Tuesday, July 3, 2018

மருத்துவ கல்வி பொது கலந்தாய்வு: முதல் 10 மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்
மருத்துவ கல்வி பொது கலந்தாய்வு:
முதல் 10 மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்
  மருத்துவ கல்வி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்து முதலிடம் பெற்ற 10 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு கடிதத்தை வழங்கினார்.

ஜூலை 03, 2018, 05:15 AM

சென்னை,

2018-19ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு(எம்.பி.பி. எஸ்.) மற்றும் பல் மருத்துவ படிப்பு(பி.டி.எஸ்.) ஆகியவற்றுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 40 மாணவ-மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்களை பெற்றனர்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கிவைத்து, முதல் 10 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீடு கடிதத்தை வழங்கினார். அவர்கள் அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்திருந்தனர்.

தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கே.கீர்த்தனா என்ற மாணவி அகில இந்திய இடஒதுக்கீட்டில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை தேர்வு செய்துவிட்டதால், நேற்றைய கலந்தாய்வில் அவர் பங்கேற்கவில்லை. இதேபோன்று அகில இந்திய இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளை தேர்வு செய்த மேலும் சிலரும் வரவில்லை.

மற்ற மாணவர்களில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ- மாணவிகள் நேற்றைய கலந்தாய்வில் கலந்து கொண்டு அமைச்சரிடம் ஒதுக்கீட்டு கடிதத்தை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவ கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் விவரம் வருமாறு:- ஆர்.ராஜ்செந்தூர் அபிஷேக்(நீட் மதிப்பெண் 656), முகமது சுஐப்ஹசன்(644), ஆர்.எஸ்.சுப்ரஜா(613), எஸ்.சபரீஷ்(610), அனஹ நிடுகலா ஷியாம்குமா(610), ஷிரிஷ் செந்தில்குமார்(607), எம்.தினகர்(606), ஆல்பிரட் விவியன் ஆல்வின்(604), எச்.சதீஷ்(604), ஜெ.ஜோஸ்வா அஜய்(602). இதில் ஆர்.எஸ்.சுப்ரஜா, எஸ்.சபரீஷ், எம்.தினகர் ஆகியோர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது மருத்துவ கலந்தாய்வுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவின்கீழ் 40 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 7-ந் தேதி வரை பொது பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்று(நேற்று) 609 பேர் அழைக்கப்பட்டனர். நாளை(இன்று) 850 பேரும், நாளை மறுநாள்(நாளை) ஆயிரம் பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,501 மருத்துவ இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் 723 இடங்கள் உள்ளன. மாநில பாடத்திட்டத்தில் படித்த 70 சதவீதம் பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மாணவர்களுக்கு 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு முடிவை அரசு ஏற்கும். இது தவிர தனலட்சுமி, ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்துள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 90 பேர் தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 29 பேருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான இருப்பிட சான்று உள்ளிட்ட 14 விதிமுறைகள் விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரித்து உள்ளன. புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கியதன் மூலமாகவும், ஏற்கனவே உள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கியதன் மூலமாகவும் இந்த இடங்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக்கு 609 பேர் அழைக்கப்பட்டிருந்ததில் 29 பேரை தவிர்த்து 580 பேர் கலந்து கொண்டனர். இதில் 572 பேர் அரசு மருத்துவ கல்லூரி இடங் களுக்கான ஒதுக்கீட்டையும், ஒருவர் சுயநிதி மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளனர். மேலும் தகுதியுடைய 7 பேர் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்று(செவ்வாய்க்கிழமை) தேர்வு செய்ய உள்ளனர்.

Monday, July 2, 2018

Bank matters

ஒரு ரூபாய் கடனுக்காக அடகு நகையை தர மறுக்கும் வங்கி!

கடன் தொகையில் ஒரு ரூபாய் பாக்கி இருப்பதாகக் கூறி வங்கி ஒன்று தன் வாடிக்கையாளரின் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை நகையை தர மறுத்துள்ளது.

Updated : July 02, 2018 11:32 IST

5 ஆண்டுகளாக வாடிக்கையாளரை அலையவிட்டுள்ளது வங்கி

இது குறித்து பாதிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

2 வாரத்தில் வங்கி பதிலளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


Chennai: 

கடன் தொகையில் ஒரு ரூபாய் பாக்கி இருப்பதாகக் கூறி வங்கி ஒன்று தன் வாடிக்கையாளரின் அடகு வைக்கப்பட்ட 138 கிராம் அதாவது 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை நகையை தர மறுத்துள்ளது. இதனால் அந்த வாடிக்கையாளர் தற்போது தன் நகையை மீட்டெடுக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் சி.குமார். இவர் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் கிளையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். ஆனால், அதற்கான கடன் தொகையை வட்டியும் அசலுமாகக் கட்டிமுடித்த பின்னரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய சொந்த நகைகளேயே மீட்க முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த வாடிக்கையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி டி ராஜா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழக்கு தொடர்ந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் கூற்றை முற்றிலுமாகக் கேட்டறிந்த நீதிபதி இன்னும் இரண்டு வார காலத்தில் வங்கி நிர்வாகிகள் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கு தொடர்ந்த சி.குமார் கடந்த 2010-ம் ஆண்டு 131 கிராம் தங்கத்தை அடகு வைத்து வங்கியில் இருந்து 1.23 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதன் பின்னர் கூடுதலாக 138 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து மேலும் புதிதாக இரண்டு கடன்கள் எடுத்துள்ளார்.

பின்னர் 2011-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி 131 கிராம் தங்க நகைகளை சரியான தொகையை வட்டியுடன் செலுத்தி மீட்டுள்ளார். அடுத்து வாங்கிய இரண்டு தங்க நகைக் கடன்களையும் அடுத்தடுத்து வட்டியுடன் செலுத்திவிட்டு தன் நகையைத் திரும்ப கேட்டுள்ளார்.

ஆனால், அவரது இரண்டு கடன்களிலும் 1 ரூபாய் மீதம் கடன் உள்ளதாகக் கூறி கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருக்கு நகையை திரும்ப அளிக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது அந்த வங்கி.

Bus info

பேட் நியூஸ்".. பேப்பர் படித்தபடி பஸ் ஓட்டிய அரசு டிரைவர்.. பயணிகள் உயிருடன் விளையாடிய விபரீதம்!

Posted By: Hemavandhana

Updated: Mon, Jul 2, 2018, 10:19 [IST]

சென்னை: நின்று கொண்டே டிரைவர்கள் பஸ் ஓட்டி பார்த்திருக்கிறோம், செல்போன் பேசியபடியே பஸ் ஓட்டியும் பார்த்திருக்கிறோம். ஏன், ஒரு கையில் பஸ் ஓட்டிகூட பார்த்திருக்கிறோம். இப்படியெல்லாம் ஓட்டினாலும் டிரைவரின் கவனமும், கண்களும் சாலையை நோக்கித்தான் இருக்கும்.

ஆனால் பல பயணிகளை வைத்து கொண்டு, பேப்பர் படித்து கொண்டே பஸ் ஓட்டி இருக்கிறார் ஒரு டிரைவர். அதுவும் சென்னை மாநகரத்தில்.

47 D. இதுதான் அந்த பேருந்து எண். ஆவடியிலிருந்து திருவான்மியூர் செல்லும் மாநகர பேருந்து. பேருந்தில் ஏராளமான பயணிகள் அமர்ந்திருந்தனர். பேருந்தும் சென்று கொண்டுதான் இருந்தது.

திடீரென அந்த டிரைவர் பஸ்ஸை ஓட்டியபடியே ஒரு செய்தித்தாளை எடுத்து விரித்து படிக்க ஆரம்பித்துவிட்டார். செய்தித்தாளை ஸ்டியரிங் மீது பரப்பி வைத்து கொண்டு படிக்க தொடங்கியதும், பயணிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. அதிர்ச்சியடைந்த பயணிகள், ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

டிரைவரோ ஒரு செய்தி விடாமல் படித்து கொண்டிருந்தார். எப்போது படித்து முடிப்பார் என்றும் தெரியவில்லை. இதனால் பயணிகள் டிரைவரிடம் சென்று, செய்தித்தாளை வைத்துக் கொண்டு ஓட்டுவது குறித்து கேட்டனர். ஆனால் அதற்கு பதிலளிக்காத டிரைவரோ, செய்தித்தாளை புரட்டி புரட்டி பார்த்து கொண்டிருந்தார். பயணிகளோ, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்திலும் பரிதவிப்புடனுமே பயணம் செய்தனர். இதுகுறித்து அம்பத்தூர் பணிமனையில் கேட்டதற்கு, பேருந்தை இயக்கியது யார் என விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது துறை ரீதியான விசாரணை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுமாதிரியான குற்றங்களுக்கெல்லாம் வெறும் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் சரியாகிவிடுமா என தெரியவில்லை. மனித உயிரோடு விளையாடும் எந்த காரியத்தை யார் செய்தாலும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். இதுபோன்று அலட்சியமாகவும், பயணிகள் உயிரை துச்சமாகவும் மதிக்கும் ஓட்டுனரின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையும் இணைந்து நெடுஞ்சாலைகளில் தானியங்கி காமிராவை பொருத்தி, அதனை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், அரசு பேருந்தை "நடமாடும் எமன்"களாக பொதுமக்கள் பார்க்க துவங்கிவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும்.

MBBS Counselling


எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு பெற்றோர் - பிள்ளை உறவுமுறை சான்றிதழ் தேவையில்லை: மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்

சி.கண்ணன்

சென்னை

Published :  29 Jun 2018  09:37 IST

பெற்றோர் - பிள்ளை இடையே யான உறவுமுறை சான்றிதழை தமிழக அரசு வழங்குவதில்லை என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு அந்த சான்றிதழ் தேவையில்லை என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல் லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட 43,395 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது.

தேவையான சான்றிதழ்கள்

இந்நிலையில் www.tnmedicalselection.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவி கள் நீட் தேர்வு எழுதிய ஹால்டிக்கெட், நீட் மதிப்பெண் கார்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று ஆதார் கார்டு உள்ளிட்ட 9 ஆவணங் களுடன் 10-வது ஆவணமாக பெற்றோர் - பிள்ளை (விண்ணப்பதாரர்) இடையேயான உறவுமுறை சான்று கொண்டு வரவேண்டும்.

இதேபோல் பெற்றோர் தாங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்க தங்களுடைய பிறப்புச் சான்று, 10 அல்லது எஸ்எஸ்எல்சி, 12 மற்றும் பட்டப் படிப்புச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, ஆதார் கார்டு, வருமானச் சான்று என மொத்தம் 8 சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். உரிய சான்றிதழ் இல்லையென்றால் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெற்றோர் குழப்பம்

இந்நிலையில் பெற்றோர் - பிள்ளை இடையேயான உறவுமுறை சான்றிதழை எங்கே சென்று வாங்குவதென்று தெரியாமல் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் குழப்ப மடைந்துள்ளனர். இதேபோல், பெற்றோர் படிக்கவில்லையென்றால், அதற்கான சான்றிதழை யாரிடம் பெறுவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெற்றோர் - பிள்ளை இடையே யான உறவுமுறை சான்றிதழை அரசு வழங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, அந்த சான்றிதழை எங்கே சென்று எப்படி வாங்க முடியும்?” என்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழுச் செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜனிடம் கேட்டபோது, “தமிழகத் தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் 10, 12-வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட சில சான்றிதழ்களைக் கொண்டு வந்தாலே போதுமானது. பெற்றோர் – பிள்ளை இடையேயான உறவுமுறை சான்றிதழ் தேவையில்லை. வெளிமாநிலத்தில் படித்தவர்களும் அனைத்து சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டியதில்லை. இதனால், பெற்றோர், மாணவர்கள் குழப்பமடையத் தேவையில்லை. தங்களிடம் இருக்கும் சான்றிதழ்களுடன் வந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்” என்றார்

AICTE

மூடும் அபாயத்தில், 250 இன்ஜி., கல்லூரிகள்; மாணவர்களை இழுக்க பல விதமாக முயற்சி

பதிவு செய்த நாள்: ஜூலை 02,2018 01:03


இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில், 1.04 லட்சம் பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 10 மாணவர்களை விட குறைவானவர்களே சேரும் நிலைமை உருவாகியுள்ளது. அதனால், கல்லுாரிகளை மூடும் அபாயம் தவிர்க்க, பல்வேறு வழிகளில் மாணவர்களை இழுக்கும் முயற்சிகளில், கல்லுாரி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு, இந்த ஆண்டு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 1.04 லட்சம் பேர் மட்டும், கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் குறைவு:

தரவரிசையில் இடம் பெற்றவர்களுக்கு, ஜூலை மூன்றாம் வாரத்தில் கவுன்சிலிங் துவங்கும். இதற்காக, 509 இன்ஜி., கல்லுாரிகளின், ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 865 இடங்கள் தயாராக உள்ளன. இவற்றில், 22 கல்லுாரிகள் தங்களின், 18 ஆயிரத்து, 771 நிர்வாக இடங்களையும் சேர்த்து, கவுன்சிலிங்குக்கு வழங்கியுள்ளன. கல்லுாரிகளில் உள்ள இடங்களை விட, மாணவர்கள் எண்ணிக்கை, 41 சதவீதம் குறைவாக உள்ளது.

விண்ணப்பித்தவர்களிலும், தங்களுக்கு விருப்பமான கல்லுாரியும், பாடப்பிரிவும் கிடைக்காதவர்கள், கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்யாமல், புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால், அதிகபட்சம், 95 ஆயிரம் இடங்கள் மட்டுமே, கவுன்சிலிங்கில் நிரம்பும்.

அபாயம் :

அண்ணா பல்கலையின் தேர்வு தரவரிசையில், முதல், 100 இடங்களில் இடம் பெறும் கல்லுாரிகளில், பெரும்பாலான பாடப்பிரிவுகள், கவுன்சிலிங்கில் நிரம்பி விடும். ஒரு கல்லுாரிக்கு, குறைந்த பட்சம், 400 இடங்கள் வீதம், 100 கல்லுாரிகளில், 40 ஆயிரம் இடங்கள் நிரம்பும். மீதமுள்ள, 50 ஆயிரம் மாணவர்கள், அடுத்த, 150 கல்லுாரிகளில், இடங்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

இதனால், தரவரிசையில், 250க்கு அடுத்த இடங்களை பெற்றுள்ள, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 10 மாணவர்களாவது சேர்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சேராவிட்டால், கல்லுாரிகளை மூட வேண்டிய அபாயம் ஏற்படும்.

தவிர்க்க முயற்சி :

எனவே, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, கல்லுாரிகள் பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளன. கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிப்பில் சேர்ந்தவர்கள், பாலிடெக்னிக் படித்து முடித்தவர்கள் மற்றும் கவுன்சிலிங் உதவி மையங்களுக்கு வரும் மாணவர்களை இழுக்கும் பணியில், தனியார் கல்லுாரி ஏஜென்டுகள் ஈடுபட்டுள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் பட்டியலை பள்ளிகளில் பெற்று, அவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும், இ - மெயில் அனுப்பியும், இலவச கருத்தரங்கு நடத்தியும், மாணவர்களை கவர, முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

- நமது நிருபர் -

NEET ..Court case

நீட் தேர்வு : சிபிஎஸ்இ.,க்கு 4 கேள்விகள்

பதிவு செய்த நாள்: ஜூலை 02,2018 12:48


மதுரை : தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஎஸ்இ.,க்கு நீதிபதிகள் 4 கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவை,

* ஆங்கில மொழியில் இருந்து தமிழுக்கு எதன் அடிப்படையில் நீட் தேர்வு கேள்விகள் மொழிபெயர்க்கப்படுகின்றன
* நீட் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான வார்த்தைகள் எந்த அகராதியில் இருந்து எடுக்கப்படுகின்றன
* தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன
* தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் எடுக்கப்படுகின்றது என்பது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகிறதா.

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Crime


Posted Date : 12:33 (02/07/2018)

`ஒரு இரும்புத் துண்டு... ஒரு தீக்குச்சி ...' - போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்

 எஸ்.மகேஷ

Vikatan

சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவை மூலம் ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவர், எழிலகம் வளாகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றார். அப்போது இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. ஆனால், வங்கி அக்கவுன்ட்டில் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்தது. இதுகுறித்து வங்கியிலும் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திலும் சீனிவாசன் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து சீனிவாசன் மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் பாதிக்கபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம் முன்பு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடிக்கடி இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் செல்லும் தகவல் கிடைத்தது. அவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போதுதான் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து நூதன முறையில் பணத்தை அவர்கள் எடுப்பது தெரியவந்தது. அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதற்காக அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, வடமாநில வாலிபர்களின் குட்டு வெளிப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்தில் கடந்த மூன்று மாதங்களாக மப்டியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஏ.டி.எம் மையத்துக்கு வருபவர்களை இரண்டு வடமாநில வாலிபர்கள் பின்தொடரும் தகவல் கிடைத்தது. இதனால் அந்த வாலிபர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். அப்போது, ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பவர்களுடன் வாலிபர்கள் பேசுவது சிசிடிவி வீடியோ பதிவு மூலம் தெரிந்தது. அடுத்து, பணம் எடுக்க வருபவர்கள் சென்றபிறகு அந்த ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து ஏதோ ஒன்றை அவர்கள் எடுப்பதும், பிறகு பணத்தைப் பெறுவதும் சிசிடிவி வீடியோவில் தெரிந்தது. இதனால் அந்த வாலிபர்களை மடக்கிப்பிடித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, பீகார் மாநிலம், கயா மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்குமார், முன்னாகுமார் என்று தெரிந்தது. அவர்கள் இருவரும் பட்டதாரிகள். பீகாரிலிருந்து விமானத்தில் சென்னை வந்து, ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கைவரிசை காட்டிவருவது தெரிந்தது. கொள்ளையடிப்பது எப்படி என்று அவர்கள் தெரிவித்த தகவல் எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் இடத்தைத்தான் முதலில் இவர்கள் தேர்வு செய்வார்கள். அதுவும் பழைய ஏ.டி.எம். இயந்திரங்களில்தாம் எளிதில் கைவரிசை காட்ட முடியும். பணத்தை எடுக்க வரும் வாடிக்கையாளரைப் பின்தொடரும் இவர்கள், அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதைப் போல நீண்ட நேரம் காத்திருப்பார்கள். ஆனால், அருகில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுப்பவரைக் கண்காணித்து அவர்களின் பாஸ்வேர்டு ஆகியவற்றை மனதில் பதியவைத்துக் கொள்வார்கள்.

அதற்கு முன்பு, ஏ.டி.எம் இயந்திரத்தின் கீ போர்டில் சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, சிறிய அளவிலான மருந்து அட்டை ஆகியவற்றை நுழைத்துவிடுவார்கள். இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டை தேய்த்தவுடன், பாஸ்வேர்டை கீபோர்டில் போடும்போது அது வொர்க் ஆகாது. இதனால் இயந்திரம் பழுது என்று கருதி வாடிக்கையாளர் வெளியில் சென்றுவிடுவார்கள். உடனடியாக இவர்கள், கீ போர்டில் உள்ள இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டைகளை வெளியில் எடுத்துவிட்டு பாஸ்வேர்டை டைப் செய்து பணத்தை எடுத்துக்கொள்வார்கள். இதுதான் இந்தக் கொள்ளையர்களின் ஸ்டைல். எழிலகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் மட்டுமல்லாமல் சென்னையில் பல இடங்களில் இவர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் மட்டும் 5 பேர் புகார் கொடுத்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை அவர்களின் அம்மா அக்கவுன்டில் போட்டுள்ளனர். அதை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்ததாக வடமாநிலக் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``எங்களிடம் சிக்கிய வடமாநில ஏ.டி.எம் கொள்ளையர்கள் மனோகர்குமார், முன்னாகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் பழைய ஏ.டி.எம் இயந்திரங்களில்தான் இவர்கள் நூதன முறையில் கைவரிசைக் காட்டியுள்ளனர். சிந்தாரிப்பேட்டையிலும் இவர்கள் ஏ.டி.எம் இயந்திங்களில் கொள்ளையடித்ததாகக் கூறியுள்ளனர். இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ இதுபோன்று கொள்ளையடித்ததாகத் தெரிவித்துள்ளனர். இவர்களை பின்னாலிருந்து இயக்கும் நெட்வொர்க் குறித்து விசாரித்துவருகிறோம். வழக்கமாக ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் கொடுப்பதுண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் புகாருக்கு வங்கித் தரப்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால்தான் இந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

வழக்கமாக இரானியக் கொள்ளையர்கள்தாம் விமானத்தில் வந்து கொள்ளையடிப்பார்கள். அந்தப் பாணியை பீகார் மாநில ஏ.டி.எம் கொள்ளையர்கள் பின்பற்றியுள்ளனர். பீகாரிலிருந்து சென்னை வந்த மனோகர்குமார், முன்னாகுமார் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். அங்கிருந்து டிப் டாப் உடையணிந்து இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் மையங்களை முதலில் தேர்வு செய்துகொள்வார்கள். அதுவும் பழைய ஏ.டி.எம் இயந்திரங்களில்தாம் இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டைகளை நுழைக்க முடியும். புதிய ஏ.டி.எம் இயந்திரங்களில் டச் ஸ்கீரின் என்பதால் கொள்ளையடிக்க முடியாது என்றும் அவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வங்கித் தரப்பில் பேசியவர்கள், ``பொதுவாக ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றால் கேன்சல் பட்டனை அழுத்திவிட்டு அங்கிருந்து வெளியில் வரவேண்டும். ஆனால், சில வாடிக்கையாளர்கள் அதைச் செய்வதில்லை. வாடிக்கையாளர்களின் கவனக்குறைவே கொள்ளையர்களுக்கு பிளஸ் பாயின்ட்டாக அமைகிறது. இப்படியும் கொள்ளையடிப்பார்களா என்று எங்களை யோசிக்க வைத்துள்ளது" என்றனர். 

NEWS TODAY 25.01.2026