Saturday, September 9, 2017

பாலியல் வன்கொடுமை : நடுரோட்டில் மரணதண்டனை கொடுத்த ஏமன்!

எம்.குமரேசன்

குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்தவரை, மக்கள் மத்தியில் சுட்டுக் கொன்றது, ஏமன் அரசு.



மூன்று வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த 41 வயது முகமது அல் மக்ரபி என்பவருக்கு, ஜூலை 31-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தலைநகர் சானாவில், தாகிர் சதுக்கத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தண்டனைக்குரியவரை படுக்கவைத்து, பின்பக்கத் தலையில் 4 முறை சுடப்பட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொல்லப்பட்ட பின், முகமது அல் ரக்பியின் உடலைக் கைப்பற்ற மக்கள் முயன்றனர். ஆனால், போலீஸார் உடலை பத்திரமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். கொலைசெய்யப்பட்ட குழந்தையின் தந்தை யாக்யா அல் மதாரி , 'இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் ' என்றார். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏமனில் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இப்போதுதான்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...