Friday, August 18, 2017

நீட் அவசரச் சட்டம்... நீதிமன்றத்தில் தப்புமா?

vikatan
நீட் தகுதித் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி, தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் கொண்டுவந்தும், அவற்றுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தராமல் மத்திய அரசு இழுத்தடித்தது. பின்னர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்கள் ஒதுக்கீடு செய்து கொண்டுவந்த அரசாணையை நீதிமன்றங்கள் அடுத்தடுத்து ரத்து செய்தன. ‘தமிழக அரசு மட்டும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொல்லைப்புறமாக ஏன் இந்த முயற்சி..?’ என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து அரசாணையை ரத்து செய்தபோது, கடைசி வாய்ப்பும் பறிபோனதாகவே தமிழக அரசு நினைத்தது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே வாரம் ஒருமுறை டெல்லி வந்து தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பிரதமர் முதல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை பலரையும் சந்தித்தனர். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் சென்று நாள் முழுவதும் காத்துக்கிடந்தனர். தமிழக அதிகாரிகளோ, மத்திய அரசு அதிகாரிகளிடம் பல அவமானங் களை அடைந்தனர். ‘‘சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டோமே... பிறகு ஏன் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கிறீர்கள்..?” என்று பல புறக்கணிப்புகள், அவமானங்கள்.
கடைசியாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவி ஏற்புக்கு முதல்வர் எடப்பாடி வந்து, பிரதமரைச் சந்தித்து நீட் விலக்கு கோரி மனு கொடுத்தபோதும் எந்த அனுகூலமான பதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ஓராண்டு விலக்கு கோரினால் பரிசீலிப்போம்’’ என்று சொல்ல... புதிய வெளிச்சம் உதயமானது. நீட் விலக்கு கோரி படையெடுத்த தமிழக அரசிடம் நேரடியாக இதைத் தெரிவிக்காமல், நிர்மலா சீதாராமன் மூலம் மீடியா வழியாக அறிவித்தது மத்திய அரசு. அதன்பிறகு அடித்துப் பிடித்து ‘இரண்டு ஆண்டு விலக்கு கோரி’ மத்திய அரசிடம் கடந்த வாரம் கொடுத்த அவசரச் சட்ட வரைவினை ‘ஓராண்டு விலக்கு’ என்று மாற்றி, அந்த ஆவணங்களுடன் டெல்லி விரைந்தார் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். 

திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கே மத்திய உள்துறை அலுவலகம் வந்த அவர், நண்பகல் வரை இணைச் செயலாளர் டாக்டர் ஆர்.கே.மித்ரா மற்றும் அதிகாரிகளிடம் போராடினார். பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அவரை ஓடவிட்டனர். நொந்துபோய் மதியம் வெளியில் வந்தார் ராதாகிருஷ்ணன். மதிய உணவு இடைவேளைக்குப் பின் அனைத்து ஆவணங்கள், கூடுதல் நகல்கள் என்று கேட்ட அனைத்தையும் அள்ளிக்கொண்டுவந்து தாக்கல் செய்தார். அவற்றை உள்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டபிறகே அனைவரும் பெருமூச்சு விட்டனர். மாலை ஐந்து மணி வரை அங்கேயே இருந்து, ‘சந்தேகம் எதுவும் இல்லை’ என்று சொன்னபிறகே தமிழ்நாடு இல்லம் திரும்பினர்.

‘தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலில் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கிறார்கள். பழைய சேர்க்கை முறைப்படி ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான தமிழக மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். அவர்கள் எல்லாம் இந்த ஆண்டு பாதிக்கப்படுவார்கள். எனவே, ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று கோரி பல்வேறு புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ளனர்.
எப்படியும் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றி விடலாம் என்று நம்புகிறது தமிழக அரசு. ஆனால், இயற்றப்போகும் அந்த அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் கழுகுப் பார்வையிலிருந்து தப்புமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நீட் தேர்வை எழுதி வெற்றிபெற்று கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவ சீட் நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். அவர்கள் சார்பில் நளினி சிதம்பரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, தமிழக அரசின் 85% இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வைத்தார். இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வரும் என்ற யூகத்தில், அவர்கள் இப்போதே நளினி சிதம்பரத்தை அணுகி வருகிறார்கள். அவரும், ‘‘ஆவணங்களுடன் தயாராக இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன்’’ எனச் சொல்லி இருக்கிறார். எனவே, இந்த அவசரச் சட்டம் தாக்குப்பிடிக்குமா என அதிகாரிகள் அச்சத்தோடுதான் இருக்கிறார்கள். 

ஒருவேளை அப்படி நீதிமன்றம் தடை போட்டால், ‘நாங்கள் வழங்கினோம்... நீதிமன்றம்தான் தடுத்து விட்டது’ என்று பி.ஜே.பி-யினர் தப்பித்துக்கொள்வார்கள்.  அ.தி.மு.க அரசின் நிலைதான் திண்டாட்டம். கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த  தீர்ப்பின்படி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மருத்துவ கவுன்சலிங்கைத் தமிழக அரசு முடிக்க வேண்டும்.

- டெல்லி பாலா
ஏழைகள் என்றால் அலட்சியம்?!

ஒயிட்

vikatan

வெறும் 68 லட்ச ரூபாய்தான், 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைப் பறித்திருக்கிறது. இப்போது ஒவ்வொரு குழந்தையின் உயிருக்கும் 20 லட்சம் இழப்பீட்டை அறிவித்திருக்கிறது உத்தரப்பிரதேச அரசு. அத்தனை மலிவானதா நம் குழந்தைகளின் உயிர்? உத்திரபிரதேச மாநிலம், கோரக்பூரில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மரணமடைந்திருக்கும் குழந்தைகள் பற்றி செய்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி இருக்கிறது.

இந்த மரணங்களுக்குக் காரணமான ஒவ்வொருவரும் எட்டுத் திசைகளில் கைகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். யாருமே பொறுப்பேற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. “இதெல்லாம் வருஷா வருஷம் நடப்பதுதான்’’ என்று பொறுப்பில்லாமல் மாநில முதல்வரே கையை விரிக்கிறார். அக்கறையில்லாத அரசு நிர்வாகத்தைக் கேள்விகேட்க முடியாமல், `மீடியா பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்’ என்று மைக்கை நீட்டியவரைக் குற்றவாளியாக்குகிறார். `இது விபத்து’ என்கிறார் அமித்ஷா. மருத்துவமனை நிர்வாகமோ, ஆக்ஸிஜன் பற்றாகுறையெல்லாம் இல்லவே இல்லை என்று பொய்க்கணக்குக் காட்டுகிறது. ‘`இதை அரசியல் ஆக்காதீர்கள்’’ என்று அறிக்கை விடுகிறார் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர்.



இதை அரசியல் ஆக்காமல் வேறு எதைத்தான் அரசியல் ஆக்குவதாம்? செத்துப்போன குழந்தைகள் ஒவ்வொருவரும் ஏழ்மையான தலித் மற்றும் இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதிகமும் செலவழித்து மருத்துவம் செய்ய முடியாதவர்கள். குணப்படுத்த முடியாத கொள்ளைநோயால் மரணங்கள் நிகழ்வது தடுக்க முடியாதது. ஆனால், முறையான மருத்துவம் கிடைக்காமல் அரசின் அலட்சியத்தால் உண்டாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பு?

``கோரக்பூரில் குழந்தைகளுக்கு வருகிற இந்த மூளைவீக்கம் எவ்வளவு முக்கியமான பிரச்னை தெரியுமா? அதை உடனடியாகக் கொள்ளைநோய் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கான உரிய சிகிச்சைகள் கிடைப்பதற்கும் இந்த அரசு, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று பாராளுமன்றத்தையே ஒருமுறை அலறச்செய்த குரல் யாருடையது தெரியுமா... இன்றைய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடையது. அந்தச் சமயத்தில் உத்தரப்பிரதேசத்தை சமாஜ்வாதி கட்சிதான் ஆண்டுகொண்டிருந்தது.

கோரக்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, 1998 முதல் 2014 வரை ஐந்துமுறை இருந்தவர்தான் இன்றைய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். அவருக்குக் கோரக்பூர் குழந்தைகளை ஒவ்வொரு மழைக்காலத்திலும் தாக்குகிற இந்த encephalitis என்கிற மூளைவீக்கம் குறித்து மிக நன்றாகவே தெரியும். அது ஆண்டுதோறும் எத்தனை எத்தனை குழந்தைகளைப் பலி வாங்குகிறது என்பதையும் புள்ளிவிபரங்களோடு அறிவார். அப்படியொரு அசாதாரண சூழல் இருக்கிற இடத்தில் எத்தனை உச்சக்கட்ட மருத்துவ வசதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆட்சியில் இல்லாதபோதுதான் இயவில்லை, போகட்டும். இப்போதுதான் அதிகாரம் இருக்கிறதே! ஆண்டுதோறும் மழைக்காலங்களில் எத்தனை நவீன பாதுகாப்பு வசதிகளோடு தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏன் அதெல்லாம் இல்லை? ஏழைகள்தானே என்கிற அலட்சியம்.



சென்ற வாரம்தான் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பத்து ஐ.சி.யூ. பெட்களைத் திறந்து வைப்பதற்காகச் சென்று இருக்கிறார் யோகி ஆதித்யநாத். அப்போது இதே மூளைவீக்கத்திறகு சிகிச்சை அளிக்கும் வார்டுக்கும்கூட விசிட் வந்திருக்கிறார். அப்போதே ``இப்படி ஒரு பிரச்னை இங்கே இருக்கிறது? உடனே தீர்த்துவையுங்கள்’’ என மருத்துவமனையில் இருக்கிற யாராவது ஒருவர் கோரிக்கை வைத்திருந்தாலும், இன்று இத்தனை பெரிய துயரம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஏன் அப்போதே யாரும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்குப் பணம் செலுத்தவில்லை என்பதைப்பற்றி முதல்வரிடம் சொல்லவில்லை?

ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பணபாக்கி இருக்கிறது என்று இந்த மாதம் மூன்றாம் தேதி அரசுக்கு பெட்டிஷன் போடப்பட்டிருக்கிறது. மீண்டும் பத்தாம்தேதியும் நினைவூட்டல் செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏன் பணத்தைச் செலுத்தாமல் தள்ளிப்போட்டது அரசு? பத்து லட்சம் வரைக்கும்தான் ஒரு நிறுவனம் நிதி பாக்கியை நிலுவையில் வைக்க முடியும் என்கிற விதி இருந்தும், 68 லட்சம் வரை சப்ளை செய்திருக்கிறது அந்த ஆக்ஸிஜன் நிறுவனம். ஒருகட்டத்தில் இனியும் எங்களால் முடியாது எனக் கை விரித்திருக்கிறது. அதைக் கடிதமாக எழுதி மாவட்ட நிர்வாகம், சுகாதார அமைச்சகம் முதலானவைகளுக்கும்கூட அனுப்பியும் ஏன் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை?

குழந்தைகள் தொடர்ச்சியாக மரணிக்கத் தொடங்கியதும், பிரச்னைக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்து மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை வெளியேற்றத் தொடங்கியதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி இருக்கிறார். அப்படி நிஜமாகவே நடந்திருந்தால் எத்தனை பெரிய துயரம். இதுதான் நாம் கனவுகாணும் புதிய இந்தியாவா?

உத்தரப்பிரதேசம் எங்கேயோ இருக்கிறது. செத்துப்போன குழந்தைகள் எங்கேயோ இருக்கிற குழந்தைகள். எனவே, நாம் பதற்றப்பட வேண்டியதில்லை என நினைக்க வேண்டாம். உத்தரப்பிரதேசத்தில் அடிக்கப்பட்டிருப்பது நமக்கான எச்சரிக்கை மணி. நமது அரசு மருத்துவமனைகள் எப்படி இருக்கின்றன? திடீர் திடீரென்று விதவிதமான தொற்று நோய்கள் நம் குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், நம் குழந்தைகள் மருத்துவமனைகள் அவற்றைச் சந்திக்கத் தயார்நிலையில் இருக்கின்றனவா? நவீன வசதிகள் அங்கே கிடைக்கின்றனவா? இல்லையென்றால் ஏன் இல்லை என்பதையெல்லாம் உடனடியாக ஆய்வு செய்து அவற்றைச் சரிசெய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது.

இங்கே எத்தனை பேர் முழுமையான நம்பிக்கையோடு அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கிறோம். பணமில்லை, வேறு வழியில்லை என்னும்போதுதான் அங்கே செல்ல நேர்கிறது. தனியார் மருத்துவமனைகள் தருகிற நம்பிக்கையை அரசு மருத்துவமனைகள் ஏன் உருவாக்கவில்லை? இங்கேயும் இப்படி ஒரு பெருந்துயரம் நடந்தால்தான் நாம் விழித்துக்கொள்வோமா? அல்லது அப்படி நடந்தாலும் யோகியின் அரசைப்போலவே பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு இழப்பீட்டை எறிந்துவிட்டுக் கடந்து செல்வோமா?

NEET.....COURT STAYS TILL AUGUST 22

‘NEET exemption reason for imbroglio’

The Centre’s decision to exempt Tamil Nadu students from NEET for a year is the reason for the current imbroglio, Puthiya Tamizhagam leader K. Krishnasamy said here on Thursday.
Addressing reporters here, he said that the pressure by the opposition parties was the reason for the AIADMK government’s efforts to get exemption from NEET for MBBS admission. The State Government should come out with a White Paper on the possible beneficiaries of NEET exemption. Mr. Krishnasamy also condemned the State government for including Ariyalur student Anitha in the case against NEET and projecting her as Dalit student; this has resulted in the community being degraded, he said.

Comedian passes away

Comedy actor ‘Alwa’ Vasu, who has acted in over 900 films, died in Madurai on Thursday, aged 56. Vasu gained popularity in the film ‘Amaithipadai,’ starring actor Sathyaraj and Manivannan. He also paired up with comedian Vadivelu in several films.
Vasu had been ailing for quite some time and was undergoing treatment. “We tried to give the best treatment possible to him, but he didn’t survive,” Bala Sundar, a relative, said. Vasu is survived by his wife and a daughter.

More rain likely till Saturday

Rainy weekend ahead:The State has recorded its highest volume of rainfall in the past six years between June and so far in August.R. Ragu  

Low pressure area may develop over Bay of Bengal

More rain is on the way to the city, which has been witnessing thundershowers in the evening for the past few days.
Heavy showers lashed several parts of the city on Thursday evening too. However, the weather observatory in the city recorded only 1 cm of rainfall till 8.30 p.m. Officials of the Meteorological Department said an upper air cyclonic circulation may develop into a low pressure area over north Bay of Bengal. While this may not directly cause rainfall, it would be one of the factors influencing thunderstorms in the State for two more days.
Rainfall would occur over many parts of northern Tamil Nadu and a few places in southern Tamil Nadu. S. Balachandran, director, Area Cyclone Warning Centre, said the State has recorded its highest volume of rainfall in the past six years between June and so far in August. It has received 21 cm of rainfall, which is excess by 33% for the period.
Officials of the Meteorological Department said it is typical to have rain in the evenings during southwest monsoon due to convective activity. Chennai too would receive rain spells during evening or night till Saturday.

Commuters demand more buses from south side of flyover

No constraints:The Velachery MRTS station has ample space in the front to accommodate buses.G. Krishnaswamy  
In the wake of the proposal to shift the Vijayanagar bus terminus to Velachery railway station, commuters of southern suburbs want the Metropolitan Transport Corporation (MTC) to start operating bus services from the south side of the railway station. The commuters want MTC officials to divert some bus services that are now being operated till Vijayanagar bus terminus through the service road on the southern side of the Velachery flyover.
The Mass Rapid Transit System (MRTS) has become a big hit for a large number of commuters from suburbs including Madipakkam, Pallikaranai, Medavakkam and Keelkattalai. However to reach the Velachery railway station using the MTC buses, they have to take a long walk through the station road. Moreover, the vehicles starting from the Vijayanagar bus terminus are caught in traffic jams at the Vijayanagar traffic signal resulting in waste of time and fuel.
Southern Railway has improved passenger facilities on the south side of the Velachery railway station. Commuters say the operation of a few buses below the flyover on the south side would reduce traffic congestion at Vijayanagar. R. Santosh, a regular MRTS commuter from Pallikaranai, said at present share autos are operating from the south side of the station and if MTC terminates buses below the flyover it would be a big boon to hundreds of commuters. A senior official of the MTC, when asked about the option of operating buses from the south side of the railway station, said that the suggestion would be considered positively.

NEWS TODAY 28.01.2026