Sunday, July 8, 2018

துணி பையில் வாங்கினால் குழம்பு தூக்கு பரிசு

Added : ஜூலை 08, 2018 02:36


சேலம்:சேலத்தில், பாத்திரம், துணி பையுடன் வந்து டிபன், சாப்பாடு வாங்கினால், குழம்பு துாக்கு பரிசாக வழங்கப்படும் என, ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

'தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஜூலை, 1 முதல், சேலம் மாநகர பகுதி அரசு அலுவலகங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த, மாநகராட்சி கமிஷனர் தடை விதித்துள்ளார்.சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதிராஜன், 40 என்பவர், ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த ஓட்டலில், 'ஜூலை, 1 முதல் டிசம்பர், 31 வரை, டிபன் வாங்க வருவோர், குழம்புக்கு பாத்திரம், பார்சல் கொண்டு செல்ல துணி பை, ஒயர் பைகளை கொண்டு வந்தால், 2019 ஜனவரியில், குழம்பு துாக்கு பரிசாக வழங்கப்படும்' என, அறிவித்து, ஓட்டலில், 'நோட்டீஸ்' ஒட்டியுள்ளார். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதோடு, பாத்திரம், துணி பைகளை, வாடிக்கையாளர்கள் கொண்டு வருகின்றனர்.

NEET NEW ANNOUNCEMENT


 ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு  மாணவர்கள்...மகிழ்ச்சி :


புதுடில்லி: ''சி.பி.எஸ்.இ.,யால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' தேர்வுகளை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு இனி நடத்தும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு இரு நீட் தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'உயர் கல்விகளுக்கான நுழைவுத்தேர்வுகளை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிறப்பானதொரு அமைப்பின் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி, 2017 - 18பட்ஜெட்டில் அறிவித்தார். இதையடுத்து, இந்த தேர்வுகளை நடத்த, தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டது.இது தொடர்பாக, 2017, நவம்பரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்புக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான,'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வு ஆகியவற்றை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தி வந்தது. 'இந்த தேர்வுகளை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள








 தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு நடத்தும்' என, மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பட்டு வந்த நீட், ஜே.இ.இ., தேர்வுகள், இனி, ஆண்டுக்கு, இருமுறை நடத்தப்படும்.நீட் தேர்வுகள், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும். மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனரோ, அதுவே ஏற்கப்படும். ஜே.இ.இ., தேர்வுகள், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, நெட் தேர்வுகள், டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்த தேர்வுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படுகின்றன. இதற்காக, அனைத்து

நகரங்கள்,கிராமங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில், அரசு கணினி பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. இந்த மையங்களில், மாணவர்கள் ஆண்டு முழுவதும், இலவச பயிற்சி பெறலாம். இதன் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன், தங்களை சிறப்பாக தயார் செய்து கொள்ள முடியும். இந்த மையங்கள், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செயல்படும். விருப்பம் உள்ள அனைவரும், இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இருந்து,இலவச கணினி பயிற்சி மையங்கள் செயல்பட துவங்கும். இதுகுறித்த விரிவான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். ஒவ்வொரு தேர்வும், நான்கு அல்லது ஐந்து நாட்களில் நடத்தப்படும். இதில், பாடத்திட்டம், கேள்வி வடிவம் மற்றும்

தேர்வு எழுதும் மொழியில் மாற்றம் எதுவும் இல்லை. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வு,புதிதாக உருவாக்கப்பட்டுள்ள,தேசிய தேர்வு முகமை மூலம், முதல் முறையாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மென்பொருள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும். சர்வதேச தரத்தில் நடைபெறும் புதிய தேர்வு முறையில், கேள்வித்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார். ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிபுணர்கள் குழு தயார்!

புதிய தேர்வு நடைமுறையை, சிறப்பாக செயல்படுத்த, கல்வி நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், புள்ளியியல் ஆய்வாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரை, அரசு நியமனம் செய்ய உள்ளது. இவர்களின் உதவியுடன், தேர்வு முறையில் எதிர்கொள்ளப்படும் நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்படும்.வினா தாள்களை வடிவமைக்க, நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. கேள்விகளை தயார் செய்வதில், அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பர்.நிபுணர் குழுவுக்கான உறுப்பினர்கள், தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவில், தேசிய தேர்வு முகமையில் இணைந்து பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது.

Saturday, July 7, 2018

Summer 2018 saw Indians flying more than ever 

07 Jul 2018 | By Shiladitya Ray



According to ToI, summer 2018 saw Indians taking to the skies like never before, with numbers of both domestic and international Indian fliers seeing a significant jump.

This year's summer holiday season saw 9.4 lakh Indians fly every day, up by 17.7% from the same period last year.

Additionally, spurred on due to efforts by carriers, air travel is also growing consistently.

Here's more.

In context: India's aviation market continues to grow impressively

07 Jul 2018Summer 2018 saw Indians flying more than ever

Air travel growthIndia's already stressed airports are becoming busier

India's already stressed airports are becoming busier by the year, and some of them are already operating beyond capacity.

On the back of Indian carriers aggressively expanding their fleets, domestic air travel grew by 20.3% in the two-month summer holiday season compared to the same period last year.

Meanwhile, international air travel grew by 8.2% in this summer compared to the last.



Daily passengersIndia's six JV airports saw the bulk of the traffic

This summer season, Indian airports saw a daily average footfall of 9.4 lakh fliers, of which 7.5 lakh were domestic fliers and 1.9 lakh were international fliers.

Interestingly, India's six JV airports - at the metro cities, in Kochi, and Nagpur - were far busier than the AAI and state government-operated 109 airports put together.

Airlines cannot operate as many flights as they want to
Despite growth in airlines' fleets, Indian airports haven't been able to keep pace with the explosion in passenger numbers. Owing to airports operating above capacity, airlines don't get slots at key airports like Delhi and Mumbai, as well as growth centers like Patna.

Domestic aviationThe numbers tell the story 


As is obvious from the numbers, India is currently the world's fastest growing air travel market as of May 2018, with a 16.6% year-on-year growth.

Following India are China (11.9%), Russia (8.6%), US (5.5%), and Brazil (4.1%).

Understandably, investors continue to remain bullish towards the Indian domestic aviation market as demand continues to be supported by a strong growth in domestic airport connections.
உங்கள் பாதையில் எங்கள் காருக்கும் கொஞ்சம் வழிவிடுங்கள் ரத்தன் டாடா!



ரஞ்சித் ரூஸோ  vikatan

ஜூன் மாதம் ஒரே ஒரு நானோ கார்தான் உற்பத்தியானதாக சொல்கிறது டாடா மோட்டார்ஸ். நஷ்டத்தில் நானோ...



மாருதி முதல் ஆஸ்டன் மார்டின் வரை மற்ற நிறுவனங்களிடமிருந்து ஒரு கார் உருவாகிறது என்றால் அதில் லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கும். ஆனால், டாடாவில் இருந்து வரும் காரில் சில கனவுகள் இருக்கும். ரத்தன் டாடாவின் கனவுகளில் இருந்து உருவான ஒரு கார்தான் நானோ.



சமீபகாலமாக டாடா நானோவின் விற்பனை சரிவுநிலையிலேயே இருந்தது. அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் மாதம் ஒரே ஒரு டாடா நானோ கார் மட்டுமே உற்பத்தி செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 நானோ கார்கள் ஏற்றுமதியாகின. ஆனால், இந்த மாதம் ஏற்றுமதியே இல்லை. அதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 275 நானோ கார்கள் தயாரானது. ஆனால், இந்த மாதம் ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்திசெய்துள்ளார்கள்.

டாடா நானோ, பைக் - ஸ்கூட்டர் போன்றவற்றில் குடும்பமாகப் பயணிக்கும் நடுத்தர வர்க்க மக்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட காராகும். இது ரத்தன் டாடாவின் செல்லப்பிள்ளை. உலகில் 1 லட்ச ரூபாய்க்கு ஒரு கார், யார் தருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, ரத்தன் டாடாவின் மூலைக்கும் தொழிலுக்கும் கடும் சவாலான ஒரு வேலையில் உருவான கார்தான் நானோ. டாடா நிறுவனத்துக்கு இது நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் ரத்தன் டாடாவுக்கு இந்தக் காரின் உற்பத்தியை நிறுத்துவது பிடிக்கவில்லை. உலகெங்கும் உள்ள ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் பாராட்டையும், விருதுகளையும் ஒருசேரக் குவித்த இந்தக் கார், ரத்தன் டாடாவுக்கு உணர்வுரீதியாக நெருக்கமான காராக தானே இருக்கும்.

``நிலைமை தற்போது இருப்பதைப் போன்றே இருந்தால், 2019-ம் ஆண்டைக் கடந்து நானோ பிழைக்காது. நானோவை மீட்க புதிய முதலீடுகள் தேவைப்படும். ஆனால், அதைப்பற்றிய எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை" என்று அந்த நிறுவனத்தினர் தற்போது சொல்கிறார்கள்.



ஒரு லட்ச ரூபாய்க்குக் குறைவான விலையில் டாடா, கார் விடப்போகிறது என்ற ஒரு நிருபர் தவறாகப் பதிவுசெய்த செய்தியால் உருவானதுதான் இந்தக் கார். மார்ச் 2009-ல் நானோ விற்பனைக்கு வந்தது. கார் விற்பனைக்கு வந்ததுமுதல் பிரச்னைதான். மேற்கு வங்க தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு அங்கு நடைபெற்ற போராட்டங்களால் உற்பத்தி குஜராத் தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டது; ஆங்காங்கே நானோ கார்கள் சாலையில் தீப்பற்றி எரிந்ததாகப் புகார்கள்; உலகின் விலை மலிவான கார் எனும் டேக் லைன் அதை வாங்குபவர்களை யோசிக்கவைத்தது எனப் பல பிரச்னைகளுக்கு இடையிலும் நானோவை விட்டுக்கொடுக்க டாடாவுக்கு மனமில்லை.



நானோ காரை வடிவமைக்கும்போது, அதன் அடிப்படை விலை ஒரு லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதல் காரின் விலை அதிகமாகவே இருந்துவந்திருக்கிறது. இந்தக் காரால் ஏற்பட்ட நஷ்டம், ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. லாபத்துக்கான அறிகுறியே தென்படாத நிலையில், நானோவை விற்பனை செய்வதில் அர்த்தம் இல்லை. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உணர்வுபூர்வமான தயாரிப்பாக இது இருந்து வந்ததாலேயே இந்த முடிவை எடுக்கத் தயங்குகிறோம்'' எனக் காட்டமாகப் கடிதம் எழுதினார் இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி.

இந்தக் காரைத் தயாரிப்பதற்கான முதலீடு அதிகரித்துக்கொண்டே வருவதால், எத்தனை நானோ கார்களை விற்பனை செய்கிறோமோ, அவ்வளவு நஷ்டம் அடைகிறோம் என அர்த்தம்,'' என்று ஒரு வருடத்துக்கு முன்பே டாடா ஊழியர் ஒருவர் பேசியிருந்தார்.



தற்போது ஒரே ஒரு நானோ தயாரிக்கப்பட்ட செய்தி ஆட்டோமொபைல் ஆர்வலராக பார்த்தால் பெரும் வருத்தத்தை மட்டுமே தருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நானோவால் டாடாவுக்கு நஷ்டம்தான். ஒரே ஒரு காருக்காக ஒரு புரொடக்‌ஷன் லைனை நடத்தும் அளவு டாடாவின் நிலை உள்ளது. ஏமோஷனல் காரணங்களைத் தாண்டி யோசிக்க வேண்டிய தருணம் இது. டாடா நானோவின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, அந்த புரொடக்‌ஷன் லைனில் இன்னொரு காரை உருவாக்கலாம். நானோ போல அல்ல அதைவிடச் சிறப்பாக ஒரு காரை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு பலர் டாடா நிறுவனத்திலேயே இருக்கிறார்கள். பாதையை நீங்கள் உருவாக்கிவிட்டீர்கள், உங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொஞ்சம் வழிகாட்டுங்கள் ரத்தன் டாடா.
கார் வாங்கணுமா? ​இதை மிஸ் பண்ணிடாதீங்க! - Sponsored Content.



.

vikatan

ஒரு கார் வாங்கணும்! நல்லா உழைக்கணும், நல்ல இடவசதி இருக்கணும், ஸ்மூத்தா ஓடணும். சுருங்கச் சொன்னா, பார்க்கவும் சரி, ஓட்டவும் சரி, ஜம்முனு இருக்கணும், இதுதான் கார் வாங்க நினைக்கும் பலரின் ஆசை. சொந்த வீட்டுக்கு அடுத்தபடி சொந்தக் கார், நாம் செய்யும் பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். அப்படி வாங்கும் கார், அம்மா அப்பா, மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் பிடிக்கணும். ஒரு குடும்பத்தின் முதல் கார், அந்தக் குடும்பத்தின் அங்கமாக மாறிவிடுகிறது. ஏன், பலருக்கு அவர்களின் கார் நெருங்கிய உறவுகளில் ஒன்று. ரஜினி நடித்த 'படிக்காதவன்', விஜய் சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' படமெல்லாம் நாமும் பார்த்திருக்கிறோம்தானே!



பட்ஜெட்டுக்குள் பிரமாண்டமான​ கா​ரை​ வாங்க நினை​ப்பவர்களுக்கும்​ பழைய காரை மாத்திட்டு புதுசுக்கு மாற நினைப்பவர்களுக்​கும்​, ஹோண்டா நிறுவனம் 'அமேஸ்' காரை அறிமுகப்படுத்தியிருக்காங்க. 'அமேஸ்' 2013ல் ஹோண்டா அறிமுகப்படுத்திய கார். இப்போது, ​​'அமேஸ் 2018' வெர்ஷன் வந்திருக்கு. முந்தைய வெர்ஷனைவிடப் புது வெர்ஷனில் என்னென்ன சிறப்பு இருக்கு... இது நமக்கு ஏற்ற கார்தானா... நம்பி வாங்கலாமா? இதோ நம் ரிப்போர்ட்:

முதலில், கார் பார்க்க எப்படி?

ஆர்கிட் பியர்ல் வைட், ​​ரேடியன்ட் ரெட்,​ மாடர்ன்​ மெட்டாலிக் ஸ்டீல், லூனார் சில்வர் மற்றும் கோல்டன் பிரௌன் என கண்ணைக் கவரும் ​ஐந்து நிறங்களில் ​வருகிறது​ ​அமேஸ்​. இதன் வெளிக்கட்டமைப்பு ஹை டென்ஸைல் ஸ்டீலால் ஆனது என்பதால், இது முன்பைவிட உறுதியானதாக இருக்கிறது (பழைய அமேஸைவிடப் புதிய அமேஸ் 40 கிலோ எடை குறைவு!). அமேஸின் பேனட், மேல் நோக்கித் தூக்கப்பட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது, காரின் முன் பக்கத்துக்குப் புதிய ஸ்டைலைக் கொடுத்திருக்கிறது. இம்முறை, அமேஸ் வீல் பேஸ் (முன் பின் சக்கரங்களுக்கு இடையிலான இடைவெளி) 65 மி.மீ அதிகமாகியிருக்கிறது. இதனால், முன்பைவிட அமேஸ் இப்போது அதிக இட வசதியுள்ள காராக மட்டுமன்றி, கவர்ச்சியான காராகவும் மாறியிருக்கிறது.

காரின் டாஷ்போர்டில் பியானோ ப்ளேக் ( Piano Black) பினிஷ் மற்றும் தரமான ஹார்டு பிளாஸ்டிக் உபயோகப்படுத்தியிருப்பது பார்க்க நன்றாகவே உள்ளது. ஏர் கண்டிஷன் கன்ட்ரோலர்கள் ஸ்மூத்தாக இருக்கின்றன, ஹோண்டாவின் தரம் இதில் வெளிப்படுகிறது. 7 இன்ச் டச் ஸ்கிரீனில் ஆப்பிள்​ கார்​ பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் சாட்டிலைட் நேவிகேஷன் வசதி உண்டு. சொகுசான லுக் உள்ள கார் கேட்கும் கணவன் மனைவிக்கு, பார்த்தாலே பிடித்துப்போகும்!

இட வசதி:

உயரம் மற்றும் அகலத்தில், முன் சீட் பயணிகளுக்குத் தாராளமாக இடமுள்ளது. வீல் பேஸ் அதிகரித்துள்ளதால், சரியான கோணத்தில் பின் சீட்டுகளின் சாய்மானம் இருப்பதால், வயதானவர்கள் பின்சீட்டில் உட்கார வசதியாக இருக்கும், காலை நீட்டி மடக்கவும் போதுமான இடம் இருக்கிறது. வயதான பெற்றோர் நிம்மதியாக பின் சீட்டில் உட்கார்ந்து வரலாம்! பாட்டில், போன் போன்ற விஷயங்களை வைக்க காரில் போதுமான இடம் இருக்கிறது. 420 லிட்டர் கெப்பாசிட்டி டிக்கியில், ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவு ​பொருள்களை வைத்துச் செல்ல வசதியிருக்கிறது!

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:

குடும்பத்தோடு காரில் பயணிக்கும்போது, அதிகமாக பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது ஹோண்டா. ஆன்டி லாக் பிரேக்கிங் & எலெக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் சிஸ்டம் வீல்கள் லாக் ஆவதைத் தடுத்து, கார் அதிக வேகத்தில் சறுக்காமல் காக்கிறது. ஆபத்துச் சமயங்களில் உதவ 2 காற்றுப்பைகள் இருப்பது பெரிய அனுகூலம். குழந்தைகளின் பாதுகாப்புக்கான isofix சீட் ஆகியவை எல்லா வேரியன்ட்டுகளிலும் இருக்கிறது.



இன்ஜின்​:​​​

பெட்ரோல் மேனுவல் & ​ CVT ​ஆட்டோமேட்டிக்​ ​ (1.2 லிட்டர்), டீசல் மேனுவல் & ​ CVT ​ஆட்டோமேட்டிக் (1.5 லிட்டர்) இன்ஜின்கள் என்று நான்கு விதமான ஆப்ஷன்களை ஹோண்டா கொடுக்கிறது​.​ 100 bhp திறன்கொண்ட 1.5 லிட்டர் டீசல் மேனுவல், முந்தைய அமேஸைப் போலவே நாம் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறது. காரின் வேகம் கூடக்கூட, தேவைக்கு ஏற்ப சக்தி சீராக அதிகரிக்கிறது. இன்ஜின் அதிர்வுகளும் சத்தமும் குறைவாக உள்ளன - இதில் ஹோண்டாவின் முயற்சி வெற்றியடைந்துள்ளது என்றே சொல்லலாம்.​ ​1,800 rpm-ஐத் தாண்டியதும் சக்தி மேலும் பிரவாகம் எடுக்கிறது. 3,800 rpm வரை கேட்கக் கேட்க உடனுக்குடன் சக்தி கிடைக்கிறது. இன்ஜின் சத்தத்தையும் அதிர்வுகளையும் கட்டுப்படுத்த ஹோண்டா எடுத்திருக்கும் முயற்சிகள் நல்ல பலன் கொடுத்திருப்பதை உணர முடிகிறது. ஐந்து கியர்களைக் கொண்ட கியர்பாக்ஸ் இயக்குவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது. கிளட்சில் எந்தப் பிரச்னையும் இல்லை. ​

​பெட்ரோல் மேனுவல் அமேஸைப் பொறுத்தவரை, நகர்ப்புறத்தில் ஸ்மூத்தாகவும், சத்தமில்லாமலும் இயக்குவதற்கு இது வசதியாக இருக்கிறது.

​​ C​VT ஸ்பெஷாலிட்டி: இந்தியாவிலேயே, டீசல் CVT ஆட்டோமேட்டிக் அம்சம் ஹோண்டா அமேஸ் காரில்தான் முதல்முறையாக ​அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (தற்போது வேறு எந்தக் காரும் இந்த மாடலில் கிடையாது!) சாதாரண ஆட்டோமேட்டிக் வகையைக் காட்டிலும் CVT ஆட்டோமேட்டிக் ஓட்டுவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது, எபீஷியென்சி பிரமாதம். மேலும், மைலேஜிலும் எந்த சமரசமும் இல்லை!



​​அமேஸ்​​ காரை வாங்க விரும்பினால், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங் அட்ஜஸ்ட்மென்ட், கிளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சாவி இல்லாமல், பட்ட​ன் ( Keyless Smart Entry)​ மூலம்​​ காரை ஸ்டார்ட்செய்யும் வசதி ஜோர்.

ஏ.சி கம்ப்​ரெஸரின் திறன் மேம்பட்டிருப்பதால், முன் சீட்டுகளுக்கான ஏ.சி வென்ட் மூலம் பின் சீட்டுகளுக்கும் குளிர் பரவிவிடுகிறது. சஸ்பென்ஷன் - பழைய அமேஸைவிட மேடு பள்ளமான சாலைகளைப் புதிய அமேஸ் நன்றாகவே சமாளிக்கிறது.

'வரலாம் வரலாம் வா' என ஒருவர் காரின் பின்பக்கம் நின்று இனி கத்தத் தேவையில்லை. பார்க்கிங் செய்வதற்கு வசதியாக பின்பக்க சென்சார் மற்றும் கேமரா உதவுகிறது.

​​மைலேஜ்:

19.5 kmpl (MT)/ 19kmpl (CVT)

27.4kmpl (MT)/ 23.8kmpl (CVT)​

மொத்தமாகச் சொன்னால், குடும்பத்துக்கு ஏற்ற வகையில் ஸ்டைலான, பாதுகாப்பான, இடவசதி கொண்ட காராக ஹோண்டா அமேஸ் திகழ்கிறது. 5 நபர்கள் அமரக்கூடிய செடான் வகை கார்களில் இப்போதைக்கு 'அமேஸ் இஸ் ரியலி அமேஸிங்' என்றுதான் சொல்லணும்! படித்தால் போதுமா... நீங்களே அமேஸ் 2018 பற்றி அறிந்துகொள்ள, இப்போதே டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம். கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும், கார் உங்களைத் தேடி வரும்!

https://www.vikatan.com/special/honda-amaze/
honda
ஏழைகளுக்கு நோய் வரக்கூடாது! #SaveDeepak - Sponsored Content



.
​உடல் தளர்ந்து போதல், சீக்கிரம் சோர்வுறுதல், மூச்சுவிடுவதில் சிரமம், சீரற்ற இதயத்துடிப்பு, நோய்த்தொற்றுகள், காய்ச்சல், இரத்தப்போக்கு, இதெல்லாம் ஒருசேர நமக்கு வந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த அவஸ்தைகளை ஒருவரால் தாங்கமுடியுமா? ஜுரம் வந்தாலே கண்ணெல்லாம் அனலாய்க் கொதித்து, தேகமெல்லாம் வலியெடுத்து நம்மை சாய்த்துவிடுகிறதே! இந்த அவஸ்தைகள் நமக்கு வந்தாலும் சரி, நம் அன்பின் உரியவர்களுக்கு இவை ஏற்பட்டு, அதனால் அவர்கள் நம் கண் முன்னே அணுஅணுவாய்த் துடித்துக் கதறும்போது அதை யாரால்தான் பார்க்க முடியும்? உலகின் ஒவ்வொரு மூலையிலும் யாரோ ஒருவர் இந்தக் கொடிய இன்னல்களுக்கு ஆளாகத்தான் செய்கிறார்கள், காரணம் இரத்தப் புற்றுநோய்!



தீபக், ஒரு இரத்தப் புற்றுநோயாளி. ஆனால் தீபக்குக்கு தனக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி பற்றி தெரியாது, பிறர் எடுத்துக் கூறினாலும் தீபக்குக்கு அது புரியாது, காரணம் அவனுக்கு வயது 4, பள்ளியில் யூ.கே.ஜி படிக்கும் குழந்தை! கடந்த மாதம் நடந்த சிறு விபத்தால், தீபக்கை அவன் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கே அவனின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டபோதுதான் பேரிடியாய் அந்த சேதி தெரியவந்தது - அவனுக்கு வந்திருபப்து அக்யூட் லிம்போஸ்டிக் லுகேமியா எனும் இரத்தப் புற்றுநோய்.

இப்போது, தீபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. புற்று நோய் பாதித்த உடல்
உறுப்புகளை மாற்றுவதற்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும், மேலும் பூரணமாக சரிசெய்ய ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கீமோதெரப்பிக்கு 2.5 லட்சம் ரூபாய் மற்றும் அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

  போன மாதம் வரை சிறுவர்களுடன் சுட்டித்தனமாய் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனுக்கு வந்திருக்கும் கொடிய நோயை எண்ணி எண்ணி கலங்கி நிற்கிறார் தீபக்கின் அம்மா. கார் ஓட்டுநரான தீபக்கின் அப்பா தான் சேர்த்த சம்பாத்தியத்துக்கும் மேலே கடன் வாங்கி மருத்துவச் செலவைச் செய்துவருகிறார். இந்நிலையில், தீபக்கை காப்பாற்றும் முனைப்பில், இணையதளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சில நல்ல உள்ளங்கள். இதற்காக, தீபக்கை படம்பிடிக்கும்போதுகூட மழலை மாறாமல் கேமராவைப் பார்த்து வெகுளியாய் சிரிக்கிறான் தீபக்!

இறக்கும் நாளைத் தெரிந்துகொள்வதுபோல் வேறொரு துயரம் இருக்கமுடியுமா? இப்போது தீபக்கின் பெற்றோர் நிலைமையும் இதுதான். இரத்தப்புற்று எனும் பாதக நோயிடமிருந்து தங்கள் குழந்தையைக் காப்பாற்ற உணவு, தூக்கம், சிரிப்பு இதையெல்லாம் மறந்து ஓடிக்கொண்டு இருக்கின்றனர். நொடிக்கு நொடி தீபக்கின் பிஞ்சுக் கையை தன்வசம் இழுத்துக்கொண்டிருக்கும் அந்தக் கொடிய நோயிடமிருந்து மீட்டு அவனை, நாம் மனதுவைத்தால் நிச்சயம் காப்பாற்ற முடியும்! https://www.edudharma.com/campaigns/help-4-year-champ-deepak எனும் லிங்கிற்குச் சென்று, நூறோ, இரு நூறோ, ஆயிரக்கணக்கிலோ நம்மால் ஆன பண உதவியை வழங்கலாம்​ (​​​போனில் லிங்க்கைப் பெற 080383 80103 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடு​ங்கள்). முடிந்தவரை நம் நண்பர்களிடம் இதைப் பகிர்வதால், தீபக் இந்தக் கொடிய நோயிலிருந்து மீள 100% வாய்ப்பிருக்கிறது.​ கொடுக்கும் உன்னதம் போல வேறேது?

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.
தமிழகத்தில் நடத்துனரில்லா பேருந்து பயணம்... விளைவுகள் என்ன?


ஜெ.அன்பரசன்  vikatan 

ஒரு பேருந்தின் காலஓட்டம் என்பது சுமாராக 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் மட்டும்தான். அதன்பின்பு, அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக் கூடாது



தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஏற்படக்கூடிய பயம், வேறெந்த வாகனங்களில் செல்லும்போது ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் ஒன்றா... இரண்டா, சொல்வதற்கு? படிக்கட்டுகள் இருப்பதில்லை; அமர்வதற்கு சீட்கள் இருப்பதில்லை; மேற்கூரை காற்றில் பறக்கும் அவலம்; உடைந்து தொங்கும் கண்ணாடிகள்; மழை பெய்யும்போது பஸ்ஸுக்குள் குடைபிடிக்கும் நிலைமை; பேருந்துகளைச் சுத்தப்படுத்தாமை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 60 சதவிகிதத்துக்கும் மேலான பேருந்துகள் காலாவதியானவை. அதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் 22,533 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், சென்னை மாநகரப் பேருந்துகள் (MTC) 3,688; நகரப் பேருந்துகள் (TOWN SERVICE) 6,916; புறநகர் சேவைப் பேருந்துகள் (MOFUSSIL SERVICE) 8,561: மலைவழிப் பேருந்துகள் (GHAT SERVICE) 528, மாவட்டங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (INSIDE STATE) 648; வெளிமாநிலங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (OUTSIDE STATE) 435; ஸ்பேர் பஸ்கள் (SPARE BUS) 1,757. இதில், காலாவதியான 60 சதவிகிதப் பேருந்துகள் என்பவை சுமாராக 14,000- க்கும் மேல். ``ஒரு பேருந்தின் காலஓட்டம் என்பது சுமாராக 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் மட்டும்தான். அதன்பின்பு, அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக் கூடாது'' என்கின்றனர் பேருந்தை இயக்குபவர்கள். ஆனால், என்ன செய்வது? அரசு சொல்வதைத்தானே அவர்கள் கேட்டாக வேண்டும்.



இந்த நிலையில்தான் 134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட 515 பேருந்துகளை முதற்கட்டமாக வாங்கியுள்ளது தமிழக அரசு. இந்தப் பேருந்துகள் அனைத்தையும் கடந்த 3- ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். சென்சார் தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், தாழ்தளப் படிக்கட்டுகள், பேருந்துக்கு முன்னேயும் பின்னேயும் வரும் வாகனங்களைத் துல்லியத் தன்மையுடன் அறிந்துகொள்ள சென்சார் கருவிகள், ஜி.பி.எஸ். கருவி, சி.சி.டி.வி கேமரா போன்ற சிறப்பம்சங்களுடன் இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 515 பேருந்துகளில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு (சென்னை) 40 பேருந்துகளும், விழுப்புரம் கழகத்துக்கு 60 பேருந்துகளும், சேலம் கழகத்துக்கு 78 பேருந்துகளும், கோவை கழகத்துக்கு 172 பேருந்துகளும், கும்பகோணம் கழகத்துக்கு 64 பேருந்துகளும், மதுரை கழகத்துக்கு 32 பேருந்துகளும், நெல்லை கழகத்துக்கு 69 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளில் 500 பேருந்துகளை நடத்துநர்கள் இல்லாமல் இயக்குவதுதான் தமிழக அரசின் திட்டம்.

  முதற்கட்டமாகச் சேலத்தில் 40 பேருந்துகள், கோவையில் 91 பேருந்துகள், விழுப்புரத்தில் 28 பேருந்துகள், கும்பகோணத்தில் 42 பேருந்துகள், மதுரையில் 10 பேருந்துகள், நெல்லையில் 20 பேருந்துகள் என மொத்தம் 231 பேருந்துகள் நடத்துநர்கள் இல்லாமல் இயக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமையைக் குறைப்பதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு நீண்டகாலமாகச் சிந்தித்து வருவதாகச் சொல்லிவந்தது. இதனையடுத்து, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டம்தான் நடத்துநர்களின் களையெடுப்புப் பணி. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ``நவீன வசதிகளுடன் கூடிய பேருந்துகள் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால், நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகள் இயக்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தினை உருவாக்கும்'' என்கின்றனர் போக்குவரத்துக் கழகத்தினர்.

இதைப்பற்றி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். ``தமிழகத்தில் இருக்கும் 22,533 அரசுப் பேருந்துகளில் 14,000-க்கும் மேல் காலாவதியானவை. ஆனாலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வேறுவழியில்லாமல் அந்தப் பேருந்துகளை இயக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால்தான் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தில் புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவே இல்லை. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு 5,000 புதிய பேருந்துகளை வாங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாகத் தற்போது 515 நவீன சொகுசுப் பேருந்துகள் இயக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. இது, படிப்படியாக உயர்ந்தால் காலாவதியான பேருந்துகள் அனைத்தும் பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். இது, அனைவருக்குமே நல்ல விஷயம்தான். அதேவேளையில், நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தினை உருவாக்கும். காசை மிச்சப்படுத்த வேண்டும் என்று நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது என்பது, அப்பாவி மக்களை அபாயத்தில் தள்ளிவிடும்.



மேலை நாடுகளில் நடத்துநர்கள் இல்லாமல் ஓட்டுநர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலை நாடு என்பது இந்தியாவுக்கு முற்றிலும் வேறுபட்டது. மேலை நாடுகளில் எதிர்திசையில் வாகனங்கள் வருவதில்லை. அத்துடன், அங்கு வாகனப் பெருக்கமும் குறைவு. ஆனால், இந்தியாவில் வாகனப் பெருக்கம் அதிகம். முக்கியமாக மேலை நாடுகளில் சாலை விதிகளை மக்கள் பின்பற்றுவார்கள். ஆனால், இந்தியாவில் அப்படியா? ஒரு இக்கட்டான நேரத்தில் நடத்துநர் சிக்னல்தான் பேருந்துக்கு மிக அவசியம். நீண்டப்பயணங்களின்போது ஓட்டுநருக்குச் சலிப்பு ஏற்படாமல் இருக்க, நடத்துநர் பேச்சுக் கொடுத்துகொண்டும் இருப்பார். அதுமட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களின் நெளிவு சுளிவுகளைக் குறித்து ஓட்டுநருக்கு, நடத்துநர் எச்சரிக்கை செய்வார். பேருந்தை ஓட்டுவது ஓட்டுநர் வேலை என்றால், அந்தப் பேருந்தை முழுவதும் கண்காணிப்பது நடத்துநரின் வேலை. இந்தியா போன்றதொரு நாட்டில் நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவது என்பது சாத்தியமற்றது. அதோடு, போக்குவரத்து ஊழியர்களும் பாதிப்படைவார்கள். இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக அனைத்துப் பேருந்துகளையும் நடத்துநர்கள் கொண்டு இயக்கப்பட வேண்டும். இதற்காகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடுவோம்" என்றார் மிகத் தெளிவாக.

NEWS TODAY 26.01.2026