Monday, July 9, 2018

இனிப்பு தேசம் 13: நல்வாழ்க்கை வரைய நீல வண்ணம்!

Published : 06 Jul 2018 19:10 IST
 
மருத்துவர் கு. சிவராமன்

 





மாம்பழம் ஜூன், ஜூலை மாசத்து ‘பேயிங் கெஸ்ட்!’. மற்றவர்கள் அதைச் சப்புக்கொட்டிச் சாப்பிட, இனிப்பு நோயர் சிலர் ஏக்கத்துடன் அதைப் பார்த்துக்கொள்வார்கள்; சிலர் யாரும் பார்க்காத வேளையில், இரண்டு துண்டு என்ன செய்துவிடப் போகுது எனத் தினம் இரண்டாய், சாப்பிட்டுவிட்டு எங்கே ரத்தச் சர்க்கரை எகிறிக்காட்டிடுமோ என சோதனை செய்யவே போகாமல் ஏமாற்றுவார்கள்.

நீரிழிவு நோயாளிகள் பழம் சாப்பிடலாமா? என்ன பழம், எந்த அளவில் சாப்பிடலாம்?

பழங்களுக்கு ‘பழம்’ விடலாமா?

பழங்கள் உலகின் ஒவ்வொரு மரபிலும் கொண்டாடப்பட்டவை. ஆப்பிளும் செர்ரியும் அத்தியும் கிட்டத்தட்ட அழகு, ஆற்றல், காமம், குழந்தைப்பேறு, மரணமின்மை ஆகியவற்றின் அடையாளங்களாக கிரேக்கத்திலும் சீனத்திலும் ஜப்பானிலும் நெடுங்காலம் கொண்டாடப்பட்டவை. ஆதாமின் ஆப்பிளில் இருந்து, சிவபெருமானின் மாம்பழம்வரை மதங்களில் பின்னப்பட்ட பழங்கள் உலகெங்கும் ஏராளம். சாகாவரம் கொண்டது நெல்லிக்கனி என்றும் ‘தாயின் கருப்பை மாதிரிப்பா, ஒவ்வொரு கனியும்’ என்றும் தமிழ் இலக்கியங்களில் பழங்கள் குறித்துப் பரவசப்பட்ட வரிகள் ஏராளம்.

பழங்களில் பெரும்பாலும் நீர், கொஞ்சம் நார், கூடவே கனிமங்கள், உப்புக்கள், மிக நுண்ணிய மருத்துவக் குணமுடைய வேதிச்சத்துக்கள், உடல் எதிர்ப்பாற்றலை, குறிப்பாக செல் அழிவைத் தடுக்கும் நிறமிச் சத்துக்கள் உண்டு. ஸ்கூல் வாசலில் கூறு போட்டு விற்கப்படும் இலந்தை முதல் ஏரோப்ளேனில் வந்து இறங்கும் ஆப்பிள்வரை அத்தனை பழங்களிலும் நல்லது உண்டுதான். இதில் நீரிழிவு நோயாளி ‘ஹைகிளைசிமிக்’ தன்மை உள்ள (ரத்தத்தில் சர்க்கரையை வேகமாக அளிக்கும் உணவு) பழங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். பங்கனபள்ளி மாம்பழமும் பண்ருட்டி பலாப்பழமும் அந்த வகையறாக்களே.

எப்போது சாப்பிடலாம்?

நல்லா ஒரு கட்டு கட்டிட்டு, கடைசியாகப் பழம் சாப்பிடுவது ஒருபோதும் நல்லதல்ல. ‘டெஸ்ஸெர்ட்’ (Dessert) எனப் பழத்தை, கடைசியில் சாப்பிடச் சொன்னது ஆங்கிலேயப் பழக்கம். நம் ஆசாரக்கோவைப் பழக்கமோ, பழம்தான் முதலில் பரிமாறப்பட வேண்டும் என்கிறது. கொய்யாவோ நெல்லியோ ஆப்பிளோ பப்பாளியோ சாப்பாட்டின் முதலில் பழத்துண்டுகளைச் சாப்பிட வேண்டும். 11 மணி, 3 மணி இடைக்காலப் பசி தீர்க்கவும் பழத்துண்டுகள் மிகச் சரியான தேர்வு.

தூங்கப்போகும்போது, ‘காலையில் அப்பத்தான் மலம் கழியும்’ என வாழைப்பழம் சாப்பிடுவது, ஒருபோதும் இனிப்பு நோயருக்கு நல்லதல்ல. அதுவே காலையில், உணவுக்கு முன்னர் சின்ன சைஸ் நாருள்ள மலைவாழை அல்லது நெல்லை மாவட்ட நாட்டுவாழை சாப்பிட்டுவிட்டு, திட உணவில் ஒரு இட்லியைக் குறைத்துக்கொள்வது கலோரி கணக்குக்கும் சர்க்கரைக் கட்டுப்பாட்டுக்கும் நல்லது.

பேரீச்சை, காய்ந்த திராட்சை முதலான உலர் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. தக்காளி, வெள்ளரி இவை காய்களாகப் பார்க்கப்பட்டாலும் கனிகளே. இரண்டையும் அடிக்கடி சேர்ப்பது நல்லது. ஆப்பிளின் தோலில் உள்ள மெழுகுப் பூச்சை நீக்கியாக வேண்டும். பதிலாகத் தோலையே நீக்குவது பலனில் பாதியைக் குறைக்கும். கொய்யாவில் மிளகாய்ப் பொடியைத் தூவுவது கூடாது. ஓட்டலில் பழத் துண்டுகள் வாங்கும்போது சர்க்கரை சுவையூட்டி சேர்ப்பது வழக்கம். அதைத் தவிர்க்கச் சொல்ல வேண்டும்.

என்ன அளவில்?

ஒரு நாள் உணவுத் தேவையில் 30 சதவீதம்வரை பழங்கள் இருக்கலாம். மா- பலா- வாழை நீங்கலாக, பிற பழங்களில் குறிப்பாக அதிகம் கனிந்திராத கொய்யா, விதையுள்ள நாட்டுப் பப்பாளி, அதிகம் இனிக்காத புளிப்பு மாதுளை, விதையுள்ள பன்னீர் திராட்சை, அதிகம் நார் உள்ள கமலா ஆரஞ்சு, நாவல் என இவற்றில் எது கிடைக்கிறதோ காலையில் இரண்டு கப், மதியம் ஒன்றரை கப் சாப்பிடலாம். மீதமுள்ள பசிக்கு புரதமும் கார்போஹைட்ரேட்டும் கொடுக்க அரிசிச் சோறு, சிறுதானியச் சோறு அல்லது புலால் அளவோடு இருக்கலாம். உங்களுக்கான பழங்களின் அளவு, தேர்வு ஆகியவற்றை உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துத் தீர்மானிப்பது மிக முக்கியம்.

பழச்சாறு, ஸ்மூத்தி, பழ கேக் எனப் பழங்களைப் பாடாய்ப்படுத்தி தயார் நிலையில் விற்கப்படும் வகைகளை ஒருபோதும் இனிப்பு நோயர் தேடக் கூடாது. வெள்ளைச் சர்க்கரையையும் பெயர் தெரியாத ரசாயனங்களையும் கொட்டிக் குவித்துத் தயார் செய்யப்படும் அவை இனிப்பு நோயை மட்டுமல்லாது மற்ற நோய்களையும் சேர்த்துக் கொடுக்கும். பக்கத்தில் விளையும் கனிகளே உடலுக்கும் நல்லது சூழலுக்கும் நல்லது. பன்னீர் திராட்சை தருவதை, கலிஃபோர்னியா திராட்சை தருவதில்லை. உளுந்தூர்பேட்டை கொய்யா கொடுப்பதை, மடகாஸ்கர் ஆரஞ்சு தராது. பாபநாசம் நெல்லிக்காய் தருவதை, நியூசிலாந்து கிவி கொடுத்திடாது. திருவள்ளூர் பப்பாளி தருவதை, வாஷிங்டன் ஆப்பிள் தராது.

நாவில் தவழட்டும் நாவல்

‘ஸ்ட்ராபெர்ரி பெண்ணே!’ என்று இளைஞர்கள் பாடுகிறார்கள். பெண்களும் ஸ்ட்ராபெர்ரி போலவே இருக்க ஆசைப்படுகிறார்கள். நாம் அங்கே இடையில் புகுந்து, ‘நாவல் பழம் ஸ்ட்ராபெர்ரியைவிட எவ்வளவு உசத்தி தெரியுமா?’ என உரக்கச் சொல்லியாக வேண்டும். நம் நாட்டின் பழைய பெயர் ‘நாவல் நிலம்’ என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அந்த நாவல் பழம் சர்க்கரைக்கு மிகச் சிறப்பானது. அதன் தோலில் உள்ள ஆந்தோசயனின்களும் சரி, அதன் கொட்டையின் மேல் தோலில் உள்ள டானின்களும் சரி, ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதுடன், சர்க்கரையின் பிற பிற்கால நோய்கள் வராது காக்கும் டானிக்கும்கூட. இதெல்லாம் ஸ்ட்ராபெர்ரியில் கிடையாது. இந்த மாசம் மட்டும்தான் நாவல் எக்கச்சக்கமாக விளையும். இனிப்பு நோயர் இதைச் சாப்பிடுவதுடன், அவரவர் குழந்தைக்கும் கொடுத்து, அவர்கள் நாவில் தெரியும் அந்த நீல வண்ணத்தில் மகிழ்ந்து சிரியுங்கள். நாளைய இந்தியா நிச்சயம் இனிப்பு தேசமாக இராது!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
‘‘இன்று சாதனை நாள்’’ - தாய்லாந்து குகையில் இருந்து 6 சிறுவர்கள் மீட்பு: 15 நாள் போராட்டத்திற்குபின் அதிரடி ஆபரேஷன் வெற்றி

Published : 08 Jul 2018 18:24 IST

பாங்காக்



தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை உயிருடன் மீட்பதற்காக 15 நாட்களுக்கு பிறகு மேற்கொண்ட அதிரடி ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளளது. முதல்கட்டமாக 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாக குகை சூழந்துள்ளதால் அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டபோதிலும், மோசமான வானிலையால் அவர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் உள்ளே சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

அவர்களுக்கு ஆக்ஸிஜன் பெட்டியை எடுத்துச் சென்ற தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உள்ளே இருப்பவர்களின் உயிருக்கு ஆபத்து இன்றி மீட்க பல ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

சிறுவர்கள் இருக்கும் பகுதியில் குகையின் மேல் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக அவர்களை தூக்குவது பற்றியும் ஆலோசனை நடந்தது. அதுபோலவே நீச்சலில் திறன் படைத்த கடற்படை வீரர்களை அனுப்பி சிறுவர்களை முதுகில் சுமந்து கொண்டு வரலாமா எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் மழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளை செய்யவதில் சிக்கல் ஏற்பட்டது. எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும், அந்த சிறுவர்களை உயிருடன் மீட்பது முக்கியம் என்பதால் அதிக கவனத்துடன் திட்டமிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் குகையில் சிறுவர்கள் சிக்கி 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் இனிமேலும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். அதிரடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் களத்தில் இறங்கினர்.


சகதி கலந்த வெள்ள நீரில் நீந்தி சென்று, சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கி நீண்ட நேரம் ஆழ்கடலில் இருந்து அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளே சென்றனர். இந்த அதிரடி ஆபரேஷனில் ஆபத்து இருந்தாலும் வேறு வழியின்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி,

முதல் குழுவினர் உள்ளே சென்று இரண்டு சிறுவர்களை மீட்டு வந்தனர். கடும் போராட்டத்திற்கு இடையே சிறுவர்களை தோழில் சுமந்து கொண்டு வந்த அவர்கள் குகைக்கு வெளியே வந்தபோது அதிகாரிகள், உலகம் முழுவதும் இருந்து வந்த ஊடகவியலாளர்கள் என அனைவரும் பரவசத்துடன் அவர்களை வரவேற்றனர். மீட்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து அடுத்த குழுவினர் உள்ளே சென்று அடுத்தடுத்து சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீட்பு குழு அதிகாரி கூறுகையில் ‘‘15 நாட்கள் பொறுமை காத்தபோதிலும், இதன் பிறகும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தோம். அதனடிப்படையில் ஆபத்தை பற்றி பொருட்படுத்தாமல் இந்த அதிரடி முயற்சியில் ஈடபட்டோம். இன்று எங்களது சாதனை நாள்’’ எனக் கூறினார்.

‘‘இனிமேலும் காத்திருக்க முடியாது’’ தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை

Published : 08 Jul 2018 14:15 IST
  பாங்காக்
 



தாய்லாந்த்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை உயிருடன் மீட்பதற்காக பல்வேறு வாய்ப்புகள் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவர்கள் மிகவும் களைத்து விட்டதால் இனிமேலும் தாமதிக்காமல் அதிரடியாக நீரில் சென்று அவர்களை மீட்டு வரும் பணி தொடங்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகையை சுற்றி பார்க்கச் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார்.
 
ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாக குகை சூழந்துள்ளதால் அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்று அவர்கள் குகைக்குள் சிக்கியுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டபோதிலும், மோசமான வானிலையால் அவர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதால் உள்ளே சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஆக்ஸிஜன் பெட்டிகளை வழங்கி காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் பெட்டியை எடுத்துச் சென்ற தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில், சிறுவர்கள் இருக்கும் பகுதியில் குகையின் மேல் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக அவர்களை தூக்குவது பற்றியும் ஆலோசனை நடந்தது.


குகையில் சிக்கியுள்ள சிறுவர்கள்

அதுபோலவே நீச்சலில் திறன் படைத்த கடற்படை வீரர்களை அனுப்பி சிறுவர்களை முதுகில் சுமந்து கொண்டு வரலாமா எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் மழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளை செய்யவதில் சிக்கல் ஏற்பட்டது. எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும், அந்த சிறுவர்களை உயிருடன் மீட்பது முக்கியம் என்பதால் அதிக கவனத்துடன் திட்டமிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் குகையில் சிறுவர்கள் சிக்கி 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் இனிமேலும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதிரடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சகதி கலந்த வெள்ள நீரில் நீந்தி சென்று, சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
கலங்காதிரு மனமே...

2018-07-05@ 16:09:43

நன்றி குங்குமம் டாக்டர்

வாழ்க்கைப் பயணம் யாருக்கும் இனிதான பயணமாக இருப்பதில்லை. எல்லா மனிதர்களுமே வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் சுழற்றி அடிக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. பலருக்கு அடிக்கடி அந்த சூறாவளி வரும். சிலருக்கோ எப்போதாவது கொந்தளிப்புமிக்க சூழலை சமாளிக்க வேண்டி வரும். வித்தியாசம் அவ்வளவே! இதுபோல் கடும் துயரங்களால் நாம் மூழ்கடிக்கப்படும்போது அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதற்கு உளவியல் நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகள் இவை. பின்பற்றிப் பாருங்கள்....

இதற்கு முன்பு என்ன நடந்தது?

பெரும்பாலும் இதற்கு முன்பும் இதேபோல பிரச்னைகள் உங்களுக்கு வந்திருக்கலாம். அதை வெகு எளிதில் கையாண்டு வெளியிலும் வந்திருப்பீர்கள். அதனால், அவற்றோடு நிகழ்கால பிரச்னைகளை ஒப்பிட்டுப்பார்த்து ‘அதையே கடந்து வந்திருக்கிறோம்... இது என்ன பிரமாதம்... ஈஸியா சமாளித்துவிடலாம்’ என்று உங்களை சமாதானம் செய்து கொள்வதன் மூலம் மனம் உடைந்துவிடாமல் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராகி
விடுவீர்கள்.

கட்டுப்படுத்த முடியாதவற்றைக் கைவிடுங்கள் ‘நீங்கள் செய்ய முடியாததை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, உங்களால் செய்யக் கூடியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வாழ்வில் நம்பமுடியாத மாற்றங்கள் ஏற்படும்’ என்கிறார் மனித நடத்தைகள் ஆய்வாளரான ஸ்டீவ் மரபோலி.

பிரச்னைகள் கட்டுக்கடங்காமல் கைமீறிப் போகும்போதுதான் மிகுந்த உணர்ச்சி வசப்பட நேரிடுகிறது. இந்த உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி. நம் கட்டுப்பாட்டை மீறிய செயல்களில் இறங்காமல் நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தும்போது வேலையும் எளிதில் முடிந்துவிடும்.

வேகம்... வேகம்... வேகம்...

சிக்கலில் இருக்கும்போது அதிலிருந்து விடுபட ஒரே வழி விரைந்து செயல்படுவது. ‘இப்படி சிக்கலில் மாட்டிக்கொண்டோமே’ என்று தலையில் கை வைத்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அங்கேயே தேங்கிவிடுவீர்கள். அதனால் எந்தப்பயனும் இல்லை. பிரச்னையிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளில் எவ்வளவு சீக்கிரம் இறங்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து வெளியில் வர முடியும். உதவி கேட்பதால் தவறு இல்லைபிரச்னைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் ‘எனக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்று உங்களுக்குள்ளேயே புலம்பிக் கொண்டு இருப்பதாலும் பயனில்லை.

என்னைக் காப்பாற்ற, எனக்கு பக்கபலமாக நிற்க என் குடும்பம் இருக்கிறது. என் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். தன்னந்தனியாக திண்டாடாமல் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் உதவி கேட்பதில் தவறில்லை. பிரச்னைகள் பொதுவானவைவாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் நாம் மட்டும் சந்திக்கக்கூடியவை அல்ல. நீங்கள் இன்று எதிர்கொள்ளும் சவால் முன்பொரு நாளில் வேறு ஒருவர் எதிர்கொண்டதாக இருக்கலாம். அந்த ஒருவரிடம் உங்கள் நிலையை பகிர்ந்துகொண்டு அவர் மூலம் உங்களுக்கான தீர்வை கண்டறியலாம்.

பூதாகரமாக்க வேண்டாம் துயரத்தில் இருக்கும்போது உணர்வுகள் உங்களை ஆட்கொண்டுவிடும். அதனால், இயல்பைக் காட்டிலும் பிரச்னை 10 மடங்கு பெரிதாகத் தோன்றும். ஒரு கல்லை கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்க்கும்போது, பெரிதாகத்தான் தெரியும். அதே கல்லை ஒரு அடி தொலைவில் வைத்துப் பாருங்கள் சிறிதாகத் தெரியும். குறைந்தபட்சம் சிக்கலை நேர்மறையாக மாற்றுவதற்கான தொடக்கப் புள்ளியாவது உங்கள் மூளையில் உதிக்கும்.

இறுக்கம் வேண்டாம்...

புயலை அமைதிப்படுத்த யாராலும் முடியாது எனும்போது, நாம் அமைதியாக அதை வேடிக்கை பார்க்கலாம். அதுபோல் புயலென பிரச்னைகள் வரும்போதே கூடவே மன இறுக்கமும் அழையா விருந்தாளியாக வந்து நிற்கும். அப்போது எதுவும் சிந்திக்க முடியாது. நெருக்கடிகளைக் கண்டு பீதியடைய வேண்டியதில்லை. அதற்கு பதில், உங்களுடைய தன்னம்பிக்கையைத் தூண்டும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். தியானப்பயிற்சி, யோகா, புத்தகம் வாசித்தல் என சில மணிநேரங்களை உங்களுக்குப்பிடித்த வகையில் செலவிடலாம். உங்கள் மன இறுக்கம் குறைந்தபின் பாருங்கள்.

சிக்கலுக்கான தீர்வை எளிதில் கண்டுபிடிக்க முடியும். முடிச்சு அவிழும் பல சிக்கல்களால் பின்னப்பட்டிருக்கும் நீங்கள் உடனே எல்லாவற்றிலுமிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதில் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் போட்டு மண்டையை உடைத்துக் கொள்வதைத் தவிர்த்து ஒவ்வொன்றாக தீர்க்க முயலுங்கள். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக்கொண்டு வரும்போதுதான் முழுவதுமாக வெளிவர முடியும்.

‘நோ’ சொல்ல பழகுங்கள் ‘ஆமாம் சாமி’ போடுபவராக இருந்தால், பிரச்னைகள் எப்போதும் உங்களை தேடி வரும். உங்களுக்கென்று ஓர் எல்லை வகுத்துக் கொள்வது நல்லது. யார் எந்த வேலை சொன்னாலும் ‘சரி’ என்று அவருக்கு உடனே செய்து தருவதால் அந்த பழக்கமே நாளடைவில் அதிக வேலைப்பளுவில் உங்களை சிக்க வைத்துவிடும். சில விஷயங்களுக்கு ‘முடியாது’ என்று சொல்லப் பழகிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமும் முக்கியம் துயரங்கள் நம்மைப்போட்டு அழுத்தும்போது, நம்மை கவனித்துக்கொள்ள மறந்துவிடுவோம்.

சரியா சாப்பிடாமல், தூங்காமல், ஏன் சில நேரங்களில் தண்ணீர் குடிக்கக்கூட மறந்து துயரத்தில் மூழ்கி இருப்போம். சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, நீர் அருந்துவதும் தூங்குவதும் ஒருவரது ஆரோக்கியத்தை நிர்ணயிப்பவை என்பதால் சாப்பிடும் நேரம், தண்ணீர் அருந்தும் நேரத்தை டைமரில் ரிமைண்டராக வைத்துக் கொள்ளலாம். நிறைவாக நேர்மறையான அணுகுமுறையோடு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால், உங்கள் பிரச்னைகளிலிருந்து உடனடியாக வெளிவருவதோடு சவால்களை எதிர்கொள்ளவும் தயாராகிவிடுவீர்கள்!

- என்.ஹரிஹரன்
சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை காட்டி 10 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த 99 வயது தாத்தா போக்சோவில் கைது: தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்

2018-07-09@ 02:31:57

சென்னை: ஆவடி அருகே 10 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை காட்டி, பாலியல் தொல்லை கொடுத்த 99 வயது ‘தாத்தாவை’ போலீசார் கைது செய்தனர். ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்னீர்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் (99). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். தம்பதிக்கு 10 வயதில் மகள் உள்ளார். அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 4ம் தேதி வீட்டின் முன்பு, விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பரசுராமன் அழைத்து சாக்லெட் வாங்கி தரட்டுமா என கேட்டபடி தனது மடியில் அமரவைத்து கொஞ்சுவதுபோல் நடித்துள்ளார்.

பின்னர் திடீரென தனது சில்மிஷ வேலைகளை சிறுமியிடம் காண்பித்துள்ளார். இதன் காரணமாக, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது அந்த தாத்தா என்னை சாக்லெட் கொடுப்பதாக அழைத்து ஏதோதோ செய்தார். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதியவரிடம் கேட்டபோது, அப்படி நான் ஒன்றும் செய்யவில்லை என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெற்றோர் அளித்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் ஷோபா ராணி வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒருவர் மறைந்திருந்து எடுத்த செல்போன் வீடியோ ஆதாரம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முதியவர் பரசுராமனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். நேற்று காலை முதியவர் பரசுராமனை பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
வார விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்: 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்


2018-07-09@ 03:58:20


திருமலை: வார விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். அதன்படி சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 92 ஆயிரத்து 645 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்று ஒரே நாளில் கோயில் உண்டியலில் ₹2.78 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கோயிலில் இலவச தரிசனத்திற்கான வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி பக்தர்கள் நீண்ட வரிசையில் வெளியே காத்துக்கிடக்கின்றனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் ஆகிறது. ₹300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள், மலைப்பாதையில் நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்றவர்கள், ஆதார் கார்டு மூலம் சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் டிக்கெட்டில் உள்ள நேரத்திற்கு அனுமதிக்கப்பட்டு 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் சாலையில் தவித்தனர். எனவே, பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூடுதல் அறைகள் கட்ட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
'நீட்' விண்ணப்ப, 'கவுன்ட் - டவுன்' துவக்கம் : இன்னும் 85 நாட்களில் பதிவு ஆரம்பம்

Added : ஜூலை 09, 2018 05:02

இந்த ஆண்டு, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'கவுன்ட் - டவுன்' துவங்கியுள்ளது. விண்ணப்ப பதிவு துவங்க இன்னும், 85 நாட்கள் மட்டுமே உள்ளன.'நீட் மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகள், ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்; கணினி வழி தேர்வாக நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அதே நேரம், அரசியல் கட்சியினரை கண்டு கொள்ளாமல், நீட் தேர்வுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி, முதல் கட்ட, நீட் தேர்வு, பிப்., 3 முதல், 17 வரை நடக்கிறது.இதில், ஏதாவது ஒரு நாளை மாணவர்கள் தேர்வு செய்து, அந்த நாளில் தேர்வில் பங்கேற்கலாம். முதல் கட்ட நீட் தேர்வுக்கு, அக்., 1ல் விண்ணப்ப பதிவு துவங்கி, 31ல் முடிகிறது. இதன் படி, விண்ணப்ப பதிவு துவங்க, இன்னும், 85 நாட்கள் தான் உள்ளன.'இதனால், மாணவர்கள், நீட் தேர்வுக்கு தற்போதே தயாராக வேண்டிஉள்ளது. 'இதற்கேற்ப, பள்ளிகளில் பொது தேர்வு பாடத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பொது தேர்வு பாடத்திட்டத்தை முடித்தால் தான், நீட் தேர்வுக்கு ஓரளவாவது பயிற்சி பெற முடியும்' என, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.இதற்கேற்ப, பள்ளிகளில் வகுப்பு நேரம் நீட்டிக்கப்படுமா என, எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -

NEWS TODAY 27.01.2026