Thursday, August 31, 2017

அர்ச்சகர் இன்றி சன்னதிகள் மூடல் : ராமேஸ்வரம் பக்தர்கள் அதிருப்தி
பதிவு செய்த நாள்30ஆக
2017
21:10




ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அர்ச்சகர் இன்றி, பல சன்னதிகள் மூடிக் கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். புனித தலமான ராமேஸ்வரம் கோவிலில், அக்னி தீர்த்தம், 22 தீர்த்தங்களில் நீராடி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி, இக்கோவிலுக்கு தினமும் நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கோவிலில் அர்ச்சகர்கள், மணியம், காவலர் உள்ளிட்ட, 80 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது, 30 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், பல சன்னதிகளில் அர்ச்சகர் இன்றி நிரந்தரமாக மூடியே உள்ளது. மேலும், பள்ளி கொண்ட பெருமாள், காசி விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி சன்னதி திறந்திருந்தாலும், உயர் அதிகாரிகள் வந்து சென்றதும், நடை மூடுவதற்கு முன், இச்சன்னதிகளை அர்ச்சகர்கள் மூடி செல்கின்றனர். 

இதே போல், கோவில் காவலர்கள், பாதுகாப்பில் ஈடுபடாமல் சொந்த அலுவல்களை கவனிப்பதாக புகார் உள்ளது. இதனால், தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர்.

ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில்,''அர்ச்சகர், மணியம் உள்ளிட்ட, 32 பணியிடங்களை நிரப்ப இந்து அறநிலைய ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். ''விரைவில், ஊழியர்கள்நியமித்து சன்னதிகள் திறந்து பூஜைகள் நடத்தப்படும். சன்னதியில் பணி நேரத்தில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...