Tuesday, September 19, 2017

களத்தில் குதித்த பி.எஸ்.என்.எல்.,; 2,000 ரூபாயில் மொபைல் போன்
பதிவு செய்த நாள்19செப்
2017
05:10


புதுடில்லி : ‘ஜியோ, ஏர்­டெல்’ ஆகி­ய­வற்றை தொடர்ந்து, பொதுத் துறை­யைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், மைக்­ரோ­மேக்ஸ், லாவா ஆகிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, குறைந்­த­பட்­சம், 2,000 ரூபாய் விலை­யில், மொபைல் போனை வெளி­யிட உள்­ளது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலை­வர் அனு­பம் ஸ்ரீவத்­ஸவா கூறி­ய­தா­வது: நாங்­கள், மைக்­ரோ­மேக்ஸ், லாவா நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, சொந்த மாடல்­களில், தொலை தொடர்பு சேவை­யு­டன் கூடிய மொபைல் போன்­களை, அறி­மு­கம் செய்ய உள்­ளோம். இந்த மொபைல் போன்­களின் குறைந்­த­பட்ச விலை, 2,000 ரூபா­யாக இருக்­கும். இவை, இல­வச அழைப்­பு­கள் வச­தி­யு­டன் கிடைக்­கும்.

அக்­டோ­ப­ரில், தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு, இத்­திட்­டத்தை அமல்­ப­டுத்த உள்­ளோம். இதை தொடர்ந்து, மேலும் பல மொபைல் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, தொலை தொடர்பு வச­தி­யு­டன் கூடிய மொபைல் போன்­களை வெளி­யிட உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார். பி.எஸ்.என்.எல்., 10.5 கோடி மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை கொண்­டுள்­ளது.
கிரிக்கெட் போட்டி : ரூ.49 லட்சம் வருவாய்
பதிவு செய்த நாள்18செப்
2017
23:07


சென்னையில் நடந்த, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியால், தமிழக அரசுக்கு, 49 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே, நேற்று முன்தினம், '50 ஓவர்' கிரிக்கெட் போட்டி நடந்தது. அங்கு, இதற்கு முன், 45 ஆயிரம் பேர் போட்டியை காண வசதி இருந்தது. 

இவற்றின், டிக்கெட் விற்பனை வழியே, அரசுக்கு, கணிசமான, 'வாட்' வரி கிடைத்தது.

சில காரணங்களால், மூன்று மாடங்களுக்கு சென்னை மாநகராட்சி, 'சீல்' வைத்துள்ளது. அதனால், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, 12 ஆயிரம் இருக்கைகள் காலியாக உள்ளன.

இந்நிலையில், ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், முதன்முறையாக, சர்வதேச ஒரு நாள் போட்டி, அங்கு நடந்துள்ளது. 2015ல் நடந்த போட்டியின் போது, 750 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச டிக்கெட் விலை, தற்போது, 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதற்கு, ஜி.எஸ்.டி.,யாக, 98 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அதில், தலா, 50 சதவீதத்தை, மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டன.
அதன்படி, தமிழகத்திற்கு, 49 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது என, வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -
வரிசை கட்டுது விடுமுறை - கல்லா கட்டுது மதுக்கடை
பதிவு செய்த நாள்18செப்
2017
23:06


விடுமுறை காலம் துவங்க உள்ளதால், 'டாஸ்மாக்' கடைகளில், முழு அளவில் மது வகைகள் இருப்பு வைக்குமாறு, ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 5,000 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகள் விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. இம்மாத இறுதியில், ஆயுத பூஜை, விஜயதசமி துவங்கி, திபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வரை, அதிக விடுமுறைகள் வருகின்றன. இதனால், மது விற்பனையை வழக்கத்தை விட அதிகரிக்க, டாஸ்மாக் திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் மேலாளர் ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், ஒரு கடையில், தினமும் சராசரியாக, 10 லட்சம் ரூபாய் வரையும், மற்ற பகுதிகளில், மூன்று லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை நடக்கிறது. கடை இட வசதியை பொறுத்து, ஏழு நாட்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பு வைக்கப்படும். இட வசதி இல்லாத கடைகளுக்கு, தினமும், ஒரு லாரியில் சரக்கு அனுப்பப்படும். இனி, அதிக விடுமுறை வருவதால், வழக்கத்தை விட, மது விற்பனை அதிகம் இருக்கும். இதனால், இரு வாரங்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைக்குமாறும், இட வசதி இல்லாத கடைகளில், தினமும், இரு முறை, 'லோடு' வாங்கி கொள்ளுமாறும், கடை ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
குடந்தை ரயில்வே ஸ்டேஷனில் இலவச, 'வைபை' வசதி துவக்கம்
பதிவு செய்த நாள்18செப்
2017
22:19

தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும், 38 ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும், 5,000த்துக்கும் மேற்பட்டோர் இந்த ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர்.

முக்கிய கோவில் நகரமாகவும், வணிக மையமாகவும் கும்பகோணம் திகழ்வதால், சுற்றுலா பயணியரும், வர்த்தகர்களும் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர். அதிக டிக்கெட் வருவாய் உள்ள, 'ஏ' கிரேடு ரயில்வே ஸ்டேஷனில் இலவச, 'வைபை' வசதி ஏற்படுத்த, ரயில்வே நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்தது. இதையடுத்து, நேற்று முதல், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில், இலவச வைபை வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக, நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார்.



காவிரியில் புனித நீராட அலை மோதும் பக்தர்கள் : 'இன்று மஹாளய அமாவாசை'
பதிவு செய்த நாள்18செப்
2017
23:41



காவிரி மகா புஷ்கரம் விழா, 12 குருப்பெயர்ச்சியை கடந்து, 144 ஆண்டுகளுக்கு பின் கொண்டாடப்படுகிறது. குரு பகவான், கன்னி ராசியிலிருந்து, காவிரி நதிக்கு உரிய, துலாம் ராசிக்கு மாறும்,
குரு பெயர்ச்சி காலத்தில் இவ்விழா கொண்டாடப்படும். இந்த கால கட்டத்தில் காவிரியில் நீராடுவதால், பல தோஷங்கள் நீங்கி, பஞ்சம் அகன்று, உலகம் சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை.

புஷ்கரம் என்றால் ஜலதேவதை : குரு கிரகம், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குள் நுழையும் போது, சில குறிப்பிட்ட நதிகள், அனைத்து தேவதைகளின் சக்தியை பெற்று கொள்ளும். இதுவே 'புஷ்கரம்' எனப்படுகிறது. புஷ்கரம் என்றால் 'ஜல தேவதை' என்று அர்த்தமாகும்.

ஸ்ரீ ரங்கபட்டணாவில் அலை மோதும் பக்தர்கள் : மைசூரு மாவட்டம், ஸ்ரீ ரங்கபட்டணாவில், நடந்து வரும் புஷ்கரத்தில், காவிரி நதியில் புனித நீராட, பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இன்று மஹாளய அமாவாசை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ரங்கப்பட்டணாவில், காவிரி புஷ்கரம் நடந்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல மாநிலங்களில் இருந்தும், கர்நாடகாவின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், ஸ்ரீரங்கப்பட்டணா வருகை தந்து, காவிரி நதியில் புனித நீராடி மகிழ்கின்றனர். பக்தர்கள், நதிக்கரையில் அமர்ந்து தியானம், யாகம், மந்திரம் பாராயணம் செய்வது, மூதாதையர்களுக்கு தர்ப்பணம், கோதானம் என பல வித வழிபாடுகளை செய்கின்றனர். காவிரி புஷ்கரணிக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஸ்ரீ ரங்கபட்டணாவின் ராஜ வீதி, காவிரி ஆற்றுக்கு செல்லும் ரோடுகளில், வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்தை நிர்வகிக்க முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர். காவிரியில் நீராடும் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீரங்கநாதசுவாமியை தரிசித்தனர். நேற்றும் கூட, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மஹாளய அமாவாசை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காவிரியை வரவேற்கும் முதல் புண்ணிய ஸ்தலம் : ஹாசன் மாவட்டம், ஹரகலகூடு தாலுகா, ராமநாதபுரத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீராமேஸ்வரர் கோவில் உள்ளது. கிருத யுகத்தில், அக்னி தேவன், இங்குள்ள வகினி புஷ்கரணியில், நீராடி, சிவலிங்கத்தை பூஜித்தார். அதே போன்று, புராணத்தில், வாசவபுரி என்று அழைக்கப்பட்ட, ராமநாதபுரத்தின் ஸ்ரீராமேஸ்வர் கோவில் அருகில் பாய்ந்து ஓடும் காவிரியின் வகினி புஷ்கரணியில் புனித நீராடிய ராமர், தானாக உருவாகியிருந்த சிவலிங்கத்தை அர்ச்சித்ததால், இந்த ஸ்தலத்துக்கு ராமநாதபுரம் என்று பெயர் வந்தது. இப்படியாக, வாசவபுரி, ராமநாதபுரமாக மாறியதாக ஐதீகம்.
குடகு தலைக்காவிரியின் பிரம்மகிரியில் பிறந்து, பாயும் காவிரி நதியை வரவேற்கும் ராமநாதபுரம், முதல் புண்ணிய ஸ்தலமாகும். இந்த கோவில் அருகில் பாய்ந்து ஓடும் காவிரி நதிக்கரையில், இம்மாதம் 12 ம் தேதி துவங்கிய மகா புஷ்கரம், இம்மாதம் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது.

காவிரி ஆரத்தி : வாரணாசியில் கங்காரதி செய்வது போன்று, ராமநாத புரத்தில், முதன் முறையாக, ஒவ்வொரு நாள் இரவும், காவிரி ஆரத்தி பூஜைகள் நடக்கிறது. இந்த பூஜைகள், பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

தானம், தர்ப்பணம் : காவிரி ஆற்றில் புஷ்கரம் நடக்கும் போது, மேற்கொள்ளும் பூஜைகள், யாகம், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வது, கோ தானம் போன்றவைகளை செய்தால், பெரும் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எந்த ராசிக்கு எந்த நதியில் புஷ்கரம் :
'குரு கிரகம்' மேஷம் -'கங்கை'
ரிஷபம் - 'நர்மதா'
மிதுனம் - 'சரஸ்வதி'
கடகம் - 'யமுனா'
சிம்மம் - 'கோதாவரி'
கன்னி - 'கிருஷ்ணா'
துலாம் - 'காவிரி'
விருச்சிகம் - 'பீமா'
தனுசு - 'தபசி'
மகரம் - 'துங்கபத்ரா'
கும்பம் - 'சிந்து'
மீனம் - 'மகாநதி'
12 ராசிகளில், குருபகவான் நுழையும் நாளிலிருந்து 12 நாட்கள், புண்ணியகாலம் எனப்படுகிறது. இந்த நேரத்தில், மகரிஷிகள், தேவதைகள், சப்தரிஷிகள், நதிகளில் நீராடுவர் என்ற ஐதீகம் உள்ளது.
ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்
பதிவு செய்த நாள்18செப்
2017
19:40


'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேச்சு நடத்தியும், சுமுக முடிவு கிடைக்கவில்லை. பின், நீதிமன்ற தலையீட்டால், செப்., 15ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், போராட்டம் நடந்த போது, அரசு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், விளக்கம் கேட்டு, ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்கபட்டு வந்தது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, 'மெமோ' அனுப்பும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிறுத்தி உள்ளனர். பதிவு தபாலில் அனுப்பப்பட்ட மெமோக்களையும், ஆசிரியர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

- நமது நிருபர் -
ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்:வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில்

பதிவு செய்த நாள்18செப்
2017
23:24

திண்டுக்கல்:வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில், வரும் 2018, ஜனவரி முதல் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்னும் 15 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.வங்கிகளில் ஆதார் மையம்: வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆதார் போட்டோ எடுப்பதற்காக வங்கிகளில் முதல் கட்டமாக 12 ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, நத்தம், ஆத்துார் ஆகிய ஊர்களில் உள்ள கனரா வங்கிகளிலும், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார், நத்தம் பகுதிகளில் ஐ.ஓ.பி., வங்கி கிளைகளிலும், ஓட்டன்சத்திரம் பெடரல் வங்கிக் கிளையிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரும் ஆதார் அடையாள அட்டை பெற போட்டோ எடுக்கலாம் என, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

NEWS TODAY 17.07.2026