Saturday, February 3, 2018

குடும்பத்துடன் பயணம் செல்கிறீர்களா?

Published on : 31st January 2018 12:26 PM

குடும்பத்துடன் ஊருக்குப் பயணிக்கிறீர்கள் ஆனால் வழியில் ஹோட்டல்களில் சாப்பிட்டால் ஒத்துக்கொள்வதில்லை!

அதே சமயம் பசியையும் தவிர்க்க வேண்டும். அப்படியானால் உங்கள் பயணப் பைகளில் கீழ்க்காணும் விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். எடுத்துச் செல்லும் உணவுப் பொருள்கள் எளிதில் ஜீரணமாக வேண்டும். அதற்கு சில யோசனைகள்:

தோசை, இட்லி:
இவற்றை அளவாக எடுத்துச் சென்று அளவாகச் சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையே எழாது. ஜீரணத்துக்கும் எளிதானது.

ரொட்டி, பரோட்டா:
இவற்றைச் சாப்பிடும்போது வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும். அதே சமயம், இவற்றைத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் ஜீரணமும் எளிதில் ஆகும்.

பழங்கள்:
பழங்களில் பொதுவாக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகம். இத்துடன் ஆரோக்கியமான, புஷ்டியான உணவும் கூட. ஆகவே கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும்.

பாப்கார்ன்:
சிலருக்குப் பயணத்தின்போது கொறிக்கப் பிடிக்கும். இதற்கு எண்ணெயில் வறுத்தத் தின்பண்டங்களை வாங்கிக் கொறிப்பர். ஆனால் அது வயிற்றுக்கு கெடுதல். மாறாக பாப்கார்ன் வாங்கி வைத்துக் கொண்டு, வழி நெடுக கொறிப்பதால் வாய்க்கும் ருசி! வயிற்றுக்கும் நிம்மதி!!

தேங்காய், கோதுமை, அரிசியினால் ஆன பதார்த்தங்கள்:
தேங்காய் சாதம், கோதுமை உப்புமா, அரிசியினால் ஆன சாத பதார்த்தங்கள் ஆகியவற்றை செய்து எடுத்துச் சென்று சாப்பிட்டால் உடலுக்கு வலுவும் கூடும். வயிறும் நிம்மதி பெருமூச்சு விடும்!

குக்கீஸ், பிஸ்கெட்:
குக்கீஸ், பிஸ்கெட் போன்றவற்றை எடுத்துச் செல்வதன் மூலம் கொறிக்கவோ அல்லது வயிற்றை நிரப்பவோ பயன்படுத்தலாம். இவற்றில் சர்க்கரை குறைவு, எளிதில் ஜீரணமாகும். மேலும் சுலபமாக எடுத்துச் செல்லலாம். வயிற்றுக்கும் பிரச்னை ஏற்படாது.

- ராஜேஸ்வரி

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...