Saturday, February 3, 2018

பல்கலை., கல்லூரி ஆசிரியர்களுக்கான புதிய ஊதியம்: யுஜிசி அறிவிப்பு

By DIN | Published on : 01st February 2018 04:23 AM

 ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான புதிய ஊதிய உயர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைப்பதற்கான கடிதத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் யுஜிசி அனுப்பியுள்ளது.

ஊதிய உயர்வு எவ்வளவு? யுஜிசி-யின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பின்படி, இப்போது ரூ. 39,100 ஊதியம் பெறும் உதவிப் பேராசிரியருக்கு ரூ. 57,700 முதல் ரூ.79,800 வரை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

இணைப் பேராசிரியருக்கான ஊதியம் ரூ. 67,000 என்ற நிலையிலிருந்து ரூ. 1,31,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பேராசிரியருக்கு ரூ. 67 ஆயிரத்திலிருந்து ரூ. 1,44,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனுபவமிக்கப் பேராசிரியருக்கு (ஹெச்.ஏ.ஜி.) புதிய ஊதியம் ரூ. 1,82,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தருக்கு ரூ. 2 லட்சம்: புதிய அறிவிப்பின்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான ஊதியம் ரூ. 2.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன்மாத சிறப்புப் படியாக ரூ. 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோல, இளநிலை பட்டப் படிப்புகள் மட்டும் உள்ள கல்லூரி முதல்வருக்கான ஊதியம் ரூ. 1,31,400 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாத சிறப்புப் படி ரூ. 2000 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

முதுநிலை பட்டப் படிப்புகளும் உள்ள கல்லூரி முதல்வருக்கான ஊதியம் ரூ. 1,44,200 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாத சிறப்புப் படி ரூ. 3000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Govt doctors in TN threaten strike over pay and promotions

Govt doctors in TN threaten strike over pay and promotions  TIMES NEWS NETWORK  21.01.2026 Chennai : Govt doctors in Tamil Nadu threatened t...