Thursday, July 12, 2018

உலகமே வியந்து பார்த்த மீட்புப் பணி: தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்டது எப்படி?

Published : 12 Jul 2018 07:32 IST
மே சாய் (தாய்லாந்து)



குகையில் இருந்து அனைவரையும் பத்திரமாக வெளியில் அனுப்பிவிட்டு, கடைசியாக வந்த தாய்லாந்து ‘சீல்’ படையினர் 4 பேர் மகிழ்ச்சியில் வெற்றி சின்னம் காட்டினர்.



தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையில் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க இரவு பகலாக மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.



குகையில் இருந்து அனைவரையும் பத்திரமாக வெளியில் அனுப்பிவிட்டு, கடைசியாக வந்த தாய்லாந்து ‘சீல்’ படையினர் 4 பேர் மகிழ்ச்சியில் வெற்றி சின்னம் காட்டினர்.



தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையில் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க இரவு பகலாக மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்களையும் பயிற்சியாளரையும் உயிருடன் மீட்டது உலகை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையை ஒட்டி உள்ளது தாம் லுவாங் குகை. சுமார் 10 கி.மீ. தூரமுள்ள இந்தக் குகைக்கு கடந்த மாதம் 23-ம் தேதி ‘காட்டுப் பன்றிகள்’ என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என 13 பேர் சாகச பயணம் மேற்கொண்டனர். மலை உச்சியில் இருந்து 800 மீட்டர் ஆழத்தில் இந்தக் குகை அமைந்துள்ளது.

இவர்கள் குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்ற போது திடீரென பலத்த மழை பெய்தது. இதில் குகைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களும் பயிற்சியாளரும் குகைக்கு உள்ளே மேலும் சிறிது தூரம் சென்று மேடான பாறை இடுக்கில் ஏறிவிட்டனர். வெள்ளம் சூழ்ந்ததால், அவர்களால் வெளியில் வர முடியவில்லை. குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாய்லாந்து, பிரிட்டன், இந்தியா உட்பட பல நாட்டு குகை மீட்பு வல்லுநர்கள், முக்குளிப்பு வீரர்கள் அங்குக் குவிந்தனர்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் உயிருடன் இருப்பது வெளியுலகுக்குத் தெரிய வந்தது. அதன்பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 சிறுவர்கள், திங்கட்கிழமை 4 சிறுவர்களை மீட்டு வந்தனர். கடைசியாக செவ்வாய்க்கிழமை 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை தாய்லாந்து ‘சீல்’ படையினர் (கடல், வான், நிலம் ஆகிய 3 பகுதிகளிலும் செயல்படும் திறமை மிக்க வீரர்கள்) உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதை தாய்லாந்து நாடே மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

குகைக்குள் சிக்கியவர்களை மீட்டது சாதாரண விஷயமல்ல. சோதனை முயற்சி, தவறுகள், அனுபவம் இல்லாமல் உடனுக்குடன் எடுத்த முடிவுகள், திறமை, தண்ணீரை வெளியேற்றும் ஏராளமான குழாய்கள், மோட்டார்கள், வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் குகைக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்றது போன்ற ஒவ்வொரு விஷயமும் சிலிர்க்க வைக்கும் நடவடிக்கையாகும்.

பிரிட்டனை சேர்ந்த 2 முக்குளிப்பு வீரர்கள்தான் முதலில் 12 சிறுவர்களையும் (ஜூலை 2-ம் தேதி) கண்டுபிடித்தனர். அவர்கள் வெளியில் வந்து சிறுவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி செல்வது போன்ற எல்லா விவரங்களையும் தெரிவித்தனர். அதில் முக்கியமானவர் ஜான் வோலந்தன். அவரைப் பார்த்ததும் சாப்பிட ஏதாவது கிடைக்குமா, இப்போதே எங்களை அழைத்து செல்ல முடியுமா என்றுதான் சிறுவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், பிரிட்டன் முக்குளிப்பு வீரர்கள் வெளியில் வந்து தகவல் சொன்ன 6 நாட்களுக்குப் பிறகுதான் முழு வீச்சில் மீட்புப்பணியைத் தொடங்க முடிந்தது. அதன்பின், தாய்லாந்தை சேர்ந்த 4 முக்குளிப்பு வீரரர்கள் குகைக்குள் சென்று அங்கேயே தங்கி சிறுவர்களுக்குத் தேவையான அதிக புரோட்டீன் உள்ள உணவுகளைக் கொடுத்து பாதுகாத்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுவர்கள் இருக்கும் இடத்துக்கு துணிச்சலாக தனியாளாக சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுத்து விட்டு திரும்பும் போது தனக்கு ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் தாய்லாந்து கடற்படை முன்னாள் வீரர் சமன் ககன் என்பவர் கடந்த 6-ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதுவே குகையின் அபாயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைத்தது.

தாம் லுவாங் குகை நேர் வழி பாதையாக இல்லை. சில இடங்களில் 33 அடி உயரத்துக்கு இருந்தாலும், பல இடங்களில் குறுகிய பாதை, ஏறி இறங்கும் சிறுசிறு குன்றுகள் போன்ற அமைப்புடையது. குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் பலருக்கு நீச்சலும் தெரியாது. குறுகிய பாதை இருக்கும் இடங்களை ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் கடந்து வருவதும் ஆபத்தானது.

எனவே, சிறுவர்களுக்கு நீச்சல் கற்றுத் தந்து மீட்க வேண்டும். அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்க வேண்டும். அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜன் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது என்று தாய்லாந்து ராணுவம் முதலில் முடிவு செய்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் முக்குளிக்கும் வீரர்கள் குகைக்குள் சென்று வருவது ஆபத்தாக இருக்கும். நேரமும் ஆகும் என்று கணிக்கப்பட்டது.

எனவே, மலை உச்சியில் ஓட்டை போட்டு குகைக்குள் இருக்கும் சிறுவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குகை சுமார் 10 கி.மீ. தூரம் இருந்தாலும், முட்டு சந்து போல் முடிந்து விடும். குகைக்கு மறுவழி என்று எதுவும் இல்லை. அதனால் குகை முடியும் இடத்தில் பள்ளம் தோண்டி சிறுவர்களை மீட்க முயற்சி நடந்தது. இவை எல்லாம் தோல்வியில் முடிந்தன.

ஆனால், ராட்சத மோட்டார்கள் வைத்து குகைக்குள் இருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சி கை கொடுத்தது. அத்துடன் குகைக்குள் தண்ணீர் நுழைவதைத் தடுக்க உடனடியாக சிறிய அணை உருவாக்கப்பட்டது. குகையில் உள்ள சிறுவர்கள், பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர். இந்த மீட்புப் பணியில் கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள், 20 அரசு துறைகள், முக்குளிப்பு வீரர்கள், குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் வல்லுநர்கள் என ஒரு பெரும் படையே ஈடுபட்டது.

இதற்கிடையில் குகைக்குள் 2 முக்குளிக்கும் வீரர்கள் செல்வது, அங்கிருந்து இருவரும் ஒரு சிறுவனை மீட்டு வருவது என்று திட்டம் தீட்டப்பட்டது. முன்னதாக குகையில் இருந்து வெளியில் வரும் வழி முழுவதும் ஒரு கயிறு போடப்பட்டது. அதன் வழியாக 2 மீட்பு வீரர்களும் ஒரு சிறுவனும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. குகைக்குள் செல்லும் 2 வீரர்களில் ஒருவர், சிறுவனுக்கு பொருத்தப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்து கொள்வது, மற்றொரு வீரர் சிறுவனை பத்திரமாக வெளியில் கொண்டு வருவது என்று திட்டமிட்டனர். நீச்சல் தெரியாததால், சிறுவர்களுடைய முகத்தில் மூச்சுக் கவசமும் பொருத்தப்பட்டது. ஏற்கெனவே குகைக்குள் உள்ள கயிற்றை பிடிமானமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு சிறுவனாக மீட்டுள்ளனர்.

ஆனால் தாம் லுவாங் குகை மேடும் பள்ளமுமாக, சில இடங்களில் குறுகலாகவும் இருந்ததால், நீந்துவது மட்டுமல்லாமல், சில இடங்களில் நடக்கவும், சில இடங்களில் பாறை மீது ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. குகையின் நுழைவு வாயிலில் இருந்து சற்று தொலைவில் மீட்புப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். அதுவரை சிறுவர்கள் வந்துவிட்டால் ஆபத்து நீங்கி விடும். அங்கிருந்து நடந்தே வெளியில் வரலாம். ஆனால், அந்த முகாம் வரை சிறுவர்களை கொண்டு வருவதுதான் மிகப்பெரும் சவாலாக இருந்தது.

இதுகுறித்து தாய்லாந்து கடற்படையினர் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், ‘‘இது அதிசயமா, அறிவியலா, வேறு எதுவோ தெரியாது. 13 பேரும் இப்போது குகைக்கு வெளியில் வந்துவிட்டனர்’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பயிற்சியாளர் எக்காபோல் சன்டாவாங்கையும் பாராட்டி வருகின்றனர். வெளியில் இருந்து உதவி வரும் வரை அவர்தான் 12 சிறுவர்களுக்கும் 9 நாட்களாக தைரியம் சொல்லி உயிருடன் இருக்கவும், அவர்கள் சோர்ந்து போகாமல் இருக்கவும் உதவி செய்துள்ளார்.

இந்திய அரசுக்கு தாய்லாந்து நன்றி

தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினய், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளர் உள்ளிட்ட 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என வாழ்த்தியதற்காக இந்திய அரசு மற்றும் இந்தியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, இவர்களை மீட்பதற்காக கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தாய்லாந்து துணை நிறுவனத்தின் மூலம் தொழில்நுட்ப உதவி (திரவ மேலாண்மை) வழங்க ஏற்பாடு செய்த இந்திய தூதரகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்ட செய்தியைக் கேட்டு எங்கள் நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். தாய்லாந்து மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் நிபுணர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த மீட்புப் பணி சாத்தியமாகி இருக்காது.

இந்த மீட்பு பணியில் இந்திய அரசும் தனியார் துறையும் பெருந்தன்மையுடன் உதவியது இரு நாடுகளுக்கும் இடையே இதயப்பூர்வமான நட்புள்ளது என்பதை பிரதிபலிக்கிறது. அதற்காக, உங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தாய்லாந்து அரசு, மக்கள், குகையில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உதவி செய்த இந்திய நிறுவனம்

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்க, வில் உள்ள ‘கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட்’ நிறுவனம் பல உதவிகளை செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு ‘கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட்’ (கேபிஎல்) நிறுவனம் செயல்படுகிறது. இதுகுறித்து கேபிஎல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தாய்லாந்து குகையில் 13 பேர் சிக்கியது, குகைக்குள் வெள்ளம் சூழ்ந்ததை அறிந்த இந்திய அரசு, எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவிகளையும், நிபுணர்களையும் பயன்படுத்திக் கொள்ள தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று தாய்லாந்து அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டனர். அதன்படி இந்தியா, தாய்லாந்து மற்றும் பிரிட்டனில் உள்ள எங்கள் நிபுணர்களை குகைக்கு அனுப்பி வைத்தோம்.

குகைக்குள் சூழ்ந்திருந்த வெள்ளத்தை வெளியேற்ற எங்கள் நிபுணர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஜூலை 5-ம் தேதி முதல் ராட்சத மோட்டார்கள் வைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. அதற்காக மகாராஷ்டிராவின் கிர்லோஸ்கர்வாடி தொழிற்சாலையில் இருந்து 4 அதிக திறன் கொண்ட மோட்டார் பம்ப்புகளை விமானத்தில் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தோம். இவ்வாறு கேபிஎல் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது. - பிடிஐ
கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் த‌மிழகத்துக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு

Published : 12 Jul 2018 07:24 IST


இரா.வினோத் பெங்களூரு
 



காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையின் முழுத் தோற்றம். - (கோப்புப் படம்)

கர்நாடகாவில் கனமழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள‌தால் தமிழகத்துக்கு விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில‌த்தில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அரபிக்கடலோர மாவட்டங்களிலும் மலநாடு பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தட்சின கன்னடா, வட கன்னடா, உடுப்பி, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மங்களூரு, பட்கல், சுள்ளியா, தீர்த்தஹள்ளி உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள் ளன.

இதேபோல‌ காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா, ராம்நகர், பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களி லும் தொடர்ந்து இரவு பகலாக ம‌ழை பெய்து வருகிறது.

குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் நேற்று பெய்த பலத்த மழையால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்தது.

கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம், வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த கனமழையால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் (கேஆர்எஸ்), கபினி, ஹாரங்கி, ஹேமா வதி உள்ளிட்ட 4 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கபினி, ஹாரங்கி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கிவிட்டன. கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் 115 அடியை தொட்டுள்ளது.

தமிழகத்துக்கு தொடர் நீர் திறப்பு

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மாண்டியா மாவட்டத்தில் 124 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.20 அடியாக உயர்ந்திருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 35,980 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 3,612 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரத்தில் உள்ள‌ ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,857.22 அடியாக உயர்ந்திருக்கிறது. இந்த அணைக்கு விநாடிக்கு 14,973 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 12,388 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி உயரத்தில் உள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,912.50 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று 20,535 கனஅடி நீராக அதிகரித்தது. இதனால் விநாடிக்கு 3,100 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2282.22 அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 40,363 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் 39,667 கனஅடி நீர் மதகுகள் மூலம் திறக்கப்பட்டுள் ளது.

அதிகபட்ச நீர் திறப்பு

கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் இருந்து மைசூரு, மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்குப்போக, விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட் டுள்ளது.

நிகழாண்டில் அதிகபட்சமாக 55 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இளையராஜாவிடம் கடைசியாகச் சேர்ந்ததும் முதலில் பிரிந்ததும் கே. பாலசந்தர் தான்: கரு. பழனியப்பன் பேச்சு!


By எழில் | Published on : 11th July 2018 05:12 PM |



மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரே ஒரு பாலசந்தர் என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கே.பி.யின் சீடர்களும் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசியதாவது:

பாலசந்தர்தான் இளையராஜாவிடம் வந்து சேர்ந்த கடைசி இயக்குநர். அப்போது, இளையராஜா தமிழகம் எங்கும் வியாபித்து, கோலோச்சி எல்லா இயக்குநர்களும் அவரிடம் இணைந்து படம் செய்து கொண்டிருந்தார்கள். அன்றைக்கு, இளையராஜா இல்லாமல் படம் கிடையாது. தயாரிப்பாளர்கள் இளையராஜாவிடம் சென்று தேதிகள் வாங்கியபிறகுதான் படம் தொடங்கும். இளையராஜா படத்தில் இருந்தால் விநியோகஸ்தர் படத்தை வாங்குவார். யார் நடித்திருந்தாலும் தேவையில்லை. இளையராஜா கை வைத்தபடி உள்ள புரொஃபைல் படம் போட்டு ராகதேவன் இசையில் என்று போஸ்டர் ஒட்டினால் போதும், படம் விற்றுவிடும்.

அப்போது வரைக்கும் இளையராஜாவிடம் செல்லாத ஒரே ஒரு இயக்குநர் பாலசந்தர். அவர்தான் இளையராஜாவிடம் கடைசியாக வருகிறார். இணைந்து செய்த முதல் படம் - சிந்து பைரவி. பாலசந்தர் எதற்காகக் காத்திருந்தார் என்றால், இளையராஜாவிடம் செல்ல வேண்டும்தான், ஆனால் எப்படிப் போகவேண்டும் என்றால் அது அவருக்குச் சவால் அளிக்கக்கூடிய படமாக இருக்கவேண்டும் என்பதற்காக சிந்து பைரவி படத்துக்குத்தான் செல்கிறார். இளையராஜாவும், இவ்வளவு நாள் இவ்வளவு இயக்குநர்களிடம் படம் பண்ணினோமே, இவரிடமல்லவா நாம் படம் பண்ணியிருக்க வேண்டும், நாமல்லவா இவரைத் தேடிச் சென்றிருக்கவேண்டும், நாம் செய்யாமல் விட்டுவிட்டோமே என்பதுபோல அருமையான பாடல்களைத் தருகிறார்.

இளையராஜா இயக்குநர்களை அவ்வளவாகப் பாராட்டியதில்லை. அவர் ஒருமுறை, இதெல்லாம் நான் யாருக்கு இசையமைக்க முடியும்? இதுபோன்ற சிச்சுவேஷன்களைக் கொண்டுவந்தால்தான் இப்படி இசையமைக்க முடியும் என்று சிந்து பைரவி பாடல்கள் குறித்துக் குறிப்பிடுகிறார். இப்படி பாலசந்தரை இளையராஜா கொண்டாடியது, அவர் இளையராஜாவை விட்டு வெளியே சென்றபிறகு.

இளையராஜாவிடம் கடைசியாக வந்து சேர்ந்தது மட்டுமல்லாமல் இளையராஜாவை விட்டு உடைத்துக்கொண்டு வெளியே சென்ற முதல் இயக்குநரும் பாலசந்தர்தான். அந்தச் சமயத்தில் எல்லோரும் இளையராஜாவிடம் இருந்தார்கள். எப்படி விலக்குவது என்று தெரியவில்லை. இளையராஜாதான் சினிமா என்றாகிவிட்டது. இந்த நிலையில் பாலசந்தர்தான் வெளியே வந்தார்.

ஒரு படம் மட்டும் அறிவித்தால் விலகியது தெரிந்துவிடும் என்பதால் ஒரே சமயத்தில் மூன்று படங்களை அறிவிக்கிறார். மூன்று படத்திலும் இளையராஜா கிடையாது. ரோஜா, வானமே எல்லை, அண்ணாமலை ஆகியவைதான் அந்த மூன்று படங்கள். ஏ.ஆர். ரஹ்மான், மரகதமணி, தேவா என மூன்று இசையமைப்பாளர்கள் அப்படங்களுக்கு. மூன்று படங்களும் பெரிய வெற்றியை அடைகின்றன.

தமிழ் சினிமா என்கிற டைனோசர் மெல்ல திரும்பிப் பார்த்தது. ஓ, இளையராஜா இல்லாமல் படம் எடுக்கமுடியுமா, அவரில்லாமல் தமிழ் சினிமாவில் வெற்றியடைய முடியுமா, அது மட்டுமே (வெற்றிச்) சூத்திரம் இல்லையா என்று யோசிக்கிறது. மொத்த அமைப்பையும் உடைப்பது என்பது இதுதான். அதைச் சிறப்பாகச் செய்தவர் பாலசந்தர் என்று பேசியுள்ளார்.

செல்லிடப்பேசி செயலி' மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி: பிஎஸ்என்எல் தொடக்கம்


By DIN | Published on : 12th July 2018 01:07 AM |

 செல்லிடப்பேசி செயலி (ஆப்) மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.

இப்புதிய வசதிக்காக விங்ஸ்' என்ற செயலியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்த தொலைபேசி அல்லது செல்லிடப்பேசி எண்ணுக்கும் பேச முடியும். இதற்காக, பிஎஸ்என்எல் இணையச் சேவை மட்டுமல்லாது வேறெந்த நிறுவனத்தின் இணையச் சேவையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்சேவையை மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தொடங்கிவைத்தார். அப்போது, அவர் பேசுகையில், செல்லிடப்பேசி செயலி மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை தொடங்கியமைக்காக பிஎஸ்என்எல் நிர்வாகத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிகள் நிறைந்த தற்போதைய தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற புதிய வசதிகளை அறிமுகப்படுவது அவசியமாகும்' என்றார்.

ஐடியா-வோடஃபோன் இணைப்புக்கு ஒப்புதல்: இதனிடையே, தொலைதொடர்பு நிறுவனங்களான ஐடியா செல்லுலார்-வோடஃபோன் இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஐடியா செல்லுலார் - வோடஃபோன் இணைப்புக்கு நாங்கள் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டோம். சில இறுதியான நடைமுறைகள் மட்டுமே நிலுவையில் உள்ளன' என்றார்.
முன்னதாக, வோடஃபோன் நிறுவன தலைமை செயல் அதிகாரி நிக் ரீட் உள்பட அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், மனோஜ் சின்ஹாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சின்ஹா, ஐடியா-வோடஃபோன் இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியமைக்காக, வோடஃபோன் நிறுவன உயரதிகாரிகள் தன்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்' என்று கூறினார்.
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய மின்வாரியம் உத்தரவு

By DIN | Published on : 12th July 2018 03:24 AM |

மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், ஃபோர்மேன் கிரேடு 1 மற்றும் சிறப்பு ஃபோர்மேன்களை பணியிட மாற்றம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:
தமிழ்நாடு மின்சார வாரியம் பணி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளுக்காக 42 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு கண்காணிப்பு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு மின் இணைப்பு வழங்குவது, மின் பழுதை சரிசெய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் களப்பணி மற்றும் நிர்வாகப் பணி என இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பணியில் சேர்ந்த ஊழியர்கள் அவரவர் விரும்பும் அல்லது தங்கள் சொந்த ஊர் பகுதிகளுக்கு பணியிட மாற்றம் பெற்று தொடர்ந்து அந்த இடங்களிலேயே பணி புரிந்து வருகின்றனர்.

மின்வாரியத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருப்பது குறித்து பல்வேறு நிலைகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்வாரியப் பொறியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மின்வாரியத்தில் களப்பிரிவில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஃபோர்மேன் கிரேடு- 1 மற்றும் சிறப்பு ஃபோர்மேன்கள், வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர்களைப் பணியிட மாற்றம் செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைத் தொடரும் என வாரியம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
தந்தை மீது பழி சுமத்துவதா? : வங்கி பதில் அளிக்க உத்தரவு

Added : ஜூலை 11, 2018 23:18


சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என, தந்தை மீது பழி சுமத்திய வங்கி, ௧௦ லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மாணவி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பாரத ஸ்டேட் வங்கிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகை மாவட்டத்தை சேர்ந்தவர், தீபிகா; பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்காக, ௩.௪௦ லட்சம் ரூபாய் கடன் கேட்டு, வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கி கிளையில் விண்ணப்பித்தார்.

கடன் கோரிய விண்ணப்பத்தை, வங்கி நிராகரித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபிகா மனு தாக்கல் செய்தார்.வங்கி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'வெவ்வேறு வங்கிகளில் பெற்ற கடனை, மனுதாரரின் தந்தை செலுத்த தவறி உள்ளார்.'அவருக்கு எதிராக, வழக்குகள் உள்ளன. தந்தையின் வருமான சான்றிதழை, மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான்' என, கூறப்பட்டு உள்ளது.மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், 'கடன் தொகையை செலுத்த மாணவி தவறினால், பெற்றோரிடம் இருந்து தான், வசூலிக்கப்படும். 'கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், அவரது தந்தைக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிகிறது.

மனுதாரரின் தந்தை, கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், வங்கி சரியாக செயல்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து, மாணவி தீபிகா, மேல்முறையீடு செய்தார். மனுவில், 'என் தந்தைக்கு, வங்கியில் கடன் நிலுவை இல்லை.'தவறான தகவல் அளித்து, தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக, ௧௦ லட்சம் ரூபாய் நஷ்டஈடு தரும்படி, வங்கிக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரிஇருந்தார்.இம்மனு, நீதிபதிகள் எச்.ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், ௧௬ம் தேதிக்கு தள்ளி

வைத்தனர்.
DINAMALAR 12.07.2018

சென்னையின் பாலங்களும்... வீணாகும் காலங்களும்! 
 







 சென்னையின் பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



சென்னையில், 2012ல், 37.60 லட்சம் வாகனங்களும், 2016ல், 47.57 லட்சம் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டு, இயங்கி வருகின்றன. தொடரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப, ரயில்வே மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், எஸ்கலேட்டர்கள், நடைமேம்பாலங்கள் ஆகியவற்றின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

சென்னையின் பல் வேறு இடங்களில், பாலங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு, ஆண்டுக்கணக்கில் கிடப் பில் போடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல், நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி, கோப்புகளில் கையெழுத்து பெறுவதில் தாமதம், பகுதி மக்களின் தேவைக்கேற்ப திட்டமிடாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன.

வேளச்சேரி :

வேளச்சேரி, விஜயநகர் சந்திப்பில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட, 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2016, பிப்., 13ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலமாக, இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். திட்டத்திற்காக, வேளச்சேரி, 100 அடி சாலை, வேளச்சேரி - தரமணி இணைப்புச் சாலை, வேளச்சேரி - தாம்பரம் சாலை ஆகிய மூன்று சாலைகளையும் சேர்த்து, 1,305 ச.மீட்டருக்கு நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

பலதுறை அதிகாரிகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாட்டால், நிலம் கையகப்படுத்தும் பணியில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால், பாலம் கட்டும் பணியும், ஜவ்வாக இழுக்கிறது.

பட்டாபிராம் :

சென்னை- - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள பட்டாபிராம், எல்.சி.,- - 2 ரயில்வே கேட்டில், 2016ல் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.மொத்தம், 38 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு என, பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, ஒரு ஆண்டுக்கு மேலாக, பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில், 52.11 கோடி ரூபாய்க்கு மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 640 மீட்டர் நீளம், 24 மீட்டர் அகலத்தில், 16 துாண்களுடன், ஆறு வழிச்சாலையாக, இரண்டு ஆண்டுகளில், ரயில்வே மேம்பாலம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் துவங்கி, ஓராண்டாக இழுபறியில் இருந்த நிலையில், பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.

அனகாபுத்துார் :

அனகாபுத்துார்- - தரப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில், அடையாற்றின் குறுக்கே, 4.70 கோடி ரூபாய் செலவில், 2008ல் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. மொத்தம், 80 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், அனகாபுத்துார் பகுதியில் மேம்பாலம் இறங்கும் இடத்தில்,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான நிலம், 1,000 சதுரடி இடம் கிடைக்காத காரணத்தால், பணிகள் தடைப்பட்டுள்ளன.

மணலி :

மணலி, வார்டு, 16, சடையங்குப்பத்தில், 2010ல், 16 கோடி ரூபாயில், மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. எட்டு ஆண்டுகளாகியும், 60 சதவீதம் பணிகள் கூட நிறைவடையவில்லை. சடையங்குப்பம் மேம் பாலம், ஜோதிநகர் தொடங்கி, மணலி விரைவு சாலை வரையிலான, நிறுவன கட்டடங்களை அகற்றுவதில், அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். 40 ஆண்டுகால மக்களின் கோரிக்கை, எட்டு ஆண்டுகாலமாக இழுபறியில் இருக்கிறது.

தாம்பரம் :

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கும், ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கும், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்ல, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'எஸ்கலேட்டர்' அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு, இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால், இதுவரை வெற்று அறிவிப்பாகவே உள்ளது.

எண்ணுார் :

எண்ணுார் நெடுஞ்சாலை - மணலி சாலையை இணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த, 'டி' வடிவ மேம்பாலம், 117 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என, 2015, செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது- தற்போது, இந்த திட்டத்திற்கான நிதி, 157 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், மாநில அரசு, 137 கோடி ரூபாயும், மத்திய அரசு, 20 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி உள்ளன. கட்டுமான பணிக்கான, மண் பரிசோதனை பணிகளும் முடிந்தன. ஆனால், கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் இழுபறியில் உள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை :

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, போஜ ராஜன் பகுதியில், 1996ல், போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அமைக்க, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால், இச்சுரங்கபாதை அமைக்கும் பணி, கிடப்பில் போடப்பட்டது.

2010ல், மாநில அரசு, 75 சதவீதம், மத்திய அரசு, 25 சதவீதம் என்ற நிதி அடிப்படையில், 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்று, சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும், பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. கடந்த, 22 ஆண்டுகளாக இந்த சுரங்க பாதை திட்டம், கிடப்பில் உள்ளது.

எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் சாலையில் இருந்து அடையாறு ஆற்றின் குறுக்கே, ஒரு மேம்பாலம் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டது. அத்திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கைவிடப்பட்டது.

ஆலந்துார் மண்டலம், 162வது வார்டுக்குட்பட்ட, பரங்கிமலை, மேடவாக்கம் பிரதான சாலையில் இருந்து, ஜீவா நகர் பகுதியை இணைக்கும், 30 அடி அகல கால்வாய் மீது, தரைப்பாலம் அமைக்க, 8 ஆண்டுகளாக பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரி கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

வேகமாக வளர்ச்சி பெறும் ஒரு நகரின் அடையாளங்களாக, மேம் பாலங்கள், சாலை கட்டமைப்புகள் உள்ளன. அதனால் தான், வாகன போக்குவரத்து அதிகரிப்புக்கு ஏற்ப, மேம்பாலம் மற்றும் சாலை கட்டமைப்புக்களை மேம்படுத்த திட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், அவற்றை அரசு இயந்திரங்கள் முறையாக செயல்படுத்தாமல், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடுவதால், மக்களின் அவதி தான் பலமடங்கு அதிகரிக்கிறது.

அண்ணனுார் :

ஆவடி அருகே உள்ள அண்ணனுார் ரயில் நிலையத்தில், எல்.சி., -7 ரயில்வே கேட்டில், 2009ல், 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரயில்வே துறை சார்பில், உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட பணிகள், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், திட்டம் துவங்கப்பட்டு, 8 ஆண்டுகளுக்கு பிறகு, அடிக்கல் நாட்டு விழா, கடந்த, 4ம் தேதி நடந்தது. ஆனால், இன்னும் பணிகள் துவங்கப்படாததால், 815 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்தில், இருவழிச் சாலையாக உருவாக்க திட்டமிட்ட மேம்பாலம், கனவாகவே உள்ளது.

பல்லாவரம் :

பல்லாவரம்- - குன்றத்துார் சாலை, பழைய சந்தை ரோடு, வெட்டர் லைன் ஆகிய, மூன்று சந்திப்பில், 70 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. இப்பணி, மூன்று கட்டங்களாக நடந்து வருகிறது. இம்மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், ஜி.எஸ்.டி., சாலையில், மூன்று சந்திப்புகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும். மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், பணி மந்தமாக நடந்து வருகிறது.

மதுரவாயல் :

மதுரவாயல் - -சென்னை துறைமுகம் வரை, 18.3 கி.மீ., நீளத்திற்கு, 1,850 கோடி ரூபாய் மதிப்பில், பறக்கும் மேம்பாலம் அமைக்க, 2006ல், தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது. பின், 2007ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், 2011ல் ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., அரசு, திட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து, மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மேம்பாலத்திற்காக துாண்கள் அமைக்கப்பட்டு, பணிகள் பாதியில் விடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு, தடையில்லா சான்று வழங்கியது தமிழக அரசு. இதையடுத்து, 6 ஆண்டாக கிடப்பில் இருந்த திட்டத்திற்கு, அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் மேம்பால பணிகள் துவங்கவில்லை.

அறிவிப்புகள் :

நெசப்பாக்கத்தில் இருந்து நந்தம்பாக்கம் செல்ல, காணு நகர், 12வது தெருவில் உள்ள காலி இடத்தில் இருந்து, அடையாற்றின் குறுக்கே, 360 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீட்டில், மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம், 12 கோடி ரூபாய் மதிப்பிட்டில் விரிவாக்கம் செய்ய, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெருங்களத்துார் :

பெருங்களத்துார் ரயில் நிலையத்தில் உள்ள, இரண்டு ரயில்வே கடவுப்பாதைகளில் ஒன்று, 2015ல் புதிய நடைமேம்பாலம் கட்டுவதற்காக மூடப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக, நடைமேம்பாலம் அமைக்கப்படுவதற்கான இத்திட்டம், செயல்வடிவம் பெறாமல் உள்ளது.

குரோம்பேட்டை :

குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட்டில், இலகு ரக வாகன சுரங்கபாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன், ரயில்வே பகுதியில் பணிகள் நடந்து முடிந்தன. நெடுஞ்சாலைத் துறை பகுதியில், பணி துவங்க வேண்டிய நேரத்தில், இலகு ரக வாகன சுரங்கப் பாலத்திற்கு சாத்தியமில்லை; சுரங்க நடைபாதை மட்டுமே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த குளறுபடியால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

- -நமது நிருபர் குழு- -

NEWS TODAY 28.01.2026