Saturday, August 19, 2017


Trains to Sengottai, Tirunelveli from Tambaram likely by Oct

Siddharth Prabhakar| TNN | Aug 18, 2017, 11:45 PM IST

Chennai: Southern Railway is likely to start two new trains from Tambaram, recently commissioned as Chennai city's third coaching terminal. Overnight trains to Sengottai and Tirunelveli will, in all likelihood, will be included in the timetable from October, highly placed sources in the zone said.



These are high-density routes on the south-broad gauge (BG) line as the Chennai-Trichy-Madurai line is known in railway parlance. Due to a dual issue of low line capacity and terminal capacity, the zone was unable to operate more trains on the route. Currently, one train runs to Sengottai from Chennai daily, while five are operated to Tirunelveli.



More than 60 trains originate or terminate from Egmore railway station and are cleaned and maintained at the Gopalapuram yard nearby. To introduce new trains from Egmore to southern districts as well states north of Tamil Nadu, the zone needs additional maintenance facilities, for which two pit lines were planned at Tambaram in the first phase. The work has been delayed for more than one year due to various reasons like inefficiencies of contractors and demonetisation.

Now, with the terminal being commissioned, the doubling of the line to Madurai will be completed by December. Doubling work till Trichy was completed in May. The Tambaram terminal has been created to de-congest Chennai Egmore and shift the origin/termination of south-bound trains to Tambaram. Already, the zone shifted the Guwahati and Dibrugarh weekly express trains to Tambaram from August 7 on a trial basis for a month.



However, officials in the operations department are yet to take a call on shifting the operation of more south-bound trains to Tambaram. Protests from a section of passengers living in the city's northern and western suburbs like Avadi, Gummidipoondi and Royapuram, who feel Tambaram will be too far a terminal to catch trains to southern districts, are being cited by officials for the delay in operating more trains.



However, another section of officials says that Tambaram is well-connected by suburban trains which can be run in sync with the passenger trains. "For instance, if the origin of Pandian Express is shifted to Tambaram, we can run a co-ordinated EMU train from Avadi/Gummidipoondi through Chennai Beach for passengers' convenience. This is not a major issue," a senior official said.


Such an arrangement is being done in Mumbai, where many trains start from Kurla and Bandra despite being far away from Mumbai Central and Chatrapati Sivaji Terminus (CST).


Tamil Nadu seeks at least 2,500 more MBBS seats

TNN | Updated: Aug 18, 2017, 11:57 PM IST

Chennai: A day after the Supreme Court asked Tamil Nadu government and Medical Council of India to have a "balanced situation" keeping in mind the interests of high scorers in both NEET and state board for medical admissions, state officials are working on various options such as increasing the number of seats in government medical colleges by nearly 50%.



On Friday, the state has told the MCI that it may have to create more than 2,500 seats to help affected students get a medical seat. "Increase in seats will be the only way to minimise loss of seats suffered by students from both sides," said a senior health department official. While nearly 850 students have scored high marks in both NEET and Class 12 examinations, a large chunk of students would be affected if the state adopted either of the two options for MBBS/BDS admissions.



Creation of over 2,500 supernumerary seats will help authorities to accommodate students who would lose their MBBS/BDS seats despite scoring high marks in NEET or board examinations. If the state does admissions based on NEET alone, then students who scored high marks in board examinations alone, would get edged out. Similarly, if the state is allowed to do admission based on Class 12 marks alone, then high scorers in NEET students would lose their opportunity to study medicine. Creation of supernumerary seats will avoid this situation.

MCI officials said they were holding discussions to see if they could permit colleges to have additional seats even if it is just for this academic year. "It would mean double the intake at some colleges. We will have to see if these institutions have the infrastructure, human resources and clinical material to teach so many students. We will not be able to compromise on the quality of education," said a senior MCI official.



Doctors' bodies, including Doctors Association for Social Equality (DASE), say creation of additional seats will keep meritorious students in both groups happy. "The state should look for a permanent solution instead of fixing the problem for this year alone," said DASE general secretary Dr G R Ravindranth.

LATEST COMMENT

Do not blackout my comments.At this rate Central/State Govt/MCI can give licence to open 500 medical colleges throughout India and make Medical Education similar to Egineering
colleges with no ... Read More
Gopalarathnam Krishna Prasad

Splitting available MBBS/BDS seats into 50:50 or any other percentage between NEET-qualified and non-NEET candidates too could be an option before the authorities and courts. For the record, legal experts say that the Supreme Court still has the option of rejecting all via-media suggestions and insist that the state admit students based on either Class 12 marks or NEET, like all other states.



While most states have completed one or even two rounds of counselling, Tamil Nadu had been seeking exemption from NEET. The prolonged efforts by the state government had started wearing thin, when union minister Nirmala Sitaraman earlier this week rekindled hopes by saying the Centre would consider and cooperate if Tamil Nadu government brought an Ordinance for one-year exemption. Following this, a draft Ordinance has been handed over to the Centre. Already, armed with attorney-general's nod, the law and HRD ministries cleared the Ordinance for one-year exemption. But, on Thursday, the Supreme Court suggested a 'compromised' and 'balanced' solution to the issue and ordered maintenance of status quo till August 22 when the Tamil Nadu government and MCI must unveil their suggestions.

மாநில செய்திகள்

திட்டமிட்டபடி 22-ந் தேதி வேலை நிறுத்தம் அரசு ஊழியர்கள் அறிவிப்பு



கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆகஸ்ட் 19, 2017, 05:00 AM
சென்னை,

கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 22-ந் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

12 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண்பதற்கு தயாராக இல்லாத அரசின் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். வருகிற 22-ந் தேதி திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலத்தில் 2 போலி டாக்டர்கள் கைது

ஆகஸ்ட் 19, 2017, 03:45 AM
சேலத்தில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் மருத்துவப்படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், ஊசி போடுவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் வளர்மதி, துணை இயக்குனர்(தொழுநோய்) குமுதா மற்றும் போலீசார் பொன்னம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த அருண்பிரகாஷ்(வயது 44) என்பவருடைய கிளினீக்கில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சித்த மருத்துவம் படித்துவிட்டு அவர் அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அருண்பிரகாசை அம்மாபேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அங்கப்பன் கைது செய்தார். மேலும் அந்த கிளினீக்கில் இருந்து ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல் மன்னார் பாளையம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு மருந்துக் கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஊசி போட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பி.பார்ம் படித்துள்ள சிவராமன்(35) என்பவரை வீராணம் போலீசார் கைது செய்தனர்.
சிவராமனுக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகும். கைதான 2 போலி டாக்டர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலையூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சேலையூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே அகரம் தென் கிராமம் அன்னை சத்யா நகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மதுக்கடையை மூடக்கோரி
யும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக மதுக்கடையை மூடவேண்டும். இல்லாவிட்டால் நாங்களே கடையை அடித்து நொறுக்குவோம் என்று கூறிய பொதுமக்கள், மதுக்கடை முன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இது குறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் தொகுதி
தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் பொதுமக்களுக்கு ஆதரவாக அவர், போலீசாரிடம் பேசினார். உடனடியாக மதுக்கடையை மூடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


அதற்கு போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. சமாதானம் செய்து கலைந்து போக செய்தார்.
பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வில் சேர்ந்து படிக்கலாம் அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வில் சேர்ந்து படிக்கலாம் அமைச்சர் செங்கோட்டையன்
ஆகஸ்ட் 19, 2017, 05:30 AMபிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை, 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் வடிவமைப்பு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் எந்தெந்த பகுதியில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த 3 மணி நேர தேர்வு என்பது 2½ மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் 600-க்கு மதிப்பெண் கணக்கிடப்பட உள்ளது. பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். ஜூன் மாதம் நடத்தப்படும் தேர்வில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். மன உளைச்சல் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சிறப்பான கட்டமைப்பு வசதி, கழிப்பிட வசதியை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம், ஆந்திரா, மராட்டிய மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வருகின்ற பொது நுழைவுத்தேர்வை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள 52 ஆயிரம் வினாக் களை கொண்ட குறுந்தகடு (சி.டி.) தயாரிக்கப்பட்டுள்ளது. பொது நுழைவுத்தேர்வுக்காக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 450 மையங் களை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு முறை தொடர்பான அரசாணை, பொது நுழைவுத்தேர்வுக்கான வினாக்கள் அடங்கிய குறுந்தகடு ஆகியவற்றை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் பெற்றுக்கொண்டார். அப்போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி உடன் இருந்தார்.

வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு முறை தொடர்பான அரசாணையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-

மாணவர்களின் அக மதிப்பீட்டுக்காக மதிப்பெண் ஒதுக்கப்படுகிறது. அதாவது வருகை பதிவுக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்ணும், உள்நிலை தேர்வுக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்ணும், ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் போன்றவற்றுக்காக அதிகபட்சம் 2 மதிப்பெண்ணும் அளிக்கப்பட உள்ளது.

வருகை பதிவை பொறுத்தமட்டில் 85 சதவீதத்துக்கு மேல் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், 80 முதல் 85 சதவீதம் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு 2 மதிப்பெண்ணும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.

உள்நிலை தேர்வை பொறுத்தமட்டில் பள்ளியில் நடத்தப்படும் சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 5 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. தொழிற்கல்வி செய்முறை பாடத்தை தவிர்த்து அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீடு மேற்கண்ட முறையில் கணக்கிடப்பட உள்ளது.

தொழிற்கல்வி செய்முறை பாடத்தை பொறுத்தமட்டில் அக மதிப்பீட்டுக்கு 25 மதிப்பெண்ணும், செய்முறை தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும் வழங்கப்படும். செய்முறை அல்லாத பொதுப்பாடங்கள், தொழிற்கல்வி பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். செய்முறை உள்ள பாடங்களுக்கு 70 மதிப்பெண்ணுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். 20 மதிப்பெண் செய்முறை தேர்வுக்கு அளிக்கப்படும்.

தொழிற்கல்வி அல்லாத பாடங்களில் 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 20 கேட்கப்படும். 20 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 2 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்படும். அதில் 7 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்படும். அதில் 7 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 7 கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

70 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்படும். 15 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 2 மதிப்பெண் கேள்விகள் 9 கேட்கப்படும். அதில் 6 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 9 கேட்கப்படும். அதில் 6 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 5 கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

தொழிற்கல்வி பாடங்களில் 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்படும். 15 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 3 மதிப்பெண் கேள்விகள் 13 கேட்கப்படும். அதில் 10 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 7 கேட்கப்படும். அதில் 5 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 10 மதிப்பெண் கேள்விகள் 2 கேட்கப்படும். 2 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்துத்தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும். செய்முறை தேர்வு உள்ள பாடங்களில் 70 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண் பெற வேண்டும். எழுத்துத்தேர்வு, அக மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும்.

மொழிப்பாடங்களில் தாள்-1, தாள்-2 ஆகிய இரண்டையும் சேர்த்து சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற வேண்டும். தொழிற்கல்வி செய்முறை பாடத்தை பொறுத்தமட்டில் 75 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 20 மதிப்பெண் பெற வேண்டும். அக மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்வியில் சிறந்த மாநிலம் : தமிழகத்திற்கு மத்திய அரசு கவுரவம்
பதிவு செய்த நாள்19ஆக
2017
00:10




சென்னை: ''மத்திய அரசு, எந்த நுழைவுத் தேர்வை கொண்டு வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று பிளஸ் 1 தேர்வு மாதிரி வினாத்தாள்களை, அமைச்சர் வெளியிட்டார். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மனோகரன் பெற்றார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குனர், அறிவொளி உடனிருந்தார்.

பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் இருந்து, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில் தேர்வு நடத்த, அரசு ஆணையிட்டுள்ளது. மூன்று மணி நேரத் தேர்வு, இரண்டரை மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. மொத்த மதிப்பெண், 1,200 என்பது, 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சிறந்த கல்வியாளர்களாக உருவாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 1 மாணவர்கள், மன உளைச்சலின்றி தேர்வு எழுத, உரிய பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 படிக்க வாய்ப்புள்ளது. பிளஸ் 1ல், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, பிளஸ் 2 படித்தபடி, ஜூன் மாதத்தில் தேர்வு எழுதலாம். மத்திய அரசு, கட்டமைப்பு வசதி, கழிப்பிட வசதியுள்ள, சிறந்த கல்வி கற்றுத் தரும் மாநிலம் என, மூன்று மாநிலங்களை தேர்வு செய்துள்ளது. அதில், தமிழகமும் ஒன்று. மற்ற இரு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் ராஜஸ்தான்.எதிர்காலத்தில், மத்திய அரசு கொண்டு வரும், எந்த பொதுத் நுழைவுத்தேர்வாக இருந்தாலும், அதை தமிழக மாணவர்கள் சந்திக்க, 54 ஆயிரம் கேள்விகள், அதற்கான விடைகள், வரைபடத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இது, 30 மணி நேரம் ஓடக்கூடிய, 'சிடி' ஆகவும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை, கல்வி உயர்மட்டக் குழு பார்வையிட்ட பின், மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

'ஆப்சென்ட்!' : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கும், துறை செயலர் உதயசந்திரனுக்கும் இடையே, பனிப்போர் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளை, அமைச்சர் வௌியிடும்போது, செயலர் உடனிருப்பார். ஆனால்,
நேற்று செயலர் உதயசந்திரன் வரவில்லை. இது குறித்து, அமைச்சரை கேட்டபோது, கையெடுத்து கும்பிட்டபடி, பதில் கூறாமல் எழுந்து சென்றார்.

NEWS TODAY 29.01.2026