Monday, August 28, 2017

ரூ.70,000 கோடியை வசூலிக்க பொதுத்துறை வங்கிகள் அதிரடி
பதிவு செய்த நாள்28ஆக
2017
00:22

புதுடில்லி: வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கைகளை, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2016 - 17 நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத நபர்கள், பாக்கி வைத்துள்ள தொகை, 92 ஆயிரத்து, 376 கோடி ரூபாய். முந்தைய, 2015 - 16 நிதியாண்டில், இந்த தொகை, 76 ஆயிரத்து, 685 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த, 2017, மார்ச், 31 வரை, கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை, பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 21 வங்கிகள் மேற்கொண்டுள்ளன. இவற்றில், பாரத ஸ்டேட் வங்கி, 20 ஆயிரத்து, 943 கோடி ரூபாயை, 1,444 பேரிடம் வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த, 2016 - 17 நிதியாண்டில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 27 பொதுத்துறை வங்கிகள், 81 ஆயிரத்து, 683 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தன. பொதுத்துறை வங்கிகளின், வாராக்கடன், 2017, மார்ச் முடிவில், 6.41 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தபோது விமான கழிவறையில் பதுக்கி வைத்த ரூ.48 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

2017-08-28@ 00:11:24




சென்னை:சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது, கடத்தல் தங்கத்துடன் யாரும் வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து சர்வதேச விமானமாக சென்னை வந்த விமானம் நேற்று அதிகாலை, உள்நாட்டு முனையத்தில் இருந்து சென்னை, மும்பை விமானமாக செல்ல விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த விமானத்தில், மும்பை செல்ல இருந்த 149 பயணிகள் ஏற தொடங்கினர். உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்துக்குள் ஏறி விமானத்தின் இருக்கைகள், அதன் அடிபாகங்களில் சோதனையிட்டனர். விமானத்தில் இருந்த 4 கழிவறைகளில் உயர் வகுப்பு பயணிகளுக்கான கழிவறைக்குள் தண்ணீர் தொட்டியில் பிரவுன் கலர் பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றப்பட்டு ஒரு பார்சல் இருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் பார்சலை பிரித்தபோது 100 கிராம் எடை கொண்ட 16 தங்க கட்டிகள் என மொத்தம் 1.6 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.48 லட்சம் ஆகும். இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மும்பை செல்ல இருந்த 149 பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் சந்தேகப்படும் விதமாக இருந்த ஒரு பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விசாரணைக்கு, அவர்களது அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விமானத்தில் திடீர் சோதனை நடத்தியபோது, இதே விமானம் மும்பைக்கு செல்லும் என்ற தகவல் கடத்தல் ஆசாமிகளுக்கு எப்படி தெரியும்? இது மிகவும் ரகசியமாக, வைக்கப்பட்டிருக்கும். எனவே, சென்னை விமான நிலையத்தில் கடத்தல் ஆசாமிகளுக்கு தகவல் கொடுக்கும் கருப்பு ஆடுகள் யார்? என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சதி திட்டம் திமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தால் சட்டப்படி சந்திப்போம்: திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு

2017-08-28@ 00:08:21




திருவாரூர்: ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக சதி திட்டம் தீட்டி திமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தால் சட்டப்படி சந்திப்போம் என்று கொரடாச்சேரியில் நடந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனின் சகோதரரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான மறைந்த பூண்டி கலைச்செல்வன் மகள் கயல்விழிக்கும், விஜய் ஆனந்துக்கும் திருமணம், கொரடாச்சேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

இங்கு ேபசியவர்கள் என்னை நாளைய முதல்வர் என்று தெரிவித்தனர். இன்னும் ஒரு மாதத்தில் நான் முதல்வர் ஆவேன் என்றும் இங்கு பேசினர். இதை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு தலைப்பு செய்தியாக போடுவார்கள். அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

சென்னையில் தமிழக ஆளுநரை திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உள்ளனர். ஆளுநரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதியையும், நீதிமன்றத்தையும் நாங்கள் அணுகுவோம். கடந்த தேர்தலில் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக வென்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த அரசு மக்கள் பணிகள் செய்வதற்கு பதில், அடித்த கொள்ளையை காப்பாற்றவும், தொடர்ந்து கொள்ளை அடிக்கவும், வருமான வரித்துறையிடமிருந்து தங்களை காத்து கொள்ளவும் மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் மானங்கெட்ட அரசாக உள்ளது. இதனால் மாநில உரிமைகள் பல பறிபோய் விட்டன. ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்று கனவுகூட காண முடியாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரிடம் தினகரன் ஆதரவாளர்களான 19 எம்எல்ஏக்கள் தனித்தனியாக மனு கொடுத்திருக்கிறார்கள். மேலும் சில எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே இந்த குதிரை பேர ஆட்சி, மெஜாரிட்டியை இழந்துள்ளது.

குட்கா என்பது ஒரு போதைப்பொருள். தடை செய்யப்பட்ட ெபாருள். புற்றுநோயை உண்டாக்க கூடிய பொருள். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானிய கோரிக்கையில் குட்கா விற்கப்படுவது பற்றி ஆதாரத்துடன் காட்டினேன். சில தி.மு.க. எம்எல்ஏக்களும் அதை காட்டினர். திருட்டுத்தனமாக இது விற்கப்படுவதால் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் குட்கா விற்பனையை தடுக்க முற்பட்டேன். இதில் தவறு இருக்கும்பட்சத்தில் 4, 5 நாட்களுக்குள் உரிமை மீறல் குழுவை கூட்டியிருந்தால் அதை நான் வரவேற்று இருப்பேன். கடந்த ஜூலை 19ம் தேதி நடந்த சம்பவத்துக்கு 40 நாள் கழித்து உரிமை மீறல் குழுவை கூட்டி பேசவுள்ளனர். அந்த குழுவில் நானும் ஒரு உறுப்பினர். முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், மதிவாணன் ஆகியோரும் உறுப்பினர்கள். அந்த 2 பேருக்கும், நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பி உள்ளனர்.

எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. தி.மு.க. எம்எல்ஏக்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் சதி திட்டத்தில் உரிமை மீறல் குழுவை கூட்டி உள்ளனர். திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர் பேசினார்.இதைதொடர்ந்து காட்டூரில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு ெசன்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மக்கள் குறைகேட்பு

திருவாரூரில் நேற்று காலை மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். காலை 6 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதிகளை 2 முறை (6 கி.மீ. தூரம்) சுற்றி வந்தார். பின்னர் வடக்குவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தார். இதைதொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மனைவிக்கு ரூ.4 லட்சம் வழங்க பணக்கார கணவனுக்கு உத்தரவு
பதிவு செய்த நாள்28ஆக
2017
00:21


புதுடில்லி : 'பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு செலவாக, மாதத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பணக்கார கணவனுக்கு, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை விட்டு பிரிந்து சென்று, குடும்பத் தொழிலை கவனித்து வரும் மிகப் பெரிய பணக்காரரான கணவன், தனக்கு மாத இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஒரு பெண், வழக்கு தொடர்ந்தார். கீழ் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 'பணக்கார கணவனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, மாத பராமரிப்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்' என, மீண்டும் விசாரணை நீதிமன்றத்துக்கே, இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. 

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த, டில்லி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

இந்த வழக்கில் தொடர்புடைய கணவனின் குடும்பம், மிகப் பெரிய பணக்கார குடும்பம்; அந்த குடும்பத்தினர், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது தொழில் மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதனால், பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது பராமரிப்பில் உள்ள மைனர் மகளின் மாத பராமரிப்புக்கு, கணவர், ஒவ்வொரு மாதமும், நான்கு லட்சம் ரூபாயை பராமரிப்பு செலவாக அளிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும், 15 சதவீதம் உயர்வையும் அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
செம்மலை அதிருப்தி : முதல்வரை புறக்கணித்தார்
பதிவு செய்த நாள்28ஆக
2017
01:20

சேலம்: சென்னையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின், தன் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது, பழனிசாமிக்கு எதிராகவும், பன்னீர் செல்வத்துக்கு ஆதர வாகவும், செம்மலை செயல்பட்டு வந்தார். நேற்று சேலம் வந்த முதல்வர் பழனிசாமியை, உள்ளூரில் இருந்த போதும், செம்மலை சந்திக்கவில்லை.

இது குறித்து செம்மலை ஆதரவாளர்கள் கூறியதாவது:
இரு அணிகளின் இணைப்பின் போது, முதல்வர் பழனிசாமியின் தலையீட்டால், செம் மலைக்கு முக்கியத் துவம் அளிக்கப்படவில்லை.
தொகுதி நலப்பணிகளை கூட, செம்மலையால் மேற்கொள்ள முடியவில்லை. எதிர்கால நலன் கருதி, முக்கிய முடிவு மேற்கொள்ளவே, செம்மலை அமைதி காக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
செம்மலை கூறியதாவது:
எப்போதும் தலைமைக்கு கட்டுப்படுபவன். சென்னையில் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, வரும், 30ல் சேலம் திரும்புவேன். அப்போது, என் நிலை குறித்து தெளிவுபடுத்துவேன்.
இவ்வாறு செம்மலை கூறினார்.
தமிழகத்தில் பா.ஜ.க.,ஆட்சி:நயினார் நாகேந்திரன் பேச்சு

பதிவு செய்த நாள்27ஆக
2017
23:41

திருநெல்வேலி:அ.தி.மு.க.வில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் பா.ஜ.,வில் இணைந்தேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் நேற்றுமுன்தினம் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று அவர் நெல்லை மாவட்ட பா.ஜ.,அலுவலகத்திற்கு வந்தார்.அவருக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், மாநில விவசாய அணி செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். 

நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கட்சியில் எம்.ஜி.ஆர்.,காலத்தில் இருந்தே மாணவர் அணியில் பணியாற்றியுள்ளனே். ஜெ.,எனக்கு நான்கு முறை சட்டசபையில் போட்டியிடும் வாய்ப்பளித்தார். ஒரு முறை அமைச்சராக்கினார். ஜெ.,மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டது. அணிகளாக பிரிந்து தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. இ.பி.எஸ்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த ஓ.பி.எஸ்.,சை மீண்டும் துணை முதல்வராக்கியுள்ளனர். எனவே ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற முழக்கத்தின்படி மத்தியில் மோடி அரசைப்போல தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளேன். 

நான் இணையும்போது ஆதரவாளர்கள் என யாரையும் அழைத்துச்செல்லவில்லை. எனக்கு அனைத்து சமூகங்களிலும் நண்பர்கள் உள்ளனர். எனவே நான் பா.ஜ.,விலும் மற்ற மதத்தினரை ஆதரித்து செயல்படுவேன். தமிழகத்தில் அ.தி.மு.க.பலவீனமடைந்துவிட்டதா என கேட்கிறீர்கள்.அ.தி.மு.க.,பலவீனம் அடைந்துவிட்டது என கூறமாட்டேன். ஆனால் பாரதிய ஜனதா பலமடைந்துவருகிறது என்பேன் என்றார்.

எம்.பி.பி.எஸ்., படிப்பு: அரசு ஒதுக்கீடு, 'ஹவுஸ்புல்'


பதிவு செய்த நாள்28ஆக
2017
00:03

சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர்த்து, அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,534 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அதேபோல, பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198 பி.டி.எஸ்., இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்களும் உள்ளன.

இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சென்னை, பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24ம் தேதி துவங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவினருக்காக கவுன்சிலிங்கில், 14 இடங்கள் நிரம்பின. இரண்டாம் நாளில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கியது. 

அன்று, 1,029; மூன்றாம் நாளில், 1,260 இடங்கள் நிரம்பின. மூன்று நாட்களில், அரசு, சுய நிதி கல்லுாரிகளில் உள்ள, 80 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.

இந்நிலையில், நேற்றைய கவுன்சிலிங்கிற்கு, 1,596 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர, அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும், பிற்பகலுக்குள் நிரம்பின. 

எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்., படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

NEWS TODAY 11.07.2026