Wednesday, July 11, 2018


6 வயது சிறுமி கொடூர கொலை: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி





6 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்துக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பதிவு: ஜூலை 11, 2018 06:21 AM சென்னை,

சென்னை, போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று மாயமானார். இதுகுறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தஷ்வந்தின் தந்தை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கமிஷனரின் உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, தஷ்வந்த் ஜாமீனில் வெளியில் வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி தன்னுடைய தாய் சரளாவை தஷ்வந்த் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தஷ்வந்தை மும்பையில் கைது செய்தனர்.

இதற்கிடையில், சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு நீதிபதி வேல் முருகன் விசாரித்து தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்ய, இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, இந்த தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் சி.எமிலியாஸ், அரசு குற்றவியல் வக்கீல்கள் முகமது ரியாஸ், பிரபாவதி, கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் சார்பில் வக்கீல் வி.கண்ணதாசன், மனுதாரர் தஷ்வந்த் சார்பில் பி.வி.செல்வராஜன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர்.

அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

தஷ்வந்த் தரப்பு வக்கீல் தன்னுடைய வாதத்தில், இந்த கொலை வழக்கில் சான்றுப் பொருட்களை பறிமுதல் செய்ததில் பல குளறுபடிகள் உள்ளன. சாட்சிகளும் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை கீழ் கோர்ட்டு கவனிக்க தவறிவிட்டது. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். 6 வயது சிறுமி என்று கூட பாராமல், பாலியல் கொடுமை செய்து, கொலை செய்து, அந்த உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தஷ்வந்த் எரித்துள்ளார். அவரது செயல் கொடூரமானது. எனவே, அரிதிலும், அரிதான வழக்காக கருதி, தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.

இதேபோல, சிறுமியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீலும் வாதிட்டார்.

சிறுமியை கொடூரமாக, மனிதத்தன்மையின்றி தஷ்வந்த் கொலை செய்துள்ளார். இதற்காக அவருக்கு கீழ் கோர்ட்டு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை, 6 வயது சிறுமியை அவரது பெற்றோர் இழந்துள்ளனர். அவர்களது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை தந்த மகள் உயிரோடு இல்லை. காட்டுமிராண்டித்தனமாகவும், கொடூரமாகவும் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தன் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரிந்த நொடிப்பொழுதில் இருந்து அந்த பெற்றோர் அனுபவித்து வரும் வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது.

இது ஒரு புறம் இருக்க, இந்த வழக்கில், போலீசார் அனைத்து குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். அதனால், தஷ்வந்த் குற்றவாளி என்பதை உறுதி செய்கிறோம். அதேநேரம், அவருக்கு வழங்க வேண்டிய தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டியதுள்ளது.

குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அரிதிலும், அரிதான வழக்கில் மட்டுமே உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் கூறியுள்ளது.

இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட்டு கூறும் அரிதிலும் அரிதான வழக்காக கருத முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

நம்முடைய அரசியல் சாசனம், ஆரோக்கியமான, மகிழ்ச்சிகரமான, பாதுகாப்பான வாழ்க்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

தஷ்வந்த் ஜாமீனில் வெளியில் இருந்தபோது, தன் தாயையும் கொலை செய்துள்ளார். குற்றவாளியின் இந்த செயலை பார்க்கும்போது, அவரை சீர்திருத்துவது என்பது கனவாகத்தான் இருக்கும் என்பதை முடிவு செய்து கீழ் கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனையை விதித்துள்ளது.

மேலும், குற்றவாளியின் மனநிலையின் கொடூரம், அவரது குற்றத்தைவிட கொடூரமாக உள்ளது. இவரது செயலால், ஒரு மொட்டு மலராவதற்கு முன்பே சாம்பலாக்கப்பட்டு விட்டது.

அதுவும், குற்றத்தை மறைப்பதற்காக, அந்த சிறுமியின் உடலை தீ வைத்து எரித்தது, கொடூரத்தின் உச்சக்கட்டமாகும். அதுவும் தன்னுடைய காம வெறியை தனித்துக்கொள்ள ஒரு சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

ஒரு அப்பாவிக்கு தண்டனை வழங்குவது நீதி பரிபாலனத்தின் தவறாக இருக்கலாம். ஆனால், உண்மையான குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் இருந்தால், அது நீதி பரிபாலனத்தின் ஒட்டுமொத்த பிழையாக மாறிவிடும்.

தற்போது குற்றவாளியின் வயதை கருதி அவருக்கு தண்டனையை குறைக்க முடியாது. சின்ன வயதில் இதுபோன்ற குற்றச்செயல்களை செய்பவர்கள், அதே குற்றத்தை தொடர்ந்து செய்ய வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. சிறுவயதில் இதுபோல பாலியல் ரீதியான துன்பத்துக்கு ஆளாகும் பெண்கள், அந்த துயர சம்பவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாமல், மனதுக்குள் வைத்து அழுதுகொண்டு இருக்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால், திருமணத்துக்கு பின்பு அந்த பெண்களின் இல்லற வாழ்விலும் பிரச்சினை வருகிறது. எதற்காக இவர்கள் இப்படி ஒரு துயரங்களை அனுபவிக்க வேண்டும்?

தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக மாற்ற முடியாது. அவ்வாறு தண்டனையை குறைக்க சட்டரீதியாக எந்தவொரு நியாயமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

காமவெறியனாக, அரக்கத்தனமாக இதுபோன்ற செயலை செய்த தஷ்வந்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. ஒரு பச்சிளம் குழந்தை அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் சிதறடித்துவிட்டார். தனது காமவெறியை தீர்த்துக்கொள்ள அந்த சிறுமியை ஒரு பொம்மை போல பயன்படுத்தியுள்ளார். இறுதியில் அந்த உயிரையும் உலகில் இருந்து பிரித்துவிட்டார்.

எனவே, இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக கருதுகிறோம். தஷ்வந்துக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோம். தண்டனையை எதிர்த்து தஷ்வந்து செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
தலையங்கம் ‘லக்கேஜ்’ கொண்டுபோக வசதி




மக்கள் போக்குவரத்தில் ரெயில்வே மிக இன்றியமையாத பணிகளை ஆற்றி வருகிறது. மக்கள் ரெயில் பயணங்களை நாடிச்செல்வதற்கு முக்கியகாரணம் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணம். தூங்கும்வசதி, கழிப்பறைவசதி இருப்பதுதான்.

ஜூலை 11 2018, 03:00

மக்கள் போக்குவரத்தில் ரெயில்வே மிக இன்றியமையாத பணிகளை ஆற்றி வருகிறது. மக்கள் ரெயில் பயணங்களை நாடிச்செல்வதற்கு முக்கியகாரணம் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணம். தூங்கும்வசதி, கழிப்பறைவசதி இருப்பதுதான். பல ரெயில்களில் ‘குறைவான லக்கேஜ்’, அதிகமான வசதி; பயணத்தை இனிதாக்குங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் சில பயணிகள் ஏராளமான ‘லக்கேஜ்’களை கொண்டுவந்து சீட்டுக்கு அடியில் மட்டுமல்லாமல், நடுவிலும், வழியிலும், கதவுகள் பக்கத்திலும் போட்டுவைத்து மற்ற பயணிகள் கை–கால்களை நீட்டவோ, எளிதாக ஏறி, இறங்குவதற்கு முடியாமலோ பயணத்தை மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடுகிறார்கள். சிலநேரங்களில் குறைந்ததூரத்தில் செல்லும் வியாபாரிகளும் மூட்டைகளை கொண்டுவந்து பயணிகள் பெட்டியில் போட்டுவிடுகிறார்கள். இவ்வளவுக்கும் ஒரு பயணி ரெயிலில் எவ்வளவு லக்கேஜை கொண்டுபோகவேண்டும் என்ற விதி இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இருக்கும் இந்த விதியை யாருமே பின்பற்றுவதில்லை.

இந்த விதிகளை இப்போது கடுமையாக நடைமுறைப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அதன்படி, 2–வது வகுப்பில் பயணம் செய்யும் பயணி தன்னுடன் 35 கிலோ லக்கேஜையும், மேலும் 35 கிலோ வரை லக்கேஜை பணம் கட்டி அதேரெயிலில் லக்கேஜ் வேனில் எடுத்துச்செல்லலாம். 2–வது வகுப்பு படுக்கை வசதி பெட்டி பயணி தன்னுடன் 40 கிலோவும், லக்கேஜ் வேனில் 40 கிலோவும், 3–வது வகுப்பு ஏ.சி. பெட்டி பயணி 40 கிலோவும், மேலும் 40 கிலோ லக்கேஜ் வேனிலும், 2–வது வகுப்பு ஏ.சி. பெட்டி பயணி 50 கிலோவும், மேலும் 50 கிலோ லக்கேஜ் வேனிலும், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி பயணி 70 கிலோவும், லக்கேஜ் வேனில் 80 கிலோவும் ஏற்றிச்செல்லலாம். இதுபோக, பயணிகள் தங்கள் பயணம்செய்யும் பெட்டியில் எடுத்துச்செல்லும் டிரங்க்பெட்டிகள், சூட்கேஸ்கள் மற்றும் இதரபெட்டிகள் 100 செ.மீ. நீளம், 60 செ.மீ. அகலம் மற்றும் 25 செ.மீ. உயரம் வரைதான் எடுத்துச்செல்லமுடியும். இதற்குமேல் உள்ள பெட்டிகள் பணம் கட்டி ‘லக்கேஜ்’ வேனில்தான் கொண்டுசெல்லமுடியும். இந்த விதிகளைமீறி ரெயில் பயணிகள் தங்களுடன் ‘லக்கேஜ்’களை கொண்டுசெல்வதை கண்டுபிடித்தால் 6 மடங்குவரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக இது நல்லமுறைதான். வரவேற்கத்தகுந்ததுதான். எல்லோருடைய பயணமும் இனிமையாகும் என்பதில் சந்தேகமில்லைதான். அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழையும்போதே ‘லக்கேஜ்’களை எடைபார்க்கும் வசதிகள் இருக்கவேண்டும். யாரும் காத்திருக்கவேண்டிய நிலை இருக்கக்கூடாது. இதுபோல, ‘லக்கேஜ்’ வேன்களில் கொண்டுசெல்லும் லக்கேஜ்களை, அந்தந்த ரெயில் நிலையங்களில் ரெயில் புறப்படுவதற்குள் ஏற்றிவைப்பது யார்?, இறக்கிவைப்பது யார்?. சில ரெயில் நிலையங்களில் ரெயில் ஓரிரு நிமிடங்கள்தான் நிற்கும். அப்படியிருக்கும்போது பயணிகள் பயணம்செய்யும் பெட்டியில் இருந்து இறங்கி ‘லக்கேஜ்’ வேனுக்கு வருவதற்குள் ரெயில் புறப்பட்டுவிடும். ஆக, அவர்களுடைய ‘லக்கேஜ்’கள் பத்திரமாக இறக்கிவைத்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான வசதிகளையும் ரெயில்வே நிர்வாகம் உறுதிசெய்யவேண்டும். எனவே, பயணிகளிடம் கடுமையான விதிகளை நிறைவேற்றும்போது, அதற்குரிய வசதிகளை செய்துகொடுக்கும் பொறுப்பும் ரெயில்வே நிர்வாகத்துக்கு இருக்கிறது.
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய திருப்பு முனை தீர்ப்பினை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்




‘நீட்’ தேர்வு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்பினை, மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பதிவு: ஜூலை 11, 2018 06:00 AM
திருச்சி,

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சிக்கு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வு தமிழ் கேள்வித்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண் வழங்கவேண்டும் என்ற திருப்பு முனை தீர்ப்பினை மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கி உள்ளது. இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டியது மத்திய அரசும், சி.பி.எஸ்.இ.யும் தான். அதன்பிறகு தான் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பள்ளி கல்வித்துறை மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்து அறிவிப்பார்கள்.

எங்களை பொறுத்தவரை நமக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு கொண்டு வருகிற எந்த போட்டித்தேர்வாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து வருகிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சியை அளித்தோம்.

25 ஆயிரம் மாணவர்களுக்கு சி.ஏ. எனப்படும் தணிக்கை பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சிறந்த தணிக்கையாளர்களை கொண்டு அவர்களுக்கு 500 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த திட்டம் 12-ந் தேதி (நாளை) கோபிச்செட்டிப்பாளையத்தில் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் 762 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து விட்டது. விரைவில் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் மீண்டும் வெளியிடப்படுமா?





தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவு (நீட்) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவசேர்க்கை நடைபெற்று வருகிறது.

பதிவு: ஜூலை 11, 2018 06:09 AM
சென்னை,

மதுரை ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக தமிழகத்தில் மீண்டும் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிடப்படுமா? என்று தமிழக அரசு அதிகாரியை கேட்டதற்கு சி.பி.எஸ்.இ.யின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொருத்துதான் எதுவும் கூறமுடியும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவு (நீட்) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவசேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 1-ந்தேதி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே இடத்தில் மருத்துவ பொது கலந்தாய்வு கடந்த 2-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற்றது.

அரசு கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா கல்லூரியில் உள்ள 127 இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் உள்ள 65 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டு இருக்கின்றன.

முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அதேபோல் அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்புவதற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ படிப்பு கலந்தாய்வு வருகிற 23-ந்தேதி நிறைவடைய இருக்கிறது. அதன்பிறகு 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயநிதி கல்லூரிகளில் 723 எம்.பி.பி.எஸ்., 645 பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 16-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாளில் பிழைகள் இருந்தன என்றும், அதன் காரணமாக அவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்கவேண்டும் என்றும், மருத்துவ தரவரிசை பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

கோர்ட்டு தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மீண்டும் தயாரித்து வெளியிடவேண்டும்.

ஏற்கனவே மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்த 3 ஆயிரத்து 501 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்திருப்பார்கள். கல்விக்கட்டணமும் செலுத்தி இருப்பார்கள்.

இவர்கள் கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டால் ஏற்கனவே இடம் கிடைத்த மாணவர்களுக்கு மீண்டும் இடம் கிடைப்பது சிரமமே.

நீட் தேர்வு குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகு மருத்துவ கலந்தாய்வு என்னவாகும்? என்று ஒரு அரசு அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

‘நீட்’ தேர்வு வந்த பிறகு தேர்வு மற்றும் மதிப்பெண் ஆகியவை சி.பி.எஸ்.இ. அதிகாரத்திற்கு உட்பட்டது. இனிமேல் சி.பி.எஸ்.இ.யின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொருத்துதான் அமையும். தமிழக அரசின் மருத்துவ கலந்தாய்வு குறித்து கூற இயலும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, July 10, 2018

Gian Sagar colleges get provisional nod to restart

Varsity grants affiliation, subject to Centre’s approval


Balwant Garg

Tribune News Service

Faridkot, July 6

The Department of Medical Education and Research (DMER), Punjab, has granted provisional essentiality certificate to the Gian Sagar medical and dental colleges, which were closed in May last year, for filling 100 MBBS and 100 BDS seats.

Baba Farid University of Health Sciences (BFUHS) also granted provisional consent of affiliation to the colleges on Friday.

The permission has been granted to Gian Sagar Educational and Charitable Trust, managing the colleges. Earlier, the certificate was revoked by the state government on May 10, 2017, on account of the inability and failure of the management to run the colleges and the students were shifted to other medical colleges.

New trustees have taken over the colleges and had submitted an application for the revival of the colleges.

While the DMER has issued the certificate subject to detailed verification and due diligence regarding the financial viability of the trust to run the medical and dental colleges, the BFUHS has granted provisional affiliation, subject to grant of permission by the Union government and Ministry of Health and Family Welfare.

Dr Raj Bahadur, Vice-Chancellor, BFUHS, has confirmed the issuance of provisional affiliation certification to Gian Sagar colleges.
YouTube fined for not removing ‘offensive’ post

TNN | Jul 9, 2018, 12.19 AM IST



NEW DELHI: The Delhi high court has slapped a cost of Rs 9.5 lakh on YouTube for failure to remove offensive content against a Delhi-based doctor on its channels across the world.

Justice Najmi Waziri asked YouTube to pay Rs 50,000 for each of the nine hearings held in the past two months for wasting judicial time. The company had claimed it could only ensure no one could access the derogatory posts against the doctor from India. It maintained the posts can’t be removed.

A trial court had in June 2015 directed YouTube and Google, the parent company, both based in USA, to remove the content from YouTube channels across the world.

“The case has been listed for nine times in the last 64-odd days. On each occasion, time was sought by the appellant (YouTube/Google) to comply with the directions of the court. Today, the court is informed that the directions cannot be complied with on account of technological reasons,” Justice Waziri noted.

HC decided to levy costs when Google’s subsidiary company first argued it had complied with the trial court order since content had been disabled from its website and cannot be accessed by any person having access to the internet from India. Later, it claimed the company had no technological control to ensure that posts are permanently removed from its main server and can’t be accessed even outside India. In the end, it sought to withdraw its appeal challenging the trial court injunction.

The court allowed it to withdraw its plea on the condition that the company won’t raise any of the arguments already addressed in the order and pay cost of Rs 50,000 per hearing to the doctor who was at the receiving end of posts targeting her IVF practice on the platform.

Out of the total amount, HC said Rs 1 lakh should be paid to HC Mediation and Conciliation Centre as costs.

The bench took a dim view of YouTube’s plea of helplessness due to technical reasons. Justice Waziri observed that he is “unable to see as to how the contents being posted on the platform of the appellant can govern or steer the functioning of the platform itself.”

Only 3 govt school students get MBBS seats in Tamil Nadu colleges

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

PublishedJul 10, 2018, 6:32 am IST

Govt considering revising Neet coaching to help students.



Sources in the school education department said that the government is considering revising Neet coaching enabling more students to get high marks.

Chennai: Of 2,447 seats in 22 government medical colleges that were filled in the first phase of MBBS counselling this year, only three seats were filled by government school students.

Another four students from the government schools got government quota seats in private medical colleges there by taking the total number to seven seats against five last year.



“Totally 20 students - seven from government schools and 13 from government-aided schools have got MBBS seats this year,” said G.Selvarajan, secretary, Selection Committee.

The fee for government medical colleges is Rs 13,600 whereas the fee for government quota in private medical colleges is around Rs 3.5 lakh to Rs 4 lakh.

Despite the state government spending crores of rupees for Neet coaching last year, the common medical entrance test still proves to be a great barrier for government school students in getting into medical colleges.

Of 9,154 students from government, government-aided schools who took Neet exam this year, 1344 students have qualified in the medical entrance test. But only 10 students have scored above 300 marks and 42 students scored above 200 marks in the common medical entrance test.

So, it was predicted that only a handful of students would get the MBBS seats from government schools.

J. Charan, a student from K.C. Sankaralinga Nadar Higher Secondary School, a government-aided school in Old Washermenpet scored 416 marks in Neet and topped among the 20 students from government and government-aided schools with 972nd rank. He got a seat in Vellore Medical College.

“The meritorious students from government and government-aided schools are passionate about medical education, but could not spare time and resources for rigorous coaching that is required to score good marks in Neet exam. There is no equitable access to the coaching and this exam will not help the deserving students,” said P.B. Prince Gajendrababu, general secretary, State Platform for Common School System.

“Before Neet, around 30 to 35 students from government schools used to get MBBS seats. Students from government-aided schools and in rural areas also would get many seats” he added.

Sources in the school education department said that the government is considering revising Neet coaching enabling more students to get high marks.

NEWS TODAY 28.01.2026