Saturday, August 12, 2017


மதுரையில் வெளுத்து கட்டிய மழை

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:13

மதுரை: மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை பகுதியில் நேற்று முன்தினம் மழை வெளுத்து கட்டியது. பெரியாறு, வைகை அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை.தென் மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலையில் துவங்கும் மழை இரண்டொரு மணி நேரம் தொடர்ந்து பெய்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி சண்முகாநதி 2 மில்லி மீட்டர், வீரபாண்டி 10, வைகை 1, மஞ்சளாறு 1, மருதாநதி 29:6. பேரணை 39, குப்பணம்பட்டி 5.2, ஆண்டிபட்டி 36.6, மதுரை 20.3, சாத்தையாறு 68, கள்ளந்திரி 11, சிட்டம்பட்டி 1, புளிப்பட்டி 3.2, மேலுார் 7.7, தனியா
மங்கலம் 2, கொடைக்கானல் 1 மி.மீ., என மழையளவு பதிவானது.நீர் வரத்து: பெரியாறு அணைக்கு 261 கன அடி வரத்து இருந்தது. வெளியேற்றம் 75. வைகை வரத்து 9. வெளியேற்றம் 40. சோத்துப்பாறை வரத்து 3. வெளியேற்றம் 3. சண்முகாநதி வரத்து இல்லை.
வெறியேற்றம் 10. மஞ்சளாறு, சண்முகாநதி,சாத்தையாறு அணைகளுக்கு வரத்து, வெளியேற்றம் இல்லை. பெரியாறு, வைகை உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணை நீர் மட்டம் உயரவில்லை.

அணைகள் நீர்மட்டம்
(நேற்றைய நிலவரம்)
பெரியாறு : 112.50 (மொத்தம் 152)
வைகை : 30.51 (71)
சோத்துப்பாறை : 70.52 (126)
மஞ்சளாறு : 30.50 (57)
மருதாநதி : 37.08 (64)
சண்முகாநதி : 20.95 (52)
சாத்தையாறு : - (29)
நேர்காணலில் பங்கேற்காதவருக்கு ஓய்வூதியம் நிறுத்தம் : முதன்மை செயலர் உத்தரவு


பதிவு செய்த நாள்12ஆக
2017
05:12


மதுரை: நேர்காணலில் பங்கேற்காத, வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் முதல் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தும்படி கருவூலகணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் உத்தரவிட்டார்.இதுகுறித்து கருவூல மண்டல இணை இயக்குனர்கள், அலுவலர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாவது

:ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, ஓய்வூதியர் நேர்காணல் ஏப்., முதல் ஜூலை வரை நடந்தது. 31.7.2017 தேதியின்படி நேர்காணலுக்கு வராதவர்களின் பட்டியல் தயார் செய்ய வேண்டும். நேர்காணலில் வருகை தராததால், ஆக., முதல் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களின் அலைபேசி எண்ணிற்கு, குறுந்தகவல் மற்றும் பதிவு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும், என கூறியுள்ளார்.''மதுரை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஓய்வூதியர்களில், 700 பேர் நேர்காணலில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் ஆகஸ்ட் முதல் நிறுத்தப்படும்,'' என, மாவட்ட கருவூலர் ஏ.ஜி.முரளி தெரிவித்தார்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிறைவு : 89 ஆயிரம் இடங்களுக்கு ஆளில்லை

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:11

சென்னை: அண்ணா பல்கலை யின் இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இதில், 86 ஆயிரத்து, 355 இடங்கள் நிரம்பியுள்ளன; 89 ஆயிரத்து, 101 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டை விட, 3,414 மாணவர்கள் குறைவாகவே, இன்ஜி., படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 533 இன்ஜி., கல்
லுாரிகளில், 1.80 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 17ல் கவுன்சிலிங் துவங்கியது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு, தொழிற்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலிங் முடிந்தது. பின், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23ல் பொது கவுன்சிலிங் துவங்கியது; 20 நாட்கள் நடந்த கவுன்சிலிங், நேற்று முடிந்தது. 

கவுன்சிலிங்கிற்கு, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 552 பேர் அழைக்கப்பட்டனர்; 48 ஆயிரத்து, 583 பேர் வரவில்லை. 

இறுதியில், 86 ஆயிரத்து, 355 பேர் இடங்கள்   பெற்றனர்; 89 ஆயிரத்து, 101 இடங்கள் காலியாக உள்ளன.

மெக்கானிக்கலில் 19 ஆயிரத்து, 601 பேர் சேர்ந்துள்ளனர்; எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், 16 ஆயிரத்து, 60; கம்ப்யூ., சயின்ஸ், 14 ஆயிரத்து, 769; எலக்ட்ரிக்கல், 10 ஆயிரத்து, 106; சிவில், 8,199 மற்றும் ஐ.டி., பிரிவில், 5,532 பேர் சேர்ந்து உள்ளனர்.

மீதமுள்ள இடங்களுக்கு, வரும், 17ல், துணை கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கு, 16ம் தேதி நேரில் சான்றிதழ்களுடன் சென்று, பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களை, www.tnea.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஏ.டி.எம்.,-களில் ரூ.500, 100 மட்டுமே கிடைக்கும்
பதிவு செய்த நாள்12ஆக
2017
04:56

மதுரை; வங்கி விடுமுறை நாட்களில், பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க, ஏ.டி.எம்.,களில் 500, 100 ரூபாய்களை மட்டுமேவைக்க, ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் சார்பில் தமிழகத்தில் 21 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இரண்டாவது சனி, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினவிழா காரணமாக ஆக., 12 முதல் 15 வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுகிறது. இந்நாட்களில், ஏ.டி.எம்.,களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தேசிய வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏ.டி.எம்.,களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க 500, 100 ரூபாய் வைக்கப்படும். ஒரு ஏ.டி.எம்.,ல் அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை வைக்கலாம். ஏ.டி.எம்.,களுக்கு பணம் எடுத்து செல்ல, ஆக.,14ல் பணபெட்டகத்தை திறந்து வைக்க, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் அன்றாட செலவிற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' மற்றும் கிரடிட், டெபிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனை நடப்பதால், வங்கி விடுமுறை நாட்களில் பெரிய பாதிப்பு இருக்காது, என்றார்.

'கட்டண பாக்கிக்காக மாணவர்கள் சான்றிதழை நிறுத்தக்கூடாது'

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:05


'கட்டண பாக்கியை வசூலிக்க, மாணவர்களின் சான்றிதழ்களை, தராமல் நிறுத்தி வைக்கக்கூடாது' என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.

சான்றிதழ் நிறுத்திவைப்பு : அண்ணா பல்கலை இணைப்பில், தமிழகம் முழுவதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜி.,கல்லுாரிகள், ஆர்கிடெக்சர்மற்றும் மேலாண் நிர்வாக கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த கல்வி ஆண்டில் நடந்த, இறுதி தேர்வுக்கு பின், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதில், பல இன்ஜி., கல்லுாரிகள், கட்டணம் பாக்கி வைத்துள்ளமாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளன. இதனால், உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் செல்ல முடியவில்லை என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கான, மாணவர் விவகாரத்துறை இயக்குனர், இளைய பெருமாள், அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

நடவடிக்கை : அதில், 'கட்டண பாக்கி மற்றும் நிர்வாக பிரச்னைகளுக்காக, மாணவர்களின் சான்றிதழ்களை வழங்காமல், கல்லுாரிகள் நிறுத்தி வைக்கக்கூடாது. சான்றிதழ்களை தரவில்லை என, புகார் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

- நமது நிருபர் -


நீட்' விவகாரத்திற்கு தீர்வு உண்டா?  அரசின் தலையீட்டால் குழப்பம்

'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் தவறான அணுகுமுறையால், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பும் பறிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள் ளனர்.





தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்க, 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும், அவசர சட்டத்தை இயற்றிய தமிழக அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

இதனிடையே, 'நீட் தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்கும்; அதில், தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சத வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஜூலையில், தமிழக அரசு அறிவித்தது. 'நீட் தேர்வே வேண்டாம்' என்ற, தமிழக அரசு, 'நீட் தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும்' என, திடீரென அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவப் படிப்பில், தமிழக அரசின் உள் ஒதுக்கீடு அரசாணையை, உயர்நீதிமன்றம்

ரத்து செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடும், நேற்று தள்ளுபடி யானது. அதனால், தமிழக பாடத் திட்ட மாணவர் களின் மருத்துவ கனவு கானல் நீராகி உள்ளது.

இது குறித்து, கல்வியாளர்களும், ஆசிரியர்களும் கூறியதாவது: உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் பல முறை உறுதியாக பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, வேறு வேறு வடிவங்களில், தமிழக அரசு மனு செய்கிறது. இதன்மூலம், உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கோபத்துக்கு தான், தமிழக அரசு ஆளாகி யுள்ளது. மற்ற மாநிலங் கள், உச்ச நீதிமன்ற உத்தரவைபின்பற்றியுள்ளன.

பொதுவாக, சி.பி.எஸ்.இ., மாணவர்களை விட, தமிழக பாடத்திட்ட மாணவர்கள், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் மற்றும் 'கட் -- ஆப்' பெறுவது வழக்கம். அதே போல், 'நீட்' தேர்விலும், தமிழக மாணவர்கள் ஓரளவு அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., மாணவர்களை பொறுத்தவரை, 'நீட்' தேர்வில், ஓரளவு மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2, 'கட் - ஆப்' மதிப்பெண் வரிசையில், அவர்கள் பின்தங்கி விடுவர்.எனவே, 'நீட்' மற்றும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு, சமமான, 'வெயிட்டேஜ்' வழங்கி, தரவரிசை பட்டியல் தயாரித்தால், தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, 95 சதவீத இடங்கள் கிடைக்கும். இந்த முறையைத் தான், கல்வியாளர் களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், தமிழக அரசு விரிவான ஆலோசனை நடத்தாமல், 'எடுத்தோம், கவிழ்த்தோம்' என, முன் னுக்குப் பின் முரணான முடிவுகளை எடுத்தது, தமிழக பாடதிட்ட மாணவர்களை குழப்பம் அடைய

Advertisement

வைத்துள்ளது. அதே போல்,சி.பி.எஸ்.இ.,க்கு தனி ஒதுக்கீடு, தமிழக பாடத்திட்ட மாணவர் களுக்கு தனி ஒதுக்கீடு என, அரசாணை பிறப்பித்தது, தமிழக மாணவர்கள் மத்தியி லேயே, பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர் களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

'நீட்' தேர்வுப்படி, ஒரு வேளை, சி.பி.எஸ்.இ., மாணவர்களே முன்னணியில் வந்தாலும், தமிழக அரசின் கொள்கைப்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, இடங்கள் ஒதுக்க லாம். எனவே, 'நீட்' தேர்வை பின்பற்றினால், அதிலும், தமிழக மாணவர்கள் மட்டுமே, பயன் பெறுவர் என்பதை, தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைவிடப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

கிராமப்புற மாணவர்களின் நலன் எனக்கூறி, தமிழக அரசு உள்ஒதுக்கீடு அரசாணை கொண்டு வந்தது. பின் தங்கிய மாணவர் களுக்கு,மருத்துவ சேர்க்கையில் இடம் கிடை க்க வேண்டும் என, அரசு நினைத்திருந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், உள் ஒதுக்கீடு என, அரசாணை கொண்டு வந்தி ருக்கலாம். ஆனால், அரசாணையில் அரசு பள்ளிகள் பற்றி எந்த தகவலும் இல்லை.

தமிழக பாடத்திட்டத்தில்,தனியார் பள்ளி களில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 45 லட் சம் மாணவர்கள் படிக்கின்றனர். அதை விட, 55 சதவீதம் குறைவாக, அரசு பள்ளி களில், 21.50 லட்சம் பேர் மட்டுமே படிக்கின்றனர். எனவே, தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை, தனியார் பள்ளிகளுக்கே சாதகமாக உள்ளது.

மாத விலக்கு நாட்களில் விடுப்பு : கேரள சட்டசபையில் விவாதம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:22

திருவனந்தபுரம்: மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாத விலக்கு நாட்களில், விடுப்பு அளிப்பது குறித்து, கேரள சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. ''இது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, மாநில முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை : கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநில அரசின் பல துறைகளில் பணியாற்றும் பெண்கள், மாத விலக்கு நாட்களில், உடல், மன ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும், எனவே, மாத விலக்கு நாட்களில், அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கையானது : இது குறித்து, சட்டசபையில் நேற்று, காங்., உறுப்பினர், கே.எஸ்.சபரிநாதன் பேசியதாவது: பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். மாத விலக்கு காலங்களில், பெண்கள், உடல் மற்றும் மன ரீதியான உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஜப்பான், இந்தோனேஷியா, தைவான் நாடுகளிலும், சீனாவின் சில மாகாணங்களிலும், மாத விலக்கு காலத்தில் பெண் பணியாளர்களுக்கு, விடுப்பு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. பெண்களின் உடல், மன நலம் கருதி, மாத விலக்கு நாட்களின் போது, அவர்களுக்கு விடுப்பு அளிக்கும் வகையில், மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதிலளித்து, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால், மாத விலக்கு ஏற்படுகிறது; இது இயற்கையானது. பணிபுரியும் பெண்களின் செயல் திறன் அதிகரிக்க, அவர்கள், உடல், மன நலத்துடன் இருப்பது அவசியம். 

எனவே, மாத விலக்கு காலங்களில், பெண்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து, சட்டசபையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், மாத விலக்கு காலங்களில், பெண்களை வீட்டை விட்டு ெவளியேற்றுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதாவுக்கு, அண்டை நாடான, நேபாளத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

NEWS TODAY 27.01.2026