Tuesday, September 19, 2017

வரிசை கட்டுது விடுமுறை - கல்லா கட்டுது மதுக்கடை
பதிவு செய்த நாள்18செப்
2017
23:06


விடுமுறை காலம் துவங்க உள்ளதால், 'டாஸ்மாக்' கடைகளில், முழு அளவில் மது வகைகள் இருப்பு வைக்குமாறு, ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 5,000 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகள் விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. இம்மாத இறுதியில், ஆயுத பூஜை, விஜயதசமி துவங்கி, திபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வரை, அதிக விடுமுறைகள் வருகின்றன. இதனால், மது விற்பனையை வழக்கத்தை விட அதிகரிக்க, டாஸ்மாக் திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் மேலாளர் ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், ஒரு கடையில், தினமும் சராசரியாக, 10 லட்சம் ரூபாய் வரையும், மற்ற பகுதிகளில், மூன்று லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை நடக்கிறது. கடை இட வசதியை பொறுத்து, ஏழு நாட்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பு வைக்கப்படும். இட வசதி இல்லாத கடைகளுக்கு, தினமும், ஒரு லாரியில் சரக்கு அனுப்பப்படும். இனி, அதிக விடுமுறை வருவதால், வழக்கத்தை விட, மது விற்பனை அதிகம் இருக்கும். இதனால், இரு வாரங்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைக்குமாறும், இட வசதி இல்லாத கடைகளில், தினமும், இரு முறை, 'லோடு' வாங்கி கொள்ளுமாறும், கடை ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025