Tuesday, July 10, 2018

பெங்களூரு - சேலம் - புதுவை 15 முதல் விமான சேவை

Added : ஜூலை 10, 2018 02:02

சேலம்: சேலத்திலிருந்து, பெங்களூரு, புதுச்சேரிக்கு, 15 முதல், ஏர் - ஒடிசாவின் விமான சேவை துவங்குகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நடக்கிறது.சேலம் காமலாபுரத்தில், 1993ல் விமான நிலையம் அமைக்கப்பட்டது. 6,000 அடி நீள ரன்வே உள்ளதால், இங்கு சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்க முடியும்.இதனால், இரண்டு முறை, தனியார் நிறுவனங்கள் மூலம், சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை துவங்கப்பட்டும், பயணியரிடையே வரவேற்பு இல்லாததால், அவை ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டன.சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில், மத்திய அரசின், 'உதான்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சேலம் வழியே விமானம் இயக்குவதற்கு, ஏர் - ஒடிசா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.இருப்பினும் சேவை துவக்குவதில், தாமதம் ஏற்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்தான, 'ட்ரூஜெட்' விமான சேவையை துவக்கியது.தற்போது, ஏர் - ஒடிசா நிறுவனம், சேலம் விமான சேவைக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, 15 முதல், தினமும் காலை, 9:10 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, 10:00 மணிக்கு சேலம் வந்தடையும். பின், 10:15க்கு சேலத்திலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு, 10:55க்கு சென்றடையும்.மீண்டும் அங்கிருந்து, 11:15க்கு புறப்பட்டு, மதியம், 12:00 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்திலிருந்து, 12:15க்கு புறப்பட்டு, 1:30க்கு புதுச்சேரி செல்லும் வகையில், விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு பயணத்துக்கு, உதான் திட்ட சலுகை கட்டணமாக, 1,860 ரூபாய், வணிக கட்டணமாக, 2,924 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 பயணியர் அமரும் வகையிலான சிறிய ரக விமானம், இச்சேவைக்கு இயக்கப்படுகிறது.இதற்கான பயண முன்பதிவு, ஏர் - ஒடிசா இணையதளத்தில் துவங்கியுள்ளது.
உலகின் பிரமாண்ட மொபைல் போன் தொழிற்சாலை : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Added : ஜூலை 10, 2018 02:29



புதுடில்லி: உ.பி., மாநிலம், நொய்டாவில் அமைந்துள்ள, உலகின் மிகப் பெரிய, 'மொபைல் போன்' தொழிற்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று திறந்து வைத்தார்.கிழக்காசிய நாடான, தென் கொரியாவின் அதிபர், மூன் ஜே - இன், மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். உ.பி., மாநிலம், நொய்டாவில், 35 ஏக்கர் பரப்பளவில், 'சாம்சங்' நிறுவனம், 'மொபைல் போன்' தயாரிப்பு தொழிற்சாலை உருவாக்கி உள்ளது; இது, உலகின் மிகப் பெரிய மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையாக கருதப்படுகிறது.இந்த தொழிற்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இருவரும், டில்லியில் இருந்து, நேற்று மாலை, 'மெட்ரோ' ரயில் மூலம், நொய்டாவுக்கு வந்தனர்.துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவில், 40 கோடி,'ஸ்மார்ட் போன்கள்' பயன்பாட்டில் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டில், இரண்டாக இருந்த மொபைல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள், தற்போது, 120ஆக உயர்ந்துள்ளன.இங்கு உள்ள நடுத்தர வர்க்க வீடுகளில், நிச்சயம், ஒரு கொரிய நாட்டு தயாரிப்பு பொருட்களை, நாம் பார்த்துவிட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.மொத்தம் 5,000 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில், ஆண்டுக்கு, 12 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்பட உள்ளன. சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் மொபைல் போன்களில், 30 சதவீதம், இங்கு தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஜனாதிபதி மாளிகையில், தென் கொரிய அதிபருக்கு, இன்று காலை வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலையில், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில், தென் கொரிய அதிபர் பங்கேற்கிறார்.
6 கல்வி மையங்களுக்கு அரசின் சிறப்பு அந்தஸ்து

Added : ஜூலை 10, 2018 01:32

புதுடில்லி: அரசால் நடத்தப்படும் மூன்று கல்வி மையங்கள், தனியார் நடத்தும் மூன்று கல்வி மையங்கள் ஆகியவற்றுக்கு, 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' என்ற அந்தஸ்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், நேற்று வழங்கியது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், 'டுவிட்டர்' சமூக தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு விபரம்:நாடு முழுவதும், 800 பல்கலைக் கழகங்கள் உள்ளன. ஆனால், சர்வதேச அளவில் தரம் வாய்ந்த, 100 அல்லது 200 கல்வி மையங்கள் அடங்கிய பட்டியல்களில், நம் நாட்டின் கல்வி மையங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை.இந்நிலையில், ஐ.ஐ.டி - டில்லி, ஐ.ஐ.டி - மும்பை, ஐ.ஐ.எஸ்.சி - பெங்களூரு ஆகிய மூன்று பொதுத்துறை கல்வி மையங்களுக்கு, 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.மணிப்பால் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய மூன்று தனியார் கல்வி மையங்களுக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், கல்வி மையங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் கிடைப்பதுடன், எந்தவொரு மாணவருக்கும், கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படாது என்பதும் உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சபரிமலை நடை 16ல் திறப்பு

Added : ஜூலை 10, 2018 01:31

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலையில், வரும், 16-ல் நடை திறக்கப்படுகிறது.கேரள மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 16-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். பக்தர்களுக்கு, திருநீறு பிரசாதம் வழங்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.வரும், 21- வரை, எல்லா நாட்களிலும் உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, களப பூஜை, சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடக்கும்.
தலையங்கம்

ஆண்டுக்கு இருமுறை ‘நீட்’ தேர்வு





ஜேஇஇ முதன்மை தேர்வும், ‘நீட்’ தேர்வும் தற்போது ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக, இனி ஆண்டுக்கு இருமுறை கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும்.

ஜூலை 10 2018, 03:00

உயர் பொறியியல் கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசாங்க நிதி உதவியோடு நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இணை நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ஜேஇஇ என்ற மெயின்தேர்வு மூலமாகத்தான் நடக்கிறது. இந்த ஜேஇஇ மெயின்தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள்தான் இந்திய தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.) சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இதுபோல, நீட்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேரமுடியும். இந்தத்தேர்வுகள் நடைமுறையில் ஒரு பெரிய மாற்றத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். ஜேஇஇ முதன்மை தேர்வும், ‘நீட்’ தேர்வும் தற்போது ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக, இனி ஆண்டுக்கு இருமுறை கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும்.

ஜேஇஇ தேர்வு முதல்முறையாக ஜனவரி 6, 20–ந்தேதிகளில் நடக்கும். இந்தத்தேர்வு முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். இதுபோல, 2–வது முறையாக ஏப்ரல் 7, 21–ந்தேதிகளில் நடக்கும். இந்தத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும். அதுபோல ‘நீட்’ முதல் முறையாக பிப்ரவரி 2, 17–ந்தேதிகளில் நடக்கும். தேர்வு முடிவுகள் மே முதல்வாரத்தில் வெளியிடப்படும். 2–வது முறையாக மே 12, 26–ந்தேதிகளில் நடக்கும். முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இருமுறைகளிலும் எந்த தேதியில் தேர்வு எழுத விரும்புகிறோம் என்பதை மாணவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்தத்தேர்வுகளில் இருமுறையும் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வை எழுதலாம். இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்த நுழைவுத்தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்தத்தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலமாக சர்வதேச தரத்திற்கு இணையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எந்தவித முறைகேட்டுக்கும் இடமிருக்காது என்று மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு புதிதாக ‘தேசிய தேர்வுகள் முகமை’ என்று அழைக்கப்படும் ‘என்.டி.ஏ.’ மூலமாகவே நடத்தப்படும். இந்தத்தேர்வுகள் அனைத்தையும் இதுவரை சி.பி.எஸ்.இ. நிறுவனம்தான் நடத்திவந்தது. நுழைவுத்தேர்வை மாணவர்கள் இதுவரை ஆன்–லைனில் தேர்வு எழுதி பழகியிருக்காத நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கு இதில் நிச்சயமாக பயிற்சி இருக்காது. இதற்காக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள கம்ப்யூட்டர் மையங்களில் ஆகஸ்டு மாதம் 3–வது வாரத்திலிருந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் இலவசமாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அரசு அறிவிக்கும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 4 மாதங்களுக்கு கட்டணம் எதுவும் இல்லாமல் கம்ப்யூட்டர் மூலம் மாதிரித்தேர்வை எழுதி மாணவர்கள் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். உலகமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில், மாணவர்களின் ஜேஇஇ, நீட் தேர்வுகள் கம்ப்யூட்டர் வாயிலாக நடத்துவது வரவேற்புக்குரியது. இருமுறை தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு தேர்வு பயத்தையும் அகற்றிவிடும். எந்ததேர்வு மதிப்பெண் அதிகமாக இருக்கிறதோ, அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது நல்ல வாய்ப்பு அளிப்பதாகும். முதல்முறை சரியாக எழுதவில்லையென்றால், நன்றாக தயார்படுத்தி, அடுத்த முறை எழுதலாம். அந்தவகையில் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இத்தகைய தேர்வுகளுக்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கும் பொறுப்பு பள்ளிக்கூடங்களுக்கு இருக்கிறது.
மாநில செய்திகள்

லோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் நிறைவேறியது பொய் புகார் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை-அபராதம்



தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

பதிவு: ஜூலை 10, 2018 05:45 AM

சென்னை,

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இதுவரை லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த சட்டம் அமல்படுத்த தாமதமான நிலையில், திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் குருநாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற் படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதுடன், அதுகுறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் (அதாவது இன்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

அதன் அடிப்படையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று லோக் ஆயுக்தா சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் தாக்கல் செய்தார்.

லோக் ஆயுக்தா சட்ட மசோதா மீது, அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- பொது வாழ்வில் தூய்மை இருக்க வேண்டும் என்பதை தி.மு.க. முழு மனதோடு விரும்புகிறது. அந்த வகையில், ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், இன்று அவசர அவசரமாக லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அதிகார வரம்புக்குள், மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று முதல்-அமைச்சரையும் விசாரிக்கும் அதிகாரம் உண்டு என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

மேலும், லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவரை முதல்-அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய 3 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எனவே, நீதிபதியையும் இதில் சேர்க்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதியில் மற்றும் சட்டத்தில் 25 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு, தி.மு.க. கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், லோக் ஆயுக்தா வரம்புக்குள் அரசு டெண்டர் பற்றி எல்லாம் விசாரிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. கொடுக்கப்படும் புகார்கள் பொய் புகாராக இருந்தால், 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை. அதுகுறித்து ஒரு பிரிவு இதில் சேர்க்கப்பட வேண்டும். இது புலனாய்வு அமைப்பாக இல்லை. எனவே, நாங்கள் சொன்ன திருத்தங்களை ஏற்க வேண்டும். எனவே, தெரிவு குழுவுக்கு அனுப்பி, அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி:- எதிர்க்கட்சி தலைவர் கூறியதுபோன்று சரியான சட்டத்திருத்தங்களை செய்து கொண்டுவர வேண்டும். எனவே, தெரிவு குழுவுக்கு அனுப்பி முடிவெடுக்க வேண்டும்.

(அதன்பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் முகமது அபுபக்கரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்)

அமைச்சர் ஜெயக்குமார்:- லோக் ஆயுக்தா அதிகார வரம்பின்கீழ் மாநில முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் உள்ளிட்டவைகள் வரும். 4 ஆண்டுகளுக்குள் நடந்த ஊழல் குறித்து லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளிக்கலாம். மேலும், தனியொரு ஆளாக எந்த முடிவும் எடுக்க முடியாது. குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். எந்த பதவியில் இருப்பவரையும் விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்புக்கு தடையில்லை. பொய் புகார் அளித்தால், புகார் தாரர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் சொன்ன நல்ல விஷயங்கள் தொடர்பாக திருத்தம் செய்ய அரசு பரிசீலனை செய்யும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- பொய் புகார் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் என்பது லோக்பால் சட்டத்திலேயே உள்ளது. அதைத்தான் லோக் ஆயுக்தாவிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. விசாரணை நடத்த யாருடைய முன் அனுமதியையும் பெறத்தேவையில்லை.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- இது ஒரு அதிகாரம் இல்லாத அமைப்பாக, பல் இல்லாததுபோல் கொண்டுவரப்படுகிறது. அதனால்தான், தெரிவு குழுவுக்கு அனுப்பி செயல்படுத்த வேண்டும் என்று சொல்கிறோம். தற்போதைய முடிவிலேயே நீங்கள் இருந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

அமைச்சர் ஜெயக்குமார்:- ஊழலை முற்றிலும் ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு முழுமையானதாக இருக்கும். எனவே, இதை நிறைவேற்றித்தர வேண்டும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் கலந்துபேசித்தான் முடிவு எடுக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- இவ்வளவு சொல்லிய பிறகும், தெரிவு குழுவுக்கு அனுப்ப மறுப்பதால், தி.மு.க. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

(மு.க.ஸ்டாலின் பேசி முடித்ததும், அவரது தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.)

அதன்பிறகு, மாலை 3.44 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க லோக் ஆயுக்தா சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கவர்னர் நியமனம் செய்வார். அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள். தலைவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு வழங்கும் ஊதியமும், உறுப்பினர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஊதியமும் வழங்கப்படும்.

ஊழல் நடைபெற்றதாக கருதப்படும் தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் புகார் செய்யப்பட வேண்டும். புகார் பெறப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

Monday, July 9, 2018

VP M Venkaiah Naidu encourages pvt-public partnership in medical sector 

DECCAN CHRONICLE.


Published Jul 9, 2018, 3:37 am IST

The Vice President said that doctors have a number of emerging opportunities in the present Indian context. 



Vice President M. Venkaiah Naidu presenting graduation certificate to students at 30th convocation ceremony at Dr MGR Medical University on Sunday. (Photo:DC)

Chennai: Vice President M. Venkaiah Naidu on Sunday said that quality of education in medical colleges of the country is life-blood of India's healthy future. Addressing the students at 30th convocation ceremony at Dr MGR Medical University, he spoke about the quality of medical education in the state and stressed on need for regulation to ensure transparency and accountability.

Health minister C. Vijaya Baskar, fisheries minister D. Jayakumar and other dignitaries were present on the occasion. It has been a pace setter in many ways and has successfully started new courses in medicine and allied health sciences according to the needs of the society and the emerging disease patterns, he said.

Emphasizing on the need of an emphatic approach by medical professionals towards the patients while giving treatment, he said that young medical professionals must work in rural area before getting their first promotion.

The Vice President said that doctors have a number of emerging opportunities in the present Indian context. He further said that medicos should adopt and adapt the best global practices for the benefit of our population. They must constantly set more ambitious goals and strive to achieve them, he added.

The Vice-President expressed happiness over the Tamil Nadu Assembly recently approving the setting up of two more private universities in the state. Venkaiah Naidu said while the system of medical education was expanding with the rise in number of medical colleges in the country.

Pointing out the gaps in the present society with 22 percent population below poverty line, he said that that there are many parts of the country, which lack medical facilitie and thus, there should be public-private partnership for the well being of the public. Encouraging healthy competition between public and private sector, he said, “I feel the time has come that we should open up. We have already opened up. We have to open up further to the private sector.”

NEWS TODAY 27.01.2026