'விவேகம்' படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம் என்ன?
‘விவேகம்’ படத்தில் அஜித்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதற்கான காரணங்களைத் தெரிவித்தார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விவேகம்'. வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். நாளை(ஆகஸ்ட் 24) வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்று திரையுலகில் விசாரித்த போது:
* 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணி மீண்டும் 'விவேகம்' படத்தில் இணைந்துள்ளது. அஜித்தை எப்படி காட்டினால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை இயக்குநர் சிவா தெரிவித்து வைத்துள்ளார்.
* எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அஜித் கலந்து கொள்ளவில்லை. விமான நிலையம், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு வரும் போது மட்டுமே அஜித்தை பார்க்கும் சூழல் உள்ளது. ஆகவே, நீங்கள் அஜித்தைக் காண வேண்டுமானால் அவருடைய படத்தை மட்டுமே பார்க்க முடியும்.
* 'விவேகம்' படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றின் காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் சமூகவலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'Never Ever Give Up', 'You will see my Rage' உள்ளிட்ட வசனங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
* அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தையுமே மொத்தமாக வெளியிடாமல், ஒவ்வொரு பாடலாக வெளியிட்டார்கள். அனைத்துமே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
* ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் உள்ளிட்ட அனைத்தையுமே கலைத்துவிட்ட அஜித், சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் நிலவும் சர்ச்சைக்குமே தனது சட்ட ஆலோசகரின் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
No comments:
Post a Comment