Wednesday, August 23, 2017

5 நாள்களில் 2 ரயில் விபத்துகள் - ரயில்வே வாரியத் தலைவர் பதவி விலகல்!




ரயில்வே வாரியத் தலைவர் பதவியை ஏ.கே.மிட்டல் ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது ராஜினாமாவை அமைச்சர் சுரேஷ் பிரபு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 5 நாள்களில் இரண்டு ரயில் விபத்துகள் நடந்தன. அம்மாநிலத்தின் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் டெல்லியில் இருந்து வந்த காஃபியாத் விரைவு ரயிலில் 10 பெட்டிகள் தடம்புரண்டதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், கடந்தசில நாள்களுக்கு முன்னர் முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், 23 பேர் பலியாயினர்; 156 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக கவனக்குறைவாகச் செயல்பட்டதாக 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர், ரயில்வே வாரியத்தின் பொறியியல் பிரிவு உறுப்பினர், டெல்லி பிராந்திய ரயில்வே மேலாளர் ஆகியோரை விடுப்பில் செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

Dailyhunt

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...