Tuesday, August 15, 2017

தெரிந்த பெயர், தெரியாத விவரம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

Published on : 31st July 2017 03:39 PM  |   


*




 தமிழகத்தின் மிக முக்கிய பறவைகளின் சரணாலயங்களுள் ஒன்று வேடந்தாங்கல்.

* ஆங்கிலேய ஆட்சியாளர்களால் 1858-இல் தொடங்கப்பட்ட இந்த சரணாலயம் சுமார் 160 ஆண்டுகாலமாக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

* இங்குள்ள ஏரியின் பரப்பளவு 75 ஏக்கர். உள்பகுதியில் கடம்ப மற்றும் வேல மரங்கள் நிறைந்து உள்ளது. இம்மரங்களின் மேற்கிளைகளில் கூடு கட்டி முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்யவும் தங்கி செல்லவும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியைத் தேடி வருகின்றன.

* வேடந்தாங்கலுக்கு அழையா வெளிநாட்டு விருந்தாளிகளாக, பாம்புதாரா, கரண்டிவாயன், கூழைக்கடா, அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள்மூக்கன், முக்குளிப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.

* பறவைகள் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாக இங்கு நிலவும் பருவநிலையும், இனவிருத்தி செய்து தங்கள் வம்சத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

* அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சீசன் காலமாக உள்ளது.

* பறவைகளின் சீசன் காலத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளை இங்கு காணலாம்.

* வேடந்தாங்கலைச் சுற்றி மதுராந்தகம் ஏரி, கருங்குழி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நீர் அரண்களாக உள்ளன.

* இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தூரத்தில் உள்ள பறவைகளை காணக்கூடிய வகையில் கோபுர டவர் வழியாக டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் பறவைகளின் உருவத்தை - அதன் நிறத்தை மிக எளிதாக கண்டு களிக்க முடியும். தனியார் கடைகளில் டெலஸ்கோப் கருவியை வாடகைக்குப் பெற முடியும்.

* விளைநிலங்களில் பயிரிடப்படும் நெல், பருப்புவகைகளையும், நீர்நிலைகளில் வாழும் சிறுமீன்கள், புழு, பூச்சிகள் போன்றவைகளையும் இப்பறவைகள் தமது உணவாக உட்கொள்கின்றன.

* ஏரிநீரில் வாழும் இப்பறவைகளின் எச்சம் மிகச்சிறந்த உரமாக வேடந்தாங்கல் பாசன நிலங்களுக்குப் பயன்படுவதால் இப்பகுதி விவசாயிகள் அதிக விளைச்சலை பெறுகின்றனர்.

* பறவைகளுக்கு அச்சமூட்டக்கூடாது என்ற நோக்கில், தீபாவளி நேரத்தில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வெடிப்பதில்லை. இதன் காரணமாக வேடந்தாங்கலை "வெடி வெடிக்காத கிராமம்' என அழைக்கிறார்கள்.

* காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இச்சரணாலயம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து 83 கி.மீ தூரத்திலும், மதுராந்தகத்தில் இருந்து 16 கி.மீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

* இந்த சரணாலயம், சென்னை வன உயிரியல் காப்பாளர் (வண்டலூர்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
தொகுப்பு : மதுராந்தகம் குமார்

INC moves HC for powers to grant recognition to nursing institutes

Verdict of single judge said INC had no such authority

The Indian Nursing Council (INC) and several nursing colleges situated in the State have on Monday moved a Division Bench of the Karnataka High Court questioning the single judge’s verdict, which had declared that the INC has no authority to grant recognition to institutions imparting nursing training.
A Division Bench comprising Chief Justice Subhro Kamal Mukherjee and Justice P.S. Dinesh Kumar, before whom the appeals filed by Sri Adichunchanagiri College of Nursing and 20 other nursing institutes came up for hearing, adjourned further hearing till August 21.
The Bench also said that an appeal, filed separately by the INC, would also be heard alongside.
Earlier, counsel for the nursing institutes pointed out to the Bench that the future of a large number of students, including around 1,500 students from African countries, is in jeopardy as they cannot get jobs in any other State other than Karnataka, or abroad.
It was also contended that even the institutes will not get candidates to pursue nursing courses when it does not lead to jobs outside Karnataka.
The single judge’s verdict had upheld the government’s December 14 notification, which had stated that the power to grant recognition, impart training in nursing, and fixation of intake vests with the State government, the Karnataka State Nursing Council, and the Rajiv Gandhi University of Health Sciences, and not with the INC.
The INC, in its petition, asserted that it has the authority to regulate nursing institutes across the country.
The single judge’s verdict had also declared that all such materials, from which it could infer that recognition is to be obtained from the INC, stands withdrawn from the INC’s website forthwith.
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… சொகுசான வாழ்க்கை… கைதானவர்கள் பின்னணி இதுதான்!

JAYAVEL B



சென்னை மாநகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள், அப்பகுதியினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் பெண்கள் தனியாக சாலையில் நடக்கவே தயங்கிய நிலை ஏற்பட்டது. சாலை ஓரத்தில் நடத்து கொண்டிருக்கும் பெண்களிடம் திடீரென பைக்கில் வரும் ஆசாமிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் செயினைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் வீடியோக்களில் வைரலாக வலம் வரத்தொடங்கின.

காவல்துறையினர் பல மாதங்களாக வலைவீசியும், எந்த துப்பும் இல்லாததால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பு போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாத காலமாக, பல இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சஞ்ஜய் மற்றும் சந்தீப் ஆகியோரை சென்னை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் மனோகரன், “சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் டெல்லி க்ரைம் ஹிஸ்ட்ரி லிஸ்ட்டில் இருக்கிறார்கள். டெல்லியில் இவர்கள் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. 23 செயில் பறிப்பு சம்பவங்களில் இருவரும் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 சவரன் நகைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட மோட்டர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். 

மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த இன்னும் மூன்று பேரை தேடி வருகிறோம். அவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களை பிடிக்க தனிப்படை ஒன்று டெல்லிக்கு விரைந்திருக்கிறது. டெல்லியில் இருந்து ஒரு டீமாக இவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி பழைய டூ வீலரை வாங்கி இருக்கிறார்கள். சென்னையில் தங்குவதற்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக டூ வீலரை அந்த வீட்டில் வைத்து இருக்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றுவிடுவதும், டெல்லியிலிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னையில் கொள்ளையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.



சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களையும், மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்கு புறமான இடங்களையும் செயின் பறிப்பிற்காக தேர்வு செய்கிறார்கள். காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கிய போது, ‘அவர்கள் வட இந்தியரைப் போன்று இருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டது’ என்ற தகவல்கள் கிடைத்தன. கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனத்தில் கடைசி எண் 6 மட்டும் தெரிந்தது. மற்ற எண்கள் மறைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு டூவீலர் ஸ்டாண்டிலும் இந்த வாகனம் இருக்கிறதா என தேடினோம்.

கடைசியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அந்த டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. அதை வைத்து செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடித்தோம். கொள்ளையடித்த பணத்தில் டெல்லியில் உள்ள மங்கல்புரி பகுதியில் அடுக்குமாடி வீடுகளை கட்டி சொகுசாக வாழ்க்கை நடத்தி வந்திருக்கின்றனர். தனியாக வீட்டில் வசிப்பவர்கள் முடிந்தவரை சிசிடிவி கேமராவை பொறுத்த வேண்டும். இதனால் குற்றம் பெருமளவு குறையும்” என்கிறார்.
ஓய்வு பெறும் லண்டன் ’பிக் பென்’ கடிகாரம்!

ராகினி ஆத்ம வெண்டி மு.

உலகின் மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்களில் ஒன்றான லண்டனின் பிரசித்திபெற்ற ‘பிக் பென்’ கடிகாரம், புனரமைப்புப் பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.




லண்டன் மாநகரில், தேம்ஸ் நதிக்கரையோரம் அமைந்திருக்கும் வெஸ்ட்மின்ஸ்டெர் அரண்மனையில் அமைந்திருக்கிறது இந்த வானுயர மணிக்கூண்டு. இந்த வெஸ்ட்மின்ஸ்டெர் அரண்மனையில்தான் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இயங்கி வருகின்றது. 1858-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் நாள் கட்டி முடிக்கப்பட்ட இம்மணிக்கூண்டு, கடந்த 156 ஆண்டுகளாக ஆங்கிலேயரின் தலைநகரச் சின்னமாக விளங்கிவருகிறது.

இரண்டு உலகப் போர்களைக் கடந்தும், எவ்வித சுழற்சி மாற்றங்களும் இன்றி தன் உலகப்புகழ் பெற்ற மணியோசையால் துல்லியமாக நேரம் காட்டி, காலங்கள் பல கடந்து காலூன்றி நிற்கும் இந்த பிக்பென் கடிகாரக்கூண்டு, தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதால், அதற்கான பராமரிப்புப் பணிகளை விரைந்து செய்யவேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அக்குழு சமர்பித்த அறிக்கையில் மணிக்கூண்டின் மேற்கூரையும், கடிகார முட்களும், மணியோசை எழுப்பும் தொங்குருண்டையும் மற்றும் வேறு சில உலோக பாகங்களும் துருப்பிடித்து சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு பராமரிப்புப் பணிகளுக்காக நான்கு ஆண்டுகள் இக்கடிகாரம் நிறுத்திவைக்கப் கொடுத்த அறிவிப்பு செயல்பட்டால், இக்கடிகாரத்தின் 156 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில், மிக நீண்ட நாட்களுக்கு அதன் மணியோசை நிறுத்தப்படும் காலமாக இப்புனரமைப்புக் காலம் அமையலாம் எனக் கருதப்படுகிறது.

அறிக்கைகளுக்கும், கணக்கீடுகளுக்கும் அப்பால் பிரிட்டிஷாரின் கலைப் பொக்கிஷத்திற்கு, உலகச் சிறப்பு வாய்ந்த, நூறாண்டுகளுக்கு மேல் கடந்து ஒலிக்கும் மணியோசைக்கு சில காலம் ஓய்வு!

சென்னையில் களைகட்டும் சுதந்திர தினம்: ஜொலிக்கும் அரசு கட்டடங்கள்!

சி.மீனாட்சி சுந்தரம் குமரகுருபரன்




71-வது சுதந்திர தினத்தை இன்று இந்தியா கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே நம் சென்னைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்தியாவின் டாப் நான்கு நகரங்களில் ஒன்று சென்னை. பிரிட்டிஷ் ஆளுமைக்குள் இருந்த முக்கிய நகரம். மெட்ராஸ் பிரெசிடென்ஸியாக பரந்து விரிந்திருந்ததன் சுருக்கம்தான் இப்போதைய சென்னை.



இங்குள்ள அரசு கட்டடங்களில் ஆங்கிலேய சாயல்களை நன்றாக உணர முடியும். சுதந்திரத்துக்குப் பிறகு அந்த கட்டடங்களில்தான் நாம் ஆட்சி செய்து வருகிறோம். 71-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அக்கட்டடங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் கட்டடங்கள் ஜொலிப்பதை பலரும் வியந்து பார்த்துச் செல்கின்றனர்.






இன்று சுதந்திர தின அணிவகுப்பு நடக்க இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, தேசியக் கொடி ஏற்ற இருக்கிறார். சென்னை கடற்கரையில் நடைபெறும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் இரவு முழுவதும் நடந்து வருகின்றன. சென்னை ரிப்பன் பில்டிங், தலைமைச் செயலகம், மேலும் பல அரசு கட்டடங்கள், தனியார் நிறுவன கட்டடங்கள் என சென்னையே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடற்கரை, முக்கிய சந்திப்புகள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் என முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Posted Date : 14:48 (14/08/2017)

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy

VIKATAN

கு.ஆனந்தராஜ்




உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து 70 சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகளைப் பறிக்கொடுத்த பெற்றோர்களின் அழுகுரலுக்கு, மத்திய மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற வாதமும் வலுத்துவருகிறது. இந்நிலையில் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்தும், இனி இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் நிகழாமல் இருக்கவும் அரசு செய்ய வேண்டிய விஷயங்களை அழுத்தமாகக் கூறுகிறார், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்.

“பாபா ராகவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70 பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம், ஆக்ஸிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதுதான். இன்றைய பொருளாதாரச் சூழலில் தனியார் 

நிறுவனத்தார், யாருக்கும் நீண்ட கால இலவச சேவையை வழங்க முடியாது. அப்படித்தான் ஆக்ஸிஜன் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு அம்மாநில அரசு செலுத்தவேண்டிய ரூ.67 லட்சம் தொகையை செலுத்தாததால், ஆக்ஸிஜன் விநியோகிக்கும் நிறுவனமும் மருத்துவமனைக்கான தன் சேவையை நிறுத்தியுள்ளது. இதுவே ஒருவாரத்துக்குள் 70 பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்னையை கவனிக்கத் தவறியிருக்கிறார் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர். பசு மாடுகளுக்கு இன்ஸூரன்ஸ், ஆம்புலன்ஸ் வசதியெல்லாம் செய்யும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசு மருத்துவமனையில் நடக்கும் தவறுகளைக் கண்டறிந்து உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்க வழிசெய்யாமல், அரசின் தவறை மூடி மறைக்கிறார்.

‘ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லை. சில குழந்தைகளைத் தவிர மற்றக் குழந்தைகள் மூளை வீக்கப் பிரச்னையால்தான் உயிரிழந்திருக்கின்றனர்' என உத்தரப் பிரதேச மாநில அரசு சொல்வது தன் தவறை மறைக்கச் சொல்லும் வாதம். மேலும், கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதியில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பிரச்னை இருப்பதாகக் கூறுகின்றனர். ஒருவேளை மூளைக் காய்ச்சல் பரவினால், அதற்கு உரிய தடுப்பூசியை அளித்து குழந்தைகளைக் காப்பதுதானே அரசின் கடமை. அதைச் செய்யாமல், மூளைக் காய்ச்சல் மற்றும் மூளை வீக்கப் பிரச்னையால்தான் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உ.பி அரசு சொல்வது எவ்வளவு மோசமான வாதம். தன் தவறை உணர்ந்து, இனி இதுபோன்ற தவறு நடக்காது என்ற உத்தரவாதத்தை பொதுமக்களுக்கு வழங்காமல், தான் செய்த தவறு அப்பட்டமாகத் தெரிந்திருந்தும் அதை மறைக்கவே அம்மாநில அரசு முயல்கிறது.



பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை டீன், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதை நிச்சயம் அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பார். ஆனால், பிரச்னை வந்தால் பார்த்துக்கொள்வோம் என அரசு அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் இருந்திருப்பதே 70 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம். குறிப்பாக, அம்மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு நோடல் அலுவலரான மருத்துவர் காஃபீல் கான், தனது நண்பரின் க்ளீனிக்கில் இருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு வரவழைத்தும், வெளியில் இருந்தும் ரூ.10,000 கொடுத்து 9 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார். இந்த மருத்துவரின் செயலால், பல குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவர் காஃபீல் கானை, நோடல் ஆஃபிஸர் பொறுப்பிலிருந்து அம்மாநில அரசு நீக்கியிருக்கிறது. இப்படி அரசு செய்தால், நல்லது செய்யும் எண்ணமும் பல மருத்துவர்களுக்கு வராமலே போகும்" என்பவர், அரசு செய்யவேண்டிய அடிப்படை விஷயங்களை முன்வைக்கிறார்.

"தேவைக்குக் குறைவான அரசு மருத்துவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஏராளமான அரசு மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன. இதனால் ஒரே டாக்டர் ஏராளமான நோயாளிகளைக் கவனித்து சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அத்துடன் தங்களுக்கான ஊதியம் குறைவாக இருப்பதால், பெரும்பாலான அரசு மருத்துவர்கள் தனியாக கிளீனிக்குகளை வைத்திருக்கிறார்கள். இதனால் அரசு மருத்துவமனையிலிருக்கும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல், தங்கள் கிளீனிக்குகளுக்கு வரும் நோயாளிகளின் மீதே கூடுதல் அக்கறை செலுத்துகின்றனர். இப்படி அரசு நிர்வாகமும், அரசு மருத்துவர்கள் பலரும் செய்வது அப்பட்டமான தவறாகும். ஆனால், பாதிக்கப்படுவதோ ஏழை பொதுமக்களும், குழந்தைகளும்தான். குறிப்பாக, இன்னும் வட மாநில கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பல ஏழை மக்கள் உடல்நிலை சரியில்லாதவர்களைத் தோல்மீது சுமந்தும், சைக்கிள் மற்றும் பைக்கிலும் வைத்துதான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள். அந்த அளவுக்கு இன்னும் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் முழுமையான மருத்துவச் சேவை சென்றடையாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் அரசின் மெத்தனம்தான் காரணமாக இருக்கிறது. எனவே, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, போதுமான நிதியை ஒதுக்கி மருத்துமனைகளின் தரத்தை அதிகப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பொது சுகாதார விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வருமானத்தில் 5 சதவிகிதத்தை மருத்துவச் செலவுகளுக்கு செலவழிக்கின்றனர். இதனால் தங்கள் வருமானத்தில் பெரும்தொகை மருத்துவத்துக்காக செலவழிப்பதால், மற்ற தேவைகளுக்கு உரிய செலவீனங்களை ஒதுக்க முடியாமல் போகிறது. ஆனால், கல்வி, மருத்துவமும் அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டிய சேவை. இதை எத்தனை முறை சொன்னாலும், அரசு செவிசாய்க்காமலேயே இருக்கிறது. உ.பி குழந்தைகள் உயிரிழப்பைப்போலவே, பல வருடங்களுக்கு முன்பு திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சில குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் போதிய வசதியில்லாததால் அங்கு பல குழந்தைகள் உயிரிழந்தனர். இப்படித் தொடர்ந்து நாடு முழுக்க அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான நோயாளிகள் உயிரிழப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

பசு மாட்டின் மேல் காட்டும் கரிசனத்தை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது அரசு செலுத்துவதில்லை. இனியாவது பச்சிளம் குழந்தைகளின் உயிரை வைத்து அரசியல் செய்யாமல், மத்திய, மாநில அரசுகள் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம், இனி நாட்டில் எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். நம் நாட்டில் ஏழை மக்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை. அதனால், அரசு மருத்துவமனைகளின்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட அரசு வழிசெய்யவேண்டும்" என்கிறார்.

நீட் தேர்வில் 196.5 FM வாங்கிய அனித்தாக்களின் நிலை என்ன?


VIKATAN




தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் போது, கூடவே மனநல வல்லுனர்களையும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கவேண்டும் என்று ஒருவர் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டிருந்தார். இது கிண்டலுக்காகப் பதிவு செய்யப்பட்ட ஒன்று என்றாலும், டாக்டர் ஆகும் ஆசையுடன் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், நீட் தேர்வு விவகாரம் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பங்கள் இருந்த சமயத்தில், "நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். எனவே, நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி கூறி வந்தார்.

தேர்வு தந்த குழப்பம்

இந்த நம்பிக்கை வார்த்தைகளை தமிழக மாணவர்கள் நிஜமாகவே நம்பினார்கள். பெரும்பாலான மாணவர்கள் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நமக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்போடு இருந்தனர். நீட் தேர்வுக்கு தயாரான ஒரு சில மாணவர்களும் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்பதால், ஏனோ, தானோ என்றுதான் படித்தனர். கவனம் செலுத்திப் படிக்கவில்லை.

ஆனால்தான் நீட் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவர் கூட அகில இந்திய ரேங்க் பெறவில்லை. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் பல மாணவர்கள் 720 மதிப்பெண்களுக்கு அதிகபட்சமாக 655 மதிப்பெண்களை மட்டும்தான் எடுத்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முடியவில்லை. இந்த சூழலில்தான் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் இருந்து தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித ஒதுக்கீடு என்று சொல்லியது தமிழக அரசு.

ஆனால், உச்சநீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. வேறு வழியில்லாமல் மீண்டும் மத்திய அரசின் கைகளை எதிர்பார்த்து தமிழக அரசு காத்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்தபோதிலும் இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

அவசர சட்டம் பயன் தருமா?

ஜல்லி கட்டு விவகாரத்தில் தமிழக அரசுதான் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று கைவிரித்த மத்திய அரசு இப்போது மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்திலும், தமிழக அரசு அவசர சட்டம் வெளியிடலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். இதையடுத்து அவசரச் சட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொல்லி இருக்கிறார். ஆனால், மத்திய‍ அமைச்சரின் ஒரு தகவலையே, மத்திய ஆளும் கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா மறுத்திருக்கிறார். எனவே அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வதை எவ்வளவு தூரத்துக்கு நம்பமுடியும் என்பது தெரியவில்லை.

மேலும், நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லி விட்டது. எனவே, இதில் தமிழக அரசு எடுக்கும் கடைசி கட்ட முயற்சிகள் பலிக்குமா என்று தெரியவில்லை. அப்படியே அவசர சட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்த்து நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றம் போனால், மேலும் இழுபறி நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

எண்ணற்ற அனிதாக்கள்

இந்த சமயத்தில் சில நாட்களுக்கு முன்பு தி.மு.க-வின் சிவசங்கர் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்த அனிதா என்ற மாணவியின் நிலைதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா, அவருடைய குடும்பத்தின் வறிய சூழலிலும் 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் இதுதான்; தமிழ் 195, ஆங்கிலம் 188, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரியியல் 194, கணிதம் 200 என்று வாங்கியிருந்தார். 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கட்-ஆப் (அனிதாவின் கட் ஆப் 196.5)அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்கும் பட்சத்தில், அவருக்கு நிச்சயம் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்திருக்கும்.

இப்போது தமிழக அரசு சுகாதாரத்துறை மட்டத்தில் நாம் பேசியபோது, இன்னும் சில நாட்களில் கலந்தாய்வு தொடங்கி விடும் என்று சொல்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற்றால், 12-ம் வகுப்புத் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தும் விதமாக ஒரு ரேங்க் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

நீட் தேர்வில் இருந்து விலக்குக் கிடைக்காவிட்டால், நீட் தேர்வு அடிப்படையில் தேர்வான மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஒன்றையும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தயாரித்து வைத்திருக்கின்றனர். அதிகாரிகளின் முன்ஜாக்கிரதை வியக்கத்தக்கதாகத்தான் இருக்கிறது. ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட அனிதாவைப் போன்ற மாணவர்கள் இப்படி முன்ஜாக்கிரதையாக இரண்டையும் படித்து வைக்கவில்லை. அவர்களுக்கு என்ன சொல்லப்போகிறது இந்தத் தமிழக அரசு?

NEWS TODAY 28.01.2026