Sunday, August 27, 2017

மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் போலி ஓமியோபதி டாக்டர்கள் 5 பேர் கைது



தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சிலில் இறந்த ஓமியோபதி டாக்டர்கள் பெயரில் போலி சான்றிதழ் பெற்று சிலர் ஓமியோபதி டாக்டர்களாக பணியாற்றுவதாக

ஆகஸ்ட் 27, 2017, 05:15 AM
சென்னை,

முன்னாள் பதிவாளர் டாக்டர் ஞானசம்பந்தன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் ஹனிமன் ஆகியோர் உடந்தை என்றும், போலி ஓமியோபதி டாக்டர் பெயர்களையும் புகாரில் கூறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் மல்லிகா ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலி ஓமியோபதி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியது. அதன்படி தஞ்சையில் போலி ஓமியோபதி டாக்டர் பாலகிருஷ்ணன் கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ரவிக்குமார்(வயது 50), கடலூரை சேர்ந்த வேல்முருகன்(53), திருப்பூரை சேர்ந்த ஸ்ரீதரன்(37), தேனியை சேர்ந்த அனில்குமார்(51), மதுரையை சேர்ந்த குமரன்(68) ஆகிய 5 போலி ஓமியோபதி டாக்டர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் ஹனிமன் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் போலி ஓமியோபதி டாக்டர்களை கைது செய்யவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
1–ந்தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உத்தரவு



1–ந்தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 27, 2017, 04:30 AM
சென்னை,

சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 1–ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்லும்போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அண்மையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட உத்தரவில், ‘வாகன ஓட்டுனர்கள் அரசு ஆணையின்படி, 1–ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்டது, ‘ஹார்வே’ புயல்

t
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் புரட்டிப்போட்டது.
ஆகஸ்ட் 27, 2017, 03:45 AM

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் புரட்டிப்போட்டது. மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தை கடந்த சில தினங்களாக ‘ஹார்வே’ புயல் அச்சுறுத்தி வந்தது. இது 4-வது வகை புயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு டெக்சாஸ் மாகாணத்தில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.

மிகவும் வலிமையான ‘ஹார்வே’ புயல் 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவின் பிரதான பகுதியை நேற்று தாக்கியது. இந்த புயல் காரணமாக மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று வீசியது.

பெரிய பெரிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்தன. கார்பஸ் கிறிஸ்டி நகர் உள்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 2 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இந்தப் புயல் தாக்கிய 3 மணி நேரத்தில் அது 3-வது வகை புயலாக தரம் குறைக்கப்பட்டது.

காற்றும் மணிக்கு 201 கி.மீ. வேகமாக குறைந்தது. இருப்பினும் இது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளது. கட்டிடங்களுக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர நகரமான ராக்போர்ட்டில் மேயர் பேட்ரிக் ரியோஸ், அங்குள்ள மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேறி விடுமாறு கேட்டுக்கொண்டார். அங்கு ஒரு முதியோர் இல்லத்தில் மேற்கூரைகள் பறந்து விட்டன. அங்குள்ள மக்களை மீட்பதற்கு மீட்பு படையினர் செல்ல முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாகாண கவர்னர் அப்பாட் கூறும்போது, “டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்திக்கிறது. 1000 தேசிய பாதுகாவலர்கள், பேரழிவு நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

நேற்று காலை 5 மணி நிலவரப்படி தென்கிழக்கு டெக்சாஸ்சில் 10 அங்குலம் மழை பெய்துள்ளது.

பி.பி.சி. செய்தியாளர் ஒருவர், “ இந்தப் புயல் மிகவும் வலிமை வாய்ந்தது. ஆபத்தானது. பயங்கரமானது. மெக்சிகோ வளைகுடா பகுதியில் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. விமானப் போக்குவரத்தும் முடங்கியது” என்றார்.

ஹூஸ்டன் நகருக்கு உள்ளேயும், வெளியேயும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற வகையில் வெள்ளக்காடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

வானிலை அதிகாரிகள் கூறும்போது, இந்த புயலின் பாதை நிச்சயமற்றதாக உள்ளது என்றனர்.

டெக்சாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து பிரகடனம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த மாகாணத்துக்கு மத்திய நிதி உதவி கிடைக்கும்.

மேலும் அடுத்த சில நாட்களில் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஹார்வே புயல், டெக்சாஸ் மாகாணத்தில் தொடரவும், பலத்த மழையை தொடர்ந்து பெய்விக்கவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் 4-வது பெரிய எண்ணெய் உற்பத்தி நகரமான ஹூஸ்டன் நகரில் வரும் நாட்களில் 20 அங்குலம் மழை பெய்யும்.

கால்வெஸ்டன் நகரில் இருந்து 20 ஆயிரம் பயணிகளுடன் 3 கப்பல்கள் புறப்பட முடியாத நிலையில் உள்ளன.

மொத்தத்தில் ‘ஹார்வே’ புயல், டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்டுள்ளது.
காஸ்' சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி
பதிவு செய்த நாள்27ஆக
2017
05:11




ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம் குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.72 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு நிறுவனமும், தங்களின் ஏஜன்சிகள் வாயிலாக, சிலிண்டர் சப்ளை செய்கின்றன.

ஏஜன்சி ஊழியர்கள், வாடிக்கையாளரிடம், ஒரு சிலிண்டர் சப்ளை செய்ய, 30 - 50 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர். அதை தர மறுத்தால், 'வீட்டில் ஆட்கள் இல்லை' எனக்கூறி, சிலிண்டர் பதிவை ரத்து செய்கின்றனர்.சில ஏஜன்சிகள், உரிய ஆவணங்களை வழங்கினாலும், சிலிண்டர் இணைப்பு வழங்குவதில் தாமதம் செய்கின்றன. காஸ் கசிவு காரணமாக, புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வாடிக்கையாளர், விரும்பிய எண்ணெய் நிறுவனத்திற்கு மாறும் திட்டத்தை, மத்திய அரசு, 2014ல் துவக்கியது. ஆனாலும், இதுகுறித்து, தமிழக மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

விரும்பிய நிறுவனம் அல்லது ஏஜன்சிக்கு மாறும் சேவையை பெற, வாடிக்கையாளர்கள், தற்போது உள்ள தங்கள் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். பின், ஏற்கனவே உள்ள ஏஜன்சிக்கு சென்று, சிலிண்டரை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவர் செலுத்திய, 'டிபாசிட்' தொகை மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அவற்றை எடுத்து கொண்டு, விரும்பிய நிறுவனத்தின் ஏஜன்சியிடம் ஒப்படைத்து, புதிய இணைப்பை பெறலாம்.

இணையதளத்தில் பதிவு செய்ததுமே, அதற்கான வழிமுறைகள், வாடிக்கையாளரின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்படும்.ஏஜன்சி சேவையில் திருப்தி இல்லாதவர்கள், விரும்பிய நிறுவனத்திற்கு மாற முயற்சித்தால் தான், அதற்கான காரணத்தை கேட்டு, ஏஜன்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அத்திட்டம் குறித்து, வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Saturday, August 26, 2017

தமிழகத்தில் ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கு வர தாமதமாகும் எனத் தகவல்!

ர.பரத் ராஜ்

நேற்று முதல் நாட்டின் முக்கிய நகரங்களில் இருநூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் இந்த இருநூறு ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வந்துள்ளது.




பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இந்த 200 ரூபாய் நோட்டுகள் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் முன்பக்கதில் காந்தி உருவமும் பின்புறத்தில் சாஞ்சி ஸ்தூபி படமும் இடம்பெற்றுள்ளது. ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு கோடுகள் நீல நிறத்தில் உள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நேற்றே புழக்கத்துக்கு வந்த நிலையில், இன்னும் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரவில்லை. மேலும், வரும் 28-ம் தேதி முதல் சென்னையின் வங்கிகளில் இந்த 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் 'ஹார்வி புயல்' பேரழிவை ஏற்படுத்தும்... வானிலை மையம் கணிப்பு!

ஜெ.அன்பரசன்

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளதால் அது கரையை கடக்கும் போது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உருவாயுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலானது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ் கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும். மேலும் 97 செ.மீ வரை மழை பெய்யும். இந்த புயலால் 12 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் எனவும் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த 'ஹார்வி புயல்' பேரழிவை உருவாக்கும் என்பதால் பேரிடர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டன. கடந்த 2005 ஆம் ஆண்டு 'வில்மா' புயலால் ஃபுளோரிடா மாகாணம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. அதன்பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகியுள்ள இந்த 'ஹார்வி புயல்'மக்கள் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
நீட் அடிப்படையில் நடந்த மருத்துவ கலந்தாய்வின் முதல் நாள்! ரிப்போர்ட்

பிரேம் குமார் எஸ்.கே.

Posted Date : 03:03 (26/08/2017)

நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையிலே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நேற்று முதல், பொது பிரிவு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்தது.



முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வுகள் நடைபெற்ற நிலையில், நேற்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்ட கலந்தாய்வின் முதல் நாள், 1,209 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 1,077 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர். முதல் நாள் கலந்தாவில் 132 பேர் கலந்துகொள்ளவில்லை. கலந்து கொண்ட மாணவர்களில் 987 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர். அதே போன்று 22 மாணவர்கள் இ.எஸ்.ஐ கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர். சுயநிதி கல்லூரிகளில் 19 மாணவர்கள் சேர்ந்தனர்.

கலந்தாய்வின் முதல் நாளில் பல் மருத்துவத்தில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஒரே ஒரு இடம் தான் பல் மருத்துவத்தில் நிரப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களில், 1,029 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டது. 8 மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் கலந்தாய்வு நடைபெறுகிறது. நீட் அடிப்படையில் அவசர அவசரமாக நடத்தப்பட்டுவரும் கலந்தாய்வால் குளறுபடிகள் அதிகரித்துள்ளது என்று மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டினர்.

NEWS TODAY 10.07.2026