Saturday, July 7, 2018

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : ஜூலை 07, 2018 01:22

மதுரை: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தீர்ப்பை ஒத்திவைத்தது. மார்க்சிஸ்ட் எம்.பி., - டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, மே, 6 ல் நீட் தேர்வு நடந்தது. 180 வினாக்கள் இடம்பெற்றன; 49 வினாக்களில் தமிழ் மொழி பெயர்ப்பில் தொழில்நுட்ப வார்த்தைகள் தவறாக இருந்தன. ஒரு வினாவிற்கு, 4 மதிப்பெண் வீதம், 49 க்கு கருணை மதிப்பெண்ணாக, 196 வழங்க வேண்டும். முடியாதபட்சத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் மனு செய்தார். ஜூலை, 2 ல் நீதிபதிகள், 'அறிவியல் பாடங்களுக்கு ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக பொருள்கொள்ளும் வகையில், தமிழ் வார்த்தைகளை கண்டறிய, சி.பி.எஸ்.இ.,முயற்சி மேற்கொண்டதா' என்பன உட்பட, நான்கு கேள்விகளை, சி.பி.எஸ்.இ.,க்கு எழுப்பினர்.நீதிபதிகள், சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு முன் இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர், தனது வாதத்தில் கூறியதாவது: மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பற்றி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க, அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ் வினா குழப்பமாக இருந்தால், அதற்கு எதிரே உள்ள ஆங்கில வினாவிற்கு விடையளிப்பதுதான் சரியானது என, நீட தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே தெளிவுபடுத்தப்பட்டது. நீட் தேர்வின், 'கீ' பதில்கள் வெளியானபோது, எந்த ஒரு மாணவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்., சி.பி.எஸ்.இ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி, வினாக்கள் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. மொழிமாற்றத்திற்கு, மாநில அரசு நிபுணர்கள் பட்டியல் அளித்தனர். அவர்கள் பரிந்துரைப்படி, மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் யாரும், இந்நீதிமன்றத்தை நாடவில்லை. அனைத்து மாணவர்களும் சரியாக தேர்வு எழுதியுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார். அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், கூறியதாவது: மொழிமாற்றத்திற்கு, மாநில அரசிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளீர்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய முடியாத மற்றும் அதற்கு சமமான வார்த்தைகள் உள்ளதா என்பதற்குரிய பட்டியலை, மாநில அரசிடம் சி.பி.எஸ்.இ.,கோரியிருக்கலாம். இங்கு வழக்கு தாக்கலானதும், ஒருநாள் முன்கூட்டியே, அவசரமாக, நீட் முடிவை வெளியிட்டது ஏன்? வினாக்களில் குழப்பமின்றி, அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்திருக்க வேண்டும். இவ்விவகாரத்தை சி.பி.எஸ்.இ., ஜனநாயகப் பூர்வமாக கையாண்டிருக்கலாம். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
'பான்' கார்டு விண்ணப்பத்தில் தந்தை பெயர் கட்டாயமா?

Added : ஜூலை 07, 2018 01:02


புதுடில்லி : 'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை எழுதாமல் விடுவதற்கான வாய்ப்பு அளிக்கும்படி, மத்திய நிதியமைச்சருக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், மேனகா, கடிதம் எழுதியுள்ளார்.

பான் கார்டுகள், அடையாள ஆவணமாகவும் பயன்படுகின்றன; இதில், எண் மற்றும் எழுத்துகளின் கலவையாக, 10 இலக்கங்கள் இடம் பெற்று இருக்கும். இது, வருமானவரித்துறையால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பான் கார்டுக்கான விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, பியுஷ் கோயலுக்கு, அமைச்சர் மேனகா எழுதியுள்ள கடித விபரம்: பல தனிப்பட்ட காரணங்களுக்காக, கணவரை பிரிந்து, ஏராளமான பெண்கள் தனியாக வாழ்கின்றனர். இவர்கள், தங்கள் முன்னாள் கணவரின் பெயரை, ஆவணங்களில் சேர்க்க விரும்புவதில்லை. எனவே, பான் கார்டுக்கான விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை எழுதாமல் விடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன், கணவரை பிரிந்து வாழும் பெண்கள், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற, முன்னாள் கணவரின் கையெழுத்து மற்றும் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியை எதிர்த்து, 2016ல், வெளியுறவுத்துறைக்கு, மேனகா கடிதம் எழுதியிருந்தார். அதை ஏற்று, பாஸ்போர்ட் விதிகளில், வெளியுறவு அமைச்சகம் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்திகள்

மகேந்திரா சிட்டியில் நிலநடுக்க பீதி பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் வெளியே ஓடினர்




சிங்கப்பெருமாள் கோவில் அருகே மகேந்திரா சிட்டியில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பதிவு: ஜூலை 07, 2018 04:15 AM

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டியில் 63 பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளன. அங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு நேற்று மாலை 5 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது போல ஒரு அதிர்வு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்து விட்டனர்.

வெளியே வந்த ஊழியர்கள்

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டபோது, “டமார் என்ற பயங்கர சத்ததத்துடன் ஒரு அதிர்வு ஏற்பட்டது. இதனால் நாங்கள் அனைவரும் எங்களது இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து விட்டோம். நிலநடுக்கம் ஏற்பட்டது போல அனைத்து பொருட்களும் ஒரே நேரத்தில் அதிர்ந்ததால் நாங்கள் பயந்து வெளியே வந்து விட்டோம்” என்று தெரிவித்தனர்.

போலீஸ் விளக்கம்

போலீஸ் தரப்பில், “மகேந்திரா சிட்டியை ஒட்டி காட்டுப்பகுதி உள்ளது. அதற்கு கிழக்கு திசையில் அதாவது மறைமலை நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட (அனுமந்தபுரம் காட்டுப்பகுதியில்) தமிழக போலீசாரின் துப்பாக்கி சூடு தளம் உள்ளது. அங்கு அடிக்கடி ராணுவ வீரர்கள் அதிக சக்திவாய்ந்த வெடி பொருட்களான வானத்தில் இரவு நேரத்தில் கலர் கலராக மிளிரும் பலுன்களை பறக்கவிட்டு அதனை குறி பார்த்து சுடுவதும், பீரங்கி குண்டுகளை வெடிக்க வைத்து பயிற்சி எடுப்பதும் வாடிக்கை. அதுபோல நேற்று மாலையும் ஒரு சக்திவாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று வெடித்ததால் இந்த அதிர்வு ஏற்பட்டது” என்று கூறினர்.

இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட பாரேரி கிராமத்தில் ஒரு சில வீடுகளில் இதுபோன்ற அதிர்வுகள் ஏற்பட்டதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

மது அருந்தியதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவிய விவகாரம்: பேரூராட்சி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம்





மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேரத்தில் ஊழியர்கள் மது அருந்துவதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவியதை தொடர்ந்து 3 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூலை 07, 2018 04:00 AM மாற்றம்: ஜூலை 07, 2018 04:35 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் செயல் அலுவலர் அறையில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 5 பேர் மது அருந்தினர். இதை அப்பகுதி மக்கள் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மது அருந்தியது உறுதியானது.

பணி இடைநீக்கம்

இது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், அலுவலக அறையில் மது அருந்தியதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவிய விவகாரத்தில் தொடர்புடைய பேரூராட்சி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய தற்காலிக பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றனர்.
மாவட்ட செய்திகள்

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடும் சென்னை



சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 07, 2018 05:15 AM

சென்னை,

மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாடும், மாநிலமும் வளர்ச்சியடைந்த பாதையை நோக்கி செல்கின்றது என்று அர்த்தம். உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என்றால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கவேண்டியது என்பது தவிர்க்கமுடியாதது. சென்னை நகரத்தில் பெருகிவரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை கட்டமைப்புகள் இல்லை என்பது கசப்பான உண்மை.

அரசு போக்குவரத்துத்துறை பதிவேடுகளின்படி கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 ஆகும். இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரத்து 210 ஆகும். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாகனங்களில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 82 சதவீதம் ஆகும்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தலைநகர் சென்னையில் பிரதான சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நிரம்பி வழிவதை காணமுடிகிறது. நடைபாதைகளே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் ஒரு பக்கம். இதனால் ‘நடைபாதை நடப்பதற்கே’ என்ற நிலை மாறி ‘நடைபாதை ஆக்கிரமிப்பதற்கே’ என்று ஆகிவிட்டது. இதுதவிர ‘நோ பார்க்கிங்’ என்று போக்குவரத்து போலீசார் வரையறுத்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற காரணங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆமை வேகத்திலேயே வாகனங்கள் முன்னேறி செல்ல முடிகிறது. சரியான இடத்துக்கு, உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலிலேயே வாகனங் களை இயக்கும் நிலை உள்ளது.

பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எழும்பூர், பிராட்வே, புரசைவாக்கம், சென்னை சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் பசுமைவழிச்சாலை வழியாகவே வாகனங்களில் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அந்த சாலைகளை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் காலை நேரத்தில் பசுமை வழிச்சாலை சந்திப்பில் இருந்து அடையாறு பாலம் வரையிலும் வாகனங்கள் வரிசையாக நின்று செல்லவேண்டிய நிலை இருக்கிறது. பசுமை வழிச்சாலை சந்திப்பை கடந்து செல்வதற்கே சராசரியாக வாகன ஓட்டிகளுக்கு 10 முதல் 15 நிமிடம் வரையிலும் எடுத்துக் கொள்கிறது. இதனால் அலுவலகங்களுக்கு ஊழியர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளும் கால தாமதமாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

சிக்னல் கடந்த சில நாட்களாகவே பழுதாகி கிடப்பதால், பசுமைவழிச்சாலை சந்திப்பில் சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள், கல்லூரி மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இடையூறு இல்லாமல் சாலையை கடந்து செல்வதற்கு ஆகாய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் காலை மற்றும் மாலை நேரத்தில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்பதை தினசரி காணமுடியும். அந்த பகுதியில் உள்ள சிக்னலும், கண்காணிப்பு கேமராவும் பழுதாகி பல நாட்கள் ஆகிறது. ஆனால் அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

சிக்னல் பழுதாகி கிடப்பதால், மிக முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் வரும் நேரங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்திவருகின்றனர். மற்ற நேரங்களில் ஒழுங்குபடுத்தாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரும், போக்குவரத்து நெரிசல் மட்டும் தீர்ந்தபாடு இல்லை. இதேபோல நகரின் பல்வேறு இடங்களிலும் நெரிசல் நிலவி வருகிறது.

போக்குவரத்து நெரிசலால் சென்னை நகரமே திக்குமுக்காடி வருகிறது. சென்னை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை காட்டிலும் சுரங்கபாதைகள், மேம்பாலங்கள் கட்டுவதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகவும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து உள் கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல அரசு பஸ் சேவைகள், மெட்ரோ ரெயில் மற்றும் மின்சார ரெயில் சேவை களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தி, கட்டணத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு செய்து, பொதுத்துறை போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிப்பு செய்வதன் மூலம் தனிநபர் பயன்படுத்தும் வாகனங்களை கணிசமாக குறைக்கலாம் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 16-ந் தேதி நடக்கிறது




திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு 16-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

பதிவு: ஜூலை 07, 2018 05:00 AM

திருப்பதி,

அனைத்து கோவில்களிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி ஆகஸ்டு 11-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது.

இதனையொட்டி ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அன்றைய நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனமும் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது. இந்த தகவலை தேவஸ்தான துணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அவர்கள் நேரடியாக அனுப்பப்பட்டு வந்தனர். பிரம்மோற்சவ நாட்களில் அவர்கள் வைகுண்டம் கியூகாம்ப்ளக்ஸ் அருகில் தனி கம்பார்ட்மெண்ட் அமைக்கப்பட்டு அதன் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Friday, July 6, 2018

Vehicles’ daytime lamps must not affect vision of other motorists: Madras HC 

DECCAN CHRONICLE.


Published Jul 6, 2018, 6:07 am IST


This affects the motorists of on-coming vehicles and virtually blinding their vision. 




Chennai: Madras high court has observed that daytime running lamps in vehicles, which was introduced recently, should not affect vision of motorists of on-coming vehicles.

When a PIL from K.K. Rajendran of Korattur, came up for hearing before Justices T.S. Sivagnanam and V. Bhavani Subbaroyan on Thursday, the bench observed that the modern vehicles are fitted with very powerful headlights and the mandatory black dot, which is otherwise known as ‘Bull’s Eye’, were not affixed. This affects the motorists of on-coming vehicles and virtually blinding their vision.

The bench said that it appears that there is a proposal to make it mandatory for all two-wheelers to have a ‘day light’, which automatically switches on as soon as the vehicle is started and it cannot be switched off. However, such ‘day light’ has certain prescriptions as per International Standards and it should not affect the on-coming traffic.

The bench said, “what we found recently was several two-wheelers have LED lights and those lights are left burning during the day time, which is a traffic hazard. This aspect has to be gone into by the authorities concerned, since steps are always taken to prevent motorists from using multi-colour lights in the vehicles.”

Later, the bench posted the matter for further hearing to July 27 and file report.

In the petition Rajendran sought for a direction to the Transport and police authorities to strictly enforce the rules of wearing helmets both by the rider and pillion riders of two-wheelers and seat-belts by the drivers and front seat occupiers of four-wheelers.

Rajendran said Section 129 of Motor Vehicle Act 1988 mandates every person driving two wheeler shall wear protective helmet. Further rule 138 (3) of Motor Vehicle rule 1989 requires seat-belts by the drivers and front seat occupiers of four-wheelers in the vehicle shall wear seat belts while the vehicle in motion.

Though enforcement agencies taking steps against the violators, the authorities had not implemented the rules effectively. On March 29, 2018, he sent representations to the authorities to enforce the rules strictly and enforce both the two-wheeler rider and pillion rider to wear helmet. He also sought to make drivers and front seat occupiers of four-wheelers in the vehicle to wear seat belts.

NEWS TODAY 26.01.2026