Wednesday, August 23, 2017

5 நாள்களில் 2 ரயில் விபத்துகள் - ரயில்வே வாரியத் தலைவர் பதவி விலகல்!




ரயில்வே வாரியத் தலைவர் பதவியை ஏ.கே.மிட்டல் ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது ராஜினாமாவை அமைச்சர் சுரேஷ் பிரபு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 5 நாள்களில் இரண்டு ரயில் விபத்துகள் நடந்தன. அம்மாநிலத்தின் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் டெல்லியில் இருந்து வந்த காஃபியாத் விரைவு ரயிலில் 10 பெட்டிகள் தடம்புரண்டதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், கடந்தசில நாள்களுக்கு முன்னர் முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், 23 பேர் பலியாயினர்; 156 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக கவனக்குறைவாகச் செயல்பட்டதாக 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர், ரயில்வே வாரியத்தின் பொறியியல் பிரிவு உறுப்பினர், டெல்லி பிராந்திய ரயில்வே மேலாளர் ஆகியோரை விடுப்பில் செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

Dailyhunt
ராஜீவ் கொலைக்குக் காரணமான வெடிகுண்டு! அறிக்கை அளித்தது சிபிஐ




முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றி உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.

இவர்களது விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றி விவரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இதுகுறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐக்கு உத்தரவிட்டது. மேலும், வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட விதம், வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்த தகவலை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ தாக்கல் செய்தது.

Dailyhunt
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலகுவதாக அறிவிப்பு..!




உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற ரயில்வே விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவிவிலகுவதாகத் தெரிவித்துள்ளார். அவரைக் காத்திருக்கும்படி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகில் கடந்த சில தினங்களுக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இன்று காலையில் அதே உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட சுரேஷ் பிரபு, 'கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக ரத்தத்தையும் வியர்வையும் சிந்தி அர்ப்பணிப்புடன் செயல்பட்டேன். பிரதமரின் தொலைக்நோக்குப் பார்வையின்படி ரயில்வே துறை ஆக்கப்பூர்வமாகவும் நவீனமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் தற்போது ரயில்வே துறை வளர்ச்சியை நோக்கிச்செல்கிறது. பயணிகள் படுகாயமடைந்ததும் உயிரிழந்த சம்பவமும் எனக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முழுப் பொறுப்பேற்பதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். அவர் என்னைக் கொஞ்சம் பொறுத்திருக்கச் சொன்னார்' என்று பதிவிட்டுள்ளார்.
Dailyhunt
சின்னசேலம் அருகே மோதிக்கொண்ட ரயில் - டிராக்டர்! - உயிர் தப்பிய 300 பயணிகள்




சின்னசேலம் அருகே பயணிகள் ரயில், டிராக்டர் மீது மோதியதில் ரயில் இன்ஜின் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் உள்பட ரயிலில் பயணம் செய்த 300-க்கும் மேற்பட்ட பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

சேலத்தில் இருந்து ஆத்தூர், சின்னசேலம் வழியாக விருத்தாசலத்துக்கு இரண்டு பயணிகள் ரயில் இயங்கி வருகின்றன. இன்று காலை
9.30 மணி அளவில் சேலத்தில் புறப்பட்ட பயணிகள் ரயில் 11.10 மணியளவில் சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி பகுதியிலுள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக மண் அள்ளிக்கொண்டு வந்த டிராக்டர் அதிவேகமாக தண்டவாளத்தைக் கடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் மீது டிராக்டர் மோதியது. இந்தச் சம்பவத்தில் ரயில் இன்ஜினின் முன்பாகம் முற்றிலும் சேதமடைந்து, சுமார் 100 மீட்டர் தூரம் சென்று ரயில் நின்றுவிட்டது.

இந்த விபத்தில் இன்ஜினில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரயிலில் பயணித்த 300 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன், ஆர்.ஐ பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.
Dailyhunt
வாவ் வானம்.. தமிழகம் முழுவதும் பொத்துக்கிட்டு ஊத்துது.. விவசாயிகள் செம ஹேப்பி!




சென்னை: தமிழகத்தில் மதுரை, தேனி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆடிப்பட்டம் தேதி விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தெலங்கானா முதல் குமரி வரை உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலுவிழந்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

வானிலை மையம் கணித்தது போலவே சென்னை தொடங்கி மதுரை, தேனி, கிருஷ்ணகிரி,வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.தென்மேற்கு பருவமழை

தமிழகத்தில் இது தென்மேற்கு பருவமழை காலமாகும். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அணைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு தமிழகம் முழுவதும் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வெப்பச்சலனம்

இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். காலை முதலே வெயில் சுள்ளென அடித்த நிலையில் மாலையில் சட்டென்று வானிலை மாறியது.

கே கே நகரில் கனமழை  சென்னை கே.கே.நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்பட சென்னையின் பல பகுதிகளில் சுமார் அரைமணி நேரம் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்தது.

மதுரையில் மழை

மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் கனமழை பெய்தது. ஓசூரில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது

திருப்பூரிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி

கனமழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருவதால் நடப்பாண்டு விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் பஞ்சம் தீரும் என்று பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


source: oneindia.com
Dailyhunt


Related Stories
சசிகலா சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய காரணம் இதுதான்




டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் தலையிட தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுதான் சசிகலா மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி உறுதிசெய்தது.

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்தார். எனவே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே தங்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் தவறு இல்லை என்றும், எனவே மறு சீராய்வு மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்றும், அதற்கான அவசியம் எழவில்லை என்றும் மனுவை தள்ளுபடி செய்வதற்கு காரணம் கூறியுள்ளார்கள்.

source: oneindia.com

Dailyhunt
சசிகலாவின் கடைசி கனவும் தகர்ந்தது - இனி தண்டனை முடியும்வரை 
ஜெயில்தான்...!!!


ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அளவுக்கு மீறி சொத்துகுவித்ததாக அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இதில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா சேர்க்கப்பட்டிருந்தார். இதுகுறித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யவே 4 பேரும் தண்டனையில் இருந்து தப்பித்தனர்.
அனைவரையும் நீதிமன்றம் விடுத்தலை செய்வதாக அறிவித்தது. ஆனால் கர்நாடக அரசு விடவில்லை. மேலும் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் காலம் வரை தீர்ப்பு வரவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. தீர்ப்பு வருவதற்குள் எப்படியாது முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து சதி வேலைகளிலும் சசிகலா ஈடுபட ஆரம்பித்தார்.

ஜெ மறைவிற்கு பிறகு ஒரு மிகப்பெரிய நாடகத்தை மீடியாக்கள் முன்பு அரங்கேற்றினார். மக்கள் விரும்பவில்லை என்று தெரிந்தும் தற்போது இருக்கும் அதிமுக நிர்வாகிகள் ஒப்புதலோடு பொதுச்செயலாளராக பதவியேற்றார்.

பதவியேற்றதும் முதல் நாளே தன்னுடைய எளிமையான தோற்றத்தில் இருந்து ஜெயலலிதா போன்று நடை உடை பாவணை, அனைத்தையும் மாற்றி அவரின் அனைத்து உடமைகளையும் கைப்பற்றி அவருக்கு உரிமையாக்கி கொண்டார்.

இதைதொடர்ந்து, சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு சசிகலாவின் கண்ணிற்கு தெரிய, முதலமைச்சராக இருந்த பன்னீரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்.

ஆனால் ஜெயலலிதாவிற்கு மட்டுமே அடிமையாக இருந்த பன்னீர் முதன் முதலில் அனைவருக்கும் முன்னுதாரனமாய் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார்.

இதையடுத்து பன்னீரை பாஜக அரசுதான் இயக்குகிறது என்று அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது. இது தெரிந்தும், பாஜகவை பகைத்து கொள்ளக்கூடாது என முடிவெடுத்த சசிகலா பன்னீரை திமுகவே இயக்குகிறது என பேட்டியளித்தார்.

ஆனாலும் மத்திய அரசு சசிகலாவுக்கு சப்போர்ட் செய்யவில்லை. வந்தது சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு. அளித்தது சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை. மேலும் சுதாகரனுக்கும், இளவரசிக்கும் தான். ஆனால் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.

இதைதொடர்ந்து பெங்களூர் சிறைக்கு சென்ற சசிகலா அடுத்தடுத்து சீராய்வு மனு போட்டு அட்டெம்ப்ட் அடித்தார். அதற்கு உச்சநீதிமன்றம் விடவில்லை. திரும்ப திரும்ப சசிகலா மனுவில் ஃபெயில் போட்டுகொண்டே இருந்தது நீதிமன்றம்.

இந்நிலையில், கடைசியாக எப்படியாவது முட்டி மோதி பார்த்திட வேண்டும் என சசிகலா முடிவெடுத்தார். 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் ஜெயலலிதாவை விலக்கியது போல் எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். ஆனால் அதற்கும் முழுக்கு போட்டது உச்சநீதிமன்றம். மூன்று பேரின் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனால் சிறையில் இருந்து வெளியே வந்து விட வேண்டும் என்ற சசிகலாவின் கனவு பாலாய் போனது. மேலும் இனி அவர் சிறையிலேயே தண்டனை காலத்தை கழிக்க வேண்டிய கட்டயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே ஒபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் ஒன்றாக இணைந்துள்ள நிலையில் சசிகலாவின் மறு சீராய்வு குறித்த மனுவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தினகரன் திவாகரன் தரப்பு கோட்டை கட்டி கொண்டிருந்தது.

மேலும் கட்சி திரும்ப தமது கைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என திட்டமிட்டனர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பலத்த ஆட்டம் கண்டுள்ளனர் மன்னார்குடி கும்பல்...

Dailyhunt

NEWS TODAY 10.07.2026