Saturday, September 9, 2017

கொட்டி தீர்த்த கனமழை... ஸ்தம்பித்த மதுரை மாநகர்!

Posted Date : 01:15 (09/09/2017)

பா.அபிநிஷா

அருண் சின்னதுரை




மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில் இன்று மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், தமுக்கம், தள்ளாகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மாலை 4 மணியிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுரை மாநகர் பகுதியில் பெய்த இந்த கனமழையால் மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல் நகரின் முக்கிய சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சாலையை கடக்க வழியில்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும் இந்த மழைநீர் தேக்கத்தால் மதுரை மாநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகர் வாழ் பகுதியினருக்கு இந்த கன மழை சிரமமாக இருந்தாலும் விவசாய வட்டாரங்கள் மத்தியில் மகிழ்ச்சியையே வரவைத்துள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...