Sunday, April 16, 2017

கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவ–மாணவிகள் 8 பேர் மராட்டியத்தில் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏப்ரல் 16, 04:15 AM
மும்பை,

கர்நாடக மாநிலம் பெளகாவி பகுதியில் மராத்தா மண்டல் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 47 மாணவ–மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொழில் பயிற்சிக்காக மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றனர்.

அங்கு பயிற்சியை முடித்த மாணவர்கள் நேற்று காலை சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வன் வாய்ரி கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். பகல் 11.30 மணி அளவில் 30 மாணவ–மாணவிகள் கடலின் உள்ளே இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.

கடலில் மூழ்கி 8 பேர் பலி

இந்த நிலையில் திடீரென வந்த ஒரு ராட்சத அலை மாணவ–மாணவிகளை வாரி சுருட்டிக்கொண்டு உள்ளே இழுத்து சென்றது. இதில் சிலர் கடலில் மூழ்கினர். மேலும் சிலர் கடல் நீரில் தத்தளித்தபடி அபய குரல் எழுப்பினர்.

அங்கு நின்ற மீனவர்கள் மற்றும் உயிர்காக்கும் வீரர்கள் ஓடி வந்தனர். அவர்கள் மாணவ–மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அந்த பகுதி எம்.எல்.ஏ.வும், மாநில நிதித்துறை இணை மந்திரியுமான தீபக் கேசர்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தி 19 மாணவ– மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.

தவிர, 11 மாணவ–மாணவிகள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 8 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள் மற்றும் 3 பேர் மாணவிகள் ஆவர்.

எச்சரிக்கையையும் மீறி...

உயிர் பிழைத்த 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் அந்த பகுதியில் உள்ளே இறங்கி குளிக்க வேண்டாம் என்று அப்பகுதி மீனவர்கள், மாணவர்களை எச்சரித்து உள்ளனர். ஆனால் மீனவர்களின் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் கடலில் இறங்கி குளித்ததால் இந்த துயரம் நேர்ந்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...