Monday, August 14, 2017

சேமிப்பு கணக்கு வட்டியை இந்தியன் வங்கியும் குறைத்தது

பதிவு செய்த நாள்13ஆக
2017
08:21



புதுடில்லி : சமீ­பத்­தில், பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்­கிற்­கான வட்­டியை, 0.50 சத­வீ­தம் குறைத்­தது. இதன்­படி, சேமிப்பு கணக்­கில், 1 கோடி ரூபாய் வரை உள்ள இருப்­பிற்கு, 3.5 சத­வீத வட்டி; அதற்கு மேற்­பட்ட தொகைக்கு, 4 சத­வீத வட்டி தொட­ரும் என, தெரி­வித்­தி­ருந்­தது.இதை பின்­பற்றி, இந்­தி­யன் வங்­கி­யும், சேமிப்பு கணக்­கிற்­கான வட்­டியை குறைத்­து உள்­ளது.இது குறித்து, இந்­தி­யன் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகி­தம், இரண்டு வித­மான வகை­யில் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.இதன்­படி, 50 லட்­சம் ரூபாய் வரை உள்ள, சேமிப்பு கணக்கு இருப்­பிற்கு, 3.5 சத­வீத வட்டி வழங்­கப்­படும். மேலும், 50 லட்­சம் ரூபாய்க்கு மேற்­பட்ட இருப்­பிற்கு, 4 சத­வீத வட்டி விகி­தம் தொட­ரும். இது, வரும், 16 முதல், அம­லுக்கு வரு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

திருச்சுழியில் 32 மி.மீ., மழை

பதிவு செய்த நாள்13ஆக
2017
23:07

விருதுநகர்:பருவமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. தாழ்வான பகுதிகள், ரோடுகளில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை 8.30 மணிப்படி மழையளவு (மி.மீ.,) :அருப்புகோட்டை 9, சாத்துார் 7, ஸ்ரீவில்லிபுத்துார் 4, சிவகாசி 3.20, விருதுநகர் 24, திருச்சுழி 32, காரியாபட்டி 24.20, வத்திராயிருப்பு 7.20, வெம்பக்கோட்டை 1, கோவிலாங்குளம் 14.40. மாவட்டத்திலேயே திருச்சுழியில் அதிகபட்சமாக 32 மி.மீ., மழை பெய்துள்ளது.

ஆக்சிஜன் இருப்பு வைத்துக்கொள்ளுங்க! : மருத்துவ கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு


பதிவு செய்த நாள்13ஆக
2017
23:53



லக்னோ: 'உ.பி.,யில், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும், போதிய மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்' என, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உ.பி.,யில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், 63 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. உ.பி., மாநில அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில், உ.பி., மாநில அரசு கல்லுாரிகளுக்கு, அம்மாநில மருத்துவக் கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், போதிய மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் வைத்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வித்துறை தலைமை செயலர் அனிதா பட்நாகர் ஜெயின், லக்னோவில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கோரக்பூர் சம்பவத்துக்கு பின், அனைத்து அரசுக் கல்லுாரிகளுக்கும், முக்கியத்துவம் வாய்ந்த, மருத்துவ கல்வி மையங்களுக்கும், கடிதம் எழுதி உள்ளோம். மருத்துவமனைகளில், மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல், தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளும்படி, அந்த கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு, பாக்கி வைத்திருந்தால், உடன், அதை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லுாரிகளின் முதல்வர்களையும் தனிப்பட்ட முறையில், தொலைபேசியில் அழைத்து, மருந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். இவ்விஷயத்தில் கவனக்குறைவை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என, கண்டிப்பாக தெரிவித்துள்ளோம்.

கோரக்பூர் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் இறந்ததற்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல. ஆக்சிஜன் சப்ளை நிறுவனங்களுக்கு, பாக்கி எதுவும் வைக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், குழந்தைகள் பிரிவு கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த, கபீல் கான், அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ரூ.85 கோடி செலவில் மருத்துவ ஆய்வு மையம் : குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை தீவிரமாக ஆய்வு செய்ய, உ.பி., மாநிலம், கோரக்பூரில், 85 கோடி ரூபாய் மதிப்பில், பிராந்திய மருத்துவ மையம் ஏற்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட, கோரக்பூர் மருத்துவமனைக்கு, மத்திய சுகாதார அமைச்சர், ஜே.பி. நட்டா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன்பின், அமைச்சர், நட்டா கூறியதாவது:கடந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரின்போது, உ.பி.,யில், மருத்துவ ஆய்வு மையம் அமைக்க உதவுவதாக, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்திடம் உறுதி கூறியிருந்தேன். இங்கு வருவதற்கு முன், கோரக்பூரில், மருத்துவ ஆய்வு மையம், 85 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள், அவற்றுக்கான காரணங்கள் குறித்து, இந்த மையம் ஆய்வு செய்யும்.இவ்வாறு நட்டா கூறினார்.யோகி ஆதித்யநாத் கூறுகையில்,''குழந்தைகள் இறந்ததால், அவர்களின் பெற்றோருக்கு எவ்வளவு வேதனை ஏற்படுமோ, அதை விட பல மடங்கு வேதனை, எனக்கு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.


6 முக்கிய சட்டங்களுக்கு  ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்

புதுடில்லி:ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற மூன்று வாரங்களில், ஆறு முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.



ராம்நாத் கோவிந்த், ஜூலை, 25ல், ஜனாதிபதி யாக பதவியேற்றார்.பார்லிமென்டில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த ஆறு சட்டதிருத்தங்களுக்கு, அவர் ஒப்புதல் அளித்துள்ளார். கடற்பகுதிகளில் நடக்கும்


குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோர் தொடர் பான வழக்குகளை விசாரிப்பதற்கான, அதிகார வரம்பை நீட்டிக்கும் சட்டதிருத்தம், அவற்றில் முக்கியமானது.இதைத்தவிர, 127 ஆண்டு பழமை யான, காலனி ஆதிக்க கோர்ட்டுகளின் அட்மிரல் சட்டம், 156 ஆண்டு பழமையான, அட்மிரல் கோர்ட் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்யும் சட்ட திருத் தத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதற்கான சட்டதிருத்தம், ஏப்., 24ம் தேதி, ராஜ்யசபா வில் நிறைவேறியது; லோக்சபா வில்,மார்ச், 10ம் தேதி, சட்டதிருத்தம் நிறைவேறியது. குழந்தை களுக்கு, இலவச, கட்டாய கல்வி பெறுவதற்கான உரிமை அளிக்கும் சட்டதிருத்தம், ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், சமூக - பொருளாதாரம் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க அதிகாரம் அளிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல்

தரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்கள் சட்டம், தேசிய தொழில்நுட்ப கல்வி மையம், அறிவியல் கல்வி, ஆராய்ச்சி சட்டம் ஆகியவற்றுக்கும், ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
கண்ணனை நினைக்காத நாளில்லையே!இன்று கிருஷ்ண ஜெயந்தி


பதிவு செய்த நாள்13ஆக
2017
21:01



குருவாயூரப்பன்மீது நாராயண பட்டத்திரி பாடிய ஸ்தோத்திரம்நாராயணீயம்.கிருஷ்ண ஜெயந்தியான இன்று இதை படிப்பதன் மூலம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
.
* மஹா விஷ்ணுவே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படுபவனே! ஆனந்த வடிவானவனே! கோபியரின் மனத்தில் இருப்பவனே! துன்பம் நீங்க, பக்தியோடு உன்னை வணங்குகிறேன்.
* மும்மூர்த்தியில் சிறந்தவரே! சர்வேஸ்வரனே! கருமை நிறக் கண்ணா! மந்திர
சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பவன் நீயே என்று கூறப்பட்டுள்ளது. உன்னையே ஆதிசங்கரரும் போற்றி வணங்கியுள்ளார். அந்த திருப்பாதங்களை போற்றுகிறேன்.
* தேவாதி தேவனே! அனைவருக்கும்உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மைஇல்லாதவற்றில் ஆசை கொண்டு துன்பப்படும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா
இன்பத்தையும் அடைவான். ஓடோடி வந்து அருள்புரிய வேண்டுமென உன்னை வணங்குகிறேன்.
* எங்கும் நிறைந்தவனே உடல், மனம்,மொழியால் இந்த பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ அத்தனையையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன்னை நினைக்காத நாளில்லையே! உன் திருவடியில் சரணடைகிறேன்.
* உன்னிடம் சரணடைந்தவர்கள் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவர். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் எனக்கு கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.
* ஜகந்நாதப் பெருமாளே! ஹரியே! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு என
எல்லாவற்றையும்,நண்பர் மட்டுமில்லாமல் எதிரியையும் கூட, உன்னுடைய வடிவமாக உள்ளத்தில் காண்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் கிடைக்கும் பேறு பெற்றேன்.
* பெருமானே! உன்னிடம் ஒன்றி விட்டதால் வழக்கமான பசி, தாகம் மறந்து போனது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனத்தளர்ச்சி என்பதே இல்லை. உன் அருளால், மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.
* பெருமாளே!கலியுகத்தில் உன்பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலும் கூட போதும்! உன் அருள் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் இந்த கலியுகத்தில் அனைவரும் பிறக்க ஆசைப்படுகின்றனர்பாக்கிய வசத்தால் பிறந்த என்னையும்உன் திருவடியில்ஏற்று கொள்வாயாக!
* புருஷோத்தமா! கங்கா நதியில் நீராடுதல், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக் கிராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளுக்கு வழிவகுக்கும். இந்த எட்டு வழிகளிலும் என்னை ஈடுபடுத்தி நல்லருள் புரிவாயாக

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை

பதிவு செய்த நாள்14ஆக
2017
02:57




புதுடில்லி : அண்டை நாடான சீனாவில் உள்ள விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடக்கிறது.

இந்தியா - சீனா இடையே, டோக்லாம் எல்லைப் பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால், இந்திய பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: சமீபத்தில் டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, சீனாவின் ஷாங்கான் புடோங்க் விமான நிலையம் வழியாக பயணம் செய்தேன். புடோங்க் விமான நிலையத்தில், சக்கர நாற்காலி மூலம் செல்லும் பயணியருக்கான வாயிற்கதவு அருகே, இந்திய பயணியரிடம், சீன விமான நிறுவன ஊழியர்கள் அவதுாறாக நடந்து கொண்டனர். நம் நாட்டவரை பழிக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர். இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதன்படி, இந்தப் பிரச்னை குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் புடோங்க் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.


வாக்காளர் பட்டியலில் பெயர்  ஆர்வம் காட்டாத என்.ஆர்.ஐ.,


புதுடில்லி: என்.ஆர்.ஐ., என ஆங்கிலத்தில் சுருக் கமாக அழைக்கப்படும்,வெளிநாடு வாழ் இந்தியர்கள், வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் வசதி அளித்த போதிலும், 24 ஆயிரம் பேர் மட்டுமே, இதுவரை பதிவு செய்து உள்ளனர்.





வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாத வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்தபடியே, தேர்தல் ஆணைய இணைய தளத்தில், 'ஆன்லைனில்' பதிவு செய்து கொள்ள லாம்.இதன்படி, வேறு நாடுகளில் குடியு ரிமை பெறாத, வெளிநாடு வாழ் இந்தியர்கள், வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும்; இந்தியா வில் அவர்களது வசிப்பிடம் உள்ள தொகுதியில் பெயரைபதிவு செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பின், அவர் களுக்கு, தேர்தல் ஆணையம் தகவலை அளிக்கும்; அவர்கள் தொகுதிக்கு வந்து, பாஸ் போர்ட்டை காண் பித்து, ஓட்டுப் போட முடியும்.இந்த வசதியை பயன் படுத்தி 24 ஆயிரத்து,348 பேர் மட்டுமேஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 23 ஆயிரத்து, 556 பேர், கேரளாவை சேர்ந்தவர்கள்; 364 பேர், பஞ்சாபை யும், 14 பேர்,குஜராத்தையும் சேர்ந்தவர்கள்.

புதிய சட்டம்:

தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆர்வமு டன் ஓட்டளிக்கும் வகையில், புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இது, நடைமுறைக்கு வரும்போது, வெளிநாடு வாழ்

இந்தியர்கள், அங்கிருந்தபடியே, தங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை, ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி, ஓட்டுப்போட முடியும்.

செலவு செய்து, இந்தியாவிற்கு வர வேண்டிய தேவை இல்லை என்பதால், இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுப்போட ஆர்வம் காட்டலாம்.

NEWS TODAY 27.01.2026