Wednesday, August 23, 2017

சென்னையில் பரவலாக பல இடங்களில் மழை




சென்னை: சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை என ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை சாந்தோம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும் அடையாறு, கிண்டி, திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.


Dailyhunt
பட்டுப்போன 10 ஆயிரம் தென்னைக்கு இழப்பீடு கேட்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!



விருதுநகர் மாவட்டத்தில், வறட்சியால் பட்டுப்போன 10 ஆயிரம் தென்னை மரங்களுக்கு இழப்பீடு வேண்டும்; மாநிலம் முழுவதும் தென்னைக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டுமென தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜாவிடம் பேசினோம், '' விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக மழையில்லாமலும் நிலத்தடி நீர் ஆழத்திற்குப் போனதுனாலயும் 10 ஆயிரம் தென்னைமரங்கள் பட்டுப் போய்விட்டன. கடந்த வருடத்துக்கு முன்னாலயே மரம் வாடும்நிலையில் இருக்கும்போது, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தோம், போராட்டமும் நடத்தினோம். வேளாண்துறை அதிகாரிகள் குழு வந்து ஆய்வுசெய்துவிட்டு, 'மரம் பட்டுப்போகலை; உயிரோடதான் இருக்கு'னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஆனா, அதுதான் ஆரம்பநிலை. அப்பவே மாற்று ஏற்பாடு செய்திருந்தா, பாதி தென்னைகளைக் காப்பாத்தியிருக்கலாம். இப்போ, பட்டுப்போன மரம் எல்லாமே 30 வருடங்களுக்கு மேல உள்ள காய்ப்புக்கு உகந்த மரங்கள்தான். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள்ல தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தென்னைக்கு பயிர்க் காப்பீடு இருக்கு. ஆனா, நம்ம தமிழகத்துல நெல், வாழை, மானாவாரிப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு இருப்பது போல தமிழகம் முழுவதும் தென்னைக்கான பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசு விரிவுபடுத்தணும்.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் செயல்பட்டுவருது. காசர்கோட்டிலிருந்து நமது மாநிலத்துக்குரிய மானியத்திட்டம், மானியத் தொகையை நமது அமைச்சர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரலை. இதனால், தென்னைக்கான வளர்ச்சித் திட்டம், குறைந்த நீரிலும் வறட்சியைத் தாங்கியும் வளரும். புதிய தென்னை ரக வளர்ப்பில், புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து செயல்படுத்த முடியலை. ஒரு ஏக்கருக்கு 70 தென்னை மரங்கள்.



10 ஆயிரம் ஏக்கரில் 7 லட்சம் மரம் பட்டுப்போயிருக்கு. பட்டுப்போன மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அரசு இழப்பீடு தர வேண்டும். மாநில அரசு மத்திய அரசிடம் தென்னை விவசாயிகளின் கண்ணீர்க் கதையை எடுத்துச்சொல்லி, உரிய நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும்'' என்றார்.
Dailyhunt
உலக வரலாற்றில் முதன்முறையாக 57 கிலோ அஜித் இட்லி!



மெழுகுச்சிலை கேள்விப்பட்டிருப்பீர்கள்... இட்லி சிலை கேள்விப்பட்டதுண்டா? உலக வரலாற்றிலேயே ஒரு நடிகருக்கு இட்லியில் உருவம் வடித்துக் கொண்டாடும் பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.



நடிகர் அஜித் நடிப்பில், 'விவேகம்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 'விவேகம்', அஜித்தின் 57-வது படம். இந்நிலையில், வட சென்னையில் உள்ள அஜித் ரசிகர்கள் மற்றும் சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து, அஜித்தின் 57-வது படத்தை சிறப்பிக்கும் விதமாக, 57 கிலோ பிரமாண்ட இட்லியைத் தயார்செய்து வருகின்றனர். அஜித் உருவம் வடித்த இந்த பிரமாண்ட இட்லியை தங்கசாலை (Mint) அருகில் உள்ள பாரத் திரையரங்கின் முகப்பில் அரங்கமைத்து, இன்று மாலை 5 மணிக்கு வைக்க உள்ளனர்.

Dailyhunt

'நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு அநீதி!' - நீதிபதி வேதனை!





'நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது' என உயர் நீதிமன்ற நீதிபதி குற்றம் சுமத்தினார்.

நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வுக்கான பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, மருத்துவக் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வழக்கமாக, ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு, நீட் தேர்வு விவகாரத்தால் ஆகஸ்ட் இறுதியில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், 'நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு, மாணவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டது. மாநில பாடப்பிரிவு, சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றி தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இன்று மதியம் 2.15 மணிக்குள் வெளியிடப்பட்ட தர வரிசையில், யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என பதிலளிக்க வேண்டும். மருத்துவச் சேர்க்கையில் உரிய நேரத்தில் தமிழக அரசு முடிவெடுக்கத் தவறிவிட்டது' என கோபமாக உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

Dailyhunt
'முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா?!' - கொதி கொதித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் #VikatanExclusive





மீண்டும் ஓர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 'முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்' என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அளித்த கடிதத்துக்கு இன்னமும் ஆளுநர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. 'என்னை தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். முதல்வரை தேர்வு செய்வது என் வேலையா?' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

சென்னை, வானகரம் பொதுக் குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, கட்சி எம்.எல்.ஏ-க்களால் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தோடு கிண்டி ராஜ்பவனுக்கு விரைந்த சசிகலாவுக்கு, பதவிப் பிரமாணம் செய்துவைக்காமல் காலம் தாழ்த்தினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் கடிதம் கொடுத்தும் சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காதது ஏன் என்ற கேள்விகளும் அரசியல் மட்டத்தில் எழுந்தது. இதற்குப் பிறிதொரு நாளில் பதில் அளித்த வித்யாசாகர் ராவ், 'சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்தநேரமும் வெளியாகலாம் என்ற காரணத்தால்தான் காலம் தாழ்த்தினேன்' என மனம் திறந்தார். இந்நிலையில், நேற்று ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு நேர்ந்த சம்பவம் குறித்தும் அதில் விளக்கியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில், 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவையால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த நான்கு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையைத் தமிழக மக்களும் இழந்துவிட்டனர். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை நான் திரும்பப் பெறுகிறேன். இதுபோன்றதொரு சூழல் கர்நாடகாவின் முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது, கடந்த 2011-ல் ஏற்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரான நான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கடிதம் அதிர்வலையை உருவாக்கிய அதேநேரம், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.





அரசியல் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், நேற்று காலை 11.30 மணிக்கு மும்பை கிளம்பிவிட்டார் ஆளுநர். நவம்பர் மாதம் கூட இருக்கும் சட்டமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஆட்சிக்கு எதிரான சவால்களைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநரின் மௌனத்தை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் தினகரன் தரப்பினர். ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகின்றன. "மீண்டும் அரசியல் சர்ச்சைக்குள் ஆளுநர் மாளிகையின் பெயர் அடிபடுபவதை வித்யாசாகர் ராவ் ரசிக்கவில்லை" என விளக்கிய கிண்டி ராஜ்பவன் அலுவலக நிர்வாக அதிகாரி ஒருவர், "அரசியலமைப்புச் சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ஆளுநர் செய்துவருகிறார். இதைத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் அரசியலாக்குகின்றன. இதைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் அ.தி.மு.க எம்.பி ஒருவரிடமும் நேரடியாகவே பேசினார் ஆளுநர்.

அப்போது, 'கர்நாடகாவில் பா.ஜ.க அரசுக்கு எதிராகத் திட்டமிட்டு சதி செய்தார் அப்போதைய ஆளுநர் பரத்வாஜ். இதனால், எடியூரப்பா அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது. கர்நாடகா ஆளுநர் செய்ததை நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய அலுவலகத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பரத்வாஜின் முன்னுதாரணத்தை நான் ஏன் கடைபிடிக்க வேண்டும்? உங்களுக்கு அரசியல் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வாருங்கள். சபாநாயகரிடம் அரசுக்கு எதிராக மனு கொடுங்கள். என்னை ஏன் தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா? கட்சியின் வளர்ச்சியைக் கவனியுங்கள்' எனக் கொதிப்போடு பேசினார். இந்தத் தகவல் தினகரன் தரப்பினருக்கும் கொண்டு செல்லப்பட்டது" என்றார் விரிவாக.

எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளை இணைத்து ஆளுநர் காட்டிய புன்முறுவல் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 'தமிழகத்தில் மத்திய அரசின் நேரடி நடவடிக்கைகளின் மையப்புள்ளிதான் அந்த இணைப்பு' என்ற விமர்சனமும் அரசியல் மட்டத்திலிருந்து எழுந்துள்ளது.

Dailyhunt
'இரண்டு வருட காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி!' - நீட் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த முகேஷ் கண்ணா




பல்வேறு குளறுபடிகளைக் கடந்து வெளியிடப்பட்டுள்ள நீட் தேர்வு தர வரிசைப் பட்டியலில், தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார், கோவையைச் சேர்ந்த மாணவன் முகேஷ் கண்ணா.

மகிழ்ச்சியில் இருக்கும் முகேஷ் கண்ணாவிடம் பேசினோம், " கடந்த ஜூன் 12-ம் தேதி, நீட் ரிசல்ட் வெளியிடப்பட்டது. நான் 655 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அப்போதே எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அதனால், ஆல் இண்டியா கோட்டாவில் அப்ளை செய்தேன். நினைத்தபடியே எனக்கு கோவை மெடிக்கல் காலேஜில் சீட் கிடைத்தது. நான் ஜூலை மாதமே மெடிக்கல் சேர்ந்துவிட்டேன். தமிழகத்தில் நீட் வேண்டும்...வேண்டாம் என்று பிரச்னை நடந்துகொண்டிருந்ததால், தமிழக தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது. அதனால், என்னுடைய தர வரிசை என்னவென்று தெரியாமல் இருந்தது. இப்போது பிரச்னை தெளிவாகி, எனக்கு இரண்டாம் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

" நான், 2015-ம் வருஷமே ப்ளஸ் டூ ஸ்டேட்போர்டு பாடத்திட்டத்தில் முடித்தேன். சின்ன வயசுலேருந்தே எனக்கு டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை. ப்ளஸ் டூல 1,165 மார்க் எடுத்தேன். aipmt எக்ஸாம் எழுதினேன். ஆனால், என்னால் பாஸாக முடியவில்லை. அடுத்து இன்ஜினீயரிங் சேர்ந்துட்டேன். ஆனாலும் என்னோட டாக்டர் கனவு என்னைவிட்டுப் போகலை. இன்ஜினீயரிங் படிச்சுகிட்டே aipmt எக்ஸாமுக்கும் படிச்சேன். அதனால, அடுத்த முறையும் என்னால பாஸாக முடியலை. இந்தச் சூழல்லதான் இந்த வருஷம் நீட் அறிவிச்சாங்க. இன்ஜினீயரிங்கை டிஸ்கன்ட்டினியூ பண்ணிட்டு, டாக்ட்டராகியே தீரணும்னு தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். ஸ்பெஷல் கோச்சிங் போனேன். என்னோட விடா முயற்ச்சியால இன்னைக்கு நான் செலெக்ட் ஆனது மட்டுமில்லாம, ஸ்டேட் செகண்ட் வாங்கிருக்கேன். ஸ்பெஷல் கோச்சிங்ல ஸ்டேட் போர்டு சி.பி.எஸ்.சி இரண்டு பாடத் திட்டங்களையும் தரோவாகப் படிச்சேன். அதனாலதான் வெற்றிபெற முடிஞ்சது என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.

முகேஷ் கண்ணாவின் அம்மா கீதா, " தாமதமானாலும் என் மகனின் உழைப்புக்குத் தக்க பலன் கிடைத்திருக்கிறது. அவன் படிப்புல அவ்வளவு பர்ஃபெக்ட். நீட் தேர்வு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை மையப்படுத்தியே அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதனால், ஸ்டேட் போட்ர்டு பாடத்திட்டத்தையும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தையும் இணைத்து, ஒரு புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால்தான் தமிழக மாணவர்களால் நீட் தேர்வில் எளிதாகத் தேர்ச்சிபெற முடியும் என்றார்.
Dailyhunt
"ஐ.டி. வேலை வேண்டாம்னு டீக்கடை ஆரம்பிச்சார் கணவர்... சந்தோஷமா சம்மதிச்சேன்!"




கல்லூரிப் பருவத்தில் தியேட்டர், பார்க் என்று நண்பர்களோடு சுற்றிக்கொண்டிருந்தால், "நீயெல்லாம் படிச்சு உருப்படியான வேலைக்குப் போகப் போறதில்லே, பெட்டிக் கடையிலோ, டீ கடையிலோ எடுபிடியா இருக்கப்போறே" என்று பெற்றோரிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படும். ஆனால், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முடித்து, ஐ.டியில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், அதை உதறிவிட்டு பெற்றோர் மற்றும் காதல் மனைவியின் உதவியோடு டீ கடை நடத்திவருகிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?

சென்னை, விருகம்பாக்கத்தில் இருக்கும் சாய் கிங் டீ ஷாப்பில், சாரல் விழும் மாலை நேரத்தில், சூடான டீயைக் கொடுத்துவிட்டுப் பேசுகிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன். "பிரதர், என் சொந்த ஊர், பொள்ளாச்சி. பிறந்தது வளர்ந்தது அங்கேதான். அப்பா அம்மா ரெண்டுப் பேருமே படிக்காதவங்க. ஆனால், என் படிப்பில் ரொம்ப அக்கறை எடுத்து எல்லாம் செஞ்சாங்க. நான் 2006-ம் வருஷம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடிச்சுட்டு சென்னையிலுள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல சம்பளம்தானாலும், மனசுக்குள்ளே ஏதோ ஒரு குறை உறுத்திட்டே இருந்துச்சு. அதனால் வேலையை விட்டுட்டு நண்பரோடு சேர்ந்து ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சேன். அது அஞ்சு வருஷம் நடந்துச்சு. பிறகு, தனியா ஏதாவது செய்யலாமேன்னு யோசிச்சு இந்த டீ ஷாப் வெச்சேன்" என்கிறார்.

ஒரு வருடத்துக்குள் விருகம்பாக்கம், ஓ.எம்.ஆர் மற்றும் முகப்பேர் என மூன்று இடங்களில் டீ ஷாப் வைத்து உற்சாகமாகச் சுழன்று வருகிறார். 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்' என்பார்கள். சுரேஷின் வெற்றிக்குப் பின்னால், அம்மா வசந்தி மற்றும் மனைவி சங்கீதா இருக்கிறார்கள்.

"என் பையன் சின்ன வயசிலிருந்தே அவன் அப்பாவின் சொந்த பிசினஸில் உதவியா இருந்திருக்கான். அதனால், சொந்த வேலை செய்யும் ஆசை எப்பவும் இருந்திருக்கு. ஆனால், டீ கடை வைக்கப்போறேன்னு சொன்னதும், சொந்தக்காரங்களை நினைச்சுத்தான் பயந்தேன். 'உங்க பையன் ஐ.டி வேலையை விட்டுட்டு பிஸினஸ்னு போனான். இப்போ, அதையும் விட்டுட்டு என்ன செய்யறான்?'னு கேட்டால், டீ கடை வைக்கப்போறான்னு எப்படிச் சொல்றதுன்னு ஒரே தவிப்பா இருந்துச்சு. அந்தச் சமயத்தில் என்கிட்டே பேசி நம்பிக்கை கொடுத்தது என் மருமகள்தான். 'லட்சம் லட்சமா சம்பாதிச்சு என்ன பிரயோஜனம் அத்தை? மனசுக்குப் பிடிச்ச வேலையைச் செஞ்சுட்டு சந்தோஷமா வீட்டுக்கு வர்றதுதானே முக்கியம்'னு சொல்லிப் புரியவைச்சா. அப்புறம், நானும் அவனை ஊக்கப்படுத்தி டீ கடை வைக்க உதவி செஞ்சேன். ஐ.டி. வேலையில் கை நிறையச் சம்பளத்தோடு இருந்ததைவிட, இப்போ ஆக்ட்டிவ்வா இருக்கான். பிள்ளையின் சிரிச்ச முகத்தைப் பார்க்கிறதைவிட ஒரு தாய்க்கு பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கு?" என்று நெகிழ்கிறார் வசந்தி.





சுரேஷின் காதல் மனைவி சங்கீதா, "நாங்க ரெண்டு பேரும் காலேஜ் படிக்கிறப்பலேருந்து நல்ல ஃப்ரெண்ட்ஸ். அந்த நட்பு காதலாச்சு. எந்த ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்னாடியும் ரெண்டுப் பேரும் மனசுவிட்டுப் பேசுவோம். அப்படித்தான், 'வேலையை விடப் போறேன்'னு அவர் என்கிட்ட சொன்னப்ப, அங்கே நான் ஒரு மனைவியா யோசிக்காம. ஒரு தோழியா யோசிச்சேன். 'இதுதான் உங்களுக்குச் சந்தோஷத்தையும் எனர்ஜியையும் கொடுக்கும். தாராளமா செய்யலாம்'னு சொன்னேன். கடையை ஆரம்பிச்சதும், ஆர்டர் கொடுத்திருக்கிற கம்பெனிகளுக்கு பிளாஸ்கில் டீ எடுத்துக்கிட்டு வேகவேகமா கிளம்புவார். அதைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் ஒரு மனைவியா கண் கலங்கினேன். ஆனால், எனக்குள் இருக்கும் தோழி, அவரை ஊக்கப்படுத்தணும்னு சொல்லிச்சு. ஆரம்பத்தில், 'டீ ஷாப் ஓனரே'னு கிண்டலடிச்ச சிலர், இப்போ இவரின் வளர்ச்சியைப் பார்த்து வாயடைச்சு நிற்கிறாங்க. ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் கப் டீ வியாபாரம் ஆகுது. சென்னையில் இருக்கும் பல கம்பெனிகளுக்கு எங்க ஷாப்பில் இருந்து டீ சப்ளை ஆகுது. இப்பவும் 'என்னடி உன் வீட்டுக்காரர் டீ ஷாப் வெச்சிருக்காராமே?'னு தோழிகள் யாராவது கேட்டால், 'ஆமாம்! சிங்கத்துக்கு வாலா இருக்குறதவிட பூனைக்குத் தலையா இருக்கிறதை நாங்க பெருமையா நினைக்கிறோம்'னு கம்பீரமா சொல்வேன்" எனப் புன்னகைக்கிறார் சங்கீதா.

இவர்களின் இரண்டரை வயது பெண் குழந்தையான மகிழினி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இன்னொரு பூஸ்ட்டாக இருக்கிறார். கணவரைப் புரிந்த மனைவியும், நந்தவனமாகக் குழந்தையும் இருக்கும்போது எல்லோரும் தொழிலதிபர்களே.
Dailyhunt

NEWS TODAY 10.07.2026