Sunday, August 27, 2017

மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் போலி ஓமியோபதி டாக்டர்கள் 5 பேர் கைது



தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சிலில் இறந்த ஓமியோபதி டாக்டர்கள் பெயரில் போலி சான்றிதழ் பெற்று சிலர் ஓமியோபதி டாக்டர்களாக பணியாற்றுவதாக

ஆகஸ்ட் 27, 2017, 05:15 AM
சென்னை,

முன்னாள் பதிவாளர் டாக்டர் ஞானசம்பந்தன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் ஹனிமன் ஆகியோர் உடந்தை என்றும், போலி ஓமியோபதி டாக்டர் பெயர்களையும் புகாரில் கூறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் மல்லிகா ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலி ஓமியோபதி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியது. அதன்படி தஞ்சையில் போலி ஓமியோபதி டாக்டர் பாலகிருஷ்ணன் கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ரவிக்குமார்(வயது 50), கடலூரை சேர்ந்த வேல்முருகன்(53), திருப்பூரை சேர்ந்த ஸ்ரீதரன்(37), தேனியை சேர்ந்த அனில்குமார்(51), மதுரையை சேர்ந்த குமரன்(68) ஆகிய 5 போலி ஓமியோபதி டாக்டர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் ஹனிமன் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் போலி ஓமியோபதி டாக்டர்களை கைது செய்யவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...