Monday, December 25, 2017

நாம் வீசும் குப்பைகளைத் தினமும் அப்புறப்படுத்துவோர் 

23/12/2017 12:09 Update: 23/12/2017 21:27

சிங்கப்பூரில் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில் நிரம்பிவழியும் குப்பைகளைத் தினமும் அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.



அவை மீண்டும் நிரம்புவதற்கு அதிக நேரம் எடுக்காது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் மொத்தம் 7.81 ட்டன் குப்பைகள் சேர்ந்தன.
3 பெரிய நீச்சல் குளங்களின் அளவு அது.




2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 140,000 ட்டன் அதிகம்.
பிளாஸ்டிக் குப்பைகளும் உணவுப் பொருட்களும் ஆக அதிக அளவில் தூக்கிப் போடப்படுவதாகக் கூறப்படுகிறது.

அத்தகைய குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியர்களின் ஒரு நாள் வேலை எப்படி இருக்கிறது என்று அறிய முற்பட்டது சேனல் நியூஸ்ஏஷியா.



அதன் செய்தியாளர் ஒருவர், குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியருடன் இணைந்து சில நாட்களுக்கு வேலை பார்த்தார்.

புக்கிட் பஞ்சாங்கில் 29 புளோக்குகளில் இருந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியர்கள் எத்தகையச் சூழலில் வேலை செய்கின்றனர் என அதன் வழி தெரியவந்தது.



27 வயது சுவேலின் வேலை குப்பைகளை அப்புறப்படுத்துவது.

சுற்றுவட்டாரத்தைத் தூய்மையாக வைத்திருப்பது.

காலை 7 மணிக்குத் தொடங்குகிறது அவரது வேலை.
இரவு 7 மணிக்குத் தான் முடிகிறது அயராத பணி.



கொஞ்சம் ஆங்கிலம், மலாய் பேசத் தெரிந்த சுவேல் பங்களாதேஷைச் சேர்ந்தவர். திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகவில்லை.



மாதந்தோறும் 700 வெள்ளி சம்பளம். அதற்காக தினந்தோறும் குனிந்து நிமிர்ந்து கனமான பொருட்களைத் தூக்கி, அசுத்தம், பூச்சிகள் என முகம் சுளிக்காமல் வேலை செய்ய வேண்டும்.
சிரமங்கள் நிறைந்திருந்தாலும் நேர்மையாக வாழ்வதில் பெருமை என்றார் மலர்ந்த முகத்துடன் சுவேல்.

சாங்கி விமான நிலையத்தில் புதிய டாக்சி நிறுத்துமிடம்

24/12/2017 20:20

சிங்கப்பூர்: அண்மையில் நீங்கள் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றிருந்தால், முதலாம் முனையத்தில் புதிய டாக்சி நிறுத்துமிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டிருக்கலாம்...
தரைக்குக் கீழே உள்ள முதல் தளத்தில் இருக்கிறது புதிய டாக்சி நிறுத்துமிடம். இவ்வாரம் செவ்வாய்க்கிழமை அது திறக்கப்பட்டது.

முதலாம் முனையத்திற்கான விரிவாக்கப்பணிகளில் புதிய நிறுத்துமிடமும் அடங்கும்.
2019ஆம் ஆண்டில் திறக்கப்படவுள்ள ஜூவல் சாங்கி விமான நிலையத்திற்குத் தயாராகும் விதத்தில் அது அமைந்துள்ளது.

தேவைக்கேற்ப பயணிகளிடம் டாக்சிகளைக் கொண்டுசேர்க்க அங்குள்ள அதிநவீன உணர்கருவிகள் உதவுகின்றன. அத்தகைய தொழில்நுட்பத்தால் தனது சாலை நிர்வாகிகளின் வேலைகள் சிலவற்றைக் குறைத்திருப்பதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
அதிமுகவுக்கு மாற்றாக உருவான தினகரன்.. ஸ்டாலின் செய்ய தவறியது இதுதான்!
 
 Posted By: Veera Kumar Published: Sunday, December 24, 2017, 16:25 [IST]
 
  சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வாக்குகள் இரண்டாக பிரியும் என நினைத்திருந்தபோதிலும், திமுகவால் 3வது இடத்திற்கே வர முடிந்தது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீவிர எதிர்ப்பலை இருந்தபோதிலும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு முன்பாக நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் திமுக ஒரு சீட்டை கூட வெல்ல முடியவில்லை. ஆனால் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தருமபுரியிலும் வெற்றி பெற்று திமுகவுக்கு கூடுதல் ஷாக்.
 
தகராறுகள் நடுவே அதிமுக தகராறுகள் நடுவே அதிமுக இது பரவாயில்லை. அப்போதாவது ஜெயலலிதா என்ற ஆளுமை திமுக தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் என பிரிந்து பிறகு சேர்ந்து, தினகரன் தரப்பு ஒருபக்கம் தனி ஆவர்த்தனம் பாடி.. சொல்லும்போதே மூச்சு முச்சு முட்டும் இத்தனை தகராறுகளுக்கு நடுவே நடந்த ஒரு இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு போயுள்ளது. கருணாநிதி மாஜிக் கருணாநிதி மாஜிக் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இன்னும் கொஞ்சம் எழுச்சியை எதிர்பார்க்கிறார்கள் திமுகவினர். இதில் கருணாநிதி செய்த ஒரு மாஜிக்கை ஸ்டாலின் செய்ய தவறி வருகிறார். ஆனால் அதை தினகரன் சரியாக செய்கிறார் என்பதில் ஒளிந்துள்ளது தினகரனை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான காரணம். ஏன் திமுக மாற்றாக இல்லை? ஏன் திமுக மாற்றாக இல்லை? அதிமுகவுக்கு மாற்றாக அதே அதிமுகவிலிருந்து வந்த சுயேச்சை தினகரனை தேர்ந்தெடுத்த மக்கள் ஏன் நீண்ட கால போட்டியாளரான திமுகவை மாற்றாக ஏற்கவில்லை? 
 
இதற்கு கருணாநிதி ஸ்டைல் அரசியலை இப்போது ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை என்பது முக்கிய காரணம். கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்போதுமே செய்திகளின் நாயகனாக அவர்தான் இருப்பார். தன்னை சுற்றியே தமிழக அரசியல் சுழல காரணமாக இருப்பார். பதிலளிக்கும் திறமை பதிலளிக்கும் திறமை ஒரு சாரார் விமர்சனம் செய்வார்கள் என்று தெரிந்தாலும் அதை கூட அச்சமின்றி செய்வார் கருணாநிதி. பூடகமாக பேசுவது, இரட்டை பொருள்படும்படி பேசுவது என அவரது ஸ்டைல் அரசியல் லாவகமாக இருக்கும். மேலும், அவர் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறமை நீண்டகாலமாகவே புகழப்படும் ஒன்று. ஞாபக சக்தியும் அபாரமானது. 
 
ஸ்டாலின் மீது எதிர்பார்ப்பு ஸ்டாலின் மீது எதிர்பார்ப்பு அதேநேரம், ஸ்டாலின் இந்த விஷயங்களில் கருணாநிதி போன்ற கூர்மையோடு செயல்படவில்லை என்ற ஆதங்கம் அரசியல் விமர்சகர்களுக்கு உள்ளது. சட்டசபையில் நடைபெற்ற சட்டை கிழிப்புக்கு பிறகு ஸ்டாலின் செய்திகளில் பெரிதாக பேசப்படும் சூழல் உருவாகவில்லை. செய்திகளில் எப்போதும் தினகரன் செய்திகளில் எப்போதும் தினகரன் அதேநேரம், தினகரன் கருணாநிதி ஸ்டைல் அரசியலைத்தான் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாகவே தினகரனை சுற்றியேதான் செய்திகள் வலம் வருகின்றன. அவர் செய்தியாளர்களை எதிர்கொள்ளும் விதமும் பல தரப்பாலும் தொடர்ச்சியாக புகழப்படுகிறது. லைம் லைட் வாய்ப்பு இருந்தும் ஸ்டாலின் அதை பயன்படுத்தவில்லை. ஆனால் புதிதாக அந்த லைம் லைட் ஒளிவட்டத்தை தன்னை சுற்றி உருவாக்கிவிட்டார் தினகரன். இதுதான் மக்கள் அதிமுகவுக்கு மாற்றாக தினகரனை தேர்ந்தெடுக்க காரணம்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/though-splitting-aiadmk-votes-the-rk-nagar-poll-dmk-comes-3rd/articlecontent-pf283969-306225.html

RK NAGAR ELECTION RESULT 2017


சொல்லியடித்த தினகரன்.. நவகிரகங்களின் நல் ஆசி மொத்தமாக கிடைச்சிருச்சோ!

Posted By: Mayura Akilan Published: Monday, December 25, 2017, 8:02 [IST]

  சென்னை: சனி, குரு, ராகு கேது மட்டுமல்ல, நவகிரகங்களின் மொத்த பார்வையும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு சாதகமாகவே திரும்பியுள்ளது. அந்தளவிற்கு தினகரனுக்கு திகட்ட திகட்ட வெற்றியை பரிசாக கொடுத்துள்ளனர் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள். மூக்குப்பொடி சாமியார் தொடங்கி கால பைரவர் வரை விடாமல் விரட்டி விரட்டி தரிசனம் செய்தார் டிடிவி தினகரன். திகார் சிறையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 5 மாதகாலமாக அவரது கவனம் முழுவதுமே ஆர்.கே.நகர் மீதுதான் இருந்தது. இடைத்தேர்தல் அறிவிக்கப்படாவிட்டாலும், தான்தான் வேட்பாளர் என்பது போல நடந்து கொண்டார்

தினகரன். எப்போது போய் பார்த்தாலும் கை நிறைய பணத்தை அள்ளிக்கொடுத்தாராம் தினகரன். சுயேச்சை தினகரன் சுயேச்சை தினகரன் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகரில் அதிமுக அம்மா அணி வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை போட்டியிட்டார். அந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகாரினால் ரத்தானது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மீண்டும் தொப்பி சின்னம்தான் கேட்டார் கிடைத்ததோ குக்கர். புத்தம் புது குக்கர்கள் புத்தம் புது குக்கர்கள் பிரசாரத்தில் குக்கர்தான் பிரதான இடம் பிடித்தது. வீட்டில் இருந்தே குக்கர் கொண்டு வந்தார் தலைக்கு 500 ரூபாய் கொடுத்தனர் தினகரன் ஆட்கள். எப்படி எல்லாம் பணம் கொடுக்கவேண்டும் அந்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்தனர்.

 80 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானால் தான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறியிருந்தார் தினகரன். கருத்துக்கணிப்புகளும் தினகரனுக்கு சாதகமாகவே இருந்தது. சொன்னது போலவே ஜெயித்து விட்டார் தினகரன். மகிழ்ச்சியில் ஆர்.கே. நகர்வாசிகள் மகிழ்ச்சியில் ஆர்.கே. நகர்வாசிகள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே பண்டிகை செலவுக்கு பயமில்லை என்று பேச்சு எழுந்தது. சொன்னது போலவே ஒரு ஓட்டு 10 ஆயிரத்திற்கு மேல் கிடைத்துள்ளது. அடகு வைத்த நகைகள் திருப்பப் பட்டு விட்டன.

பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் ஆர்.கே.நகர்வாசிகள். ஆர்.கே.நகரில் எங்கு திரும்பினாலும் புத்தம் புது குக்கர்கள் பளபளக்கின்றனவாம். எல்லா கிரகங்களின் பார்வையும் எல்லா கிரகங்களின் பார்வையும் டிடிவி தினகரனுக்கு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிதான் நல்லதாக இருந்திருக்கும் என்றில்லை. டிடிவி தினகரனுக்கு நவகிரகங்களின் நல் ஆசியும் கிடைத்திருக்க வேண்டும். அதனால்தான் இப்படி திகுடு முகுடான வெற்றியை பெற்றுள்ளார் தினகரன். தினகரனின் யாகங்கள் தினகரனின் யாகங்கள் கோவில் கோவிலாக சுற்றி வந்த தினகரன் கால பைரவருக்கு யாகம் செய்தார். பிரத்யங்கிரா தேவியை அமாவாசை நாளில் பூஜித்தார். குலதெய்வத்தை விடாமல் கும்பிட்டார். யாகங்களும், ஹோமங்களும் செய்த கடவுளை குளிர்வித்தது போல, மக்களையும் குளிர குளிர பணத்தால் குளிர்வித்து வெற்றியை பெற்றுள்ளார் டிடிவி தினகரன்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-bypoll-result-navagraham-support-ttv-dinakaran/articlecontent-pf284009-306264.html
ஆங்கிலம் அறிவோமே 191: ஆட்டுக்குட்டி எப்படிக் குழந்தை ஆனது?

Published : 19 Dec 2017 10:33 IST
Updated : 19 Dec 2017 10:33 IST

ஜி.எஸ்.எஸ்.






கேட்டாரே ஒரு கேள்வி

‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தில் கமலஹாசன் ஏற்று நடித்த திலிப் கதாபாத்திரம், மனநிலைக் கோளாறு காரணமாகப் பல பெண்களைக் கொலை செய்யும். அவரை ஒரு சைக்கோ என்பார்கள். சைக்கோ என்றால் புத்தி சுவாதீனமற்ற கொடூரமானவனா? அப்படியானால் சைக்காலஜி என்பது அப்படிப்பட்டவர்களைக் குணப்படுத்தும் மருத்துவமா?

***********

Point black என்பதற்கும், வில்வித்தைப் பயிற்சிக்கும் என்ன தொடர்பு என்கிறார் ஒரு வாசகர்.

நண்பரே அது point black அல்ல (சொல்லப்போனால் அது பெரும்பாலும் வெள்ளை) point blank. பிரெஞ்சு மொழியில் ‘blanc’ என்றால் வெள்ளைக் குறி என்று அர்த்தம்.

வில்வித்தைப் பயிற்சியில் அம்பு சேர வேண்டிய மைய இடம்தான் Point blank . மிக அருகில் நின்றுகொண்டு இப்படிக் குறிபார்க்கும்போது வில்லின் கோணத்தை ஏறவோ இறக்கவோ செய்யாமல் நேரடியாகக் குறிபார்த்தால் போதுமானது.

இப்போதெல்லாம் ஒரு விஷயத்தை நேரடியாகப் போட்டு உடைப்பதை (straight talking) point blank என்கிறார்கள்.




Child என்பதும் Kid என்பதும் ஒன்றுதானா?

16-ம் நூற்றாண்டுவரை Kid என்ற வார்த்தை ஆட்டுக் குட்டியைக் குறிக்கத்தான் பயன்பட்டது. மெல்ல மெல்ல அது மறைந்து மனிதக் குட்டிகளையும் (குழந்தைகளை) குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

Kids என்பது சில நேரம் மட்டம்தட்டவும் பயன்படுத்தப்படுகிறது. உடல் வளர்ந்தும் மனதளவில் பக்குவப்படாதவர்களை Kids என்று குறிப்பிடுவதுண்டு.

Kids’ stuff என்றால் மிக எளிமையாகச் செய்யக்கூடிய ஒன்று என்று அர்த்தம்.

Verb ஆகப் பயன்படுத்தப்படும்போது அற்பமாக நடந்துகொள்வது, கிண்டலடிப்பது போன்ற பொருள்களில் இது பயன்படுத்தப்படுகிறது. Beware just kidding around.

ஒன்றை சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதைக் குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. I am ready for another marriage (just kidding).

***********

கேட்டாரே ஒரு கேள்வி இம்முறை கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கிறது. காரணம் கொஞ்சம் உண்மையும் நிறைய தவறான புரிதலும் கலப்பது ஆபத்தானது இல்லையா?

‘சைக்’ (Psyche) என்பது மனதைக் குறிக்கிறது. சைக்காலஜி (Psychology) என்பது மனம் தொடர்பான கல்வி. மனநலம்.

சைகியாட்ரி (Psychiatry) என்பது மனம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு மருத்துவப் பிரிவு.

சைக்கோ (Psycho) என்பது மனநலம் பிறழ்ந்ததன் காரணமாக குரூர சிந்தனை வயப்பட்ட ஒருவரைக் குறிக்கிறது. சைக்கோ என்பது முன்னொட்டாக (prefix) பயன்படுத்தப்படும்போது ‘மனம் தொடர்பான’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக Psycho Pharmacology என்பது மனநலப் பாதிப்புக்கான மருந்துகள் குறித்த கல்வி.

***********

“Accessories என்று பெண்கள் பேச்சில் இடம்பெறும் வார்த்தைக்கு என்ன பொருள்?”

வாசகரே ஒருவேளை நீங்கள் இதுபோன்ற ஒரு வாக்கியத்தைக் கேட்டிருக்கலாம். “I found a lovely dress for the function but I need to find some matching accessories”.

உடைக்குப் பொருத்தமான கைப்பை, காதணி, சங்கிலி, காலணி போன்றவற்றை accessories என்போம். Accessories என்பதைத் தோராயமாக அணிகலன்கள் எனலாம்.

அதாவது ஒன்றை அதிகப் பயனுள்ளதாகவோ அதிக அழகானதாகவோ ஆக்குவதற்காக இணைக்கப்படும் பிற பொருளை accessories என்பார்கள்.

ஆனால், சட்டத்தின் பார்வை வேறு. Accessory என்றால் ஒரு குற்றம் நடக்கத் துணையாக இருப்பவர். அதாவது, நேரடியாக ஒரு குற்றத்தில் ஈடுபடாமல் அந்தக் குற்றம் நடக்க தூண்டுபவர் அல்லது துணை நிற்பவரைச் சட்டம் accessory என்று அழைக்கிறது.

ஒரு இயந்திரம் அல்லது கருவியைச் சரியாக இயக்குவதற்காக அதில் சேர்க்கப்படும் அதிகப்படி விஷயங்களையும் accessory எனக் குறிப்பிடுவதுண்டு. Accessories for a premium car include electric windows and a sunroof.

***********

“I am providing my best to my children” என்று நான் குறிப்பிட்டேன். வீட்டுக்கு வந்திருந்த, நான் பெரிதும் மதிக்கும் ஒருவர், “You are providing the best to your children” என்றார். My best என்பதற்கும் the best என்பதற்கும் வித்தியாசம் உண்டா?

“என்னாலே அதிகபட்சம் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் நான் என் குழந்தைகளுக்காகச் செய்கிறேன்” என்பது நீங்கள் கூறியதற்குப் பொருள்.

“மிக அதிகபட்சமாக ஒருவர் தன் குழந்தைகளுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் நீங்கள் செய்கிறீர்கள்” என்பது வந்திருந்தவர் கூறியதற்குப் பொருள்.

நீங்கள் அவரை மதிப்பதுபோலவே அவரும் உங்களை மதிக்கிறார். பாராட்டுகிறார். உங்களை நீங்கள் அளவீடாகக் கொள்கிறீர்கள். அவர் இந்த விஷயத்தில் மற்றவர்களையும் ஒப்பிட்டு உங்களை மிக உயர்வாகக் குறிப்பிடுகிறார்.

தொடக்கம் இப்படித்தான்

“From Pillar to Post” என்பதற்குப் பொருள் எல்லா இடத்திலும் என்று வைத்துக்கொள்ளலாமா, எதற்காக இதை உணர்த்த pillar, post ஆகிய இரு வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன?

Pillar to post என்பது ஓரிடத்தில் தங்காமல் பல இடங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதைக் குறிக்கிறது. முக்கியமாக எந்தவொரு பயனும் கிடைக்காத அலைச்சல். He was driven from pillar to post because he opposed the local leader.

இங்கிலாந்தில் ஒரு காலத்தில் pillary மற்றும் wihipping post ஆகிய இரண்டும் இருந்தன.

ஏமாற்று வேலை செய்த வணிகர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளை pillory என்ற இடத்தில் வைத்து அவர்கள் கைகளையும் தலைப் பகுதியையும் கட்டிவிடுவார்கள். அங்கு வரும் மக்கள் அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார்கள்.

செய்த குற்றம் பெரிதாக இருந்தால் அவர்கள் pillory என்ற இடத்திலிருந்து whipping post பகுதிக்கு இழுத்துச் செல்லப்படுவார்கள். அங்கே பொதுமக்கள் அவர்களைச் சவுக்கால் அடிப்பதுண்டு.

இப்படித்தான் Pillar to Post உருவானது.
சிப்ஸ்

Wear என்றால்?

Ware என்றால்?

Wear என்றால் உடுத்துவது அல்லது அணிவது. Ware என்றால் விற்பதற்காகத் தயாரிக்கப்படும் பொருள் எனலாம்.

Enemity என்றால்

முன்விரோதமா, பகைமையா?

இரண்டும்தான். Enemy என்பதில் ‘என்’னின் இருபுறமும் ஈக்கள் உண்டு. ஆனால், Enmity-ல் ஒரு ‘e’தான் என்பதைக் கவனியுங்கள்.

Hurled என்ற வார்த்தை

நாளிதழ்களில் தொடர்ந்து இடம்பெறுகிறது. இது எதைக்

குறிக்கிறது?

நாட்டில் சகிப்புத்தன்மையும் கட்டுப்பாடும் இல்லாமல் போனதைக் குறிக்கிறது! Hurl என்றால் விசையுடன் ஒன்றைத் தூக்கி எறிவது நாளிதழில் hurled என்பதன் கூடவே ‘கல்’ அல்லது ‘காலணி’ என்ற வார்த்தையும் இடம்பெற்றிருக்குமே!

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

ஆளுமை மேம்பாடு: திட்டமிடல் எல்லாமே எளிதுதான்!



நேரமில்லை என்று சொல்வதைப் பலர் பெருமையாக எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் அது அவர்களது குறை என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால், காலம் யாருக்கும் எந்தச் சலுகையும் அளிப்பதில்லை.
“பிறகு நான் ஏன் நேரமின்மையால் படிக்க அவதிப்படுகிறேன்?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதுதான் அதற்கான பதில். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது மிகவும் எளிது. எளிய வழிமுறைகள் மூலம் நீங்கள் நேரத்தைக் கைவசப்படுத்தலாம்.

நேர மேலாண்மை என்பது என்ன?

நம்முன் இருக்கும் செயல்களை அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒவ்வொரு செயலையும் முடிக்க ஆகும் நேரத்தைக் கணித்து, தகுந்த நேரத்தை அவற்றுக்கு ஒதுக்க வேண்டும். பின் அந்தச் செயல்களை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு செயலை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் சரியான முறையில் செய்து முடிப்பதுதான் நேர மேலாண்மை. இந்த நேர மேலாண்மை மாணவர்களுக்குப் படிப்பில் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்வின் லட்சியம்

உங்கள் வாழ்வின் லட்சியம் எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஐந்து வருடங்கள் கழித்து என்னவாக இருப்பீர்கள் என்று நினைப்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எதை அடைய வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் நம் பாதையும் பயணமும் தெளிவடையும்.

படிக்கும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்

படிக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக அடுக்கிவையுங்கள். பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றைப் படிக்கும் மேஜை மேல் பரத்தி வைக்காமல், அதற்கான பெட்டியில் அடுக்குங்கள். இவற்றின் மூலம் தேடுவதில் நேரம் விரயமாகாமல் தடுக்கலாம்.

திட்டமிட்டுப் படித்தல்

எந்தப் பாடம் முக்கியமானது, எதை முதலில் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். உங்கள் பாடத்திட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். பாடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு மதிப்பெண் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். பின், இந்தப் புரிதலின் அடிப்படையில் எப்படிப் படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அட்டவணை தயார்செய்யுங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் கடினமான பாடத்தை முதலில் படிக்க ஆரம்பியுங்கள். அதிலிருந்து படிப்படியாக எளிதான பாடத்தைப் படிக்கச் செல்லுங்கள். ஏனென்றால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும்போது அது கடினமான பாடத்தை எளிதில் கிரகித்துக்கொள்ளும், தினமும் அன்று படித்ததை மீண்டும் வாசிப்பதற்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

பாராட்டுங்கள்

ஒவ்வொரு நாளும் நீங்கள் படித்து முடித்த பாடங்களை அட்டவணையில் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்டபடி அந்த நாளில் படித்து முடித்திருந்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்வது மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கும்.

நொறுக்குத் தீனி வேண்டாமே!

படிக்கும்போதே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பர்கர், பீட்சா, நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிருங்கள். அது உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தூக்கத்தையும் வரவழைக்கும். அதற்குப் பதில் பழங்கள், சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது உங்களைக் களைப்படையாமல் பார்த்துக் கொள்ளும்.

கவனச் சிதறலைத் தவிர்த்தல்

நீங்கள் படிக்கும் அறையில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பும் எதுவும் இல்லாமல் இருக்குபடி பார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவை இருக்கக் கூடாது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படிப்பதில் எந்தப் பயனுமில்லை. படிக்கும் நேரத்தில் படிப்பைத் தவிர எதற்கும் இடமில்லை என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.

கைபேசியைத் தவிர்த்தல்

நண்பர்கள் எங்கும் ஓடிவிடப் போவதில்லை. நீங்கள் சிரத்தையுடன் படித்து நன்றாகத் தேர்வு எழுதிய பின்னும் அவர்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே, படிக்கும் நேரத்தில் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளியுங்கள், நண்பர்களுடன் கைபேசியில் உரையாடுவது உங்கள் நேரத்தை வீணாக்கிவிடும் என்பதை மறக்கலாகாது. பாடம் தொடர்பான தவிர்க்க முடியாத உதவிக்கு கைபேசியைப் பயன்படுத்தலாம்.

வெளிச்சமும் காற்றோட்டமும்

படிக்கும் அறையை நல்ல காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் வைத்து கொள்ளுங்கள். காற்றோட்டம் மூளையையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும். கண்கள் எளிதில் களைப்படையாமல் வெளிச்சம் பார்த்துக்கொள்ளும்.

இடை ஓய்வு

படிப்புக்கு இடையே ஓய்வுக்கு என்று தகுந்த நேரத்தை ஒதுக்குங்கள். எந்நேரமும் படித்துக்கொண்டிருந்தால் மூளை ஆற்றல் மங்கிவிடும். மேலும், மனதின் உள்வாங்கும்தன்மை குறையும். இதனால், படிப்பின் மீது வெறுப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஓய்வு என்பது தொலைக்காட்சி பார்ப்பதோ வீடியோ கேம்ஸ் விளையாடுவதோ அல்ல. ஏனென்றால், அவை மூளையை மேலும் களைப்படையச் செய்யும். சொல்லப்போனால், அதன் தாக்கம் நாம் படிக்கும்போதும் தொடரும். எனவே, முடிந்த அளவு அந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது விளையாட்டில் ஈடுபடுங்கள். இல்லையென்றால் காலாற நடந்துவிட்டுத் திரும்புங்கள்.

காலம் பொன் போன்றது

‘காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. மாணவப் பருவத்தில் படிப்பதுதான் முக்கியக் கடமை. எனவே, அந்தப் படிப்பை எப்போதும் முதன்மை விருப்பமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும்.

NEWS TODAY 29.01.2026