இது எவ்வாறாயினும், வீட்டை நெருங்கும்போது, கிளர்ச்சியடைந்து ஆரவாரமாக வரவேற்றான் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் டேன்டான் பொறியியல் பள்ளியின் மாணவர் சேர்க்கைத் துறையோடு நெருக்கமாக பணியாற்றிவரும், என் அறைத்தோழன். காரணம் அங்கு இந்திய மாணவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் மிகவும் குறைந்து காணப்பட்டது, நம்பமுடியாதவகையில் நின்றும்போய்விட்டதாம்.

சில மணித்துளிகளில் தாமதமாக, நான் இந்தியாவிலிருந்து என் நண்பன் தாமஸ், என்னை தொலைபேசியில் அழைத்தான், அவன் ஒரு கேள்வியையும் என்னிடம் கேட்டான். நான் இதற்குமுன் அப்படியொரு கேள்வியை அவனிடமிருந்து கேட்டதேயில்லை. அதேநேரம் கடந்த ஆண்டின் இறுதியிலிருந்து தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வியும் அது. ''நான் எனது மேல்படிப்பை அமெரிக்காவில் தொடர்வதை கைவிடவேண்டும் போலிருக்கிறதே?''

இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக அமெரிக்காவை நாடிவரும் ஒரு நடைமுறை கடந்த பத்தாண்டுகளாகவே இருந்து வருகிறது. 2015 -2016 ஆம் கல்வியாண்டில் மட்டும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கவந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. இதுவரை வந்த ஆண்டுகளைவிட 15 சதவீதம் அதிகமாக 1,65,918 மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு கல்வி பயில வந்திருந்தனர்.

அமெரிக்காவுக்கு மாணவர்களை அனுப்புவதில் சீனாவுக்கு இரண்டாவது இடத்திலேயே இந்தியா இருக்கிறது. இந்த முன்னேற்றம் வெள்ளை மாளிகையில் நிகழ்ந்துள்ள டோனால்ட் ஜே. ட்ரம்ப்பின் எழுச்சியால் ஆட்டம் கண்டுவருகிறது.

அமெரிக்காவில் இத்தகைய ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டுவரும் நிலை தொடர்ந்து உயர்ந்துவருவதைப் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்புவோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தகட்ட நிலையில் உள்ள மாணவர்கள் தங்கள் உயர்நிலைக் கல்வியை எங்கே தொடருவது என்பதைத் தேர்ந்தெடுக்கும் தயக்கத்திலிருந்து திரும்பியுள்ளனர். வருங்கால மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிலையை சற்றே ஆராய்ந்து பார்த்தோமானால் அவர்கள் உண்மைத்தகவலின் அடிப்படையிலிருந்து முடிவை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும்.

இப்பொழுதும் சிறந்தது

தொடக்கத்திலேயே கல்வியின் தகுதிகளைப் பற்றிய கவலைகளை விரட்டச் செய்துவிடுங்கள். இப்பொழுதும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் உலகிலேயே சிறந்ததாக இருக்கின்றன. அதிகமாகவும், பல்கலைக்கழகங்களில் உள்ள துடிப்பான கல்விசூழ்நிலையிலிருந்து மாணவர்களில் சிறந்தவர்களை வெளியே கொண்டுவரும் வேலையை அவை செய்கின்றன.

பல நாடுகள், தங்களிடம் இருப்பதிலேயே சிறந்த மூளைகளைத் தேர்ந்தெடுத்து உலகத் தரத்தை எதிர்கொள்ளும்வகையில், மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோமோ என்பதை தங்களைத் தாங்களே சீர்தூக்கிப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் எவ்வகையிலும் பாகுபாட்டை ஆதரிக்கவில்லை. பல்கலைக்கழகங்கள் இப்பொழும் திறந்த கரங்களோடு உலக மாணவர்களை வரவேற்கத் தயாராக உள்ளன. அடிப்படையான காரணம், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய ஏன் இந்திய மாணவர்களுக்கு கடினமான நேரமாக இது இருக்கிறதென்றால், அந்தப் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, மற்றும் அதிகரித்துவரும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, போட்டியும் கடுமையாகி வருவது.

மூன்றாவதாக, அமெரிக்காவில் உயர்கல்விக்குப் பிறகான வேலைவாய்ப்பு சூழ்நிலைகளை நாம் கருத்தில் செய்யவேண்டும். நான் அமெரிக்க செல்ல விரும்பும் மாணவர்களை இரு வகையாக பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். அமெரிக்காவுக்கு படிப்பதற்கு மட்டும் செல்பவர்கள். அமெரிக்காவுக்கு படிப்பதற்குச் சென்று அங்கேயே வேலையைத் தேடிக்கொள்ளச் செல்பவர்கள். இந்த அளவுகோல் இருமுனை திசைகளை மிகக் கூர்மையாக வைத்துள்ளது.

பெரும்பான்மையான மாணவர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை முன்னிட்டே தங்கள் உயர் கல்வியை அங்கு தொடர விரும்புகிறார்கள். இந்த வகையான மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் படிப்புக்கு அப்பால் தாங்கள் விரும்பும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு புள்ளியில், வேலை தரும் ஒரு கல்வியின்மீதும் ஒரு காதலை வளர்த்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியின்போதே படிப்புக்குப் பிறகு அமெரிக்காவில் வேலை என்பது கவலைக்குரிய ஒன்றாகத்தான் இருந்தது. இப்பொழுதுகூட அந்த சூழ்நிலையில் எந்த மாற்றமுமில்லை. அமெரிக்காவில் தங்கள் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் அவர்தம் படிப்புக் காலத்திலேயே OPT எனப்படும் ஓர் ஆண்டுக்காலம் விருப்ப செயல் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இந்த பயிற்சி காலகட்டத்தில்தான் ஹெச்1பி எனப்படும் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்கமுடியும்.

உயர்கல்வியை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற பாடப்பிரிவுகளில் தொடர விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே 2 ஆண்டாக மேற்சொன்ன பயிற்சிக்காலம் நீட்டிக்கப்படுகிறது. சில மாணவர்கள், குறைந்தபட்ச 3 ஆண்டுக்காலம் ஒரு வேலைவாய்ப்பைப் பெற முடியும். ஹெச்1பி விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்வரை அதற்குமுன்னதாக ஆரம்பக்கட்ட நடைமுறைகளுக்காக தற்காலிகமாக 6 மாதகாலம் நீக்கிவைக்கப்படுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

ஏராளமான விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எந்தவகையிலாவது பிரச்சனை இருக்குமாயின் இந்த 6 மாதகால நீக்கம்செய்யும் அறிக்கையும் வழங்கப்படும். இந்த நடைமுறையை அச்சுறுத்தும் வகையிலாக பிரதிநிதிகள் சபை அல்லது சட்டசபையிடமும் முன்மொழியவும் அதை அவர்கள் பரிசீலனைக்கவும் எந்த சட்டவிதிகளும் இல்லை.

ட்ரம்ப்பின் அமெரிக்காவோடு, அமெரிக்கக் கல்வி இப்பொழுதும் அதன் தலைமையோடு பிணைந்திருக்கிறது. அதைப்போலவே அதன் இதயத்தோடு அனைத்துவிதமான நிற, இன, பாலின, ஓரின பாலியல், தேசியங்களோடும் பிணைந்திருக்கிறது. உலகளாவிய மாணவர் சமுதாயத்தைப் பாதிக்கும்வகையில் ட்ரம்ப் இன்னும் எதையும் முன்மொழியவில்லை. உங்களுக்கு அமெரிக்காவில் உயர்கல்வி பயில வேண்டும் எண்ணம் இருந்தால் நீங்கள் நிச்சயமாக அமெரிக்க நாட்டில் மூன்றாண்டுகள் தங்கிப் பயில்வதற்கான நல்ல வாய்ப்புகளை அமெரிக்காவில் கண்டறியமுடியும்.

டொனால்டு டிரம்ப் குடியேற்றங்களுக்கெதிரான கோபமாக சகிப்பின்மையின் வார்த்தைகளை கக்கும்போதெல்லாம், சுதந்திர தேவிச் சிலை பொருத்தப்பட்ட பீடத்தில் இவ்வாசகத்தை எப்போதும் வாசிக்கலாம், ''உன்னுடைய அயர்வு கொண்டவர்களுமான ஏழ்மையுமான, சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேட்கை கொள்ளக் குழுமும் பெருந்திரள் மக்களை என்னிடம் கொடு, உனது கரையில் பெருகும் பரிதாபத்திற்குரிய, வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் இவர்கள்! இத்தகைய வீடற்ற மற்றும் சூறைக்காற்றில் சுழற்றி வீசப்பட்டவர்களை என்னிடம் அனுப்பு, தங்கக்கதவுக்கு அருகே நான் இவர்களுக்காக விளக்கை உயர்த்துவேன்”

உலகின் எந்த மூலையிலும் சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சவாலை எதிர்கொள்ளும் வகையில் இந்திய மாணவர்களுக்கு இப்பொழுதும் தங்கக் கதவுகள் திறந்துதான் இருக்கின்றன.

கட்டுரையாசிரியர் நியூயார்க்கில் உள்ள ஆம்ப்ளிஃபை Centre for Early Reading கல்வி மையத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

தற்கொலைகளில் தமிழகத்துக்கு 2-ஆவது இடம்!

By DIN  |   Published on : 16th April 2017 03:16 AM  |
sheha
தற்கொலைகளைத் தடுக்கும் ஸ்நேகா தொண்டு நிறுவனத்தின் 31-ஆவது ஆண்டு விழாவில் பேசுகிறார் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். உடன் (இடமிருந்து) தொண்டு நிறுவன அறங்காவலர் லட்சுமி விஜயகுமார், மாநிலங்களவை உறுப்
அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக "ஸ்நேகா' தொண்டு நிறுவன நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் கூறினார்.
ஸ்நேகா தற்கொலை தடுப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் 31-ஆவது ஆண்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டாக்டர் லட்சுமி பேசியது:
2013 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் அதிக தற்கொலைகள் நடந்ததில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் புதுச்சேரி உள்ளது. 2015-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 15,777 பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். மன அழுத்தம், மனச் சோர்வு அதிகரிப்பதே தற்கொலைகளுக்குக் காரணம். தேர்வுகள் குறித்த பயத்தால் 2015-ஆம் ஆண்டில் மட்டும் 2,500 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தமிழக அரசு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்குத் துணை பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், மனநல மருத்துவம் தொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், அதனைப் பயனுள்ள முறையில் செயல்படுத்துவதற்கு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை உளவியல் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர் என்றார்.
முன்னாள் மத்திய சுகாதாரத் துறை செயலர் கேசவ் தேசிராஜூ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மனநல நோயாளிகளின் நலனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனை மாநில அரசுகள் சரியாக அமல்படுத்தினால்தான் வெற்றிபெறும். மனநல நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகைகள் அவர்களின் கைகளுக்கே கிடைக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும் என்றார்.
உச்சநீதின்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    SBI வங்கியில் சில சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை !!!

    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் பின் வரும் சில சேமிப்புக் கணக்குகளுக்கு எல்லாம் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று அறிவித்து இருக்கின்றது.
    என்னடா இது எல்லாம் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு வங்கிகணக்குகளுக்கு 5000 ரூபாய் எனக் கூறுகின்றார்கள் இவன் என்ன இல்லை என்று கூறுகின்றான் என்று நீங்கள் கேட்பது எனக்குக்  கேட்கின்றது.ஆம், எஸ்பிஐ வங்கியில் சிறு சேமிப்பு வங்கி கணக்கு, அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள், ஜன தண் கணக்குகள்உள்ளிட்ட சேமிப்பு வங்கி கணக்குகளுக்குக் குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை.இந்த அறிவிப்பு எஸ்பிஐ வங்கியின் டிவிட் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மையில் எஸ்பிஐ வங்கி ஐந்துதுணை வங்கிகளுடன் இணைந்துள்ளது.

    எஸ்பிஐ வங்கி சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் மட்டும் இல்லாமல் கார்ப்ரேட் சம்பள கணக்குகளும் உள்ளன.எஸ்பிஐ வங்கி ஏப்ரல் 1 முதல் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்று அறிவித்த போது அனைவரும் பயந்தனர். அந்தக் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் மாதம் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத எஸ்பிஐ வங்கி கணக்குகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.சிறு சேமிப்பு வங்கி கணக்கு (Small savings bank account) சிறு சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்தபட்சஇருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் அதிகபட்சம் 50,000 ரூபாய் மட்டுமே சேமிப்புக் கணக்கில் வைத்து இருக்க முடிடும். வாடிக்கையாளர்களுக்கு எந்த ஆண்டுக் கட்டணமும் இல்லாமல் ஏடிஎம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.அடிப்படை சேமிப்பு கணக்கு (Basic savings account) எஸ்பிஐ வங்கியின் அடிப்படை சேமிப்பு கணக்கிற்கு எந்தக் குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்புக் கணக்குகள் துவங்க முடியாது.

    ஒரு வேலை எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 30 நாட்களுக்குள் அந்தக் கணக்கை மூடிவிட வேண்டும்.பெருநிறுவன சம்பளம் வங்கி கணக்கு (Corporate salarypackage) எஸ்பிஐ வங்கியில் பெருநிறுவன சம்பளம் வங்கி கணக்குகளும் உள்ளன, இந்த வங்கி கணக்குத் திட்டத்தைப் பயன்படுத்திச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இலவசமாக இணையதள வங்கி சேவை கணக்கு, மொபைல் வங்கி சேவை கணக்கு, செக் புக் உள்ளிட்ட பிற நன்மைகள் அளிக்கப்படும். இந்த வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.

    பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் இன்றைய தேதியில் சேமிப்பு வங்கி கணக்குகள் திறப்பதற்கு, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும். ஏன், அரசாங்கத்துக்குச் சொந்தமான வங்கிகளில் கூட இது தான் விதிமுறையாக உள்ளது. அதுவே தனியார் துறை வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்ச இருப்பு தொகையைக் கூடுதலாக நிர்ணயித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கை திறந்தால், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை.

    ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

    ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...