Monday, August 28, 2017

ரூ.70,000 கோடியை வசூலிக்க பொதுத்துறை வங்கிகள் அதிரடி
பதிவு செய்த நாள்28ஆக
2017
00:22

புதுடில்லி: வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கைகளை, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2016 - 17 நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத நபர்கள், பாக்கி வைத்துள்ள தொகை, 92 ஆயிரத்து, 376 கோடி ரூபாய். முந்தைய, 2015 - 16 நிதியாண்டில், இந்த தொகை, 76 ஆயிரத்து, 685 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த, 2017, மார்ச், 31 வரை, கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை, பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 21 வங்கிகள் மேற்கொண்டுள்ளன. இவற்றில், பாரத ஸ்டேட் வங்கி, 20 ஆயிரத்து, 943 கோடி ரூபாயை, 1,444 பேரிடம் வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த, 2016 - 17 நிதியாண்டில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 27 பொதுத்துறை வங்கிகள், 81 ஆயிரத்து, 683 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தன. பொதுத்துறை வங்கிகளின், வாராக்கடன், 2017, மார்ச் முடிவில், 6.41 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...