Wednesday, December 20, 2017

Chennai Corporation officials seal KK Nagar building housing popular restaurant 

Yogesh Kabirdoss | TNN | Updated: Dec 19, 2017, 15:31 IST

 

The landlord committed building violations by adding an additional floor to the structure
CHENNAI: Greater Chennai Corporation officials on Tuesday sealed a commercial building at KK Nagar that housed several shops, including Hotel Saravana Bhavan, for building violations.
An official said the action followed a litigation involving the occupants and the landlord. The litigation revealed building violations. "There was a case in the court over disputes between the occupants and landlord. Meanwhile, the unauthorised construction in portion of the building also came to light," an official said.

 
The landlord committed building violations by adding an additional floor to the structure located in the First Sector of First Street near KK Nagar near the bus terminus. The structure was sealed after rectifications to clear the violations had not been taken.

Shopkeepers in the building said officials began the sealing process at 8.30am and finished it in half hour. Gani, a shopkeeper in the building, said all the shops, including the hotel, had been functioning normally till 8.30am.

வந்த வீட்டுக்கு வஞ்சனை பண்ணாதீங்க சனீஸ்வரா... வாட்ஸ்அப்பில் வைரல் லெட்டர்

சென்னை: சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். இந்த இடப்பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், தீமையும் கலந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எங்கள் மீது கருணை காட்டுக்கள் சனீஸ்வரா என்று எழுதப்பட்ட கடிதம் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

அன்புள்ள சனீசுவரனார்க்கு...

எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.
புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.
உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.
உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.
புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.
இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.
அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.
ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.
வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.
அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம்.
அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது ?
பிள்ளைகுட்டிகள் எல்லாம் பயப்படுகின்றன.
உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.
பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம்போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலைவாசியால் ஆகாயத்தில் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி, பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும்குறையுமாய் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்துவிடாதீர். வலி தாங்க முடியாது.
காணாமல் போனவர்களைக்கூடக் கண்டுபிடித்துத் தராத அரசுபோல் ஆளும் ஓர் அரசின் கீழ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கிறோம்.
உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.
எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா ?
எங்களைப் பார்த்தால் 'இரண்டு வீக்கு வீக்குவோம்' என்றா உமக்குத் தோன்றுகிறது ?
ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியதுபோலத்தானே இருக்கிறோம் ? வடிவேலைப்போல 'ஔ' என்று அழுதபடிதானே தலைக்குத் துண்டைப் போட்டு உட்கார்ந்திருக்கிறோம் ?
இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள் ?
போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக.
வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக.
இங்ஙனம்
சனிப்பெயர்ச்சியால் பாதிப்படையும் இராசிக்காரர்கள்.

source: oneindia.com
Dailyhunt

10 லட்சம் முதல் 50 லட்சம் வரை.. முதல்முறையாக புற்றுநோயாளிகளுக்கு எல்.ஐ.சி. பாலிசி! #LICCancerCover



 #LICCancerCover

`அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...' என்று சொன்ன காலம் போய், `நோய் நொடியில்லாத மனிதர்களைக் காண்பதரிது' என்கிற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலாலும், புதிய உணவுப் பழக்கங்களினாலும், புதிது புதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த வயது, அந்த வயது, ஏழை, பணக்காரர் என்கிற பாரபட்சம் இல்லாமல் யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்பதே தெரியவில்லை. உடல்நலக் குறைகளை மட்டும் ஏற்படுத்தும் நோய்கள் என்றால், ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம். உயிரைக் கொல்லும் நோய்கள் என்றால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவரை நம்பியிருக்கும் குடும்பமும் நிலைகுலைந்து போகும். உலகளவில், மனித இறப்புக்கான முக்கிய காரணங்களில் எய்ட்ஸ், மாரடைப்பு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது 'புற்றுநோய்.'

உலக சுகாதார நிறுவனம் 2012 -ம் ஆண்டு உலகளவில் ஓர் ஆய்வை நடத்தியது. அதில், அந்த ஆண்டு மட்டும் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சம் பேர். அவர்களில், இறந்து போனவர்களின் எண்ணிக்கை 82 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் எழுபது சதவிகிதத்துக்கும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுறுத்தியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஆண்களைவிடப் பெண்களைத்தான் இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது. உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் ஒரு லட்சம் பெண்களில், 43,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. `இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது' என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் எந்த வேகத்தில் பரவுகிறதோ, அதே வேகத்தில் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளும், நடவடிக்கைகளும் உலகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் மட்டுமின்றி, பல்வேறு தொண்டு நிறுவனங்களும் புற்றுநோய் ஒழிப்பில், நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் மிகத் தீவிரமாக இயங்கிவருகின்றன.



அந்த வகையில் தற்போது இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி, (லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) புற்றுநோய்க்காக மட்டுமே, `எல்.ஐ.சி'ஸ் கேன்சர் கவர்' (LIC's Cancer Cover) என்கிற ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய இன்ஷூரன்ஸ் பற்றி எல்.ஐ.சி-யின் தெற்கு மண்டல மேலாளர் தாமோதரன் நம்மிடம் விரிவாகப் பேசினார்...

"புற்றுநோய், திடீரென்று ஏற்படக்கூடிய ஒரு நோய். ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், முதலில் மனதளவில், உடலளவில் பாதிக்கப்படுவார். சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பின்னர் பொருளாதாரரீதியாக அதிகமாகப் பாதிக்கப்படுவார். சொத்தை எல்லாம் விற்று ,சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய சூழல்கூட வரும். தன் குடும்பத்துக்காக, குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேர்த்த பணத்தையெல்லாம் சிகிச்சைக்குப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

இதைத் தவிர்க்கும்விதத்தில், எல்.ஐ.சி-யில் முதன்முறையாக ஒரு நோய்க்காக மட்டும் தனியாக ஜெனரல் இன்ஷூரன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். இது மெடிக்ளெய்ம் திட்டம் போன்றது அல்ல. மெடிக்ளெய்ம் திட்டத்தில், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட நோய்க்காக செலவழித்த பில்களை சமர்ப்பித்தால் அதற்குண்டான பணம் கிடைக்கும். செலவழித்த தொகை மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் அப்படி அல்ல. பாலிசி எடுத்துக்கொண்ட ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டாலே, இன்ஷூரன்ஸ் தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையிலோ, தொண்டு நிறுவனங்களின் மூலமாகவோ இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொண்டாலும்கூட அதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

இந்தத் திட்டத்தில் 20 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள், 10 லட்சம் முதல் 50 லட்ச ரூபாய் வரை பாலிசி எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுக்கும்போது, அவர் புற்றுநோயால் பாதித்தவராக இருக்கக் கூடாது. பாலிசி எடுத்து, காத்திருப்புக் காலமான 180 நாள்கள் முடிந்த பின்னர் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது நோயின் ஆரம்பநிலை என்றால், பாலிசியின் மொத்தத் தொகையில் இருந்து 25 சதவிகிதம் அவருக்கு வழங்கப்படும். உதாரணமாக, 10 லட்ச ரூபாய் பாலிசி என்றால் 2.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். அதோடு, அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தவேண்டியது இல்லை. புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டால், சரியாக மூன்று ஆண்டுகளுக்குள் குணப்படுத்தி விடலாம் என்கிற மருத்துவ அறிவியலைக் கணக்கில்கொண்டு இந்த மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படுகிறது.

புற்றுநோயின் முற்றிய நிலை என்றால், மொத்தத் தொகையும் அப்படியே வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் அதற்கடுத்த பத்து வருடங்களுக்கு மொத்தத் தொகையிலிருந்து ஒரு சதவிகிதத் தொகை, மாதா மாதம் உதவித்தொகையாக வழங்கப்படும். உதாரணமாக 50 லட்ச ரூபாய் மொத்தத் தொகை என்றால், மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.



ஏற்கெனவே, மெடிக்ளெய்ம் திட்டத்தில் இருப்பவர்களும் இந்தப் பாலிசியை எடுத்துக்கொள்ள முடியும். பிரீமியம் காலம் முடிவதற்குள் புற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை என்றால், செலுத்திய தொகை ஏதும் திருப்பித் தரப்பட மாட்டாது.

20 வயதுடைய ஒருவர் பத்து லட்ச ரூபாய்க்கான ஒரு பாலிசியை எடுத்திருந்தால் வருடத்துக்கு ரூ. 2,400 செலுத்த வேண்டும். 20 லட்ச ரூபாய்க்கும் 2,400 ரூபாய்தான் . 50 லட்ச ரூபாய் மொத்தத் தொகை என்றால் வருடத்துக்கு ரூ.5,428 ரூபாய் செலுத்த வேண்டும். பிரீமியம் தொகையை ஆண்டு பிரீமியமாக அல்லது ஆறு மாத தவணையாகச் செலுத்தலாம்.

அண்மைக்காலமாக, புற்றுநோய் பெண்களை அதிகமாகப் பாதிப்பதால் பெண்களுக்கு பிரீமியம் தொகை சற்று அதிகமாக இருக்கிறது. 20 வயதுள்ள ஒரு பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் மொத்தத் தொகைக்கு ஆண்டுக்கு 2,400 ரூபாயும், 50 லட்ச ரூபாய் என்றால், ஆண்டுக்கு 9,086 ரூபாயும் பிரீமியமாகச் செலுத்த வேண்டும். வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் தொகையும் அதிகரிக்கும். அதிகபட்சமாக 75 வயது வரை இதன் பலன்களை அனுபவித்துக்கொள்ள முடியும்.

மது குடிப்பதால், புகை பிடிப்பதால் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை. நம் மூதாதையார் வழியாகவும், ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (Carcinogens) இந்த நோய் பரவுகிறது. `நமக்குத்தான் கெட்ட பழக்கங்கள் இல்லையே...' என்று யாரும் புற்றுநோயை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. அனைவருமே இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். ஆன்-லைன் மூலமாகவே இந்தத் திட்டத்தில் இணைய முடியும்.



இந்தியா முழுக்க, இது வரை 5,000 பாலிசிகள் இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன. தென்னகப் பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்து எதிர்காலம் குறித்த பயமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்'' என்கிறார் தாமோதரன்.

இந்த பாலிசி குறித்த மேலும் விவரங்களுக்கும் தகவல்களுக்கும் இந்த லிங்க்கைப் பார்க்கவும்...
Dailyhunt
கொள்ளையனை விரட்டிச் சென்று உயிரிழந்த ஆசிரியை நந்தினியின் குடும்பம் இப்போது எப்படியிருக்கிறது?

சென்னைப் பட்டினப்பாக்கத்தில் கொள்ளையனைப் பிடிக்க விரட்டிச் சென்றதில் உயிரிழந்த ஆசிரியை நந்தினி இறந்து இன்றோடு ஒன்றரை வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவரை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பம் இப்போது எப்படி இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பட்டினப்பாக்கம் சென்றேன்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்துக்குள் நுழைந்ததும் அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று நந்தினி வீடு எங்க இருக்குனு கேட்டேன். நந்தினியைப் பற்றி எந்த விளக்கமும் நான் சொல்லவில்லை. நந்தினினு சொன்ன உடனேயே நான்தான் நந்தினியோட சித்தப்பானு ஆட்டோக்காரர் ஒருவர் சொன்னார். அவரே எங்களை நந்தினி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நந்தினியின் வீடு தாழிடப்பட்டு இருந்தது. போனில் விசாரித்து விட்டு நந்தினியின் அம்மா வீட்டு வேலைக்குப் போயிருக்காங்கம்மா பார்த்துப் பேசிக்கோங்கனு சொல்லி அங்கே விட்டுட்டுப் போனார். நந்தினியின் அம்மாவை போனில் அழைத்து அவருக்காக நாங்கள் காத்திருப்பதை தெரிவித்தேன். இரண்டு மணி நேரம் நந்தினி அமர்ந்து சிரித்துப் பேசிய அவரது வீட்டு வாசலில் அவருடைய அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

நந்தினியின் அம்மா வந்தவுடன் நந்தினியின் வீட்டிற்குள் எங்களை அழைத்துச் சென்றார். நந்தினி உயிரோடு இருக்கும்போது அவரது வீட்டை எந்த அளவிற்கு விருப்பப்பட்டு கட்டினாரோ அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் அந்த வீடு இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் எதிரிலே இருந்த நந்தினியின் புகைப்படம் எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அமைதியாய் நந்தினியின் அம்மாவுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவராகவே முன்வந்து பேசத் தொடங்கினார்.



"நான் பொறந்து, வளர்ந்தது எல்லாமே இந்தக் குப்பத்துலதான். ஆசைப்பட்டு காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆரம்பத்துல அவர் எங்க மேல அன்பாதான் இருந்தார். எப்போ குடிக்கு அடிமையானாரோ அப்போ இருந்து எங்களுக்குள்ள சண்டைதான் நீண்டு கடந்துச்சு. எனக்கு எல்லாமே என் புள்ளைங்கதான். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பசங்களை நல்லா படிக்க வெச்சிடணும்னு நினைச்சேன். அதை மாதிரி என் மவள எம்.சி.ஏவும், மவன பி.காமும் படிக்கவெச்சேன். என் பசங்க என்ன கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துருவேன். எனக்கு என் பொண்ணுதான் உலகம். அரசுப்பள்ளியிலதான் படிக்கவெச்சேன். ஆனாலும், என் மவ அவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுவா. அவ பேசுறதை கண் இமைக்காம பார்த்துட்டே இருப்பேன். 'சேலைகட்டி பூ வெச்சிக்கோ அம்மை'னு சொல்லிட்டே இருப்பேன். ஒரு தடவை சொந்தக்காரங்க கல்யாணத்துக்காக அவளை வற்புறுத்தி சேலை கட்ட வெச்சி போட்டோ பிடிச்சேன். அந்த போட்டோதான் அவ கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முழுக்க இருக்கப் போகுதுன்னு தெரியாம போச்சே என்று கண்ணீரை அடக்க முடியாமல் ஓலமிட்டு அழுதவரை பக்கத்தில் அமர்ந்து அவரது கரம்பற்றி தேற்றினேன்.

படிப்பு முடிஞ்ச கையோட நந்தினிக்கு வேலை கிடைச்சிட்டு. அவ ரொம்ப திறமையான பொண்ணு. வீட்டை விட்டு எங்கயுமே போக மாட்டா. மத்த புள்ளைங்க மாதிரி போனும் கையுமாலாம் இருக்கவே மாட்டா. வீட்டுக்கு வந்துட்டா என் கூடதான் மணிக்கணக்கா பேசிட்டு இருப்பா. அப்போ நான் மூணு வூட்டுக்கு வேலைக்குப் போவேன். 'அம்மை உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்குனு' சொல்லுறப்பலாம் நம்ம நல்ல நிலைமைக்கு வந்ததுக்கு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லியே என் வாயை அடைச்சிட்டா. நான் அவளுக்கு அம்மா இல்ல; அவதான் என்னுடைய அம்மா. என்னை அவ்வளவு நல்லா பார்த்துப்பா. எனக்கு ஏதாச்சும்னா துடிச்சுப் போயிடுவா. கொஞ்ச நாள் கழிச்சு என்னுடைய சம்பளம் அதிகமாகிடும் அதுக்கப்புறம் நீ வேலைக்குப் போக வேண்டாம் நானே குடும்பத்தைப் பார்த்துக்கிறேனு சொன்னா. அவ இருந்தப்ப மூணு வூட்டுக்கு வேலைக்குப் போய்ட்டு இருந்தேன் இப்போ ஏழு வூட்டுக்கு வேலைக்குப் போறேன் என் அம்மை இல்லாததால ஒரு வேளை சாப்பாடுக்கே பாடுபட வேண்டியிருக்கு எனக் கண்ணீர் ததும்ப பேசியவரை தேற்ற தெம்பில்லாமல் தலைகுனிந்தேன்.

"அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. வீடே கலகலணு இருந்துச்சு. எங்க வூட்டுல பத்துப் பேருக்கும் மேல சிரிச்சுப் பேசிகிட்டு இருந்தோம். சாயங்காலம் கட்டில்ல படுத்துகிட்டு அவ தம்பிகிட்ட பேசிகிட்டு இருந்தா. அம்மை கல்யாணம் பண்ணிக்கோனு எப்பவும் சொல்ற மாதிரி தான் சொன்னேன். இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவுதானே சரி இந்த வருஷம் பண்ணிக்கிறேனு சொன்னா. அன்னைக்கு நாள் முழுக்க அவ முகத்துல சந்தோசம்தான் நிரம்பியிருந்துச்சு. எப்பவும் இல்லாம அன்னைக்கு என் கண்ணுக்கு ரொம்பவே அழகா தெரிஞ்சா. அசையாம அவளையே பார்த்துட்டு இருந்தேன். என்னம்மா என்னைப் பார்த்துட்டே இருக்குறனு கேட்டா. என்னனு தெரியல அம்மை இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கனு சொன்னேன். அன்னைக்குதான் என் மவ இந்த உலகத்தைவிட்டு போகப் போறானு எனக்குத் தெரியாம போச்சு. நந்தினி நைட்டி போட்டு இருந்தா எங்கையும் போக மாட்டா. அன்னைக்கு அவளுடைய அத்தை மவ காயத்ரி கூட வாசல்ல உட்கார்ந்து பேசி சிரிச்சிட்டு இருந்தா. நாளைக்குச் சீட்டுக் கட்ட காசு வேணும்ல நான் போய் ஏ.டி.எம் ல காசு எடுத்துட்டு வந்து சாப்பிடுறேனு சொல்லிட்டு வேகமா டிரெஸ் மாத்துனா. நான் அவள போணும் சொல்லல.. போகாதணும் சொல்லல. அவ வாசல்ல பேசிகிட்டே ஏ.டி.எம் ல காசு எடுக்கப் போயிருக்கா.

ஒரு வார்த்தை என்கிட்ட போய்ட்டு வரேனு கூட சொல்லல. அம்மையைக் காணம்னு கேட்டப்போதான் என் மவன் அவ ஏ.டி.எம் வரைக்கும் போயிருக்கானு சொன்னான். சரி, தோசை சுட்டு வைக்கலாம்னு எழுந்து மாவுதான் எடுத்துவெச்சேன். அதுக்குள்ள ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுனு சொன்னாங்க. என்ன நடக்குதுன்னே தெரியாம ஓடுனேன். அழகா இருக்குற அம்மைனு சொன்ன மவளா இப்போ பொணமா கிடக்குறானு உறைஞ்சு போயிட்டேன் தாயி"னு தலையில் கை வைத்திருந்தவர் நந்தினியின் பழைய புகைப்படங்கள் ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டினார்.

"இந்த வீடு ஒரே ஒரு குடிசையாதான் இருந்துச்சு. நாலு வருசம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு நானும், நந்தினியும் சேர்ந்துதான் இந்த வீட்டை கட்டுனோம். நந்தினி குப்பத்தைச் சேர்ந்த பொண்ணுன்னு அவ நண்பர்கள் யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அவளுடைய நடவடிக்கை இருக்கும். நான் வீட்டு வேலை பார்க்குறவங்க கொடுக்குற டிரெஸ்தான் நந்தினி போட்டுப்பா. அவ சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமா தான் அவளுக்குன்னு டிரெஸ் எடுக்க ஆரம்பிச்சா. அவளுக்கு அவ தம்பின்னா உசுரு. அவன் அடம்பிடிச்சான்னு வட்டிக்குக் காசு வாங்கி ஒன்றரை லட்சத்துக்கு பைக் வாங்கிக் கொடுத்தா. ஆனா, அந்த பைக்கை அவன் தொலைச்சிட்டானு தெரிஞ்சும் அவன் மேல கோபப்படாம விடுமா தம்பியை எதுவும் சொல்லாதனு என் வாயைக் கட்டிப்போட்டுட்டு கவலைப்படாத தம்பி வேற வண்டி வாங்கித் தரேன்னு அவனுக்கு சப்போர்ட்டா நின்னா. வண்டி போனதுக்கே வருத்தப்படாத அவ அந்தப் பணத்தையும் போனா போகுதுன்னு விட்டுருந்தா இன்னைக்கு உசுரோட இருந்துருப்பாளே" என்றவருக்கு ஆறுதல் கூற வார்த்தைகளின்றி மெளனமாய் கரைந்தேன்.



"என் பொண்ணு செத்து ஒருவருசத்துக்கு மேல ஆகியும் இன்னைக்கு வரைக்கு அவளுடைய வண்டி எங்க வூடு வந்து சேரல. எல்லாத்துக்கும் அலைஞ்சு திரிஞ்சு வாங்குற அவளே போய்ட்டா. அவளுக்கு மேல என்ன இருக்குன்னு நாங்களும் விட்டுட்டோம். இப்போ எங்க குடும்பமே சின்னாப்பின்னமா போச்சு. என் புருஷன் கூட சண்டை போட்டுட்டேன். அவர் இப்போ வூட்டுக்கு வர்றது இல்ல. நானும், என் மவனும்தான். என் அம்மை இறந்ததுக்கு நஷ்டஈடா அரசாங்கம் கொடுத்த மூணு லட்ச ரூபாயை வெச்சு எல்லா கடனையும் அடைச்சிட்டேன். நந்தினி இறந்து போகுறதுக்கு முன்னாடி வரைக்கும் அவளுடைய தம்பி வேலை பார்த்துட்டு இருந்தான். இப்போ அவனுக்கு ஒரு நல்ல வேலை அமையல. அதுனால வூட்டுலதான் இருக்கான். அவனுக்காகத்தான் நிக்காம ஓடிட்டே இருக்கேன். நின்னுட்டே வேலை பார்க்குறதுனால கால் பயங்கரமா வீங்கிடும். ஆனாலும், அந்த வலியைத் தாங்கிட்டுதான் வேலை பார்ப்பேன். ஏன்னா, நான் ஒருநாள் வேலைக்குப் போகலனா என் வூட்டுல அடுப்பு எரியாது. எங்க வூட்டு குலசாமியா இருந்து எங்களை கவனிச்சிட்டு இருந்த உசுரும் எங்களை விட்டுட்டு போயிடுச்சு. என் புள்ளை வயசுக்கு வரும்போது அவளை குளிப்பாட்டிவிட்டதுக்கு அப்புறம் அவளுடைய பொணத்தைதான் குளிப்பாட்டுனேன். என்னை அம்மா மாதிரி பார்த்துகிட்ட என் அம்மை என்னை விட்டுட்டு போயிட்டா. இனி இந்த உசுரு இருந்து என்ன பண்ண போகுது.. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்னு கடவுள் என்னுடைய மொத்த சந்தோசத்தையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு போயிட்டாரு போல"னு அவர் சொல்லும்போது எதுவும் பேச தெம்பில்லாதவலாய் நந்தினியின் புகைப்படத்தைப் பார்த்தேன்.



நந்தினியின் உயிரைப் பறித்த டாஸ்மார்க் கடை இன்று பேக்கரியாக மாறியுள்ளது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு டாஸ்மார்க் கடையை மூடுவதற்கு ஓர் உயிரைப் பணையம் வைக்க வேண்டுமா என்கிற கேள்வியும், அவருடைய இறப்பினால் தவிக்கும் அவரது அம்மாவின் முகமும் என்னுடைய இரவு தூக்கத்தைக் கொன்றது.

Dailyhunt
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வழிபாடு ஏற்பாடுகளில் குளறுபடி! - பக்தர்கள் அவதி 



திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான், விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயரும் சனிப்பெயர்ச்சித் திருவிழா இனிதே நடந்து முடிந்தது.

"அப்பாடா! ஒருவழியாய் சனி இன்றோடு என்னைவிட்டு விலகிவிட்டது" என்று சில இராசிக்காரர்கள் மகிழ்ந்தார்கள். "அய்யோ, சனியின் பிடியில் அகப்பட்டுக் கொண்டேனே" என்று சில இராசிக்காரர்கள் அலறுகிறார்கள்". இப்படி சனிபகவான் எல்லோரையும் ஆட்டுவிப்பதால் அனைத்து ராசிக்காரர்களுமே இந்நாளில் சனீஸ்வரனை வந்து தரிசித்துப் பலனடைய விரும்புகிறார்கள். சிறப்புப் பேருந்துகள், இணைப்பு ரயில் பெட்டிகள், ஆயிரக் கணக்கான தனியார் வாகனங்கள் என முதல்நாளே லட்சக் கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு வந்து குவிந்துவிட்டனர். அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட தங்க வாகனத்தில் அமர்ந்து சனீஸ்வரர் அருளாசி தந்தார். அனைத்து விடுதிகளிலும் பக்தர்கள் தங்க இடமின்றி நிரம்பி வழிந்தன.



முதலில் நளன் குளத்தில் நீராடி, கலிதீர்த்த விநாயகரை தேங்காய் உடைத்து வணங்கிய பிறகு, சனீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பதால், இன்று அதிகாலை ஒரு மணி முதல் பக்தர்கள் நளன் குளத்தில் நீராட ஆரம்பித்துவிட்டனர். நளன் குளத்தைச் சுற்றிலும் படிகட்டுகள் அமைத்து ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் நீராட வசதி செய்யப்பட்டிருக்கிறது. அழுக்கு நீர் வெளியேறவும், புதிய நீர் உட்புகவும் மோட்டார்கள் பொறுத்தப்பட்டுள்ளன. குளத்தைச் சுற்றிலும் இலவசக் கழிப்பறைகள், பெண்கள் உடைமாற்றும் அறைகள் என வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குளத்தில் பழைய ஆடைகளை விடுவது தவறான அணுகுமுறை என்று அறிவுறுத்தப்பட்டப் போதிலும், பக்தர்கள் அதே தவறை மறுபடியும் செய்திருந்தனர்.



முன்பெல்லாம் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் சனிபகவானை மட்டுமே தரிசிக்க முடியும். தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய முறையால் ரூ.200, ரூ.500 கட்டணம் செலுத்தும் பக்தர்களைப் போலவே இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் சுவாமி, அம்பாள், சனீஸ்வர பகவானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதிலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய தவறிவிட்டார்கள்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்குக் கழிவறை, குடிநீர், சிற்றுண்டி என வசதிகள் செய்துக் கொடுத்திருக்கிறார்கள். முதியவர்கள், நீண்ட நேரம் நிற்கமுடியாத நோயாளிகள் சிரமின்றி தரிசிக்கத்தான் ரூ.500 கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால், எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. ஐந்து மணிநேரம் கால்கடுக்க நின்றும் பிரதான வாசலைக்கூட அடையமுடியவில்லை. எங்களுடன் வந்த முதியவருக்கு இரண்டு கால்களுமே வீங்கிவிட்டன. இதற்குக் காரணம், போலீஸ்காரர்களுக்கு வேண்டியவர்கள் எல்லாம் எவ்வித கட்டணமுமின்றி வி.ஐ.பி. கேட் வழியாக உள்ளே விடுவதுதான். காவலுக்கு வந்தவர்கள் எங்கள் தரிசனத்தை கெடுப்பது என்ன நியாயம்?" என்று குமுறினர்.

'நளன் தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, என்னை தரிசனம் செய்வோருக்கு என்னால் துன்பங்கள் நேராது என்றும், தன்னை வழிபடுவோருக்க தோஷ நிவர்த்தி அளித்து, நீண்ட ஆயுளையும், நற்பலன்களையும் தருவேன் என்றும் இங்குள்ள சனீஸ்வர பகவான் வரமளித்துள்ளார்' என்கிறது தலப்புரணம்.

பலவண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சனீஸ்வர பகவான் சன்னதிக்கு காலை 9.25 மணிக்கு தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மேளதாளத்துடன் அழைத்துவரபட்டார். அங்கு புதுவை அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், புதுவை டி.ஜி.பி. சுனில் கவுதம், மாவட்ட கலெக்டர் கேசவன், கோயில் நிர்வாக அதிகாரி விக்ரந்தராஜா ஆகியோர் வரவேற்றனர். சனீஸ்வரருக்கு பல்வேறு வகையான வாசனைப் பொருள்களால் சிறப்பு அபிஷேக அராதனைத் தொடங்கியது. சரியாக 10.01 மணிக்கு சனீஸ்வர பகவான் இடபெயர்ச்சியடைந்ததை உணர்த்தும் விதமாக மகாதீப ஆராத்தி காட்டப்பட்டது. சுமார் 4 லட்சம் பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்தார்கள்.



மதியம் 2.00 மணி வரை வானம் மேகமூட்டமாய் பக்தர்களுக்கு வெயில் இல்லாமல் ஒத்துழைத்தது. அதன்பின் லேசான மழைச்சாரல் என்றாலும், அதனைப் பொருட்படுத்தாமல் பக்தாகள் சனீஸ்வர பகவானை தரிசித்த வண்ணம் இருந்தனர். தற்போது தனுசு ராசிக்கு வந்துள்ள சனிபகவான், இரண்டரை ஆண்டுகாலம் வாசம் செய்தபின் அடுத்து 2020 டிசம்பர் 27ம் தேதி மகர ராசிக்கு இடம்பெயர்வார் எனக் கூறப்படுகிறது.

Dailyhunt

சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை 



ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இராசாமணி அறிவித்துள்ளார்.

மார்கழி மாதம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பகல் பத்து இராப் பத்து உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் இறுதிநாளான வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். இதற்காக பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஶ்ரீரங்கம் வருவார்கள். அந்தவிழா இந்த ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோயிலில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த பரமபத வாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்துக்கு வரும் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணையிடப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி அறிவித்துள்ளார்.
Dailyhunt

  Power shutdown areas in Chennai on 20-12-17


Posted on : 19/Dec/2017 15:37:18

 
 
 
Power supply will be suspended in the following areas on 20-12-17 between 9.00 A.M. to 4.00 P.M. for maintenance work. Supply will be resumed before 4.00 P.M. if the works are completed.

THIRUVERKADU AREA: P.H.road, Velappanchavadi part, Macono estate, Ram nagar, Green park, Kasturi bai avenue, Aravind nagar, Sundra vinayagar nagar, Sundra chalapuram, Ashok Nandavanam, Balaji nagar, Noombal road, Mookambigai nagar, Puliambedu road, Pillayar Madanthangal, Maruthi nagar, Sridevi nagar & Krishna nagar, Noombal village.

RADHA NAGAR AREA: Entire Radha nagar, Ganapathypuram, Nelimichery, Shanthi nagar, Kannan nagar, Zamin Royapettah, Subhash nagar, Senthil nagar, Gandhi nagar, Postal nagar, A.K. nagar, Periyar nagar.

NEWS TODAY 28.01.2026