Friday, August 25, 2017
Thursday, August 24, 2017
தமிழகத்தில் அதிகமாகும் திரையரங்குகள்: உலக அளவில் மலைக்க வைக்கும் 'விவேகம்' வியாபாரம்
Published : 23 Aug 2017 18:25 IST
Updated : 23 Aug 2017 18:25 IST
- SUBSCRIBE TO THE HINDU TAMIL
‘விவேகம்’ படத்தில் அஜித்
தமிழகத்தில் 700-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது 'விவேகம்'. அதே போன்று உலக அளவில் படத்தின் வியாபாரம் மலைக்க வைப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் நாளை (ஆகஸ்ட் 24) வெளியாகும் படம் 'விவேகம்'. இப்படத்துக்கு திரையரங்குகள் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, முதல் வாரத்துக்கான டிக்கெட்களில் சுமார் 80% வரை விற்றுத் தீர்ந்துவிட்டன.
சென்னையில் முக்கியமான திரையரங்கமான மாயாஜால் திரையரங்கில் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 330 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்காக டிக்கெட் முன்பதிவில் 75% முடிந்துவிட்டதாகவும், விரைவில் அனைத்துக் காட்சிகளின் டிக்கெட் விற்பனையும் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையின் முக்கியமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் 2 முதல் 3 திரையரங்குகள் வரை 'விவேகம்' திரையிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் முதலில் 700 வரை திரையரங்குகள் ஒப்பந்தமிருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது. தற்போது 720 திரையரங்குகளைத் தாண்டி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித் நடிப்பில் தயாரான படங்களில், பெரும் பொருட்செலவில் 'விவேகம்' தயாராகி இருப்பதால் திரையரங்குகள் ஒப்பந்தம் மற்றும் டிக்கெட் முன்பதிவால் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது.
உலக அளவில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அனைத்தையும் சேர்ந்து சுமார் 2,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான படங்களில் உலகளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் 'விவேகம்' என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது.
மேலும், படத்தின் பொருட்செலவிற்கு தகுந்தாற் போன்று தயாரிப்பு நிறுவனமும் வியாரம் செய்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி உரிமை, இசை உரிமை, தமிழக விநியோக உரிமை, கேரள உரிமை, கர்நாடக உரிமை, தெலுங்கு உரிமை மற்றும் உலக நாடுகளின் உரிமை ஆகியவற்றின் மூலம் சுமார் 120 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக திரையுலகினர் தெரிவித்தார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்தின் குடும்பத்தினர், தயாரிப்பாளர் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் மட்டும் சென்னையில் உள்ள NFDC திரையரங்கில் 'விவேகம்' படத்தை பார்த்துள்ளனர். படம் முடிந்தவுடன் இயக்குநர் சிவாவை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.
'விவேகம்' படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம் என்ன?
Published : 23 Aug 2017 16:46 IST
Updated : 23 Aug 2017 16:46 IST
- UBSCRIBE TO THE HINDU TAMIL
‘விவேகம்’ படத்தில் அஜித்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதற்கான காரணங்களைத் தெரிவித்தார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விவேகம்'. வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். நாளை(ஆகஸ்ட் 24) வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்று திரையுலகில் விசாரித்த போது:
* 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணி மீண்டும் 'விவேகம்' படத்தில் இணைந்துள்ளது. அஜித்தை எப்படி காட்டினால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை இயக்குநர் சிவா தெரிவித்து வைத்துள்ளார்.
* எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அஜித் கலந்து கொள்ளவில்லை. விமான நிலையம், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு வரும் போது மட்டுமே அஜித்தை பார்க்கும் சூழல் உள்ளது. ஆகவே, நீங்கள் அஜித்தைக் காண வேண்டுமானால் அவருடைய படத்தை மட்டுமே பார்க்க முடியும்.
* 'விவேகம்' படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றின் காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் சமூகவலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'Never Ever Give Up', 'You will see my Rage' உள்ளிட்ட வசனங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
* அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தையுமே மொத்தமாக வெளியிடாமல், ஒவ்வொரு பாடலாக வெளியிட்டார்கள். அனைத்துமே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
* ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் உள்ளிட்ட அனைத்தையுமே கலைத்துவிட்ட அஜித், சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் நிலவும் சர்ச்சைக்குமே தனது சட்ட ஆலோசகரின் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அஜித் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம்: பால் முகவர்கள் சங்கம்
Published : 23 Aug 2017 20:06 IST
Updated : 23 Aug 2017 20:14 IST
சென்னை
- SUBSCRIBE TO THE HINDU TAMIL
'விவேகம்' திரைப்படம் வெளியாகும் போது அஜித் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்று பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் 'விவேகம்' திரைப்படம் வெளியாகும் போது அவரது கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என அறிவுறுத்துவதோடு, கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்ற கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, அதற்குப் பதிலாக 'விவேகம்' திரைப்படம் வெளியாகும் திரையரங்க வளாகங்களில் முதல் 10நாட்களுக்கு ரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் மற்றும் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடத்திடவும் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை நடிகர் அஜித்தின் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டோம்.
ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அஜித்தின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றுகிற லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் எங்களது சங்கத்தின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய 3பக்க கடிதத்தை கடந்த 04.08.2017 அன்று பதிவு தபால் வாயிலாக நடிகர் அஜித்துக்கு அனுப்பினோம்.
தமிழர்கள் இனியாவது நடிகர்களுக்கு ரசிகர்களாக இருந்து விட்டில் பூச்சிகளாக மாறி தங்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வீணாக்க வேண்டாம். சமூக பொருளாதாற அக்கறையோடு செயல்பட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ‘நீட்’ தான்; வேறு வழியில்லை

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இதோ கிடைத்துவிடும், அதோ கிடைத்து விடும் என்று பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காமல் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை. இந்த காலதாமதத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். யதார்த்த நிலைமையை உணராமல், இதிலும் அரசியல் புகுந்து விளையாடியதுதான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம். அறிவுசார்ந்த ஆன்றோர் பலர் தொடக்கத்திலேயே நிச்சயம் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காது என்று பேசியும் வந்தனர், எழுதியும் வந்தனர். ஆனால், அரசியல் என்ற மேகம் அவர்களின் கருத்துகள் எல்லாம் எடுபடசெய்யாமல் மூடிமறைத்து விட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2016–ம் ஆண்டுக்கு மட்டும்தான் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்ததே தவிர, 2017–ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தவேண்டியது கட்டாயம் என்றுதான் இருந்தது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும், தமிழக மாணவர்கள் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படிக்கிறார்கள், கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி இல்லை. மேலும், நீட் தேர்வுக்கான கேள்விகள் மத்திய சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ்தான் கேட்கப்படுகின்றன. எனவே, தமிழக மாணவர்களால் நீட் தேர்வு எழுதி வெற்றிபெற முடியாது என்ற காரணங்களுக்காக, சட்டசபையிலும் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு 2 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள், ஜனாதிபதியின் ஒப்புதலை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகள் அதற்கான பரிந்துரை களை செய்யவில்லை. இருந்தாலும், நீட் தேர்வு எழுதியவர் களில் 15 சதவீத ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுத்தபிறகு, மீதியில் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் எழுதியவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்களுக்கும் தமிழக அரசு ஒதுக்கி உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுகளும் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த ஒரு ஆண்டுக்காவது ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அவசர சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு மத்திய அரசாங் கத்துக்கு அனுப்பப்பட்டது. அதுவும் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தொடக்கத்திலேயே இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற நிலையிலேயே, சரி கிடைப்பதற்கு சந்தேகம்தான் என்று யதார்த்த உண்மைகளை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்போது எல்லோரும் கேட்கும் கேள்வி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ்தான் கேட்கிறார்கள் என்றால், நமது பாடத்திட்டத்தையும் அதற்கு இணையாக உயர்தரத்தில் வகுக்கப்படாமல் வைத்ததற்கு யார் காரணம்?. தமிழ்நாட்டை தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் வகையில்தான் பாடத்திட்டம் இருக்கிறது. அந்த மாணவர்களால் எழுத முடிகிறது என்றால், தமிழக மாணவர்களால் ஏன் எழுதமுடியாது?. அவர்களுக்கு எல்லாம் நுழைவுத்தேர்வு எழுதி பழக்கமிருக்கிறது. நமது மாணவர்களுக்கு பழக்க மில்லை என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. நுழைவுத்தேர்வு இல்லையென்றாலும், அதை எழுதி தேர்வு பெறுவதற்கான தகுதியை மாணவர்களுக்கு உருவாக்காமல் இருந்தது, தவறு என்பதை யாரும் மறுக்கமுடியாது. போனது போகட்டும், இனிமேலாவது உடனடியாக 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை, கற்பித்தலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இப்போது 11, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவேண்டும். அதை நடத்துவதற்கு ஏற்றவகையில், ஆசிரியர்களின் திறமையையும், உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப் படவேண்டும். ஆக, இனி மாணவர்களின் எதிர்காலம், தமிழக கல்வித்துறையிடம்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Subscribe to:
Posts (Atom)
-
Madras varsity panel against budget cuts Ragu.Raman@timesofindia.com 22.04.2025 Chennai : The state govt's move to cut the budget for t...
-
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொர...