Saturday, February 3, 2018

குடும்பத்துடன் பயணம் செல்கிறீர்களா?

Published on : 31st January 2018 12:26 PM

குடும்பத்துடன் ஊருக்குப் பயணிக்கிறீர்கள் ஆனால் வழியில் ஹோட்டல்களில் சாப்பிட்டால் ஒத்துக்கொள்வதில்லை!

அதே சமயம் பசியையும் தவிர்க்க வேண்டும். அப்படியானால் உங்கள் பயணப் பைகளில் கீழ்க்காணும் விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். எடுத்துச் செல்லும் உணவுப் பொருள்கள் எளிதில் ஜீரணமாக வேண்டும். அதற்கு சில யோசனைகள்:

தோசை, இட்லி:
இவற்றை அளவாக எடுத்துச் சென்று அளவாகச் சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையே எழாது. ஜீரணத்துக்கும் எளிதானது.

ரொட்டி, பரோட்டா:
இவற்றைச் சாப்பிடும்போது வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும். அதே சமயம், இவற்றைத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் ஜீரணமும் எளிதில் ஆகும்.

பழங்கள்:
பழங்களில் பொதுவாக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகம். இத்துடன் ஆரோக்கியமான, புஷ்டியான உணவும் கூட. ஆகவே கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும்.

பாப்கார்ன்:
சிலருக்குப் பயணத்தின்போது கொறிக்கப் பிடிக்கும். இதற்கு எண்ணெயில் வறுத்தத் தின்பண்டங்களை வாங்கிக் கொறிப்பர். ஆனால் அது வயிற்றுக்கு கெடுதல். மாறாக பாப்கார்ன் வாங்கி வைத்துக் கொண்டு, வழி நெடுக கொறிப்பதால் வாய்க்கும் ருசி! வயிற்றுக்கும் நிம்மதி!!

தேங்காய், கோதுமை, அரிசியினால் ஆன பதார்த்தங்கள்:
தேங்காய் சாதம், கோதுமை உப்புமா, அரிசியினால் ஆன சாத பதார்த்தங்கள் ஆகியவற்றை செய்து எடுத்துச் சென்று சாப்பிட்டால் உடலுக்கு வலுவும் கூடும். வயிறும் நிம்மதி பெருமூச்சு விடும்!

குக்கீஸ், பிஸ்கெட்:
குக்கீஸ், பிஸ்கெட் போன்றவற்றை எடுத்துச் செல்வதன் மூலம் கொறிக்கவோ அல்லது வயிற்றை நிரப்பவோ பயன்படுத்தலாம். இவற்றில் சர்க்கரை குறைவு, எளிதில் ஜீரணமாகும். மேலும் சுலபமாக எடுத்துச் செல்லலாம். வயிற்றுக்கும் பிரச்னை ஏற்படாது.

- ராஜேஸ்வரி
பல்கலை., கல்லூரி ஆசிரியர்களுக்கான புதிய ஊதியம்: யுஜிசி அறிவிப்பு

By DIN | Published on : 01st February 2018 04:23 AM

 ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான புதிய ஊதிய உயர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைப்பதற்கான கடிதத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் யுஜிசி அனுப்பியுள்ளது.

ஊதிய உயர்வு எவ்வளவு? யுஜிசி-யின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பின்படி, இப்போது ரூ. 39,100 ஊதியம் பெறும் உதவிப் பேராசிரியருக்கு ரூ. 57,700 முதல் ரூ.79,800 வரை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

இணைப் பேராசிரியருக்கான ஊதியம் ரூ. 67,000 என்ற நிலையிலிருந்து ரூ. 1,31,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பேராசிரியருக்கு ரூ. 67 ஆயிரத்திலிருந்து ரூ. 1,44,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனுபவமிக்கப் பேராசிரியருக்கு (ஹெச்.ஏ.ஜி.) புதிய ஊதியம் ரூ. 1,82,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தருக்கு ரூ. 2 லட்சம்: புதிய அறிவிப்பின்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான ஊதியம் ரூ. 2.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன்மாத சிறப்புப் படியாக ரூ. 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோல, இளநிலை பட்டப் படிப்புகள் மட்டும் உள்ள கல்லூரி முதல்வருக்கான ஊதியம் ரூ. 1,31,400 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாத சிறப்புப் படி ரூ. 2000 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

முதுநிலை பட்டப் படிப்புகளும் உள்ள கல்லூரி முதல்வருக்கான ஊதியம் ரூ. 1,44,200 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாத சிறப்புப் படி ரூ. 3000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

திடீரென குறைந்த ஃபாலோயர்ஸ்: ட்விட்டரை விட்டு விலகவுள்ளதாக அமிதாப் பச்சன் அறிவிப்பு!

By எழில்  |   Published on : 01st February 2018 03:36 PM 
amitabh

33 மில்லியன் பேர் ட்விட்டரில் அமிதாப் பச்சனைப் பின்தொடர்கிறார்கள். இந்த எண்ணிக்கை திடீரென குறைந்து 32.9 மில்லியனாக மாறியது. இதனால் கடுப்பாகியுள்ள அமிதாப் பச்சன், ட்விட்டரை விட்டு விலகிவிடுவேன் என்று கோபத்துடன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது: ட்விட்டர், என்னுடைய ஃபாலோயர்களைக் குறைத்துள்ளீர்கள். இது வேடிக்கையானது. ட்விட்டரிலிருந்து விலகவேண்டிய நேரமிது. இந்தப் பயணத்துக்கு நன்றி. கடலில் வேறுவகையான மீன்கள் உள்ளன. அவை சுவாரசியமாகவும் உள்ளன என்று ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டரில் அதிகமான ஃபாலோயர்களைச் செயற்கையான முறையில் அதிகப்படுத்தினால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. ட்விட்டரில் செயற்கையான முறையில் ஃபாலோயர்களை அதிகப்படுத்தும் வழிகளைச் சிலர் மேற்கொண்டுவருகிறார்கள். இதையடுத்து அதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம். எனவே இதன் அடிப்படையில் அமிதாப் பச்சனின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

இந்தியப் பிரபலங்களில் ஷாருக் கானுக்கு 32.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள். இதற்கு முன்பு ஷாருக் கானை விடவும் அதிக ஃபாலோயர்களைக் கொண்டிருந்த அமிதாப் பச்சன், ட்விட்டரின் நடவடிகையால் ஷாருக் கானுக்கு இணையான ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். எனினும் சல்மான் கான் (30.7 மில்லியன்), ஆமிர் கான் (22.8 மில்லியன்), பிரியங்கா சோப்ரா (21.6 மில்லியன்), தீபிகா படுகோன் (23 மில்லியன்) ஆகியோரை விடவும் அதிக அளவிலான ஃபாலோயர்கள் அமிதாப் பச்சனுக்கு உண்டு.
போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

By கள்ளக்குறிச்சி | Published on : 03rd February 2018 08:39 AM

கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை மாலை மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்துவிட்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கீழே இறக்கிச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்தை சங்கராபுரம் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் மது போதையில் முருகன் ஓட்டிச் சென்றார்.

பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் மீது மோதுவது போல முருகன் பேருந்தை ஓட்டிச் சென்றதுடன், அந்தப் பகுதியில் இருந்த கடையின் படிகட்டின் மீது மோதியுள்ளார். இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்த பயணிகள் முருகனை பேருந்தைவிட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர் மீண்டும் பேருந்தை இயக்க முற்பட்டதால், அவருக்கு தர்ம அடி கொடுத்துவிட்டு பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போக்குவரத்து பணிமனையினர் பேருந்தை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்குள் கொண்டு சென்று நிறுத்தினர். இதையடுத்து, அந்தப் பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் வேறு பேருந்தில் ஏறிச் சென்றனர்.

பட்சணம் செய்யப் போறீங்களா? அப்போ படிங்க... இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்!

By சி.ஆர்.ஹரிஹரன், கொச்சின்  |   Published on : 02nd February 2018 05:51 PM  |  
cooking_tips
 பொடியாக நறுக்கிய புதினா சேர்த்துப் பிசைந்து தட்டை தட்ட  ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும்.
  •  
  • தேன் குழல் செய்யும்போது நீருக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.
  •  
  • எந்த பட்சணம் செய்வதாக இருந்தாலும் அதன் மொறுமொறுப்புக்கு வெண்ணெய் சேர்த்தால் உத்திரவாதம் தரும். சீக்கிரம் பட்சணங்கள் நமத்தும் போகாது.
  •  
  • மைக்ரோ அவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச்சென்று     இருக்கும்.
  •  
  • காரம் சேர்த்து செய்யும் பட்சணத்துக்கு காரப்பொடி போடாமல், பச்சைமிளகாயுடன், ஓரிரு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திச் செய்தால் பட்சணம் நல்ல   நிறமாக இருக்கும்.
  •  
  • வெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன் வெண்ணெய்யை நன்கு கலந்தபின் தண்ணீர்விட்டுப் பிசைய வேண்டும்.
  • பட்சணங்கள் செய்ய பயன்படுத்தும் பெருங்காய நீர் மீந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
  •  
  • லட்டு, ரவா லட்டு, பொட்டுக் கடலை மாவு உருண்டை போன்றவற்றை பிடிக்கும் போது கையில் சிறிது நெய்தடவிக் கொண்டு பிடித்தால் நன்கு பிடிக்க வருவதுடன் மணமாகவும் இருக்கும்.
  •  
  •   குலோப்ஜாமூன் பாகு மீந்து விட்டால் அதில் மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல திரட்டி சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான, மணமான   பிஸ்கெட் தயார்.
  •  
  •  ரசத்தில் மண்டி மீந்துவிட்டதா? பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்துத் தாளித்து, நறுக்கி   வைத்ததைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் மிஞ்சிய ரசத்தை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அரிசி அல்லது கடலைமாவு, வெல்லம் ஆகியவற்றையும் போட்டு அடிப்பிடிக்காமல்   கிளறி இறக்கினால் அருமையான தொக்கு ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற பலகாரங்களுக்கு இந்த தொக்கு நல்ல "காம்பினேஷன்'.
வைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பக்தர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்: சடகோப ராமானுஜ ஜீயர்

By DIN | Published on : 03rd February 2018 08:03 AM |

வைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பக்தர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது, இது குறித்து கவிஞர் வைரமுத்து உடனடியாக விளக்கம் அளித்தார்.

“யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும் அவர் ஆண்டாள் கோவில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

இந்நிலையில் மன்னிப்பு கேட்பது குறித்து வைரமுத்து தரப்பில் இருந்து பதில் இல்லை என்பதால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பக்தர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..! பொருள்கள் எரிந்து நாசம்
 
விகடன்

 
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், பெருமளவிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

மதுரையிலுள்ள பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கும். குழந்தைகளும், பக்தர்களும் விரும்பி வாங்கும் பொருள்கள் அந்தக் கடைகளில் நிறைந்திருக்கும். 10 மணி அளவில் கோயில் நிர்வாகம், நடை சாத்திவிட்டு சென்றனர்.

அதன்பின்னர், கோயிலுக்குள் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது. அதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு, கோயில் நடையை திறந்துப் பார்த்தப்போது, கடைகள் தீ பிடித்து எரிந்துள்ளது. மூன்று கடைகளுக்கு தீ பரவியுள்ளது. அந்தக் கடைகளிலுள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.

அந்தக் கடைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் இருந்துள்ளன. அதனால், தீ விடாமல் எரிந்து வருகிறது. 5 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தீயணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மின் கசிவின் காரணமாக தீ பற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

NEWS TODAY 14.02.2026