Saturday, August 26, 2017

ரூ.200 நோட்டுகள் 28–ந்தேதி முதல் வினியோகம் ஏ.டி.எம்–ல் கிடைப்பது தாமதம் ஆகும் ரிசர்வ் வங்கி



சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 26, 2017, 05:00 AM
சென்னை,

புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்ததுள்ளது என்றும் வருகிற 28–ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வங்கிகள் மூலம் தமிழகத்தில் வினியோகம் செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.2,000 நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று முதல் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.200 நோட்டு எப்போது புழக்கத்துக்கு வரும்? என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:–

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக வங்கிகளுக்கு பிரித்து கொடுக்க முடியவில்லை.

வருகிற 28–ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து கொடுக்க இருக்கிறோம். பொதுமக்களுக்கு அவரவருடைய வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது வழங்கப்படும். வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். தனியாக யாரும் சென்று வாங்க முடியாது.

மேலும், ஏ.டி.எம்.–ல் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும். ஏனென்றால் ஏ.டி.எம். எந்திரத்தில் இதற்கென சில மாற்றங்களை செய்யவேண்டும். அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு வங்கியின் ஏ.டி.எம்.களிலும் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைக்கும். தேவையை பொறுத்து மீண்டும் புதிய ரூ.200 நோட்டுகள் வரும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:38

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலு
வலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட், 22ல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்று, விடுப்பு வழங்கப்படாது எனவும், பணிக்கு வராதவர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.இருப்பினும், வேலைநிறுத்த போராட்டத்தில், தொடக்கக் கல்வித்துறையில் மட்டும், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும், 20ம் தேதிக்குள், சம்பள பட்டியல் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

இம்மாதத்தில் முன்கூட்டியே சம்பள பட்டியல் 

சமர்ப்பிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்து, கருவூல செலுத்து சீட்டு மூலம் செலுத்த, மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். - நமது நிருபர் -
தஞ்சைக்கு 'எய்ம்ஸ்' வேண்டும் பிரதமருக்கு குவியும் மனுக்கள்
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:29

தஞ்சாவூர், 'தஞ்சாவூர் அருகே, செங்கிப்பட்டியில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வேண்டும்' என, தஞ்சை மக்கள் சார்பில், பிரதமருக்கு ஆயிரக்கணக்கில் மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.தமிழகத்தில், 2,000 கோடி ரூபாய் செலவில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.அதற்கான இடங்களை தேர்வு செய்து அனுப்ப, தமிழக அரசை கேட்டுக் கொண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தஞ்சாவூர் - செங்கிப்பட்டி, ஈரோடு - பெருந்துறை, செங்கல்பட்டு, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய, ஐந்து இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.தஞ்சை மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பலரும், 'செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்' என, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்னர்.எய்ம்ஸ் மருத்துவமனை போராட்டக்குழு தலைவர் முருகேசன் கூறியதாவது:

செங்கிப்பட்டியில், எய்ம்ஸ் அமையும் பட்சத்தில், கடைக்கோடி பகுதியான நாகை வரை உள்ள மக்கள் பயன்பெறுவர். 

இது குறித்து, பிரதமருக்கு தொடர்ந்து, கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறோம். 

எங்கள் கோரிக்கை மனுக்கள், பிரதமருக்கு குவியலாக சென்றுள்ளது. செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமையும் என, நம்புகிறோம்.செங்கிப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலம், மாவட்ட, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், 24 மணி நேர தண்ணீர் வசதி, 30 கி.மீட்டரில் திருச்சி விமான நிலையம், பஸ் மற்றும் ரயில் வசதி உள்ளதால், இங்கேயே எய்ம்ஸ் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுக்களில் குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒட்டன்சத்திரத்தில் சுரைக்காய் கிலோ ரூ.4

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:24


ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரத்தில் சுரைக்காய் விலை சரிவடைந்து கிலோ ரூ.4 க்கு விற்றது.

ஒட்டன்சத்திரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்ட தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை, சுரைக்காய் உட்பட பல காய்கறிகள் இங்குள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 

கடந்த சில நாட்களாக சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ சுரைக்காயின் விலை ரூ.10 ஆக இருந்தது. கடந்த வாரம் ரூ.8க்கு விற்றது. இதன் விலை நேற்று மேலும் சரிவடைந்து கிலோ ரூ.4 க்கு விற்றது. விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதே நேரத்தில் வியாபாரிகள் அதிகளவு வாங்கி சென்றனர்.
தி.மு.க.,, மற்றும்,தினகரன்,ஆதரவு,எம்.எல்.ஏ.,க்கள்,அச்சம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை உரிமைக் குழு, வரும், 28ல் கூடும் என அறிவிக்கப்பட்டிருப்பது, தி.மு.க.,வுக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



தடை செய்யப்பட்ட, 'குட்கா' போதைப் பொருளை, சட்டசபைக்குள் எடுத்து வந்த விவகாரத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், பழனிசாமி அரசை கவிழ்க்கும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர், ஜூன், 14ல் துவங்கி, ஜூலை, 19ல் நிறைவடைந்தது. கடைசி நாளில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் உரையாற்றி னார். அப்போது, ஸ்டாலின் உட்பட, தி.மு.க., - 

எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், 'தடை செய்யப் பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள், தாராளமாக விற்பனை செய்யப் படுகின்றன' எனக்கூறி, அவற்றை சபையில் எடுத்து காண்பித்தனர்.இதற்கு, முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

'தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால், போலீசில் புகார் செய்து, நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விடுத்து, சபைக்கு கொண்டு வருவது, சபையை
களங்கப்படுத்தும் செயல்' என, கண்டித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் உள்ளிட்ட,

20 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கையை, சட்டசபை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப் புவதாக, சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இந்நிலையில், வரும், 28ல், உரிமைக் குழு கூடு கிறது. இது தொடர்பாக, உரிமைக் குழுத் தலை வரான, துணை சபாநாயகர் ஜெயராமன், உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கூட்டத்தில்,தடை செய்யபட்ட போதை பொருளை, சபைக்குள் கொண்டு வந்தது தொடர் பாக, ஸ்டாலின் உட்பட, 20 தி.மு.க., -எம்.எல். ஏ.,க்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, முடிவு எடுக்கப்படுகிறது.

பிப்., 18ல், முதல்வர் பழனிசாமி, சட்டசபையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் தனபாலை சூழ்ந்து, ரகளையில் ஈடுபட்டனர். சிலர், சபாநாயகரை பிடித்து இழுத்தனர்.

இது குறித்து, விசாரித்த உரிமைக் குழு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அம்பேத்குமார், மஸ்தான், ரவிச்சந்திரன், சுரேஷ்ராஜன், கார்த்திகேயன், முருகன், கு.க.செல்வம் ஆகியோரை, ஆறு மாதங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்ய பரிந்துரைத்தது.

இந்த தீர்மானம், ஜூன், 23ல், சட்டசபையில் விவாதத்திற்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தனபால், ஏழு எம்.எல்.ஏ.,க்களும்,மன்னிப்பு கோரி உள்ளதால், தண்டனையை ரத்து செய்வதாக அறிவித்தார்.

தற்போது, குட்கா விவகாரத்தில், உரிமைக் குழு விசாரணை நடத்த உள்ளது. இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், மன்னிக்கப்பட மாட்டார்கள்

என, தெரிகிறது. இது, தினகரன் அணியினரிட மும், தி.மு.க.,வினரிடமும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினகரன் அணியில் உள்ள, 19 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எனவே, 'உடனடியாக, சட்டசபையை கூட்டி, மெஜாரிட்டியை நிரூ பிக்க, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்' என கவர்னரிடம், தி.மு.க.,வும் கடிதம் கொடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில், உரிமைக் குழு கூடுவது, தினகரன் அணியினருக்கும், தி.மு.க.,விற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏ.,க் களை சஸ்பெண்ட் செய்ய, உரிமைக் குழு பரிந்துரை செய்தால், தினகரன் அணியினர், தி.மு.க.,வினருடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளும் முயற்சிக்கு, பின்னடைவை ஏற்படுத்தும்.

உரிமைக் குழு பரிந்துரை செய்தாலும், அதை தீர்மானம் கொண்டு வந்து, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். எனவே, விரைவில் சட்டசபை கூடலாம் என, எதிர்பார்க்க படுகிறது.

குழுவில் எத்தனை பேர்?

உரிமைக் குழுவில், 17 பேர் உள்ளனர். தலைவராக, துணை சபாநாயகர் ஜெயராமன் உள்ளார். உறுப்பினர்களாக, தி.மு.க., சார்பில், ஸ்டாலின் உட்பட ஆறு பேர்; காங்., உறுப்பினர் விஜயதாரணி; அ.தி.மு.க., சார்பில், செங்கோட் டையன் உட்பட ஒன்பது பேர் உள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழுமலை, ஜக்கை யன், தங்கதுரை ஆகியோர், தினகரன் அணியில் உள்ளனர். இவர்கள் கூட்டத்தில் பங்கேற்பரா; என்ன முடிவு எடுப்பர் என்பது, 28ல் தெரியும்.


ரேஷன் கடைகளில், இலவசமாக வழங்கப்படும் கோதுமைக்கு, மக்களிடம் மவுசு ஏற்பட்டுள்ள தால், முழு அளவில் சப்ளை செய்யுமாறு, ஊழியர்கள், அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட் டவை குறைந்த விலையிலும் விற்கப்படு கின்றன. ஒரு கிலோ கோதுமை விலை, 7.50 ரூபாய்.ஒரு ரேஷன் கார்டுதாரருக்கு, சென்னை
மற்றும் மாவட்ட தலைநகரங்களில், மாதம் தோறும், 10 கிலோ; மற்ற பகுதிகளில், ஐந்து கிலோ கோதுமை வழங்கப்பட்டது. தமிழகத் தில், 2016 நவ., மாதம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டது.

அரிசி பெறும் கார்டுதாரர்கள், தங்கள் விருப்பத்தில், அரிசிக்கு மாற்றாக, பாதி அளவுக்கு கோதுமையை இலவசமாக பெற்று கொள்ளலாம் என, உணவுத் துறை அறிவித்தது. அதன்படி, 25 கிலோ இலவச அரிசி பெறும் ஒரு கார்டுதாரர், விருப்பத்தின்படி, ஐந்து அல்லது, 10 கிலோ கோதுமையை வாங்கி கொள்ளலாம். தற்போது, ரேஷனில் கோதுமை வாங்குவோர் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது: கோதுமைக்கு விலை இருந்த போது, சிலர் மட்டுமே வாங்கினர். தற்போது,இலவசமாக தருவதால், அரிசி வாங்காதவர்கள் கூட, கோதுமை கேட்கின்றனர். ஆனால், 1,000 கார்டுகள் உள்ள, ஒரு கடைக்கு, 400 - 500கார்டுகளுக்குமட்டுமே கோதுமை அனுப்பப்படுகிறது.இதனால், அனைவருக்கும் கோதுமை சப்ளை செய்ய முடிய வில்லை. எனவே, கிடங்குகளில் இருந்து, முழு அளவில் கோதுமை சப்ளை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
குடிநீர் பாட்டிலில் குச்சி இழப்பீடு தர உத்தரவு

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:13


சென்னை;குடிநீர் பாட்டிலில் குச்சி கிடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், வாடிக்கையாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்த, ரவி தாக்கல் செய்த மனு:உணவு சாப்பிட, தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில், 20 ரூபாய் கொடுத்து, 'அக்குவா பாஸ்ட்' பெயரிலான குடிநீர் பாட்டில் வாங்கினேன்.சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டது. தண்ணீர் குடிக்க பாட்டிலை திறந்த போது, அதில், குச்சியோ, நாடா புழுவோ மிதப்பது போல இருந்தது.மன உளைச்சல்விக்கல் அதிகமாகி தவித்தபோது, அருகில் இருந்தவர் தண்ணீர் கொடுத்ததால், உயிர் ப்பினேன்.கடைக்காரரிடம் கேட்டதற்கு, 'விற்பதுடன் என் வேலை முடிந்தது; ஏதும், பிரச்னை என்றால் தயாரிப்பு நிறுவனத்தையே நாட வேண்டும்' என்றார். தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் செய்தும், கண்டு கொள்ளவில்லை; எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.மன உளைச்சலுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்; சேவை குறைபாட்டிற்கு, இரண்டு லட்சம் ரூபாய்; வழக்கு செலவாக, 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உத்தரவு
வழக்கு விசாரணையின் போது, 'குடிநீர் தயாரிப்பில் குறை ஏதும் இல்லை; பாட்டிலையும் எங்களிடம் காட்டவில்லை. பணம் பறிக்கும் நோக்கில், வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்த வழக்கில், நீதிபதி கலியமூர்த்தி, நீதித்துறை உறுப்பினர்கள் பிரமிளா, பாபுவரதராஜன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது. தண்ணீர் பாட்டிலை சோதனை செய்த, கிண்டி, 'கிங்க்' ஆய்வு மையம், 'தண்ணீர் பாட்டிலில், குச்சி போன்ற ஒரு பொருள் உள்ளது. தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல' என, தெரிவித்து உள்ளது.குடிநீர் பாட்டிலை விற்ற கடைக்காரரும், தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து, 15 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுடன், வழக்கு செலவாக, 5,000 ரூபாயும் சேர்த்து, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 10.07.2026