
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை உரிமைக் குழு, வரும், 28ல் கூடும் என அறிவிக்கப்பட்டிருப்பது, தி.மு.க.,வுக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தடை செய்யப்பட்ட, 'குட்கா' போதைப் பொருளை, சட்டசபைக்குள் எடுத்து வந்த விவகாரத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், பழனிசாமி அரசை கவிழ்க்கும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர், ஜூன், 14ல் துவங்கி, ஜூலை, 19ல் நிறைவடைந்தது. கடைசி நாளில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் உரையாற்றி னார். அப்போது, ஸ்டாலின் உட்பட, தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், 'தடை செய்யப் பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள், தாராளமாக விற்பனை செய்யப் படுகின்றன' எனக்கூறி, அவற்றை சபையில் எடுத்து காண்பித்தனர்.இதற்கு, முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
'தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால், போலீசில் புகார் செய்து, நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விடுத்து, சபைக்கு கொண்டு வருவது, சபையை
களங்கப்படுத்தும் செயல்' என, கண்டித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் உள்ளிட்ட,
20 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கையை, சட்டசபை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப் புவதாக, சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இந்நிலையில், வரும், 28ல், உரிமைக் குழு கூடு கிறது. இது தொடர்பாக, உரிமைக் குழுத் தலை வரான, துணை சபாநாயகர் ஜெயராமன், உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கூட்டத்தில்,தடை செய்யபட்ட போதை பொருளை, சபைக்குள் கொண்டு வந்தது தொடர் பாக, ஸ்டாலின் உட்பட, 20 தி.மு.க., -எம்.எல். ஏ.,க்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, முடிவு எடுக்கப்படுகிறது.
பிப்., 18ல், முதல்வர் பழனிசாமி, சட்டசபையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் தனபாலை சூழ்ந்து, ரகளையில் ஈடுபட்டனர். சிலர், சபாநாயகரை பிடித்து இழுத்தனர்.
இது குறித்து, விசாரித்த உரிமைக் குழு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அம்பேத்குமார், மஸ்தான், ரவிச்சந்திரன், சுரேஷ்ராஜன், கார்த்திகேயன், முருகன், கு.க.செல்வம் ஆகியோரை, ஆறு மாதங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்ய பரிந்துரைத்தது.
இந்த தீர்மானம், ஜூன், 23ல், சட்டசபையில் விவாதத்திற்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தனபால், ஏழு எம்.எல்.ஏ.,க்களும்,மன்னிப்பு கோரி உள்ளதால், தண்டனையை ரத்து செய்வதாக அறிவித்தார்.
தற்போது, குட்கா விவகாரத்தில், உரிமைக் குழு விசாரணை நடத்த உள்ளது. இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், மன்னிக்கப்பட மாட்டார்கள்
என, தெரிகிறது. இது, தினகரன் அணியினரிட மும், தி.மு.க.,வினரிடமும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினகரன் அணியில் உள்ள, 19 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எனவே, 'உடனடியாக, சட்டசபையை கூட்டி, மெஜாரிட்டியை நிரூ பிக்க, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்' என கவர்னரிடம், தி.மு.க.,வும் கடிதம் கொடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில், உரிமைக் குழு கூடுவது, தினகரன் அணியினருக்கும், தி.மு.க.,விற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏ.,க் களை சஸ்பெண்ட் செய்ய, உரிமைக் குழு பரிந்துரை செய்தால், தினகரன் அணியினர், தி.மு.க.,வினருடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளும் முயற்சிக்கு, பின்னடைவை ஏற்படுத்தும்.
உரிமைக் குழு பரிந்துரை செய்தாலும், அதை தீர்மானம் கொண்டு வந்து, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். எனவே, விரைவில் சட்டசபை கூடலாம் என, எதிர்பார்க்க படுகிறது.
குழுவில் எத்தனை பேர்?
உரிமைக் குழுவில், 17 பேர் உள்ளனர். தலைவராக, துணை சபாநாயகர் ஜெயராமன் உள்ளார். உறுப்பினர்களாக, தி.மு.க., சார்பில், ஸ்டாலின் உட்பட ஆறு பேர்; காங்., உறுப்பினர் விஜயதாரணி; அ.தி.மு.க., சார்பில், செங்கோட் டையன் உட்பட ஒன்பது பேர் உள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழுமலை, ஜக்கை யன், தங்கதுரை ஆகியோர், தினகரன் அணியில் உள்ளனர். இவர்கள் கூட்டத்தில் பங்கேற்பரா; என்ன முடிவு எடுப்பர் என்பது, 28ல் தெரியும்.
No comments:
Post a Comment