Sunday, December 24, 2017

RK Nagar bypoll results: Money power has won, DMK leader says

B Sivakumar | TNN | Updated: Dec 24, 2017, 17:47 IST

DMK leader Durai Murugan says democracy has lost in RK Nagar

AIADMK minister Sellur K Raju says the byelection result will not affect the party

Sasikala’s brother V Divakaran says the win is very big.

Supporters of TTV Dhinakaran celebrate in Chennai on Sunday




CHENNAI: As sidelined AIADMK leader and independent candidate TTV Dhinakaran established a clear lead in the RK Nagar byelection, the DMK on Sunday said democracy has lost in the assembly constituency and money power has won.

"Money has eaten all DMK votes. In RK Nagar constituency, money power has won and democracy has lost," said.

AIADMK minister Sellur K Raju said the byelection result would not affect the party. "The AIADMK is a big tree and nobody has born to kill the tree. Some branches might fall but not the entire tree," said Raju.

ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?


தினகரன் | கோப்புப் படம்: ஆர்.அஸ்வின்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் முடிவுகள் டிடிவி தினகரனுக்கு சாதகமாக வீசத் தொடங்கியதும் அரசியலில் கணிக்க முடியா குழப்பம் உருவாகிவிட்டது. எம்ஜிஆர் நினைவு நாளை அனுசரிக்க வெற்றிமாலையோடு யார் செல்வார்கள் என்று இன்று காலை வரை நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது. ஆனால் அதிமுகவில் அடுத்த கட்ட போக்குகள் எப்படி இருக்கும், அதிமுக ஆட்சியில் நிலைத்தன்மை இருக்குமா என்பதற்கான கேள்விகளுக்கு இப்போது முடிவு கிடைக்கப் போவதில்லை. டிடிவி தினகரனின் இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் என்று அரசியல் நோக்கர்களாலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. வெற்றி வெற்றிதான் வேறொன்றும் சொல்வதிற்கில்லை.
ஆர்.கே.நகர் தேர்தலில் அரசு அதிகாரம், ஆளும் கட்சியின் காவல்துறை, திமுகவின் செயல் தலைவர் வியூகங்களையும் தாண்டி தினகரன் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் மிகையில்லை. எதிரிகளாலும், துரோகிகளாலும் சூழப்பட்டிருந்த சூழலிலும் அசராமல் அதை எதிர்கொண்டு நின்று அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்து தினகரன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அதனால் அவரை மதிப்பிட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
அரசியல் சுழலில் சகிசலா குடும்பம் சறுக்கிக் கொண்டிருக்கும் காலம் இது. அதிகாரம் இல்லாத நிலையில் அரசியலில் தாக்குப் பிடித்து நிற்பதே பெரிய வலிமைதான். அதை மிகச் சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். ஊடகங்களுக்கு கடுகடுத்ததில்லை, எல்லா நேரத்திலும் எல்லா கேள்விகளையும் எதிர்கொள்கிறார். வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கும் வழக்குகள், அச்சுறுத்தும் அந்நிய செலாவணி வழக்கு, திகார் சிறை, ஓட்டுக்கு பணம், டோக்கனுக்கு பணம், பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் என எத்தனையோ சிக்கல்களை சந்தித்திருந்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் தினகரன் தன் அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
திமுகவின் செயல்பாடுகள் ஸ்டாலினை சுற்றி இயங்கத் தொடங்கியதும், கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை என இறுமாந்திருந்தார் ஜெயலலிதா. அந்த நேரத்தில்தான் வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு அவரை இறுக்கிச் சுற்றியது. அதன் இறுதிச் சுற்றை எதிர்கொள்ளும் நேரத்தில் அவர் உயிருடன் இல்லை. வழக்கின் தீர்ப்பு அவரது தோழியை பெங்களூரு சிறைக்கு அனுப்பியது. ஆனால் ஜெ.உடனான 30 ஆண்டுகால நட்பில் சேர்க்கப்பட்ட சொத்துகள், புகார்கள் குறித்தெல்லாம் பேசினால் சட்டத்தின் அனைத்து ஷரத்துகளிலும் வழக்கு தொடுக்கலாம் என்பார்கள் அரசியல் நோக்கர்கள். அந்த அளவுக்கு புகார்களோடு வாழ்ந்தவர் சசிகலா என்றால் மிகையில்லை. எனினும் என்ன ஏ பிளஸ் பி 2 = ஏபி 2 என்கிற விதிப்படி 'அம்மா'வின் விசுவாசிகள் அருமைத் தோழிக்கும் விசுவாசிகள் ஆகினர்.
திரைக்கதையின் சுவாரஸ்யமே, இந்த இடத்திலிருந்து உருவான டிடிவி தினகரனின் பாத்திரம் தமிழக அரசியலில் இப்போது மையம் கொண்டுள்ளதுதான். அவரது முதல் அத்தியாயக் காட்சிகள் வரலாற்றின் மங்கிய காட்சிகள். ஆனால் அதைத்தான் அவரது அரசியல் எதிரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் நடப்புக் கணக்குகள்தான் அவரது கவுரவப் பிரச்சினையாக இருந்தது.
ஆட்சி அதிகாரம் நோக்கி சசிகலா நகர்ந்தபோது ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்த போராட்டம்தான் அதிமுகவில் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கிவைத்தது. சசிகலாவை முன்னிறுத்தி அதிமுகவையும், ஆட்சியையும் தொடர்வது கவுரவமாக இருக்காது என்பதால் ஓபிஎஸ்ஸுக்கு மறைமுகமாக பாஜக கொடுத்த அஜண்டாதான் அந்த தர்ம யுத்த போராட்டம் என்கிற பேச்சும் இருந்தது. சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன் தனக்கு விசுவாசமானவர்கள் என்றுதான் கட்சியை தினகரனிடமும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும் பிரித்து அளித்துவிட்டுச் சென்றார். ஆனால் தர்மயுத்தப் போராட்டம் ஈபிஎஸ் வரை தொடர்கிறது. ஆட்சியில் தினகரன் தலையிட்டார் என்பதால் ஈபிஎஸ் எதிர்த்துக் கொள்ளவில்லை. இந்த முறையும் மறைமுக அஜண்டாதான் தினகரனை பதம் பார்த்தது.
சசிகலாவும், தினகரனும் மதவாத எதிர்ப்பாளர்கள், திரும்பவும் திராவிட ஆட்சியைத் தக்கவைக்க நினைப்பவர்கள் என்பதால் பாஜக எதிர்த்து விடவில்லை. ஆட்சி அதிகாரம் மறைமுகமாக தங்கள் எல்லைக்குள் இருப்பதுபோல பாஜக தனக்கான ஆதரவு ஆட்களை அதிமுகவுக்குள் உருவாக்கி கொண்டதுதான் விசுவாசிகளிடையே பிளவை உருவாக்கியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதிகாரத்தை இழந்த ஓபிஎஸ், இழக்க விரும்பாத ஈபிஎஸ் இருவரையும் பின்னாளில் இணைந்ததும் அல்லது இணைத்ததும் வரலாறு ஆனது.
அதற்குப் பின்னர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை வேறு யாரேனும் சந்தித்திருப்பார்கள் என்றால் அரசியலில் இருந்தே விலகியிருப்பார்கள். திகார் சிறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம், ஆதரவாக நின்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிப் பறிப்பு, சகிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி சோதனை என எல்லாவற்றையும் சந்தித்தார். ஆனாலும் எல்லா நெருக்கடிகளிலும் தமிழக அரசியலைத் தாண்டி அவர் விமர்சனங்களை செய்ததில்லை.
கட்ட கடைசியாக அவரது அரசியல் அத்தியாயத்தை இறுதி செய்யும் விதமாகத்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிப்பு. கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளராக இருந்தாலும், கட்சிக்குள் அவர் இல்லை. இரட்டை இலை சின்னம் இல்லை, அதிமுக கொடி இல்லை, கடந்த தேர்தலில் கிடைத்த தொப்பி சின்னமும் இல்லை என களம் இறங்கினார்.
ஆளும்கட்சி பலம் பொருந்திய மதுசூதனன், வலிமையான எதிர்க்கட்சியாக திமுகவின் மருதுகணேஷ் என போட்டி பலமாக இருந்தாலும் சுயேச்சை வேட்பாளராக சற்றும் சளைக்காமல் அவர் நடத்திய போராட்டம் தேர்தலை சுவாரஸ்யமாக்கியது.
தமிழக அரசியலில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பழுத்த அரசியல்வாதிகள்கூட டிடிவி தினகரனின் தேர்தல் வியூகத்தைக் கண்டு வியந்து நிற்கின்றனர். மாற்றுக் கட்சியில் உள்ள நிர்வாகிகள் மிரள்கின்றனர். இறுதியில் வெற்றிபெறுவது யார் என்பதுதான் தேர்தலில் விதி. இங்கு நியாய தர்மங்களுக்கு இடமில்லை. எப்பாடுபட்டாவது ஜெயிக்க வேண்டும். இதற்கான விடைதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள். இதன்மூலம் தமிழக அரசியலில் அவரது இருப்பும் உறுதி செய்யப்ட்டுவிட்டது.
சாதி ரீதியாகத் தினகரனுக்குக் கிடைக்கிற ஆதரவு மிகப் பெரியது. மறைமுகமான அதிமுகவினரின் ஆதரவு மட்டுமல்ல, அவரது அணுகுமுறையால் மாற்றுக் கட்சியினரும் அவர் மீது அனுசரணையான போக்கையே கடைபிடிக்கின்றனர் என்பதும் உண்மை. ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமாக உள்ள நாடார் சமுதாய வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகளும், பெண்களின் வாக்குகளும் டிடிவி தினகரனுக்கே பெரும்பாலும் கிடைத்திருக்கிறது.
இந்த வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன என ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். பணம், செல்வாக்கு, அல்லது ஆளுங்கட்சி மீதான அதிருப்தி என குறிப்பிடலாம். ஆனால் பிரதான வேட்பாளர்கள் பிறரும் இதே வழிமுறையை கையாண்டவர்களே என்பதையும் மறுக்க முடியாது. எனவேதான் அரசியல் நோக்கர்களாலும் டிடிவி தினகரனின் இந்த வெற்றியை கணிக்க முடியவில்லை.
தினகரன் ஆர்.கே நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது உறுதியாகிவிட்டது. இத்தகைய சூழலில் அரசியல் போக்குகளும் மாறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி எம்எல்ஏக்களில் சிலர் அணி தாவவும் வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பினைப் பொறுத்து அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு தீர்மானிக்கப்படலாம். முடிவு சாதகமாக அமைந்தால் அதிகபட்சமாக யோசித்தால் அது ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்கும்.
இந்த வெற்றியை வைத்து கட்சி அணியினரின் கணிசமாக நம்பிக்கையையும் தினகரன் பெறுவார் என்றே நம்பத் தோன்றுகிறது. ஒருவேளை அதிமுக தினகரனின் கைகளுக்குச் சென்றால், காலம் கனியட்டும் என காத்திருக்கும் திமுக தரப்புக்கு போட்டியாக உருவாகி நிற்பார் என்பதே உண்மை.
அதே நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வெற்றி மட்டுமே பொதுத்தேர்தலுக்கான முன்னுரையும் அல்ல. ஆனால் தினகரனின் வளர்ச்சி, பாஜகவிற்கு எதிரானதல்ல, திமுகவிற்கு எதிரானது. அதிமுகவை உயிர்ப்பிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். இதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளிலிருந்து திமுகவும், மற்ற கட்சிகளும் புரிந்து கொண்டால் நல்லது.

கே.பி. எனும் அபூர்வராகம்!


தமிழ் சினிமாவில், டைரக்டர்களின் படம் எனப் பேர் கிடைத்தது இயக்குநர் ஸ்ரீதர் படங்களைப் பார்த்துத்தான் என்பார்கள். அதையடுத்து டைரக்டர் டச் என்று எல்லோரும் சொல்லிப் புகழ்ந்ததற்குக் காரணம் கே.பி. எனும் கே.பாலசந்தர்தான்!

எம்.ஜி.ஆர். சிவாஜிகளின் புகழில் குளிர்காயவில்லை. தன் கதையையும் நல்ல கதையையும் மட்டுமே நம்பினார். அடுத்த தலைமுறைக்கு அதாவது எம்.ஜி.ஆர். சிவாஜி இடத்துக்கு இரண்டு பேரை உருவாக்கியவர் அவர்.
எனக்குத் தெரிந்து கட்டுப்பெட்டியாக அடைக்கப்பட்டு வெளியே வந்த பெண்களை, அச்சு அசலாக வார்த்துக் காட்டியது பாலசந்தர் படங்களே!
எல்லோரும் ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தபோது இவர் யுடர்ன் அடித்து இன்னொரு பக்கமாகச் செல்வார். ஜெமினிகணேசனை வைத்தும் படம் பண்ணுவார். ஜெய்சங்கரைக் கொண்டும் கதை சொல்லுவார். முதல் இயக்கமான நீர்க்குமிழியில் நாகேஷ்தான் நாயகன்.
கமல், ஜெய்கணேஷ், விஜயகுமார் இருந்தாலும் சுஜாதாவைப் பிரதானமாக்கி, அவர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதையையும் அந்தக் கவிதாவையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

எல்லோரும் எம்.எஸ்.வி. கேவி மகாதேவன் என்று அவர்கள் பக்கம் போகும்போது, வி.குமாரை அடையாளம் காட்டினார். ’காதோடுதான்...’ என்ற பாடல் வி.குமார் இசை என்பது பலருக்கும் தெரியாது. எம்.எஸ்.வி. என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல், வி.எஸ்.நரசிம்மன். மரகதமணி.

எனக்குத் தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களை கலர் பட காலகட்டத்திலும் அதிகமாய் எடுத்தது பாலசந்தராகத்தான் இருக்கும்.

இன்றைக்கு ரெண்டு மணி நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம். ஆனால் ஹீரோ பேர் மறந்து கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி... என நிரம்பி வழியும் கே.பி.யின் படங்களில்!

தனக்கு என்ன பிடிக்குமோ... அது அரைக்கை சட்டை, கையில் கயிறு, விபூதி, காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், சோடாபுட்டி கண்ணாடி என தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் இயக்குநர்களுக்கு மத்தியில், அவள் ஒரு தொடர்கதை விகடகவி கோபால், அவர்கள் ராமனாதன், அபூர்வ ராகங்கள் பிரசன்னா, சிந்துபைரவி ஜே.கே.பி. மனதில் உறுதி வேண்டும் நந்தினி, எதிர்நீச்சல் மாது, வறுமையின் நிறம் சிகப்பு திலீப், நினைத்தாலே இனிக்கும் சந்துரு, அவர்கள் அனு, அபூர்வ ராகங்கள் பைரவி... என ஒவ்வொரு கேரக்டர்களிலும் உயிர்ப்பு... ஜீவன்! அதுதான் கே.பி. டச்!

ஊருக்குப் போய்விட்டதைக் காட்ட ரயிலைக் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்துப்பையன்கள், ஒருவர்பின் ஒருவராகச் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ரயில் மாதிரி செல்வதைக் காட்டுவார். ஒரு வாரத்தைக் காட்ட, படபடவெனப் பறக்கும் தினசரிக் காலண்டரைக் காட்டுவார்கள். கல்கி, விகடன் என ஒவ்வொரு நாளும் வருகிற புத்தகங்களைக் கொண்டே ஒருவாரத்தைக் காட்டியிருப்பார்.

பூவா தலையா படம். அத்தைக்கு கட்டுப்படும் மருமகப்பிள்ளை. தலையாட்டி பொம்மை ஆடுவதையும் பீரோவில் தொங்கும் சாவிக்கொத்தையும் காட்டியிருப்பார்.

படத்தில் இருமல் தாத்தா, அவர்கள் பொம்மை, டெலிபோன், அருவி, ஃபடாபட் எனும் சொல், அவள் ஒரு தொடர்கதை வில்லனின் கை மடக்கி விரிக்கும் ஸ்டைல் என கே.பி. விடும் ரகளைக்கும் அவரின் ரசனைக்கும் பஞ்சமே இல்லை.

அழுகாச்சி கேரக்டராகவே செளகார் ஜானகிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா என்று எதிர்நீச்சலிலும் தில்லுமுல்லுவிலும் வாய்ப்பை வழங்க, அதைக் கொண்டு அதகளம் பண்ணியிருப்பார் செளகார் ஜானகி.
எதிர்நீச்சல் படத்தில், திருடி விட்டு மாட்டிக் கொள்வார் தேங்காய் சீனிவாசன். அடித்ததில் விழுந்திருப்பார். போலீஸில் சொல்லிவிடலாம் என்று ஒருவர் சொல்ல, ‘வேணாம் சார். விழுந்துட்டாரு. எழுந்திருக்கும் போது, நல்லவனாத்தான் சார் எழுந்திருப்பாரு’ என்று வசனம்.
அவள் ஒரு தொடர்கதையில், ‘என்ன... பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா’ என்று விஜயகுமாரின் அம்மா கேரக்டர் சொல்ல, ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்று சட்டெனச் சொல்லுவார் சுஜாதா.

நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா, தலையை ஆட்டி ஆமாம் சொல்லிவிட்டு, பிறகு மெல்ல மெல்ல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிவிட்டு, இல்லை என்று சைகையில் சொல்வதை, செய்யாத, செய்து பார்க்காத ரசிகர்களே அப்போது இல்லை.

காட்சி கவிதையாய் இருக்கும். பாடலில் கதையே சொல்லப்படும். வசனத்தில் அவ்வளவு ஷார்ப் வைத்திருப்பார். நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் குடிகொண்டிருக்கும்.
தட் இஸ் கமால் சொல்லும் சொல்லத்தான் நினைக்கிறேன், எவ்ளோ பெட்டு கேட்கும் கவிதாலயா கிருஷ்ணா, முடிச்சுகள் போடும் நட்ராஜ், கையசைப்பில் வாயசைக்கும் ஜூனியர், ஃபடாபட், ரெண்டு கை பத்தலை எஸ்.வி.சேகர், அந்த திலீப் எனும் கேரக்டரே இல்லாத கேரக்டர், விளக்கை அணைத்து எரிய வைத்து அணைக்கும் லவ் சிக்னல்... எல்லாவற்றுக்கும்
மேலாக தண்ணீர் தண்ணீர் வறட்சியும் அச்சமில்லை அச்சமில்லை அருவியும் பொளேர், ஜிலீர்!

தமிழ் சினிமாவில், திருவள்ளுவரையும் பாரதியையும் இவரளவுக்கு எவரும் கொண்டாடியதே இல்லை. அவர்கள் மீதும் அவர்களின் தமிழின் மீதும் அப்படியொரு காதல் அவருக்கு!
இன்றைக்கு இருக்கிற இயக்குநர்களாகட்டும் இனி வரப்போகிற இயக்குநர்களாகட்டும் கே.பாலசந்தரின் ஒவ்வொரு படங்களும் அவர்களுக்கான பாடங்கள்!
இயக்குநர் சிகரத்தின் நினைவு நாள் இன்று. சிகரம்... சினிமாவுக்குச் சூட்டிய மகுடங்களை நினைவுகூர்வோம்.

நெட்டிசன் நோட்ஸ்: 'வேலைக்காரன்'- போராட்டக்காரன்


வேலைக்காரன் படத்தில் ‘சிவகார்த்திகேயன், நயன்தாரா’
சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நேர்மறை விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் இப்படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்….

Monica Vignesh
 
‘வேலைக்காரன்’ செம படம்.
விறுவிறுப்பான சீன்ஸ் + மாஸ் ஸ்கிரீன் ப்ளே. எல்லாமே சரியான விதத்துல அமைந்த ஒரு திரைப்படம்.

Raja Sundararajan

இவன் லோ கிளாஸ்; அவ மிடில் கிளாஸ் வில்லன் ஹை கிளாஸ். அதேதான், வர்க்கப் போராட்டம். “உலகத்தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!”
இயக்குநர் தன்னோட ‘தனிஒருவன்’ படத்துல போலவே ஒரு சமூகப் பிரச்சனைய கையில எடுத்திருக்கிறார். அதுல மருந்து; இதுல உணவுப்பொருள், சூப்பர்மார்க்கெட், சந்தைப் பொருளாதாரம்.

சின்ன ஜெயங்கொண்டார்

‘வேலைக்காரன்’ படத்தோட மிகச் சிறந்த வேலைக்காரன் மோகன் ராஜா. வசனம் சூப்பர். அலட்டிக்காம, அசால்ட்டா ஒரு நல்ல மெசேஜ் படம். பார்க்கலாம்...
திருவட்டாறு சிந்துகுமார்

மலையாளத் திரையுலக நடிப்பு ராட்சசன் பகத் பாசில் தமிழில் அறிமுகமாகும் படம் ‘வேலைக்காரன்’. படத்தில் சிறந்த நடிப்புக்காக பெயரைத் தட்டிக்கொண்டு போகப்போகிறவர் அவர்தான்

விக்னேஷ் சி செல்வராஜ்

கிராமத்து கதையோ.. சிட்டி சப்ஜெக்டோ.. ஹீரோயினோடு காதல், பிரிவு, கொஞ்சம் சென்டிமென்ட், நான்கு பாடல்கள், அதில் ஒன்று காதல் தோல்விப் பாடல் என வழக்கமான ரூட்டில் பயணிக்காமல் இந்த முறை வேறுமாதிரி இறங்கி அடித்திருக்கிறார் சிவா.
Sam Nathan

விஜய் நாம் தமிழர் கொள்கைகளுக்கு படம் பண்ணார். சிவா கம்யூனிஸ்டுக்கு படம் பண்றார். அரசியல் ஆவாதுன்னு சினிமா பக்கம் வந்தா இங்க சூர அரசியலா இருக்கு. ஏய்யா இப்டி.

Muralidharan Kasi Viswanathan

இந்தப் படத்தின் முக்கியமான பஞ்ச் வசனம், "சிறந்த சொல், செயல்" என்பது. ஆனால், படத்தில் வெறும் சொற்கள் மட்டுமே கொட்டிக்கொண்டேயிருக்கின்றன.

Elambarithi Kalyanakumar

Saffronக்கு தமிழ்ல காவினு அர்த்தம். காவினாலே பிரச்சினைதானே. #வேலைக்காரன்

Suresh

முதலாளிகளால உருவானவன் மட்டும் வேலைக்காரன் இல்லை , அந்த முதலாளிகளையே உருவாக்கறது இந்த வேலைக்காரங்கதான் அப்படிங்கிற ஒரு அடிநாதம்தான் இந்த படம்.

Rajavel Nagarajan

சிவகார்த்திகேயனுக்கு வெற்றி புதிதல்ல. ஆனால் இது பெருமையான வெற்றி!
‘வேலைக்காரன்’ - நேர்மையான வெற்றிக்கு சொந்தக்காரன்!

Sureshkumar Madurasi M

சிவகார்த்திகேயன், காலத்தின் கட்டாயம். அது நிகழ்ந்தே தீரும்! That's all.

முத்து பாண்டி தமிழன்

#வேலைக்காரன் - ஒவ்வொரு வேலைக்காரனும் பார்க்க வேண்டிய படம்
#சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் தலைசிறந்த படம்.
உலகின் தலைசிறந்த சொல் #செயல்
இப்படிக்கு உங்களில் ஒரு #வேலைக்காரன்.

 Senthilraj Paulraj

#வேலைக்காரன் – நீ..ண்ட திரைக்கதையோடு கூடிய நல்ல படம்.

லாஜிக் கம்மியா இருந்தாலும் மெசேஜ் மட்டுமே படத்திற்கு பலம்,

மணிகண்டன்

சினா.கானா நீ கலக்குய்யா.

Santhosh Av Kamalraj

புழுதி படிஞ்ச ஃப்ரேம்ல வர்ற படத்தோட முதல் 30 நிமிஷம், கன்னட கமர்ஷியல் பட பாணியில கொஞ்சம் டல் அடிக்க, அடுத்து 30 நிமிஷம் எம்பிஏ படிச்சிக் கூடத் தெரிஞ்சிக்க முடியாத பல விஷயங்களை நமக்கு எளிமையா சொல்லித்தர, இண்டர்வெல்'ல ஒரு பெரிய கேள்வியோட நம்மள விடுறாங்க.

அந்த கேள்விக்கு பதில் தேட முயற்சி செஞ்சி இருக்குறதுதான் இரண்டாம்பாதி.

Vinod Thirumeni

அடேங்கப்பா அபார வளர்ச்சி.....காசி தியேட்டர் ல கூட்டம் கூடுனது அசோக் பில்லர் வரைக்கும் ட்ராபிக் ஜாம்... #சிவகார்த்திகேயன்

Sathya RA

#வேலைக்காரன் - போராட்டக்காரன்

10 படம் நடிச்ச ஹீரோக்கு நிறைய தியேட்டரில் அதிகாலை 5 மணி ஸ்பெஷல் ஷோ. சிவகார்த்திகேயன் உண்மையிலயே உச்சத்தை தொட்டுள்ளார் என்பதை இது உணர்த்துகிறது. அதைத் தக்கவைக்க வேலைக்காரனாக இறங்கி போராடியிருக்கிறார் ..!
எடுத்துக்கிட்ட விஷயமும், கதையும் செம. மக்களுக்கு எளிதில் புரிய வைக்க கார்ப்பரேட் மார்க்கெட்டிங் பத்தின வசனங்கள் நிறைய வருகிறது. படமும் நீண்டுகொண்டே செல்கிறது; அதுவே விறுவிறுப்புக்குத் தடையாகவும் இருக்கிறது..!!

வேலைக்காரி @Ramhyyash

‘வேலைக்காரன்’ படம் பார்த்த பிறகு மன வேதனையடைந்தேன். எங்கள் நிறுவனத்தின் சிஇஓ என்ற முறையில் என் அதிகார வரம்பின் கீழ் நடக்கும் குற்றங்களை இனித் தட்டிக் கேட்பேன் #Velaikkaran

Danny‏ @Liben_Danny

வேலைக்காரன் படம் நல்ல சோஷியல் மெசேஜ் சொல்லி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பலமா அழுத்தமா சொல்லி இருக்கலாம். கத்தி மாதிரி படங்கள் பார்த்தப்போ மனசுல உண்டான ஒரு பாதிப்பு இந்த படத்துல வரல

சினிமாபுரம் @cinemapuram
நான் இனிமேல் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்னு SivaKartikeyan சொன்னப்போ- அப்போ புரியல... இப்போ புரியுது.

ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா‏ @UlaguOfficial

வேலைக்காரன் இரண்டாம் பாதி அரட்டை அரங்கம் மாதிரி போய்க்கிட்டு இருக்கு... பேச்ச கொறைங்கப்பு.

Ag Sivakumar

பெரிய பட்ஜெட், முன்னணி தொழில்நுட்பக்குழு, நயன்தாரா, மோகன் ராஜா என படை பரிவாரங்களுடன் களமிறங்கும் சிவா, வேலைக்காரனுக்கு காலை 5 மணிக்காட்சியை தியேட்டர்கள் ஒதுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இனி ‘ரெமோ’ போன்ற விஷப்பரீட்சைகளில் ஈடுபடாமல் தனது பாணி நகைச்சுவை மற்றும்’ வேலைக்காரன்’, ‘எதிர்நீச்சல்’ போன்ற சீரியஸ் படங்கள் என மாற்றி மாற்றி ட்ராக் ஓட்டலாம்.

வங்கிகளின் வாராக் கடன்களை வசூலிக்காமல் மக்களின் டெபாசிட் தொகையை குறிவைக்கும் புதிய சட்டம்: தொழிற்சங்கத் தலைவர் தாமஸ் பிராங்கோ குற்றச்சாட்டு

ஓவியம்: சதீஷ் வெள்ளிநேழி 

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-ம் ஆண்டின் நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளை நாசமாக்கும் ஆபத்து மிக்க இந்த மசோதா கைவிடப் பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் தற்போது தீவிர பிரச்சாரம் நடைபெறுகிறது. இவ்வாறு இந்த மசோதாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவர் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ். இந்த மசோதா தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்னிலையிலும் ஆஜராகி, மசோதா கைவிடப்பட வேண்டும் என்று வாதாடியிருக்கிறார் பிராங்கோ.
புதிய மசோதா பற்றி ‘தி இந்து’ சார்பில் அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து..
 
நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதாவில் அப்படி என்ன ஆபத்து இருக்கிறது?
 
இந்திய பொதுத்துறை நிதி நிறுவனங்களைக் காக்க இதுவரை பெயில்-அவுட் என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது. இந்தக் கொள்கையின்படி எந்த பொதுத்துறை வங்கியும் திவாலாக, நமது அரசு அனுமதிக்காது. ஒரு வங்கி நலிவடைய நேர்ந்தால், அரசே நிதியுதவி செய்து வங்கியைக் காப்பாற்றும்; இல்லாவிட்டால், வேறொரு வங்கியுடன் இணைக்கப்படும். பாங்க் ஆப் தஞ்சாவூர், பாங்க் ஆப் தமிழ்நாடு, பாங்க் ஆப் கொச்சின் என இதுபோன்ற பல வங்கிகள் பிற பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டடுள்ளன. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கோ, வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அவர்களுக் கான வங்கி சேவை தொடர்ந்து கிடைத்தது.
தற்போதைய புதிய மசோதாவின்படி பெயில்-இன் முறை அமலுக்கு வரும். இனிமேல் நலிவடையும் நிலையில் உள்ள வங்கிகளுக்கு அரசு நிதியுதவி செய்யாது; அந்த வங்கி மேலும் நலிவடைந்து திவாலாக அனுமதிக்கப்படலாம். அந்த நிலையில், அந்த வங்கியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி புதிதாக அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம் முடிவு செய்யும். தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வேறு அமைப்புகளிடம் அந்த வங்கியின் நிர்வாகம் ஒப்படைக்கப்படும். பெரும்பாலும் தனியார் கைகளுக்குதான் அரசு வங்கி செல்லும். இந்த சூழலில் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு முழு தொகையும் கிடைக்காது. ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும். டெபாசிட் தொகையில் எத்தனை சதவீதம் திருப்பித் தரலாம் என்பதை தீர்வுக் கழகம்தான் தீர்மானிக்கும்.

டெபாசிட்டின் பெரும்பகுதி வங்கியின் முதலீடாக மாற்றப்பட்டு, அதற்கு ஈடான பங்குகள் டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்படலாம். ஆக, திவாலாகும் நிலைக்குச் செல்லும் வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை பயன்படுத்தப்படும். இதனால் இந்திய மக்களின் சேமிப்புத் தொகை அபகரிக்கப்படுவதோடு, வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையும் அடியோடு அறுத்தெறியப்படும்.
தாமஸ் பிராங்கோ   -  thomas
இந்த மசோதா தொடர்பாக மக்களிடம் வேண்டுமென்றே சிலர் பீதி கிளப்புவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறாரே?
எங்கள் வாதம் கற்பனையானது அல்ல; வரைவு மசோதாவில் உள்ள ஷரத்துகளின் அடிப்படையிலேயே பேசுகிறோம். பெயில்-இன் முறை; வங்கிகள் திவாலாக அனுமதிக்கலாம்; வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைக் கொண்டு வங்கியை நிர்வகிக்கலாம்; டெபாசிட் தொகை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பது உள்ளிட்ட பாதிப்புகள் மசோதாவின் ஷரத்துகளில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த ஷரத்துகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதையும், அதில் உள்ள ஆபத்துகளையும்தான் கூறுகிறோம். அதேபோல, குறிப்பிட்ட அந்த ஷரத்தில் அப்படி ஆபத்தான எந்த அம்சமும் இல்லை என்று நிதியமைச்சரும், மற்றவர்களும் விளக்க வேண்டும். ஆனால், ஆபத்து இல்லை என்று பொதுவாக மறுக்கிறார்களே தவிர, குறிப்பிட்ட ஆபத்தான ஷரத்துகள் பற்றி விளக்கம் தர அவர்கள் தயாராக இல்லை.

அச்சமூட்டும் ஷரத்துகள் பற்றி கூற முடியுமா? 

பெயில்-இன் முறை பற்றி மசோதாவின் 32-வது ஷரத்திலும், 4-வது அட்டவணையில் உள்ள 48-வது ஷரத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. நலிவடையும் வங்கிகளுக்கு நிதியுதவி அளித்து பாதுகாக்கத் தேவையில்லை என்றும், அத்தகைய வங்கிகளை திவாலாக விட்டுவிடலாம் என்பது பற்றியும் 13-வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது. தீர்வுக் கழகத்தின் வானளாவிய அதிகாரம் பற்றியும், தீர்வுக் கழகத்தின் முடிவை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடுகூட செய்ய முடியாது என்பது பற்றியும் 65-வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஷரத்துகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் மற்றும் அவற்றின் ஆபத்துகள் பற்றித்தான் எங்களது அச்சத்தை, கவலையை வெளிப்படுத்துகிறோமே தவிர, கற்பனையாக நாங்கள் எதையும் கூறவில்லை.

ஒருவர் எவ்வளவு டெபாசிட் செய்தாலும், வங்கி திவாலானால் அவருக்கு ரூ.1 லட்சம் மட்டுமே திரும்பக் கிடைக்கும் என்றுதான் ஏற்கெனவே இருக்கும் சட்டத்திலேயே உள்ளது. அப்படியிருக்க, தற்போதைய மசோதாவால் என்ன ஆபத்து வரப்போகிறது? 

ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் என்பது உண்மைதான். 1961-ம் ஆண்டில் வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகச் சட்டம் கொண்டுவந்தபோது, வங்கி திவாலானால் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பின்னர் இந்த காப்பீட்டுத் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது.

ஆனால், அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட 1961-ம் ஆண்டுமுதல், சில கூட்டுறவு வங்கிகள் தவிர, எந்த வங்கியையும் நமது அரசு திவாலாக விட்டதில்லை. மக்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழக்க நேரிட்டது இல்லை என்பதே உண்மை. டெபாசிட்தாரர்கள் இழப்பீடு கோராத காரணத்தால், வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தில் செலுத்தப்படும் பிரீமியம் தொகை வளர்ச்சியடைந்து அந்தக் காப்பீட்டுக் கழகம் தற்போது பெரும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. 

மக்களின் டெபாசிட் தொகைக்கு இதுவரை ஆபத்து வராதபோது, இனிமேல் எப்படி வரும்?
ஏற்கெனவே கூறியபடி, இதுநாள் வரை பெயில்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. எவ்வளவு பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எந்த வங்கியையும் திவாலாக விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை யாக இருந்தது. அதனால் வங்கிகளும் திவாலாகவில்லை; மக்களின் சேமிப்புக்கும் ஆபத்து வரவில்லை.

ஆனால் இப்போதைய மசோதா சட்டமானால், பெயில்-இன் முறை நடைமுறைக்கு வரும். இதன்படி, மிக லாபகரமாக இயங்கி வரக்கூடிய பாரத ஸ்டேட் வங்கி உட்பட எந்த பொதுத்துறை வங்கியையும் திவாலாக விடலாம்; அதில் அரசு தலையிடத் தேவையில்லை என அரசின் கொள்கையும், நிலைப்பாடும் மாறுகிறது. இதனால் ஏராளமான பொதுத்துறை வங்கிகள் நலிவடையும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தனியார் கைகளுக்கு மாற்றப்படும். பொதுமக்களின் சேமிப்பு அபகரிக்கப்படும்.

கொடுத்த கடனைத் திருப்பி வசூலிக்காத வங்கிகள் மற்றும் அதனால் பல்லாயிரம் கோடியாகப் பெருகும் வாராக் கடன். இதை தடுத்து, வங்கி நிர்வாகத்தை செம்மைப்படுத்தவே இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் என்று கூறப்படுகிறதே?

வங்கி செயல்பாடுகள் பற்றியும், வாராக் கடன்கள் பற்றியும் ஒரு மாயத் தோற்றம் பலரது மனதில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வங்கி நிர்வாகம் என்றவுடனேயே மயிலாப்பூரிலோ, மணப்பாறையிலோ நாம் பார்க்கும் வங்கிக் கிளையும், அங்குள்ள மேலாளர்களும், கிளர்க்குகளும்தான் மக்களின் மனத்திரையில் தோன்றுகின்றனர். அவர்கள்தான் வங்கிப் பணத்தை கோடிக்கணக்கில் கடன் கொடுத்து, திரும்ப வசூலிக்காமல் வங்கிகளை நஷ்டப்படுத்துவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. நாம் பார்க்கும் இதுபோன்ற வங்கிகளுக்கு லட்சக்கணக்கிலோ அல்லது சில கோடிகள் வரை மட்டுமே கடன் கொடுக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறு ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் இவர்கள் கொடுக்கும் கடனில் 95 சதவீதத்துக்கும் மேல் திரும்ப வசூலித்து விடுகின்றனர்.

சாதாரண கிளைகளில் ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு, சிறுதொழில்புரிவோருக்கு, நடுத்தர வர்க்கத்தினருக்கு தொழில்புரியவும், வீடு கட்டவும், வாகனங்கள் வாங்கவும் கொடுக்கப்படும் கடன் தொகை திரும்ப வந்துவிடுகிறது. வங்கிகளின் இயக்குநர்கள், நிதியமைச்சக உயர் அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அவர்களது பரிந்துரையின்பேரில் பணக்கார தனியார் தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தான் திரும்ப வசூலிக்கப்படுவது இல்லை. அதனால்தான் வங்கிகளின் வாராக்கடன் இந்த அளவுக்கு பெருகியுள்ளது.

ரிசர்வ் வங்கியே வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்த வாராக் கடனில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடன் தொகை மட்டும் 88.4 சதவீதம். மற்ற அனைத்து தரப்புகளிடம் இருந்து வெறும் 11.6 சதவீதம் மட்டுமே வரவேண்டியுள்ளது. ஆக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு காணவே புதிய மசோதா என்பது வெறும் கண்துடைப்பான வாதம்.

அப்படியானால், மத்திய அரசு இத்தகைய முடிவுக்கு வர என்ன காரணம்? 

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அந்த நாட்டில் 452 வங்கிகள் திவாலாகின. அந்த வங்கிகளைக் காப்பாற்ற அமெரிக்க அரசால் முடியவில்லை. அதன் பிறகு, நலிவடையும் வங்கிகள் விவகாரத்தில் அரசு தலையிடுவதில்லை என்றும், அந்தந்த வங்கிகளே அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா முடிவெடுத்தது. இவ்வாறு நலிவடையும் வங்கிகளை தனியார் கைகளுக்கு மாற்றுவதற்காக ஒரு வாரியமும் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி ஜி-7 நாடுகள் அனைத்தும் இந்த வாரியத்தில் உறுப்பினராகி, தங்கள் நாடுகளில் இந்த கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கின.

வங்கிகள் அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டும் என்ற கொள்கைகளைக் கொண்ட உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளும் பின்னர் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. அதன் பிறகு இந்தியா உள்ளிட்ட ஜி-20 நாடுகளும் உறுப்பினர்கள் ஆனார்கள். அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தனியார் வசம் மாற்றும் நோக்கில் தற்போது இந்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கோஷமிடும் திரிணமூல் எம்.பி.க்கள்.
 ‘பிரதமர் மோடி எந்த சீர்திருத்த நடவடிக்கை எடுத்தாலும், அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு பிரச்சாரம் நடக்கிறது. அந்த பிரச்சாரங்களை மக்கள் ஏற்காததாலேயே, அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிறது’ என்று கூறப்படுவது பற்றி..

தேர்தல்களில் பெறும் வெற்றிகளால் மட்டுமே, பணமதிப்பு நீக்கம் போன்ற தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மக்கள் நற்சான்று வழங்கிவிட்டதாகக் கூற முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் பாதிப்புகள் மக்களுக்கு முழுமையாக தெரியவர இன்னும் அவகாசம் தேவைப்படலாம். பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகளைவிட, தற்போதைய நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டுச் சட்ட மசோதா மக்களிடம் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

வங்கிகளில் சேமிப்பு வைத்திருப்பவர்களில் மிகப் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர். தாங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த தொகைக்கு ஆபத்து என்றால் அதை நடுத்தர வர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எஸ்பிஐ உட்பட பல வங்கிகளில் உள்ள தங்கள் டெபாசிட் தொகையை மக்கள் இப்போதே வேகமாக எடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆகவே, பிற பொருளாதார நடவடிக்கைகள் போல, இந்த மசோதாவை அவ்வளவு எளிதில் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்தி விட முடியாது. மக்களிடம் எழும் பெரும் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதா நிச்சயம் கைவிடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதிய மசோதாவால் என்ன ஆபத்து?

வெளிப்படைத்தன்மை இல்லாத, உள்நோக்கம் கொண்ட மசோதா இது. தற்போது உள்ள சட்டத்தின்படி வங்கிகளை திவாலாக விடுவதும், அத்தகைய நிலை ஏற்பட்டால் தனியார்வசம் அந்த வங்கியை ஒப்படைப்பது என்பதும் எளிதானது அல்ல. தனியாருக்கு கொடுக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால், தற்போதைய மசோதாவின்படி அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம், நலிவடையும் வங்கியை தனியாரிடமோ, மற்றவர்களிடமோ ஒப்படைத்துவிட்டு, அந்த தகவலை மட்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவித்தால் போதும். மேலும், வங்கிகளை திவாலாக அனுமதிக்கலாம் என்று கூறுவதன் மூலம், லாபத்தில் இயங்கும் வங்கிகளின் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெருமளவில் கடனாகக் கொடுத்துவிட்டு, அதை முறையாக வசூலிக்காமல், வாராக் கடன் அளவைப் பெருக்கி, வங்கியை நஷ்டப்படுத்தி, இறுதியாக தனியார் கார்ப்பரேட் வசம், வங்கி நிர்வாகத்தை ஒப்படைத்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதுதான் எங்கள் பிரதான குற்றச்சாட்டு.

இனி இரவுகள் நனையாது!

சமீபத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரிடம் ‘என்ன காரணத்துக்காக மருத்துவரைப் பார்க்க வந்துள்ளீர்கள்’ என்று கேட்டதற்குப் பதில் சொல்ல மிகவும் கூச்சப்பட்டார். அவரது தாய்தான், தனது மகள் இன்னும் தினசரி தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதாகவும், அதனால் சிறுவயதிலிருந்தே ஒரு நாள் இரவுகூட உறவினர்கள் வீட்டில் தங்குவதில்லை என்றும் கூறினார்.
ஆம்னி பேருந்தில் இரவில் பயணிக்கும்போது இயற்கை உபாதைகளுக்காக பேருந்தை நிறுத்தச் சொல்லவே கூச்சப்படும் இந்தச் சமூகத்தில், தினமும் படுக்கையை நனைப்பது, அந்தப் பதின்பருவச் சிறுமியை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும்?

தூக்கம் தொடர்பான பிரச்சினை

தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நோய்க்கு ‘நாக்டியூர்னல் எனுரசிஸ்’ (Nocturnal Enuresis) என்று பெயர். நமக்குச் சாதகமாகவே நாம் காரணங்களைக் கூறிக்கொண்டு நாட்களைக் கடத்தும் நோய் வகைகளில் இதுவும் ஒன்று. ஏனென்றால், ‘தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது குழந்தைகளுக்கு இயல்பான ஒன்றுதான், போகப்போகச் சரியாகிவிடும்’ என்று உறவினர்களோ, ‘உங்கப்பனுக்கே பதினாறு வயசு வரைக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது’ என்று பாட்டிமார்களோ கூறிவிடுவார்கள்.

பயப்படும் அளவுக்கு, இது சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக தூக்கத்தின் போது ‘என்.ஆர்.இ.எம்’ (நான் ரேப்பிட் ஐ மூவ்மெண்ட் – NREM) என்னும் தூக்க நிலையில் ஏற்படும் பிரச்சினையாகும்.

வயது வரம்பு உண்டா?

குழந்தைகள் பிறந்ததிலிருந்து தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது இயல்புதான். பெரும்பாலான குழந்தைகளுக்கு 5 வயதுக்குள் தூக்கத்தின்போதும் சிறுநீர் பையானது மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். சில குழந்தைகள் 5 வயதாகியும் அவ்வப்போது சிறுநீர் கழிப்பதுகூட சாதாரணமான ஒன்றுதான்.

ஆனால் ஒரு குழந்தை 5 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம், பல மாதங்களாகத் தூக்கத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கிறது என்றால் அது நிச்சயமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கு நரம்பு மற்றும் மனநல ரீதியான காரணங்கள் இருக்கலாம். சில குழந்தைகள் சிறுநீர்க் கழிப்பதில் கட்டுப்பாடு பெற்ற பின்பும், சில வருடங்கள் கழித்துகூட மீண்டும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்குப் பெரும்பாலும் மனநல ரீதியான காரணங்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

என்ன பாதிப்பு?

எளிதில் குணப்படுத்தக்கூடிய இந்த நோயைக் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று விட்டுவிட்டால், குழந்தைகள் இதனாலேயே மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். 8 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் பிறரால் கேலி செய்யப்படுதல், அவமான உணர்வு போன்றவற்றால் மன அழுத்தத்துக்கும், தன்னம்பிக்கை இழப்புக்கும் ஆளாகலாம். எனவே இதன் பாதிப்புகளைக் குழந்தைகள் உணர்வதற்கு முன்பே சிகிச்சை செய்து குணப்படுத்திவிடுவது நல்லது.

பெரும்பாலான குழந்தைகள் தூங்க ஆரம்பித்த முதல் ஓரிரு மணி நேரத்துக்குள்ளாகவே சிறுநீர்க் கழித்துவிடுவார்கள். இதனுடன் சேர்த்து தூக்கத்தில் பேசுவது, அலறுவது, நடப்பது போன்ற மற்ற தூக்க வியாதிகளும் சிலருக்குச் சேர்ந்து காணப்படலாம்.

என்ன சிகிச்சை?

மனநலம் அல்லது உடல் சார்ந்த பிரச்சினைகளால் இந்த நோய் ஏற்படலாம் (பார்க்க பெட்டிச் செய்தி). ஆக, முதலில் என்ன காரணம் என்று கண்டறியப்பட்டு அது சரி செய்யப்பட வேண்டும். குழந்தைகள் தூங்கச் செல்லும் முன் தண்ணீர் அருந்துவதைக் குறைப்பது மற்றும் படுக்கைக்குச் செல்லும்முன் மற்றும் தூங்கியபின் ஒரு மணி நேரம் கழித்து எழுப்பி சிறுநீர்க் கழிக்கச் சொல்வது சிலருக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

சமீபத்தில் 45 வயது பெண் ஒருவர் பிறந்ததிலிருந்து இந்த பாதிப்புக்குள்ளாகித் தற்போதுதான் முதன்முதலில் சிகிச்சைக்கு வந்திருந்தார். மாத்திரை எடுத்துக்கொண்டு, முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பு ‘இந்த அரை மாத்திரையை முன்பே சாப்பிட்டிருந்தால் என் அரை ஆயுட்காலத்தில் இத்தனை அவமானங்களைச் சந்தித்ததைத் தவிர்த்திருப்பேனே’ என ஆதங்கப்பட்டார். சிறுவயதில் ஏற்படும் பாதிப்பு பெரியவர்களாகும் வரை தொடர வாய்ப்புள்ளதால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாத்திரைகள் 80 சதவீதம்வரை நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். இத்தனை எளிதாகச் சரிசெய்யக்கூடிய பிரச்சினையை, காலம் தாழ்த்துவதால் மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாது!
காரணங்கள்
மனநலப் பிரச்சினைகள்
திடீரென்று பெற்றோர்களைப் பிரிவது அல்லது இழப்பது
தம்பி / தங்கையின் பிறப்புக்குப் பின்பு, தான் சரிவர கவனிக்கப்படவில்லை என்ற ஏக்கம்
பள்ளி சார்ந்த பிரச்சினைகள்
மன அழுத்தம் / பதற்ற நோய்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது
பெற்றோரிடையே அடிக்கடி ஏற்படும் குடும்ப வன்முறைகளைப் பார்த்து வளர்தல்
அதீதக் கண்டிப்பு அல்லது செல்லம்
மனவளர்ச்சி குறைபாடு மற்றும் அதீத துறுதுறுப்புள்ள குழந்தைகள்
உடல் சார்ந்த பிரச்சினைகள்
சிறுநீர்க் கிருமித் தொற்றுகள்
தண்டுவட நரம்புப் பிரச்சினை
சிறுநீரக மண்டலத்தில் உள்ள பிறவிக் குறைபாடுகள்
வலிப்பு நோய்
நீரிழிவு நோய்
கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

'என்னை மடக்க நீ டிராபிக் போலீஸா?'- வாகனச் சோதனையில் பிடித்த காவலருக்கு அறைவிட்ட இளைஞர் கைது



போலீஸை பொதுவெளியில் அறையும் இளைஞர்   -  படம் சிறப்பு ஏற்பாடு
ஜாபர்கான் பேட்டையில் பட்டப்பகலில் வாகனச் சோதனையில் மடக்கிய போலீஸை பளார் என்று அறைவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிண்டி அடுத்த ஜாபர்கான்பேட்டை பாரி நகரில் இன்று காலை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். வேகமாக வந்த அவர்களை குமரன் நகர் போலீஸ் மகேஸ்வரன் பிள்ளை என்பவர் தடுத்தார். அவரை தட்டிவிட்டுச் சென்றவர்களை மகேஷ்வரன் மடக்கிப் பிடித்தார். வண்டியின் சாவியை எடுத்தார், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தை  ஓட்டி வந்த மணிகண்டன் என்ற இளைஞர் காவல்ர் மகேஷ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொதுவெளியில் அவரை தரக்குறைவாக பேசி, ''மோட்டார் பைக்கைப்  பிடிக்க உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது. நீ என்ன டிராபிக் போலீஸா'' என்று கேட்டு அவரது சட்டையைப் பிடித்து எதிர்பாராத நேரத்தில் பளார் என்று கன்னத்தில் அறைந்தார்.

கன்னத்தில் விழுந்த அறையால் நிலைகுலைந்து கீழே விழப்போன மகேஷவரன் சுதாரித்துக்கொண்டு நின்றார். போலீஸைத் தாக்கிய இளைஞரை பொதுமக்கள் தடுத்து விலக்கிவிட்டனர்.

ஆனாலும், ''உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது. நீ டிராபிக் போலீஸா, என்னை என்ன செய்வாய், மிஞ்சிப் போனால் பெட்டி கேஸ் போடுவாய் அவ்வளவுதானே''  என்று தாக்கமுயன்றார். அவரை நண்பர்கள் மடக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் மகேஷ்வரன் அவரை விடுவதாக இல்லை அவர் பின்னாலேயே சென்றார். அப்போது ''பின்னலேயே வந்தால் மீண்டும் நாலு உதை வாங்கப் போகிறாய்''என்று மணிகண்டன் மிரட்டினார்.
பொதுவெளியில் காவலரை இளைஞர் ஒருவர் தாக்கும் காட்சியைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூட்டத்தில் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காவல்பணியில் இருந்த போலீஸை பொதுவெளியில் தாக்கி தரக்குறைவாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக இளைஞர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
வேளச்சேரி தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (21) மடிப்பாக்கம்  ஈஸ்வரன் தெருவைச் சேர்ந்தவர். இவர் மீது 294 (b), 352, 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்

NEWS TODAY 29.01.2026