Saturday, September 9, 2017

மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்


தாம்பரம், பெருங்களத்தூரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

செப்டம்பர் 09, 2017, 04:00 AM
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தாம்பரம், பெருங்களத்தூரில் பாதசாரிகள் செல்வதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 4.32, 5.20, 5.38, 6.07, 6.40, இரவு 7.32, 7.56, 8.52, 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.13 மணிக்கு புறப்படும் திருமால்பூர் விரைவு வண்டி தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

* குருவாயூரில் இருந்து நேற்று புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, அரக்கோணம், சென்னை கடற்கரை வழியாக இன்று இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

பகுதியாக ரத்து

* செங்கல்பட்டில் இருந்து இன்று மாலை 6.40, இரவு 7.00, 7.25, 7.45, 8.10, 8.45, 9.10, 10.15, 11.10 மணிக்கும், திருமால்பூரில் இருந்து மாலை 5.10 மணிக்கும், காஞ்சீபுரத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பயணிகள் சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து இன்று இரவு 7.05, 8.10, 9.10, 10.15, 11.10 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும். அதேபோல் மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 7.40, 8.45, 9.50, 11.00, 11.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும்.

* தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

* புதுச்சேரியில் இருந்து இன்று பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில், புதுச்சேரி-செங்கல்பட்டு இடையே மட்டும் இயக்கப்படும்.

சிறப்பு மின்சார ரெயில்

* சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.55, 4.40, 5.00, 5.20, 5.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டில் இருந்து நாளை அதிகாலை 3.55, 4.30, 4.45, 5.10, 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பயணிகள் சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து நாளை அதிகாலை 3.55, 4.30, 4.45, 5.10, 5.55 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும். மறுமார்க்கமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து அதிகாலை 4.30, 5.06, 5.30, காலை 6.00, 6.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லும்.
ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா : ஏர்டெல் அதிரடி சலுகை

பதிவு செய்த நாள்08செப்
2017
10:25


புதுடில்லி : ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்தும், ஜியோ மற்றும் ஏர்டெல் இடையேயான போட்டி குறைந்தபாடில்லை. ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலும், பிஎஸ்என்எல்., நிறுவனமும் பல அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இதன் அடுத்த கட்ட ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக மிக குறைந்த கட்டணத்திலான 4 புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த கட்டணமாக ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ளது. 7 நாட்கள் வாலிடிட்டி கொண்ட இந்த திட்டம் 4ஜி சிம் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. 7 நாட்களுக்கு பிறகு மீதமுள்ள டேட்டா நீட்டிக்கப்படாது.

அதே சமயம் புதிதாக ஏர்டெல் சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 4ஜிபி டேட்டா சலுகை 54 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த திட்டமாக ரூ.8 க்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது. இதன் வாலிடிட்டி 56 நாட்களாகும்.

மேலும் ரூ.15 க்கு நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது. இதன் வாலிடிட்டி 27 நாட்கள். ரூ.40 க்கு அன்லிமிடெட் வாலிடிட்டியில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்த சிங்கப்பூர் பெண்ணுக்கு விருது
பதிவு செய்த நாள்08செப்
2017
21:23




சிங்கப்பூர்: சிங்கப்பூரில், அனாதைக்குழந்தைகள் வளர்ப்பில், 32 ஆண்டுகள், சேவையாற்றிய பெண்ணுக்கு, 'சிறந்த சமூக சேவகர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசியாவிலுள்ள தீவு நாடான, சிங்கப்பூரைச் சேர்ந்தவர், இந்திராணி எலிசபெத் நாடிசன், 77. சீன நாட்டைச் சேர்ந்தவரான இவர், சிங்கப்பூரில், இந்திய குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அம்புரோஸ் அந்தோணி என்பவரை, இந்திராணி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து மகன், ஒரு மகள் உள்ளனர்.

குழந்தை பிரியரான இந்திராணி, பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். இதற்காக, தனியாக அனாதை இல்லம் தொடங்கவில்லை.

தன் கணவர், ஆறு குழந்தைகளுடன் வசித்து வந்த நான்கு அறைகள் அடங்கிய சிறிய வீட்டிலேயே, மற்ற குழந்தைகளையும், இந்திராணி வளர்த்தார்.
குழந்தைகள், 2 வயதானதும், அவற்றை தத்து கொடுத்து விடுவார். கடந்த, 1976ல் தொடங்கி, 2008 வரையில், 43 அனாதைக் குழந்தைகளை இந்திராணி வளர்த்து ஆளாக்கினார்.

வளர்ப்புத் தாயாக, 32 ஆண்டுகள் இந்திராணி ஆற்றிய மனிதாபிமான சேவையை, சிங்கப்பூர் பிரதமர், லீ சுன் லுாங், தன் முகநுால் பதிவில் பாராட்டி, சமீபத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், இந்திராணிக்கு, சிங்கப்பூரின் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. 

இந்திய வம்சாவளியினருக்காக நடத்தப்படும், 'தப்லா' பத்திரிகை, இந்த விருதை வழங்கியது. விருதுடன் வழங்கப்பட்ட, 4.8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை, இரண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக, இந்திராணி வழங்கினார்.

இந்திராணி கூறியதாவது:

ஒவ்வொரு குழந்தையும், என்னை விட்டுச் செல்லும்போதும் வேதனைப்படுவேன். குழந்தைகளை வளர்க்க பொறுமையும், அன்பும் தேவை; என் கணவர், ஆறு குழந்தைகள் எனக்கு உதவியாக இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

உடல் நிலை மற்றும் முதுமை காரணமாக, குழந்தைகள் வளர்ப்பதை, 2008ல் இந்திராணி நிறுத்தி விட்டார்.
செப். 11 ல் பள்ளிக்கு விடுமுறை
பதிவு செய்த நாள்08செப்
2017
22:48

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அன்று நடக்கவிருந்த காலாண்டு தேர்வு செப்., 25க்கு மாற்றப்பட்டது.
'லைசென்ஸ்' விண்ணப்பத்துக்கு இணையதளத்தில் மாற்றம்
பதிவு செய்த நாள்08செப்
2017
22:43

அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால், புகார் அளிக்கும், போலீஸ் இணையதள பகுதியில், மக்கள் எளிதாக அறியும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், அசல் ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்தால், போலீசில் புகார் அளித்து, தடையின்மை சான்று பெற வேண்டிய நிலை இருந்தது. அதேபோல், விபத்து ஆவணங்கள் பெறுவதிலும் சிக்கல் நீடித்தது. இதை, மாநில குற்ற ஆவண காப்பகம், தற்போது எளிமைப்படுத்தி உள்ளது. அதற்காக, போலீஸ் இணையதளத்தில், 'ஆன் -லைன் சர்வீசஸ்' என்ற பகுதியில், பொதுமக்கள் புகார் அளிக்க, 'லாஸ்ட் டாக்குமென்ட் ரிப்போர்ட்' மற்றும் விபத்து ஆவணங்கள் பெற, 'டவுன்லோடு ரோடு ஆக்சிடென்ட்' என்ற பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள், தற்போது முதல் வரிசைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், 'நியூ' என, சிறப்பு நிறத்திலும், அந்த பகுதி கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

'நீட்' போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை

பதிவு செய்த நாள்
08செப்
2017
21:55

'நீட்' தேர்வு போராட்டத்தை கட்டுப்படுத்த, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்டு, சில அமைப்புகள், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில், ஆங்காங்கே போராட்டம் நடக்கிறது. சென்னையில் மாணவர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், புதுக் கல்லுாரி மற்றும் அம்பேத்கர் சட்டக் கல்லுாரிக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், தேவைப்படும் இடங்களில் விடுமுறை அறிவிக்கலாம் என, உயர்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து, மண்டல கல்லுாரி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, கல்லுாரிமுதல்வர்களே முடிவு எடுக்கலாம் என, அறிவுறுத் தப்பட்டு உள்ளது. பள்ளிகளில், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் தடுக்க, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ல்லுாரி ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாணவர்களின் போராட்டமும் சேர்ந்ததால், கல்வித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது. வரும் திங்களன்று, மீண்டும், பள்ளி, கல்லுாரி கள் இயங்கும் சூழலை ஏற்படுத்த, தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
பல் மருத்துவம் படிக்க ஆசை : தடுக்கிறது ஏழ்மை நிலை

பதிவு செய்த நாள்
செப் 08,2017 21:42




சென்னை: 'நீட்' தேர்வின் பலனாக பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், ஏழ்மையால், சென்னை மாணவி கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், சுரேஷ் மகள் ரீனா. பிளஸ் 2 தேர்வில், 983 மதிப்பெண் பெற்றார். 'நீட்' தேர்வில் பங்கேற்ற இவர், தேர்ச்சி பெற்று, 121வது இடம் பெற்றார்.
அரசு நடத்திய கவுன்சிலிங்கில், திருவள்ளூரில் உள்ள, பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லுாரியில், பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

கல்லுாரி கட்டணமாக, 4.25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். குடும்ப ஏழ்மையால், கட்டணம் செலுத்த வழியின்றி, மாணவி திணறி வருகிறார். இதனால், அவரின் மருத்துவ கனவு, கனவாக முடிந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாணவி ரீனா கூறியதாவது:

என் தந்தை, அரசு அலுவலக உதவியாளராக உள்ளார். அவர் வாங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்தவோ, மூன்று குழந்தைகளை படிக்க வைக்கவோ போதுமானதாக இல்லை. பிளஸ் 2வில், குறைந்த மதிப்பெண் பெற்றாலும், 'நீட்' தேர்வால், பி.டி.எஸ்., படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றாலே, அதை, கட்டுவது பெரிய விஷயம். இப்போது, 4.25 லட்சம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்.

ஏழ்மையால், கல்லுாரியில் சேர முடிய வில்லை. சேவை மனம் உள்ள யாராவது, உதவிக்கரம் நீட்ட முன் வந்தால், நான் மருத்துவத் துறையில் சாதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், 98841 14742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

NEWS TODAY 15.07.2026