Thursday, July 5, 2018

TN will reply to Centre on UGC by July 7

TIMES NEWS NETWORK

Chennai:05.07.2018

Tamil Nadu government will respond to the Centre on replacing UGC with Higher Education Commission of India (HECI) on or before July 7, higher education minister K P Anbalagan said in the assembly on Wednesday, in reply to leader of opposition M K Stalin, who questioned the uncertainty over funding to universities in Tamil Nadu, if UGC is replaced with NHEC.


“We will ensure that the state’s interests were not affected in the wake of the Centre deciding to replace the University Grants Commission with the NHEC. We have sought the opinions from vice chancellors of all the universities in Tamil Nadu as well as higher education experts and officials. We will send a proper reply to the Centre before July 7,” said Anbalagan.

The HRD ministry had last week proposed to replace the apex higher education regulator UGC with the HECI by repealing the UGC Act, 1951. According to the draft Act, HECI would focus solely on academic matters and monetary grants would be under the purview of the HRD ministry.
HC comes to rescue of MBBS aspirant who lost certificates

TIMES NEWS NETWORK

Chennai:  05.07.2018

The Madras high court on Wednesday came to the rescue of an MBBS-aspirant from Virudhunagar who lost his certificates at Egmore railway station.

Taking note of an article published in TOI on Wednesday on the issue, Justice S Vaidyanathan directed the government advocate for education department to get instructions from the authorities concerned as to whether the boy’s case could be considered as a special category and to consider allotment of seat.

On Sunday, G Bhoopathi Raja’s bag containing his certificates went missing and consequently he missed his counselling schedule for MBBS admission. A CCTV grab showed an elderly man walking away with the bag.

MBBS counselling extended by 2 days, 628 seats remain

TIMES NEWS NETWORK

Chennai:5.7.2018

There were 628 MBBS seats left in 22 medical colleges in the state at the end of the third day of the first phase of counselling on Wednesday. The counselling will be extended by two days up to Saturday, said selection committee secretary Dr Selvarajan.


On Wednesday, all seats in the BC category were taken and the last candidate from the rank list to take a government seat had 375 marks, at least 64 higher than last year.

When the counselling began on Monday, there were 2,447 seats in government medical colleges, 65 in ESIC, KK Nagar, 127 in Rajah Muthiah Medical College and 862 in self-financing medical colleges.

While all 757 open category seats were allotted to meritorious students by Tuesday, the 624 students in BC category were allotted seats in various government college based on their NEET 2018 scores.

The competition was tough as 1,279 students scored above 400 marks compared to 1,466 last year and 4,791 students scored above 300 marks compared to 2,569 last year.

On Wednesday, 957 candidates attended counselling and 869 were alloted seats.

Of these, 490 were allotted MBBS seats in government colleges. At the end of the day, there were 628 seats left, with 16 in BCM, 218 in MBC, 301 in SC, 68 in SCA and 25 in ST category.

In self-financing colleges, all OC seats were taken and 537 seats were left in other categories. In addition, there were 55 seats in Raja Muthiah College and 24 in ESIC.

While all OC seats at the Madras Dental College were taken, there were 54 seats left for other categories. Self-financing dental colleges had 963 seats left.

Meanwhile, the directorate general of health service is likely to update the vacancies in seats under the all-India quota (government colleges) and deemed universities by Thursday for round 2. Wednesday was the last day for students to join the allotted colleges.

In a notification on Wednesday, the DGHS has asked candidates who wish to resign from the UG seats allotted through online 15% AIQ/deemed/ central universities and ESIC to obtain the seat surrender receipt from the college through online counselling software. Facility for online reporting of resignation will be available till 3.00pm on Thursday, it said.

Wednesday, July 4, 2018

'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்

பொய் தகவல்கள் மற்றும் வெறுப்பு உணர்வை துாண்டும் வகையிலான விஷயங்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பிரபல சமூக ஊடகமான, 'வாட்ஸ் ஆப்'பை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தை திருடர்கள் என்ற சந்தேகத்தில் பலர் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களால், சமீபத்தில் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்அதிர்ச்சியை ஏற்படுத்தின.வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதே இதற்குகாரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய தகவல் தொடர்பு துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வதந்திகளால், பலர் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.இவை கடும் கண்டனத்துக்கு உரியவை. இதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: அரசு கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை 1,329 மாணவர்களுக்கு: தமிழகத்தில் மொத்தம் 2,447 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; இவற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் 1,329 மாணவர்களுக்குஅரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து1,118 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்துப் பிரிவினருக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.

1,118 காலியிடங்கள்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 828 பேர் அழைக்கப்பட்டு, 813 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 719 இடங்கள் நிரம்பின. சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. மூன்று நாள்கள் கலந்தாய்வின் முடிவில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 29 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், தனியார் கல்லூரிகளில் 59 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 808 இடங்கள் நிரம்பின.

4 இடங்கள்: பொதுப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு: தரவரிசைப் பட்டியலில் 1,418 -இலிருந்து 2,380 வரையிலான 963 அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.
 
ssta

IT returns தொடர்பான விளக்கங்கள்...!!வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31....!!

நமது நண்பர்கள்  IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.

அவைகள் குறித்து நமது நண்பர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர் தெரிவித்தவை:

✍🏻மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம்
சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும்.

✍🏻 அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்*.

✍🏻 ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

✍🏻 தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் *2.5லட்சத்தை தாண்டினால்* கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும்.

✍🏻 சம்பளம் வழங்கும் அலுவலர் E-TDS(24-Q) தாக்கல் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும்  ஊழியர்கள் IT Return தாக்கல் செய்யாதபட்சதில் கட்டாயம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புதல் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டு முதல் கடுமையாக மேற்கொள்ளும்.

✍🏻 அடுத்ததாக ஒரு வதந்தி, பலர் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது குறித்தும் கேட்கப்பட்டது*

✍🏻 5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் கட்டாயம் onlineலும் 5லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் online லோ அல்லது வருமான வரி அலுவலகத்தில் offline லோ தாக்கல் செய்யலாம் என்பதை சிலர் தவறாக புரிந்துகொண்டு 5லட்சத்து குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கின்றனர். 

மேலும் ஒருசில ஊழியர்கள்

✍🏻 சம்பளம் தவிர
Fixed Deposits,
Shares,
Mutual Fund
உள்ளிட்ட  பிற முதலீடுகள்ஏதேனும் செய்திருப்பின் அதன் மூலம் பெற்படும் வட்டி, டிவிடென்ட்போன்ற  ஆதாயத் தொகையும் 26as படிவத்தில் update ஆகும்.

✍🏻  அந்த ஆதாயத்  தொகைக்கான வரியையும் நாம் தனியாக செலுத்த வேண்டும்அல்லது அதற்கு வரிகள் ஏதேனும் பிடிக்கப்பட்டிருந்தால் E-filing செய்யும்போது கணக்கு காட்டி அதிகமாக பிடித்தம் செய்தியிருப்பின் அந்த தொகையை திரும்ப பெறுதல் (refund),
குறைவாக பிடித்தம் செய்திருப்பின் மீதி வரியை செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

*வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31

*கடைசி நேர இணையதள பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இப்போதே செய்து விடுவது நல்லது.
ராக யாத்திரை 11: நீ சின்ன நி! நான் பெரிய நி!!

Published : 29 Jun 2018 10:30 IST
Updated : 29 Jun 2018 10:56 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



‘என் தம்பி’ படத்தில்

சென்ற வாரம் சற்றுக் கடினமான கேள்விதான். மத்தியமாவதியின் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் என்ன ராகம் எனக் கேட்டிருந்தேன். வழக்கமாக நூற்றுக்கணக்கான வாசகர்கள் பதில் அளித்துத் திணற அடிப்பார்கள். இந்த வாரம் சிலரே பதிலளித்தனர் அவர்களில் ஈரோடு ஞானப்பிரகாசம் மற்றும் யக்ஞ நாராயணன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள். அந்த ராகம் ‘பிருந்தாவன சாரங்கா’.

ஸ ரி2 ம1 ப நி2 ஸ் , ஸ் நி1 ப ம1 ரி2 ஸ என்பதே இதன் ஆரோகண அவரோகணங்கள். சிலர் அவரோகணத்தில் ஒரு சின்ன ‘க’வும் சேர்ப்பார்கள். சிலர் அதுதான் ஒரிஜினல் ‘பிருந்தாவன சாரங்கா’, க இல்லாமல் வருவது ‘ப்ருந்தாவனி’ என்பார்கள்.

ராக முத்திரை

மிகவும் இனிமையான ராகம் இது. முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை. எம். எஸ். பாடிக் கேட்டால் அந்த அரங்க மா நகரின் சொர்க்க வாசல் கதவுகளே நமக்குத் திறக்கும். ராகத்தின் பெயரையே கீர்த்தனையில் சொல்வதற்கு ராக முத்திரை என்று பெயர். அதில் தீட்சிதர் வல்லவர். இந்தக் கீர்த்தனையிலும் ராகத்தின் பெயரை அவ்வாறு பிருந்தாவனத்தின் மான்களுக்கெல்லாம் தலைவனே (சாரங்கா – மான்) எனப் பொருள் படும்படி அமைத்திருப்பார். மான் போல் குதிக்கும் இந்த ராகத்தில் பெரியசாமி தூரன் இயற்றிய ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்’ என்ற பாடலும் மிகவும் பிரபலம்.

திரை இசையில் மிகவும் பிரபலமானது இந்த ராகம். கொஞ்சம் இந்துஸ்தானி ஜாடையும் இதில் வரும். ஷெனாயில் வாசிக்க ஏற்றதாக இருப்பதால் பல திரைப்படப் பின்னணி இசையில் வரும். இந்த ராகத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில் வரும் ‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே’ என்ற பாடல் மிகவும் இனிமையானது.

எண்ணிக்கையில் குறைவாகப் பாடினாலும் தரத்தில் நிறைவாகப் பாடிய எஸ். வரலட்சுமியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் ராகமேதை ராமநாதன் அவர்கள். ஆரம்பத்தில் ஒரு ஆலாபனை பின்னர் இடையிடையே ஷெனாய் ஒலி என இந்த ராகத்தின் ஜாடையை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

கோவர்த்தன ஆவர்த்தனம்

லேசான இந்துஸ்தானி ஜாடையில் மென்மையாகப் பாட வேண்டும் என்றால் பி.பி.ஸ்ரீநிவாஸ் இல்லாமலா? ‘இதயத்தில் நீ’ (1963) என்ற படத்தில் ஒரு பிரமாதமான பாடல். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த ராகத்தில் அமைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் ஒரு ஹம்மிங் மூலம் பிபிஎஸ் இந்த ராகத்தை ஜாடை காட்டி அற்புதமாகப் பாடியிருக்கும் அந்தப் பாடல் ‘பூ வரையும் பூங்கொடியே’. வாலியின் ஆரம்ப காலப் பாடல்களுள் ஒன்று.

‘என் தம்பி’ (1968) என்ற சிவாஜியின் படம். எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தது. அதில் இடம்பெற்ற அருமையான பாடல் ‘முத்து நகையே உன்னை நானறிவேன்’, டி.எம்.எஸ். பாடியது. இடையிடையே ஆஹா, ஓஹோ எனப் பாடலில் வருவது போன்றே நாமும் பாடலைக் கேட்டால் ஆஹா, ஓஹோ எனப் பாராட்டுவோம்.

கோவர்த்தனம் என்ற இசையமைப்பாளர். ‘பட்டினத்தில் பூதம்’ போன்ற சில படங்களுக்கே இசையமைத்தவர். அவரது சிறுவயதிலேயே நாகஸ்வர மேதை ராஜரத்தினம்பிள்ளை வாசிக்கும்போது உடனுக்குடன் ஸ்வரங்களைச் சொல்லி அவரிடம் பாராட்டுப் பெற்றாராம். அவர் இசையமைத்த படம் ‘பூவும் பொட்டும்’ (1968). அதில் ஒரு அருமையான பாடலை பிருந்தாவன சாரங்காவில் அமைத்திருப்பார். ஷெனாயைப் போன்றே நாகஸ்வரத்திலும் இனிமையான ஒரு ஆலாபனையுடன் இப்பாடல் தொடங்கும். பி.சுசீலாவின் தேன்குரலில் வரும் ஹம்மிங்களுடன் டி.எம்.எஸ். பாடிய பாடல் ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்’ என்பது. உண்மையிலேயே பரமண்டலத்திலிருந்து தேவன் பாடும் பாடலைக் கேட்பது போன்ற அனுபவத்தைத் தரும் பாடல் அது.

மெட்டின் இனிமைக்கு மெல்லிசை மன்னர்

இந்த ராகத்தின் மாஸ்டர் பீஸ் என்றால் அது ‘படித்தால் மட்டும் போதுமா?’வில் (1962) அமைந்த ஒரு பாடல்தான். இந்த ராகத்தில் இரண்டு நி எனப் பார்த்தோம். சிறியது ஒன்று பெரிய நி மற்றொன்று. அது போல் இரண்டு வேறு விதமான பாடகர்கள். இரண்டு வேறு விதமான நடிகர்கள். பாத்திரங்கள். படத்தில் சிவாஜி கொஞ்சம் முரட்டுத்தனமானவர், பாலாஜி மென்மையானவர். இருவரும் மற்றவருக்காகப் பெண்பார்த்து விட்டு வந்து பாடும் பாடல். இந்த ராகத்திலும் இரண்டு நிஷாதங்கள் (நி).

கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்., மென்மையாகப் பாடும் பி. பி. எஸ். என அமைந்திருப்பது தற்செயலான விஷயமாகத் தோன்றவில்லை. ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற அந்தப் பாடல் இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல்களிலேயே முதன்மையானது எனலாம். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அமைந்த பாடல். வயலின், ஷெனாய், குழல் என இந்த ராகத்தின் பல்வேறு வடிவங்களைக் காட்டியிருப்பார்கள். எம். எஸ். வி. தனது பாடல்களில் ராகத்தின் இலக்கணத்தை ராணுவ ஒழுங்குபோல் கடைப்பிடிக்க மாட்டார்.

இலக்கணத்தைவிட மெட்டின் இனிமைதான் முக்கியம் என்பது அவரது பாணி. இப்பாடலிலும் ‘நான் பார்த்த பெண்ணை’ என்ற இடத்தில் வேறு ஸ்வரங்கள் வந்தாலும் இனிமை கெடாமல் இருக்கிறது.

அதே மெல்லிசை மன்னர் பிற்காலத்தில் பொல்லாதவன் (1980) என்ற படத்தில் சுசீலாவின் குரலில் ‘சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே’ என்ற இனிய பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார்.

சரி. இசை ஞானிக்கு வருவோம். பல விதமான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார். கல்லுக்குள் ஈரமாய் வந்த பாடல் ஒன்று உண்டு. அது என்ன பாடல் ? க்ளூ: அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் கல்லுக்குள் ஈரம் இல்லை.

தொடர்புக்கு: ramsych2@gmail.com

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...