Saturday, September 9, 2017

Posted Date : 18:23 (29/08/2017)

'இங்கே டாக்டர் சர்ட்டிஃபிகேட் விற்கப்படும்.!’ - கூவி விற்ற கும்பல்

சே.த.இளங்கோவன்

VIKATAN

பசுமை நிறைந்த அந்தக் கிராமத்துக்குள் நுழைகிறது நகர சகதியெல்லாம் கடந்து வந்த அந்தக் கார். தூரத்தில் தென்பட்ட ஒரு பாரம்பர்ய மருத்துவக் குடிலை நோக்கி நகர்ந்து சென்று நிற்கிறது. காருக்குள்ளிருந்து இறங்கும் இருவர், அந்தக் குடிலின் உள்ளே நுழைகிறார்கள். அங்கே, இயற்கை மருந்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கும் அப்பாவுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் மகனை தனியே அழைக்கின்றனர். "அப்பாகூட இருந்ததால தொழிலைக் கத்துகிட்ட, நல்லது. எவ்வளவு நாள்தான் இப்படி உதவி செஞ்சுக்கிட்டே இருப்ப. நீயும் டாக்டர் ஆக வேண்டாமா ?" என அவர்கள் கேட்க, "டாக்டர் ஆகணும்னா படிச்சு சர்டிபிகேட் வாங்கணுமே" என்கிறார் மகன். 'தூண்டிலில் சிக்கியது மீன்' என்ற துள்ளலோடு, ''கவலையை விடு. அதுக்குத்தானே நாங்க இருக்கோம். கொஞ்சம் செலவாகும். அவ்ளோதான். சர்டிபிகேட் நாங்க ரெடி பண்ணித் தரோம். பணத்தை நீ ரெடி பண்ணு தம்பி" என்றபடியே காருக்கு திரும்புகின்றனர் இருவரும். ஓரிரு நாளில் ஒரு குறிப்பிட்டத் தொகை இருவருக்கும் கைமாற, தற்போது அந்தக் கிராமத்தின் மருத்துவக் குடிலில் மாட்டப்பட்ட அடையாள பெயர்ப் பலகையில், மகனின் பெயரோடு, 'ஹோமியோபதி டாக்டர்' என்ற பட்டமும் இணைந்துள்ளது.



இப்படியாக தமிழ்நாடு முழுக்க, கிராமம் கிராமமாக காரில் பயணித்து, ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ்களை விற்று வந்த கும்பலைச் சுற்றி வளைத்துள்ளது சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் அமைத்த காக்கி டீம். போலி ஹோமியோ மருத்துவராக வலம் வந்த தஞ்சாவூர் பாலகிருஷ்ணன், கோவை ரவிக்குமார், கடலூர் வேல்முருகன், திருப்பூர் ஸ்ரீதரன், தேனி அனில்குமார், மதுரை குமரன் என 6 பேரை முதற்கட்டமாக கைதுசெய்துள்ளது காக்கி டீம். விசாரணையின்போது இவர்கள் கொட்டிய தகவல்கள் ஒவ்வொன்றும் பகீர் ரகம்...

"தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் என்பது 'homeopathy system of medicine and practioner of homeopathy act 1971' என்ற சட்டத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு பதிவு செய்யப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஹோமியோ மருத்துவர்களாக மருத்துவம் பார்க்க முடியும். இதில் பதிவுசெய்து முறையாக மருத்துவத் தொழில் செய்துவந்த மருத்துவர்களில், இறந்துபோனவர்களின் பதிவு எண்களை வேறொரு பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளது தரகு கும்பல். இந்த மோசடிக் கும்பலிடம் பணம் கொடுத்துப் பெற்ற இந்தப் பதிவு எண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் என்ற பெயரில், மக்களின் உயிரோடு விளையாடியுள்ளனர் பலர். தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளர் ராஜசேகரன் கொடுத்த புகாருக்குப் பிறகே இவர்களை வளைத்துப் பிடித்தோம். சில முக்கியமான தரகு கும்பலைத் தேடி வருகிறோம்" என்றது காக்கி விசாரணை டீம்.

ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ் பின்னுள்ள சட்ட விரோதங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் முன்னாள் பதிவாளர் டாக்டர் ஞானசம்பந்தமிடம் பேசினோம்.

"ஹோமியோபதி மருத்துவர்களுக்கான பதிவு, 3 க்ளாஸாக பிரிக்கப்பட்டுள்ளன. நேரடியாக கல்லூரி முடித்துவிட்டு பதிவு செய்பவர்கள் 'ஏ' க்ளாஸ். 10 ஆண்டுகள் பயிற்சிசெய்து, கலெக்டரிடம் ஒப்புதல் பெறுபவர்கள் 'பி ' க்ளாஸ். இதுதவிர, 4 ஆண்டுகள் ஹோமியோ மருத்துவ அனுபவம் உள்ளவர்கள் அதன்பின் இதற்கென தனியாக ஒரு கோர்ஸ் படித்துமுடிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்காகவே நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டரிடம் ஒப்புதல் பெறவேண்டும். இவர்கள் 'சி' க்ளாஸ் பிரிவில் 
வருவார்கள். இவ்வாறு பதிவு செய்தவர்களில் 'பி' மற்றும் 'சி' க்ளாஸில் மட்டும் 15,176 மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 4-5-1976-க்குப் பிறகு இப்பதிவு தொடரவில்லை. இவர்கள் உயிருடன் உள்ளார்களா? மருத்துவம் பார்க்கிறார்களா? என்று சரிபார்ப்பது கவுன்சில் மற்றும் கலெக்டரின் பணியாகும். தொடக்கத்தில் முறையாக நடந்த இவைகள் காலப்போக்கில் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது. அதனால்தான் தற்போது இத்துறை முறைகேடுகளின் மொத்த உருவமாக மாறிவிட்டது. ஏற்கெனவே முறைப்படி பதிவுசெய்திருந்த ஹோமியோபதி மருத்துவர்கள் பலர் காலமாகிவிட்டனர். அவர்களைப் பட்டியல் எடுத்து, ஓரளவுக்குப் பெயர் இணைந்து போகிறவர்களுக்கு போலிச் சான்றிதழ்களை விற்றுள்ளனர்.

உதாரணமாக கே.சி ஸ்ரீதரன் என்பவரின் பதிவு எண்ணை, எஸ்.ஸ்ரீதரன் என்பவருக்கு மாற்றி விற்றுள்ளனர். இப்படி மாற்றிக் கொடுப்பதற்கு மட்டும் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை விலை பேசியுள்ளனர். எங்கள் கண்டுபிடிப்பில், இப்படிப் பதிவு எண் மாற்றிக்கொடுக்கப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 40 ஆகும். இந்த சட்டவிரோத செயல்களில் மேலிடம் வரை தொடர்பு இருக்கிறது. முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், தலைவர் ஹானிமன், உறுப்பினர்கள் ரங்கசாமி, பரமேஸ்வரன் நம்பியார் ஆகியோருக்கு இந்தத் தவறில் தொடர்பிருக்கிறது. அவர்களை விசாரிக்க வேண்டும்." என்றார் ஆக்ரோஷமாக.

இவர் கொடுத்த புகாரின் பேரில், போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாம் ஹானிமன், சவுந்தரராஜன் தரப்பில் பேச முயற்சித்தோம். இயலவில்லை. (எப்போது பேசினாலும் அவர்கள் கருத்தைப் பதிவு செய்ய தயாராக உள்ளோம்.) அதேநேரம் அவர்களுக்கு ஆதரவாக, ஞானசம்பந்தம் மீது குற்றம்சாட்டி துண்டறிக்கை ஒன்று ஹோமியோபதி மருத்துவர்களிடம் சுற்றுகிறது. அதில், "ஹோமியோபதியை வளர்ப்பதாகக் கூறி, ஊடகத்தில், கலர் கலராய் பொய்கள் சொல்லி தனக்கு சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார் ஞானசம்பந்தம். 'பி ' க்ளாஸ் பதிவுபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களில் குறிப்பிட்ட 40 பேர் மட்டுமே போலிகள் என்பதை அடையாளம் காட்ட முடிகிறது என்றால், இதில் களவுத்தனம் செய்தவர் யார் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள். உண்மையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர் ஞானசம்பந்தம்தான். ஆனால், தற்போது புகாருக்கு உள்ளானவர்கள் மற்றும் ஹானிமன் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகள் எதிலும் சம்பந்தமில்லாதவர்கள்" என்கிற ரீதியில் செல்கிறது துண்டறிக்கைத் தகவல்கள்.

"விரைவில் தேர்தல் வரப்போகிறது. அதில் வெற்றிபெற வாக்குகள் அவசியம். தமக்கான வாக்குகளை உறுதிப்படுத்துவதற்கு போலியான பதிவு எண் பெற்றவர்களை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த முறைகேட்டை கவுன்சில்தான் தடுக்க வேண்டும். ஒரு தேர்தலுக்காக இப்படியெல்லாம் முறைகேடுகளில் ஈடுபடுவார்களா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஹோமியோபதி மருத்துவத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியைக் கையாளும் அதிகாரம் என்பது தேர்தலில் வெற்றிபெறுபவருக்கே கிடைக்கிறது. அதனால்தான் இப்படியொரு தில்லுமுல்லு செய்கிறார்கள்" என பின்னணியைப் போட்டுடைக்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத சில ஹோமியோபதி மருத்துவர்கள்!

மருத்துவத்தின் குரல் வளையை நெரிப்பது மருத்துவ அறமாகுமா?
சிறை வாழ்க்கையை சிரிக்க சிரிக்க விவரித்த கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவுக் கட்டுரை #KalaivanarNSKrishnan

எஸ்.கிருபாகரன்




திரையுலகில் வள்ளல்தன்மையுடன் திகழ்ந்த இருவர் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான்!” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே. அவரது நினைவு நாள் இன்று. இருவரது திரையுலக அறிமுகமும் 1936 ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்தான் நிகழ்ந்தது.

திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். தந்தை சுடலைமுத்துப்பிள்ளை, தாயார் இசக்கிஅம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத் தொடங்கினார். சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.

முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கேனைத்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது.நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது. நகைச்சுவை நடிகனாக மட்டுமே அவர் சினிமாவைக் கடந்துசென்றுவிடவில்ல. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். நடிப்பு பாடல் புதிய சிந்தனை பகுத்தறிவு என சினிமாவில் அவர் இயங்கினார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். 40 களில் கொடிகட்டிப்பறந்த தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இவர்களுடன் நகைச்சுவையில் கொடிகட்டிப்பறந்தபோதும் தனக்கென ஒரு நாடகக்குழுவையும் நடத்திவந்தார் என்.எஸ்.கே.

நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் தனது நாடகக்குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர். நடிகர்கள் நிறைவாக வாழ்ந்து கலைக்காகவும் கலைஞர்களுக்காவும் பாடுபடவேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தவர், தானே அதில் முதல்கலைஞனாகச் செயல்பட்டார்.

'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு. தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன.

தோல்வியடையும் எனக் கருதப்பட்ட திரைப்படங்களைக்கூடத் தன் நகைச்சுவைக்காட்சிகளால் வெற்றி பெற வைத்தவர். அந்நாளில் பிரபல நிறுவனங்களின் படங்களில் அவரது குழுவினரின் தனிக்கதைகள் இடம்பெறும். தோல்வியடையும் படங்களைப் போட்டு அதில் கதைக்குத் தக்கபடி தனது நகைச்சுவையை இணைத்து வெளியிடச் செய்வார். படம் பெரும் வெற்றிபெறும். வெறும் நடிகராக மட்டுமன்றி இயக்கம், எடிட்டிங், திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது என சினிமாவின் சகல துறையிலும் தேர்ந்தவர் கலைவாணர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவையும் இதற்குச் சான்று.

பழம்பெருமை பேசி தமிழர்கள் வீணாகிவிடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.

கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடைய கலைவாணர், தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார். ஒரு பெரிய இயக்கம், பல தலைவர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய சமூகப்பணியைத் தனி ஒருவனாகத் திரைப்படங்களில் நிகழ்த்திக்காட்டினார் அவர். சுயமரியாதைத் தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தவர்கள் என அத்தனை தலைவர்களாலும் கொண்டாடப்பட்டது ஒன்றே அவரது நேர்மையான சமூகத்தொண்டுக்கு அடையாளம். 'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

திரையுலகை உலுக்கிய வழக்குகளில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு முக்கியமானது. இந்த வழக்கில் அன்றைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர் பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே ஆகியோர் மீது வழக்கு பதிவானது. வழக்கின் ஆரம்பத்திலேயே ஸ்ரீராமுலு நாயுடு விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இந்தவழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே இருவரும் கைதாகினர். வழக்கில் சென்னை செசன்ஸ் கோர்ட்டு இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது. 1945 ம் ஆண்டு மே 3ந்தேதி இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட இந்த வழக்கின் மேற்முறையீட்டில் தண்டனை உறுதியானது. இதையடுத்து சென்னை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.



லண்டன்பிரிவியு கவுன்சிலில் இந்த வழக்கில் மீண்டும் மேற்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டுமென பிரிவியு கவுன்சில் உத்தரவிட்டது. வழக்கறிஞர் எத்திராஜ் இவர்களுக்காக வாதாடினார். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய தீர்ப்பு வெளியானது. பாகவதர் மற்றும் என்.எஸ்.கே இருவரும் நிரபராதிகள் என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 2 வருடங்கள் 2 மாதங்கள 13 நாள்கள் சிறைவாசத்திற்குப்பின் கலைவாணர் விடுதலையானார்.

இந்த வழக்கிற்காக பலரும் உதவி செய்தனர். இருப்பினும் அன்றைக்கு வழக்குச் செலவு அதிகமாக இருந்தது. பிரச்னைக்கு ஒரே தீர்வாக ஒரு திரைப்படம் தயாரிப்பதென முடிவெடுத்தது கலைவாணரின் குடும்பம். 'பைத்தியக்காரன்'என்ற அந்தப் படத்தில் பலரும் ஊதியம் இன்றி கலைவாணரின் குடும்பத்துக்குச் செய்யும் கைமாறாக எண்ணிப் பணியாற்றினர். தான் பெரிதும் மதித்துவணங்குபவர்களில் ஒருவரான கலைவாணருக்கு ஏற்பட்ட இன்னலில் தானும் பங்கெடுக்க விரும்பி படத்தில் ஒரு வேடத்தினை ஏற்று நடித்தார் எம்.ஜி.ஆர்.

ஆச்சர்யமாக படம் தயாரிக்கப்பட்டு வந்தநேரத்திலேயே கலைவாணர் விடுவிக்கப்பட்டார். இதனால் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த மதுரத்தை இரட்டை வேடமாக்கி இன்னொரு மதுரத்துக்கு ஜோடியாகக் கலைவாணரை நடிக்கவைத்தனர். படம் பெரு வெற்றிபெற்றது. படத்தில் தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' எனப் பாட்டாகப் பாடி மக்களை மீண்டும் மகிழ்விக்கத் தொடங்கினார் கலைவாணர். சிறைமீண்டதற்குப்பின் தனிப்பட்ட வாழ்விலும் திரையுலகிலும் கலைவாணரின் புகழ் இன்னும் பலமடங்கு உயர்ந்தது.

தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் என்.எஸ்.கே வின் அறிவுரையைக்கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் சிறப்பான குணங்களாக நாம் பேசுகிற விஷயங்களுக்குச் சொந்தக்காரர் என்.எஸ்.கே. இப்படி தன் வாழ்வின் முக்கிய பங்கு வகித்த கலைவாணர் குறித்து “கலைவாணர் ஒரு புரியாத புதிர்!” என்ற தலைப்பில் 1966 ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலரில் ஓர் கட்டுரை எழுதியிருந்தார்.

அதில் கலைவாணர் பற்றி அவர் தெரிவித்த கருத்து இதோ....

“ஒரு மனிதன் தனது வாழ்க்கையைத் தெரிந்தோ தெரியாமலோ இருவிதத் தன்மைகளைக் கொண்டதாக அமைத்துக்கொள்ளுகிறான்.
ஒன்று: தனக்காக. இன்னொன்று: பிறருக்காக. தனக்கு என்று அமைத்துக்கொள்ளும் வாழ்க்கையில் அவனுடைய உடல் முக்கிய குறிக்கோளாக அமைகிறது. அந்த உடலைப் பேணிகொள்ளும் முயற்சிகளை அவன் பலவாறு மேற்கொள்ளுகிறான். கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்வதும், விதம் விதமான உடைகளை உடுப்பதும், அணிவகைகளில் ஆர்வம் செலுத்துவதும் அவன் தனக்காகச் செய்து கொள்ளும் செயல்கள். மேலும், தனக்குப் பிடித்தமானதைத் திரட்டிக் கொள்வது, தன் மனைவியை விரும்பிக் காப்பது, தன் குழந்தைகளைப் பராமரிப்பது, தன் உற்றாரை ஆதரிப்பது, இவை எல்லாம் கூட அவன் தனக்காகத் தன் வசதிக்காகச் செய்து கொள்ளும் சில காரியங்கள்தான்.



இதேபோல் பிறருக்காக அவன் செய்கின்ற காரியங்களும் உண்டு. பிறர் என்ற இந்தச் சொல், அவனைத் தவிர மற்றவர் என்ற பொருளில் குறிப்பிடப்படவில்லை. அவனுக்கு உற்றாராக, நலம் தருவோராக பயன்படுவோராக இருப்பவர்கள் பிறர் என்ற சொல்லால் அழைக்கப்படக்கூடியவர்கள் அல்ல; அவனைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவனுடன் எந்தத் தொடர்பும் கொள்ளாமல், ஏன், அவனுக்குச் சிறிதளவும் பழக்கமே இல்லாதவர்கள்தான் இந்தப் பிறர். அத்தகையவர்களுடைய மகிழ்ச்சியைக் கண்டு திருப்தி அடைவதும், அவர்களின் நன்மைக்காகத் தன்னை, தன் பொருளை, தன் அறிவை அளிக்க முன்வருவதும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக. தனக்காக மற்றவரிடம் ஒன்றை வேண்டுவது யாசகம். பிறருக்காகப் பிறரிடம் ஒன்றை வேண்டுவது பெருந்தன்மை. முதலாவது உடலுக்காக, இரண்டாவது உள்ளத்திற்காக.

இவ்வாறு இருவகைப்பட்ட வாழ்க்கை அமைப்புக்களையும் கலைவாணர் நன்றாக அறிந்தவர். அறிந்தே அவற்றைத் தன் புகழ் வந்ததனால் அவர் அதிலே செருக்குக் கொண்டது கிடையாது. அந்தப் புகழ் எத்தகையது; அதன் ஆக்கிரமிப்பால் விளையக்கூடிய முடிவுகள் என்ன என்பதை முற்றும் உணர்ந்தவர். புகழ் மிகுதியின் அடித்தளத்தில் அவரது அறிவும் பண்புமே அவரை நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால், காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல.

பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால், திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.
மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள்.

சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால், அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.
இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம்.



கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.
இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
மாய மச்சேந்திரா படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம். டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், பட கம்பெனிச் சொந்தக் காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார்.

பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத்தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.

பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள். மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள்.

இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;

'நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ் நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துகொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்துக் கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்துக் கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால், பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?



அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாள்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். இவர்தான் கலைவாணர்.

நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்.

ஆனால், ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.
லட்சுமணதாஸ் என்ற சிறப்புப் பெற்ற கதையாசிரியர் (உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர்) கலைவாணரை என்னடா கிருஷ்ணா என்று தான் அழைப்பார், எல்லோருக்கும் கலைவாணரை அவர் டா போட்டு அழைப்பதும் அதைப் பற்றிக் கலைவாணர் சிறிதும் பொருட்படுத்தாமல் சகஜகமாகப் பழகுவதும் வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் கூட இருந்தன. சிலருக்கு அளவுக்கடங்காத கோபம் கூட உண்டாயிற்று. அவர் எப்படிக் கலைவாணரை ஏக வசனத்தில் அழைக்கலாம்? இதுவே அவர்களின் சினத்திற்குக் காரணம்.
ஒரு நாள் சிலர் லட்சுமணதாஸ் அவர்களைத் தனியாக அழைத்து இழிவாகப் பேசி பயமுறுத்தவும் செய்தனர்.

மறுநாள் கலைவாணர் எல்லோருடனும் சாப்பிடுகையில் கவி லட்சுமணதாஸைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு மற்றவர்களிடம், “லட்சுமணதாஸ் யார் தெரியுமா? ஓர் ஊரில் ஒரு சமயம் காண்ட்ராக்டர் எங்களுடைய பல நாடகங்கள் நடந்து முடிச்சதுக்கப்புறம் எங்களை விடுவதாக இல்லை. கையில் காசு இல்லாமல் ஊர் திரும்ப முடியாது. அப்போ லட்சுமணதாஸ் என்ன செய்தார் தெரியுமா? அந்தக் காண்ட்ராக்ட்ரோட போராடிப் பணத்தை வசூல் பண்ணி, நாங்கள் எல்லோரும் ஒழுங்கா ஊர் திரும்ப வழி செய்தார்.

அப்போது நான் இப்போ மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட் இல்லே! சாதாரண நடிகன்தான். அப்பவே அவர் பெரிய கவிஞர். அவர் என்னைப் பெரிய மரியாதையோட பேசணுமின்னு நான் எதிர்பார்க்க முடியுமோ? ‘என்னடா கிருஷ்ணா?’ன் அவர் கூப்பிடாம வேறுயாரு கூப்பிடறது?” என்றார். எல்லோருக்கும் அந்த விளக்கத்தின் மூலம் புரியாதிருந்த புதிர் புரிந்தது.

இதில் ஒரு புதிய விளைவு என்ன வென்றால், கவி லட்சுமணதாஸ் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலைவாணரை என்னப்பா! வாப்பா! என்று முறையை மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.



தஞ்சையில் புயல் விபத்து நேரிட்டது அல்லவா? அதைப் பற்றி அவசரமாகக் கலைவாணரிடம் பேசச் சென்றேன். அவரிடம் புயல் விபத்து பற்றியும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றியும், ஏழை மக்கள் படும் அல்லல் பற்றியும் நான் பேசியபோது அவர் கண்ணீர் விட்டார். அப்போது தாங்க முடியாத துயரத்தோடு அவர் சொன்னார்; இந்நேரம் அரிசி மூட்டைகள் வாங்கிக் கொடுத்திருக்கணுமே? துளித்து விட்டது. அவருடைய கண்ணீரின் காரணம் என்ன என்பதை அறிந்த பிறகு யாரால்தான் கண்ணீர் விடாமல் இருக்க முடியும்!
அவர் தன் வாழ்வுக்காகவா கண்ணீர் சிந்தினார்? தன் புகழுக்காவா கண்ணீர் விட்டார்! இல்லையே! தன் நாட்டு மக்களில் பலர் அவதிப்படுகிற நிலையையும், அந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்டுக் காக்கும் பணியை உடனடியாகத் தன்னால் செய்ய முடியாத சூழ்நிலையையும் பற்றி நினைத்தல்லவா கண்ணீர் சிந்தினார்!

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால், அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.

கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலிலும் பெரியது; மலையிலும் உயர்ந்தது.
அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை. அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார். ஆனால், பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்திற்குள் தெரிந்துகொண்டு விடுவார்கள். ஆனால், அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துகொள்வார்கள்.




கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்திற்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன். பிறகு இரண்டொரு நாள்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன்

அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போ றாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னா மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்தான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!

அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது! எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.”
பாலியல் வன்கொடுமை : நடுரோட்டில் மரணதண்டனை கொடுத்த ஏமன்!

எம்.குமரேசன்

குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்தவரை, மக்கள் மத்தியில் சுட்டுக் கொன்றது, ஏமன் அரசு.



மூன்று வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த 41 வயது முகமது அல் மக்ரபி என்பவருக்கு, ஜூலை 31-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தலைநகர் சானாவில், தாகிர் சதுக்கத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தண்டனைக்குரியவரை படுக்கவைத்து, பின்பக்கத் தலையில் 4 முறை சுடப்பட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொல்லப்பட்ட பின், முகமது அல் ரக்பியின் உடலைக் கைப்பற்ற மக்கள் முயன்றனர். ஆனால், போலீஸார் உடலை பத்திரமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். கொலைசெய்யப்பட்ட குழந்தையின் தந்தை யாக்யா அல் மதாரி , 'இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் ' என்றார். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏமனில் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இப்போதுதான்.
போன மாசம் பிறந்த குழந்தை... 27 மிஸ்டு கால்கள்! - இடிந்த பேருந்து நிலையத்தில் நொறுங்கிய இதயங்கள்

VIKATAN

எம்.புண்ணியமூர்த்தி
க.விக்னேஷ்வரன்



உதடுகள் துடிக்க.. கண்கள் தவிக்க.. முகமெல்லாம் வியர்வை வழிய.. கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு ஓடி வந்தார் அந்தப் பெண். ஏற்கெனவே பதற்றத்தில் இருந்த மக்களிடம், ''என் அண்ணன் எங்கே... என் அண்ணன் எங்கே...'' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஓடிவந்த அந்தப் பெண்ணின் தவிப்பு எல்லோரையும் நடுநடுங்கச் செய்துவிட்டது. அந்தப் பெண்ணோட அண்ணனும் இடிபாடுகளுக்குள்ள மாட்டிக்கிட்டாரா... என்ன ஆச்சி... ஏதாவது விபரீதமா... என்று ஆளாளுக்குப் பதற்றமடைந்தனர். ஆம்புலன்ஸ் சத்தம்... ஜனங்களின் கூச்சல்.. போலீஸ்.. பொக்லைன்... என எல்லாம் கலந்த அந்த நொடிப்பொழுது ரணத்திலும் ரணம். ''உன் அண்ணனுக்கு ஒண்ணும் ஆகலம்மா.. அங்கதான் இருக்காரு'' என்றபடி அந்தப் பெண்ணை நோக்கி ஓடிவந்தார் பச்சைச் சட்டை போட்ட ஒருவர். சட்டென அந்தப் பெண்ணின் முகம் மலர்ந்தது. தன் அண்ணனைப் பார்த்து கட்டிப்பிடுத்து, ''அண்ணே... இவ்வளவு நேரம் எனக்கு உயிரே இல்லண்ணே... இப்பதாண்ணே உயிரே வந்துச்சி'' என்று அந்தப் பெண் அழ... ''எனக்கு ஒண்ணும் ஆகலம்மா'' என்று அணைத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்தினார் அவர் அண்ணன்.

இது வேறு எங்கும் அல்ல... நேற்று இடிந்து விழுந்து ஐந்து பேரின் உயிர்களைக் காவு வாங்கிய கோயம்புத்தூரை அடுத்துள்ள சோமனூர் பேருந்து நிலையத்தில் கண்ட காட்சிதான் அது.



கோவை சோமனூர் பேருந்து நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். உள்ளே கட்டிடம் விழுந்து கிடந்தது. ''ஏழுபேர் செத்துட்டாங்க, எட்டுப்பேர் செத்துட்டாங்க'' என்று ஆளாளுக்கு ஒரு கணக்குச் சொல்லி வருந்திக் கொண்டிருந்தார்கள். ''இந்த பஸ்ஸ்டாண்டு கட்டி பதினைஞ்சு வருஷம் இருக்கும்ங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இதைப் புதுப்பிச்சு பெயின்ட் எல்லாம் அடிச்சாங்க. பாக்குறதுக்கு நல்லாதான் இருந்துச்சி. ஆனா, விழுந்ததுக்கு அப்புறம்தான் அதோட லட்சணம் தெரியுது. லட்சம் லட்சமா செலவு பண்ணி எப்படிக் கட்டியிருக்கானுங்க பாருங்க? போன உயிருக்கெல்லாம் இழப்பீடு கொடுக்குறோம்னு சமாதானம் பேசிட்டுக் கிளம்பிடுவானுங்க. கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாதவனுங்க. இடிஞ்சு விழுந்த கட்டடத்துல போய்ப் பாருங்க... அதுல சிமெண்ட் இருக்கான்னே தெரியலை. அதுல கலந்துருக்க மணல் என்ன மணலுன்னே தெரியலை. கமிஷனுக்காக ஏதுமறியாத அப்பாவி ஜனங்களைக் கொன்னுட்டு கொள்ளை அடிச்ச காசுல வாழ்வன்றவனெல்லாம் நல்லா இருக்கானுங்க. அவனுங்களை இந்த ஆண்டவன்தான் தண்டிக்கனும்'' என்று ஒவ்வொருவரும் இந்த அசம்பாவிதத்துக்குக் காரணமான முகம்தெரியாதவர்களைத் திட்டிக்கொண்டிருந்தனர்.



ஓர் இடத்தில் சிதறி உறைந்திருந்த ரத்தமும், துண்டாகிக் கிடந்த யாரோ ஒரு பெண்ணுடைய காலும் என அங்குப் பார்த்த ஒவ்வொரு காட்சியும் காண்போரின் உள்ளத்தை நடுக்கம் கொள்ளச் செய்தன.

பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்தபோது... அங்கிருந்தவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவருமான அபிபுல்லாஹ் என்ற கண்டக்டர், 'தான் பிழைத்ததற்காகச் சந்தோஷப்படுவதா.... இல்லை, தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கண்டக்டர் சிவக்குமார் இறந்துபோனதை நினைத்து வருந்துவதா' என்று புரியாத ஒரு மனநிலையில் இருந்தார்.

அவரை ஆசுவாசப்படுத்திப் பேசினோம், “நான் திருப்பூர் டு சோமனூர் ரூட்ல 5-ம் நம்பர் பஸ்ல கண்டக்டரா இருக்கேன். எனக்கு 1.20-க்கு டியூட்டி டைம். ஒரு மணிக்கே வந்துட்டேன். சிவக்குமாருக்கு 1.15-க்கு டைம். அவரும் நானும்தான் பஸ்ஸ்டாண்டுல இருந்த சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். நான் உள்பக்கமா உட்கார்ந்திருந்தேன். சிவக்குமார் வெளிபக்கமா உட்கார்ந்திருந்தார். அப்ப, முதல்ல சின்னச்சின்ன சிமெண்ட் துகள்கள் விழ ஆரம்பிச்சது. என்னனு பாக்குறதுக்காக வெளியில போனார் சிவக்குமார். அதுக்குள்ள 'டமால்'னு ஒரே சத்தம். என்ன நடந்துச்சுன்னே தெரியலை. நான், பின்பக்கம் இருந்த சந்து வழியா தெறிச்சு ஓடிட்டேன்.

சுதாரிச்சி திரும்பி வந்து பார்த்தா பஸ்ஸ்டாண்ட் முன்னாடி இருந்த மொத்த ஷெட்டும் கீழே விழுந்துடுச்சி. எல்லாரும் ஓ...னு கத்துறாங்க. யாருக்கு என்ன ஆச்சின்னே தெரியலை. போலீஸ்லாம் வந்து அப்புறப்படுத்துன பிறகுதான் சிவக்குமார் செத்துட்டாருங்கிற விஷயம் தெரிஞ்சது. அவருக்கு சொந்த ஊரு மதுரை பக்கம். ஆறேழு வருஷமா குழந்தை இல்லாம இருந்தவருக்கு போன மாசம்தான் ஆண்குழந்தை பொறந்துச்சி. ரொம்ப சந்தோஷமா இருந்தார். என்கூடப் பேசிகிட்டு இருந்தவரு, நிமிஷத்துல செத்துப்போயிட்டாருங்கிறதை இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியலை'' என்றவர், ''இங்க பாருங்க... சிவக்குமாருடைய செல்போன்கூட என்கிட்டத்தான் இருக்கு. எனக்கு இதை எப்படி ஓப்பன் பண்றதுனு தெரியலை'' என்றபடி எடுத்துக்காட்டினார். அதை நாம் வாங்கிப் பார்த்தபோது, அவருடைய அம்மாவிடமிருந்து 27 கால்கள் வந்து.. மிஸ்டு கால்களாகியிருந்தன.
கொட்டி தீர்த்த கனமழை... ஸ்தம்பித்த மதுரை மாநகர்!

Posted Date : 01:15 (09/09/2017)

பா.அபிநிஷா

அருண் சின்னதுரை




மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில் இன்று மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், தமுக்கம், தள்ளாகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மாலை 4 மணியிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுரை மாநகர் பகுதியில் பெய்த இந்த கனமழையால் மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல் நகரின் முக்கிய சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சாலையை கடக்க வழியில்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும் இந்த மழைநீர் தேக்கத்தால் மதுரை மாநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகர் வாழ் பகுதியினருக்கு இந்த கன மழை சிரமமாக இருந்தாலும் விவசாய வட்டாரங்கள் மத்தியில் மகிழ்ச்சியையே வரவைத்துள்ளது.
Book anyone who stalls normal life in Tamil Nadu over NEET: SC to TN govt

0Editors pick, Medico Legal

Septeber 8, 2017



“Book anybody who stalls normal life”
New Delhi: The Supreme Court today directed the Tamil Nadu government to ensure that no agitation takes place in the state over the NEET examination issue.
The apex court directed that anybody involved in any kind of activity that stalls normal life of citizens in the state should be booked under the appropriate law.
A bench headed by Chief Justice Dipak Misra passed the direction observing that the NEET examination had already been upheld by the apex court.
“As an interim measure, it is directed that it shall be the obligation of the chief secretary and principal secretary of Tamil Nadu to ensure that no agitation takes place in relation to the NEET examination that has been upheld by this court,” the bench, also comprising A M Khanwilkar and D Y Chandrachud, said.
The top court issued notice to Tamil Nadu government on a plea seeking a direction to the state to maintain law and order situation and ensure that no agitation, strike or protest by political parties or individuals be allowed against the NEET examination.
The petitioner had also submitted that normal life of citizens was gravely affected due to the ongoing protests on the issue in the state.
The bench will now hear the matter on September 18.

Can’t Expect Children Of Age Group Of 10 To 14 Years To Walk Three Kilometers To Attend School: SC [Read Judgment] | Live Law

Can’t Expect Children Of Age Group Of 10 To 14 Years To Walk Three Kilometers To Attend School: SC [Read Judgment] | Live Law: The Supreme Court permitted the up-gradation of a school from lower primary to upper primary by observing that children of age group of 10 to 14 years cannot be expected to walk more than 3 kilometres to attend school. The Kerala Government had granted sanction for the up-gradation of an existing lower primary school to …

NEWS TODAY 15.07.2026